Sunday, August 21, 2011

இறுதிப் பா என்றாமோ ?

இணைவதற்கு உதவிடுமோ
இறுதிப்பா என்றாமோ
எனக்குள்ளே உயிர்துடிக்க
உதிரத்தால் எழுதுகிறேன்

பொழுதுபோன வேளையிலே
நெருஞ்சிமுள் காட்டினிலே
வழிதேடி அலைகின்றேன்
வழித்தடமாய் வாராயோ

சுட்டெரிக்கும் பாலையிலே
நீரின்றித் துடிக்கிறேன்
கொட்டுகிற மழையாக
குளிர்விக்க வாராயோ

புயல் சூழ்ந்த கடல் நடுவே
பரிதவிக்கும் படகானேன்
கரம்பிடித்துக்  கரைசேர்க்க
கண்ணாநீ வாராயோ

இனிப்பெல்லாம் கசப்பாக
முழுநிலவு நெருப்பாக
மதியிழந்து வாடுகிறேன்
மகராசா வாராயோ

ஊரெல்லாம் பகையாகி
நம்முறவை மெல்கிறது
ஊரதனின் வாயடைக்க
உடனடியாய் வாராயோ

மறைத்திடவும் தெரியாது
மறந்திடவும் தெரியாது
தரைப்பட்ட மீனாக
துடிதுடித்துச் சாகின்றேன்

ஒருதிங்கள் பொறுத்திருப்பேன்
உனக்காகத் தவமிருப்பேன்
வருகின்ற வழியெல்லாம்
விழிவைத்துக் காத்திருப்பேன்

எல்லையினில் நிற்பதனை
இனியேனும் புரிந்து நீ
துள்ளியோடி வாராயோ
துயரழிக்க வாராயோ

ஆனமட்டும் பொறுத்துவிட்டேன்
அடுத்தவழி நினைத்துவிட்டேன்
காலனவன் தொடும் முன்னே
காத்திடவே வாராயோ

72 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கரம்பிடித்துக் கரைசேர்க்க
கண்ணாநீ வாராயோ//

Good Poem for Sri Krishna Jayanthi.
Thanks a Lot for sharing.

வெங்கட் நாகராஜ் said...

//ஆனமட்டும் பொறுத்துவிட்டேன்
அடுத்தவழி நினைத்துவிட்டேன்
காலனவன் தொடும் முன்னே
காத்திடவே வாராயோ//

மிக நல்ல வரிகள். நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

கே. பி. ஜனா... said...

Simple words, Super Effect! மிக மிக ரசித்தேன்...

ரம்மி said...

கண்டு கொண்டேன்
அவள் யாரென்று!

சிப்பாயின் மனைவி!
பரதேசியின் துணைவி!
அல்லது
பலதார மணாளனின்
ஒரு தாரம்!

கவிதையிலே
கொட்டுது
பிரிவுத் துயரின்
சாரம்!

G.M Balasubramaniam said...

எனக்கு ஏனோ இதில் கொஞ்சம் மிரட்டல் தொனி இருப்பதாகப் பட்டது. தவறேதுமில்லை. உரிமை உள்ள இடத்தில் அப்படி இருக்கலாம். வார்த்தைகள் அழகாக கோர்வையுடன் வருகிறது. வாழ்த்துக்கள்.

Murugeswari Rajavel said...

சிறப்பான வரிகள்.தங்களின் எப்பாவும் சிறப்பு.இறுதிப்பாவும்.

Murugeswari Rajavel said...

இறுதிப்பா என்றாமோவும்.

Madhavan Srinivasagopalan said...

எனக்கு அந்தளுவுக்கு கவிதைய ரசிக்கத் தெரியாது.. சோ.. வாழ்த்துக்கள்..

மாய உலகம் said...

புயல் சூழ்ந்த கடல் நடுவே
பரிதவிக்கும் படகானேன்
கரம்பிடித்துக் கரைசேர்க்க
கண்ணாநீ வாராயோ//

கண்ணன் வருவான் கவலைகள் தீர்ப்பான் ....கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் சகோதரரே

மாய உலகம் said...

தமிழ் மணம் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

<<புயல் சூழ்ந்த கடல் நடுவே
பரிதவிக்கும் படகானேன்
கரம்பிடித்துக் கரைசேர்க்க
கண்ணாநீ வாராயோ<<

நெஞ்சை தொட்ட வரிகள்,

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

எளிமையான அழகான கவிதை
எல்லோருக்கும் புரியும் படி அசத்தலாக எழுதி இருக்கிறீர்கள்,
வாழ்த்துக்கள், எல்லோருக்கும் புரியும் படி அழகாகவும் ஆழமாகவும் தரத்துடன் எழுத உங்களால் மட்டுமே முடியும் பாஸ்,
ரியலி கிரேட் பாஸ்

Anonymous said...

அழகான கவிதை, நடை பாடல் போல அழகாக உள்ளது

Anonymous said...

மிக அழகு! வாழ்த்துக்கள்

நிரூபன் said...

பிரிவின் துயரில் தவித்து,
தன் நிலமையினையும், தனக்கு ஆறுதல் வேண்டி தான் விரும்பும் நபரோடு
ஒன்று சேர்ந்திட ஏங்கும் உள்ளமொன்றின் உணர்வுகளை இங்கே கிராமிய மணங்கமழ சந்த நடையில் கவிஞர் படைத்திருக்கிறார்.

அப்பாதுரை said...

எளிமையான கவிதை. நன்று.

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன்//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கே. பி. ஜனா...//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Murugeswari Rajavel //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Madhavan Srinivasagopalan

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மாய உலகம்

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கற்றது தமிழ்" துஷ்யந்தன் //
தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கந்தசாமி. //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஷீ-நிசி //
தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

நிரூபன் //
தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...
This comment has been removed by the author.
Ramani said...

அப்பாதுரை //


தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரம்மி //
அழகிய கவிதையாக பின்னூட்டம் தந்து
உற்சாகமூட்டியமைக்கு ம்னமார்ந்த நன்றி

ஸாதிகா said...

நெகிழ்த்தியது கவிதை வரிகள்.அருமை.வாழ்த்துக்கள்!

காந்தி பனங்கூர் said...

அருமையாக இருந்தது சார். அதில் காலனவன் எங்கின்ற வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் தெரியவில்லை. முடிந்தால் விளக்குங்கள். நன்றி.

Ramani said...

ஸாதிகா//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

M.R said...

காலனவன் தொடுமுன்னே கண்டிப்பாய் வருவாரே

கண்ணீரும் துடைப்பாரே,கவலைகளும் தீர்ப்பாரே .

M.R said...

தமிழ் மணம் 8

Ramani said...

காந்தி பனங்கூர் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
சாவதற்குள் வரவேண்டும் என்கிற பொருள்பட
எமனைக் காலன் எனக் கூறுவோம் இல்லையா
அதைத்தான் காலனவன் கை என் மீதுபடும் முன்னே
என்கிற பொருள்பட எழுதியுள்ளேன்

Ramani said...

M.R said...

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

vidivelli said...

மறைத்திடவும் தெரியாது
மறந்திடவும் தெரியாது
தரைப்பட்ட மீனாக
துடிதுடித்துச் சாகின்றேன்/


காதிருக்கிறது உள்ளமொன்று நேசித்த இதயத்துக்காக..
தினம் தினம் ஏங்கி தவிக்கிறது என கவிதை சொல்கிறது,,
நல்ல கவிதை சார்...
அன்புடன் பாராட்டுக்கள்..

ரியாஸ் அஹமது said...

கவிதை வரிகள் அருமையாக இருந்தது

தமிழ் மணம் 8

நன்றி.

Lakshmi said...

அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்

Ramani said...

vidivelli //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரியாஸ் அஹமது//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

//said...

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

தமிழ் உதயம் said...

நெஞ்சின் தவிப்பு கவிதையாக, சிறப்பாக.

Ramani said...

தமிழ் உதயம்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான , எளிய கவிதை..
பாராட்டுகள்..

Ramani said...

* வேடந்தாங்கல் - கருன் *!//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

முனைவர்.இரா.குணசீலன் said...

ஊரெல்லாம் பகையாகி
நம்முறவை மெல்கிறது
ஊரதனின் வாயடைக்க
உடனடியாய் வாராயோ

அருமையாகவுள்ளது அன்பரே.

Ramani said...

முனைவர்.இரா.குணசீலன் //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Rathnavel said...

அருமையான கவிதை.
நெஞ்சை நெகிழ வைக்கிறது.
வாழ்த்துக்கள்.

Ramani said...

Rathnavel //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

மாதேவி said...

கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்.

Ramani said...

மாதேவி //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

அமைதிச்சாரல் said...

அருமை.. அருமை.. துள்ளலான துடிப்பான வரிகள்.

குணசேகரன்... said...

இது என்ன புதுக் கவிதையா? இல்லை மரபுக் கவிதையா? இல்லை பாடலா? எப்படி பார்த்தாலும் நன்றாக உள்ளது. சந்தம் அருமை.

Ramani said...

அமைதிச்சாரல்//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

குணசேகரன்...//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

புலவர் சா இராமாநுசம் said...

//ஆனமட்டும் பொறுத்துவிட்டேன்
அடுத்தவழி நினைத்துவிட்டேன்
காலனவன் தொடும் முன்னே
காத்திடவே வாராயோ//

முத்தானமுடிவு!
சத்தான கவிதை!

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said...

வாழ்த்துக்கள் ஐயா எல்லோரும் விளங்கிக்கொள்ளும் எழுத்து நடை எளிமைதான் உங்கள் பாணி உங்கள் முகப்படத்தை போல... 

காட்டான் குழ போட்டான்....

Anonymous said...

மிக நல்ல வரிகள்...
நல்ல கவிதை ரமணி சார்...

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

காட்டான் //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ரெவெரி
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

RAMVI said...

மிக அருமையான கவிதை
என்னை நெகிழவைத்த வரிகள்...
//எனக்குள்ளே உயிர்துடிக்க
உதிரத்தால் எழுதுகிறேன்

சுட்டெரிக்கும் பாலையிலே
நீரின்றித் துடிக்கிறேன்
கொட்டுகிற மழையாக
குளிர்விக்க வாராயோ//

Ramani said...

RAMVI //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

மஞ்சுபாஷிணி said...

வேறு வழியே இல்லை எனும்போது எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை வரும்பொழுது சட்டென நம் மனம் இறைவனின் பதத்தை நினைத்துவிடுவது தான் இயல்பு….

ஆனால் இங்கே தன் இணையையே இறைவனாக கணவனை ஈஸ்வரனுக்கு ஒப்பாக சொல்வேன் நான்.. அது போல (பதி பரமேஷ்வர்)
உயிர் துடிக்க உயிர் என் உடலில் இருந்து விலகிடுமுன் என் மனதில் தக்கவைத்திருக்கும் உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பினை நீ அறிந்திட வந்துவிட மாட்டாயா என்று உயிர் உருக கதறுவது போல் வரி அமைந்திருப்பது சிறப்பு ரமணி சார்…

தனிமையின் கொடுமை மிக நன்றாகவே வரிகளில் வடிக்கப்பட்டிருக்கிறது… எத்தனையோ பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சுற்றி இருக்கும் அவஸ்தைகளில் இருந்து இருட்டிலிருந்து (இருட்டு எனக்கு ரொம்ப பயம்) வெளிவர துடிக்கும்போது வழி மறந்து உன் நினைவுகளில் நடக்கும்போது வழியாக துணை வரமாட்டாயா என்ற ஏக்கவரிகள் மனதை என்னவோ செய்கிறது…

அனுபவித்து எழுதியது போலவே இருக்கிறது… சுட்டெரிக்கும் பாலையில் நீர் எங்கே கிடைக்கும்? அப்படி உயிருக்கு தவிக்கும்போது ஒரு துளி நீரே உயிர் பிழைத்திட வழியாகும்போது மழையாக கொட்டி காத்திட வருவாயோன்னு கதறுகிறது….

க்ருஷ்ணா என்று அன்று அபலையாக திரௌபதி கதறும்போது உற்றவனும் உற்ற சொந்தங்களும் மௌனமாக தலை குனிந்து நிற்க மானம் காத்து உயிர் காத்து இறுதியில் சத்தியமும் காத்த அந்த கண்ணனை சரியானபடி வரிகளில் பயன்படுத்தியது மிக அருமை…
நம்பி உன்னை அழைக்கின்றேன் கைநீட்டி கண்ணனாக வந்து காத்துவிட மாட்டாயா என்ற நம்பிக்கை வரிகள் கவிதையில் உயிர் கொடுக்கிறது…
இந்த ஊர் இருக்கிறதே நாம் நன்றாக இருந்தாலும் பொறாமையுடன் பார்க்கும் நல்லது செய்தாலும் எதிரில் கும்பிடு போட்டு முதுகில் பரிகாசம் செய்யும்… கணவன் உடன் இருந்தாலே சந்தேகத்தீயில் வாட்டும் ஊர் கணவன் அருகில் இல்லன்னா சும்மா விட்டு வைக்குமா என்ன?? தானே எரித்துக்கொண்டு சாம்பலாகும் வரை வேடிக்கை பார்க்கும் அமைதியாக.. அந்த உயிர் பிரிந்ததுக்கு கூட இந்த ஊர்வம்பு தான் என்ற சொரணையே இல்லாமல்…. அப்படிப்பட்ட மக்களிடமிருந்து காக்க ஓடி வரமாட்டியா என்று கேட்பதை படிக்கும்போது மனது துடிக்கிறது…

காதலையும் வயிற்றையும் ஊர்மக்கள் பார்வையில் மறைக்க முடியுமா இல்லை மறுக்கத்தான் முடியுமா? சீதையின் நிலையை கண்முன் நிறுத்தியது இந்த வரிகள், ராமனைப்போல் எங்கே தன் இணையின் பார்வை தன் மனதை புரிந்துக்கொள்ளாமல் சந்தேக வித்து படர்ந்துவிடுமோ என்ற பயம் இதில் தெரிகிறது ரமணி சார்…

பொறுக்க முடிந்தவரை பொறுமை காத்து முடியாது என்ற நிலை வரும்போது மரணத்தை தவிர வேறு வழியில்லை என் சோகம் தீர்க்க என்று புழுவாய் துடித்து எழுதிய வரிகளை பார்க்கிறேன் ரமணி சார்…

மிக அருமையான ஒரு சிந்தனை…. ஒரு பெண் தன் இணையை பிரிந்தால் எப்படி எல்லாம் துடிப்பாள் என்னவெல்லாம் சொல்லி அரற்றுவாள்… அவளாய் மாறி எழுதவைத்த மிக சிறப்பான வரிகள் ரமணி சார்….

அன்பு வாழ்த்துகள் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை பெண்ணாய் இருந்து பார்த்து துடித்து எழுதியமைக்கு ரமணி சார்….

Ramani said...

அன்பார்ந்த மஞ்சுபாஷிணி
தங்களால் மிகச் சிறந்த கதையோ கவிதையோ
படைக்க முடிவதன் காரணமே ஆழமான விரிவான
மிக வேகமான சிந்தனைத் திறன்தான் என்பதற்கு
தங்கள் பின்னூட்டங்களே சான்று
தங்கள் பின்னூட்டங்களை கருத்தூன்றிப் பார்க்கையில்
தங்கள் முழுத்திறனும் வெளிப்படும் படியான படைப்பை
இன்னும் வெளிக்கொணரவில்லை என்வே தோன்றுகிறது
தங்கள் சிந்தனைகளை தொடருகிற வாய்ப்பை
பெற்றமைக்காக நான் மிகவும் மகிழ்கிறேன்
தொடர்ந்து சந்திப்போம் தொடர வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி said...

தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டு வாசிக்க ஆரம்பித்தேன் ரமணி சார்...

எளிய நடையுடன் இத்தனை அருமையா கவிதை எழுதி இருக்கீங்க இப்படி சொல்லலாமா நீங்க?

கண்டிப்பாக ரமணி சார்...அன்பு நன்றிகள்....

கீதா said...

வார்த்தைகளில் வலி விஞ்சிய நயம் ரசிக்கச் செய்கிறது. ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் உணர்வு வெகு அற்புதம். பாராட்டுகள்.

Ramani said...

கீதா //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

raji said...

புரிதலுக்குரிய எளிய நடையுடனும் சந்த நயத்துடனும் கூடிய அருமையான
கவிதை.

Ramani said...

raji //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment