Wednesday, August 10, 2011

மரண பயம்.?

குற்றவாளிபோல் நான் இருக்க
என்னைச் சுற்றி
மகனும் மகளும் மருமகளும்

"நான் என்ன குறை வைக்கிறேன்னு
நீங்களே நேரடியா கேளுங்கோ

காலையில் ஆறு மணிக்கு
ஸ்ராங்கா ஒரு கப் காஃபி
வாக்கிங் போய் வந்ததும்
ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி
பதினொரு மணிக்கு
முளைகட்டிய பயறு ஏதாய்ச்ச்சும்
மதியம் காய்கறியோடு
அளவான சாப்பாடு
சாய்ந்திரம் ஏதாவது ஜூஸ்
ராத்திரி எண்ணையில்லாம
சப்பாத்தி நாண்
 இப்படி ஏதாவது
முடியுதோ முடியலையோ
நான் சரியாகத்தான் செய்து தந்தேன்
இப்போது ஒரு மாதமாய்  அவர் சரியாக
சாப்பிடரதும் இல்லை
முகம் கொடுத்து பேசரதும் இல்லை"
முந்தானையால் கண்ணீரைத்
துடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்

" கோவில் போய்வர ஆட்டோ
ஆன்மீக டூர் போகணுமா
ஆறு மாதத்துக்கு ஒருமுறை
அதுக்கும் ஏற்பாடு பண்ணித்தாரேன்
என்னிடம் பணம் கேட்கச்
சங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு
நானும் யோசிச்சு யோசிச்சு
முடிந்ததையெல்லாம் செய்யரேன்
அப்படியும் ஏன் இப்பவெல்லாம்
சரியா பேசமாட்டேங்கராருன்னு தெரியலை"
பல நாள் அடக்கிவைத்ததை
கொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்

"மனதில் என்ன குறை இருந்தாலும்
சொல்லுப்பா
எதுன்னாலும் செய்யுறொம்
எங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா"
எனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்
பார்த்துப் போக வந்த மகள்

நான் என்னவெனச் சொல்வது ?
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

ஆட்டுக்குத் தேவையான
அனைத்தும் கொடுத்தும்
எதிரில் புலியைக்
கட்டிவைத்த கதையாய்...

வீட்டுக்குள்
கரு நாகம்படமெடுத்து நுழைந்ததைக்
கண்ணாரப் பார்த்தும்
இருப்பிடம் தெரியாது வீட்டுக்குள்
பயந்து திரிபவன் ..நிலையாய் 

நாற்பதாய் இருந்த
நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்...

அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்..

காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?

எப்படி அவர்களை நோக வைப்பது ?

98 comments:

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

வித்தியாசமான சிந்தனை
நிஜமான ஆதங்கம் தான் பாஸ்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

அட நான்தான் முதல் ஆளா ???
சந்தோஷம் சந்தோஷம்

Ramani said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன்//

தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

இளங்கோ said...

எல்லாருக்கும் இருக்கும் பயத்தை அற்புதமாக வடித்து விட்டீர்கள்.

M.R said...

மரணத்தை எதிர்நோக்கி ஒரு உள்ளம்

அதை உணரா நெஞ்சங்கள் அருகில்

அருமையான நடையோடு கூடிய பதிவு அருமை நண்பரே

Madhavan Srinivasagopalan said...

//அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்
காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?//

Just express ur concern..

at least tension will come down.

தமிழ் உதயம் said...

மனிதர்கள் மற்றும் ஏனைய விஷயங்கள் குறித்த பயத்தை விளக்கி விடலாம். காலன் மீதான பயத்தை எப்படி விளக்குவது. வயதுக்கு தகுந்த கவலை வாழ்க்கை முழுக்க. கவிதை அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

மனசை கனக்க வச்சிட்டீங்களே குரு......

MANO நாஞ்சில் மனோ said...

மனசை கலங்க விடாதீர்கள் குரு, நாங்கெல்லாம் இருக்கிறோம்....

Ramani said...

Madhavan Srinivasagopalan //


எனது சித்தப்பா ஒருவர் அந்த மன நிலையில் இருந்தார்
அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி
சம நிலைக்கு கொண்டு வந்தேன்
அந்த அவருடைய மனோ நிலையை
எழுத்தில் கொணர முடியுமா என
முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்
முயற்சி வெற்றியா தோல்வியா என்பதை
நீங்கள்தான் சொல்லவேண்டும்

சத்ரியன் said...

//காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..//

ரமணி அய்யா,

பெரியவர்களின் மெளனத்திற்கு இப்படியும் ஒரு பொருள் இருக்கோ....?

எல்லாம் குடுக்க சுத்திலும் இத்தனப் பேர் இருந்தாலும், முக்கியமான ஒன்ன எடுத்துட்டுப் போக ஒருத்தன் காத்துக்கிட்டிருக்கிறது தெரிஞ்சும் எப்புடி சந்தோஷமா இருக்க முடியும்?

சத்ரியன் said...

//MANO நாஞ்சில் மனோ said...
மனசை கலங்க விடாதீர்கள் குரு, நாங்கெல்லாம் இருக்கிறோம்....///

நீங்க இருப்பீங்க-ன்றது அய்யாவுக்கும் தெரியும்.... அவரு பயமெல்லாம் வேற!

Ramani said...

MANO நாஞ்சில் மனோ //

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
எழுதியதுதான் நான்
நான் அவரில்லை

ரியாஸ் அஹமது said...

ஒவ்வொரு பத்தியிலும் ஒரு குறையும் இல்லையே
என்ற எண்ணம் வந்தது ..இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் விட்டு பிரிய யாருக்கு மனம் வரும்

ரியாஸ் அஹமது said...

இப்படி ஒரு கரு பொருளை யோசித்து கவிதையாகிய
உங்களுக்கு நன்றி நன்றி

Ramani said...

இளங்கோ //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Ramani said...

M.R .//

வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Ramani said...

தமிழ் உதயம் //
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

மஞ்சுபாஷிணி said...

யோசிக்க வைக்கிறது ரமணி சார் உங்க வரிகள்...

எளிமையா தான் ஆரம்பிச்சீங்க....சிலர் வீட்ல மாமியார் மனம் கோணாம நடக்கும் மருமகள், சிலர் வீட்ல மாமியார் முகம் காணவே இஷ்டப்படாத மருமகள்....

ஆனா உங்க வரிகளில் குடும்பம் ஒரு நந்தவனமா சந்தோஷமா இருக்கேன்னு படிச்சிட்டே வந்தேன்... எனக்கும் தோணித்து என்னவாருக்கும் ஏன் இப்படின்னு யோசிச்சுக்கிட்டே படித்தால் கடைசி பத்தி புரிய வெச்சுடுத்து.....

ஹூம் என்ன சொல்வது.... மரணத்துக்கு பயப்படாத மனுஷா உண்டா? தைரியமா தப்பு பண்ணிட்டு சாவகாசமா திரியும் எத்தனையோ பேருக்கு தண்டனை கடவுள் எப்படி தருவார்னு தெரியாதுன்னாலும் மரணம் ஒரு சிலருக்கு தண்டனை என்பதால் பயமும் ஒரு சிலருக்கு மரணம் விடுதலை என்று நினைப்பதால் முக்தின்னும் படறது...

மனசு ரொம்ப சரியில்லாத நிலையில் ஆபிசுல மனம் குழம்பி ஒரு சின்ன தப்பு செய்துட்டேன்.... ரெஜிஸ்ட்ரில எண்ட்ரி போட மறந்துட்டேன்...அதுக்கு மேனேஜர் சொன்ன கேள்வி அப்படியே துடிக்க வெச்சுடுத்து :( நம் மரணம் நமக்கு பயமாருந்தாலும் நம் மரணம் ஒரு சிலருக்கு நன்மை தருகிறதோன்னு நினைச்சேன்... ஹூம்....

பிறப்பு இருக்கும் இடத்தில் இறப்பும் சாத்தியமே... இல்லை கட்டாயமே.. இதில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது... ஆனா மரணத்தை யாரும் எதிர்நோக்கி இருக்காததால தான் நிம்மதியா இருக்க முடியறது...

ஆனா உங்க வரிகள் சொன்ன விஷயமே வேற....

எல்லா சந்தோஷங்களும் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத ஒரு அவஸ்தையான மனநிலையை மிக அற்புதமா வரிகளில் கொண்டு வந்திருக்கீங்க ரமணி சார்.....மரணத்தை எதிர்நோக்கும் மனப்பக்குவம் நமக்கு வந்துட்டாலே மரணம் நம்மை என்ன செய்துவிடும்? உடலை விட்டு உயிர் வேறு உடல் நோக்கி பயணத்தை தொடங்கிவிடும்.... என்ன ஒன்னு உற்றார் எல்லாரும் மாறிடுவா அவ்ளோ தான் வித்யாசமே...

ரொம்ப சிறப்பா சொல்லி இருக்கீங்க ரமணி சார்.. நிஜம்மாவே யோசிக்க வெச்சுடுச்சு வரிகள்...

அன்பு வாழ்த்துகள் ரமணி சார்....

Ramani said...

சத்ரியன் //

தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் நன்றி

மிகச் சரியாக கவிதையின்
உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு
பின்னூட்டமிட்டமைக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

பற்று வைத்த அனைத்து ஜீவன்களும் ஒரு நிலையில் கவலை பட வைக்கும் ஒரு விசயம் நிரந்தர பிரிவு எனும் மரணம்... முறையான ஒவ்வொரு குடும்பஸ்தனுக்கும் வரும் தவிர்க்க இயலாத பயம் தானே இது... அதனால என்னவோ வைரமுத்து அவர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது... தாமரை இலை தண்ணீர் போல் நீ பட்டு படாமல் இரு... இந்த வரியும் கருத்தும் உறுத்தலாகத்தான் இருக்கும்.. என்ன செய்வது அதை ஏற்றுக்கொள்வது கடினம் தான் மன்னியுங்கள்... வேறு என்ன சொல்ல

கவிநயா said...

மனிதர்களின் பொதுவான அச்சத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

Ramani said...

ரியாஸ் அஹமது //

பாராட்டுதல் கூட மிகச் சரியாகப்
புரிந்துகொண்டு பாராட்டப் படும்போது
அது மகிழ்வை இரட்டிப்பாக்குகிறது
தங்கள் பின்னூட்டம் போல
மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

மஞ்சுபாஷிணி//

ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைகளைவிட
அவரின் முன்னுரை மிகப் பிரமாதமாக இருக்கும்
அதைப் போல என்னுடைய பதிவினைவிட
எப்போதும் தங்கள் பின்னூட்டமே எனக்கு
ரொம்பப் பிடிக்கும்
தங்கள் பின்னூட்டத்தில் மிகச் சரியாக
புரிந்து கொண்டதும் அது தொடர்பான நிகழ்வு ஒன்றினை
மனம் திறந்து பகிர்ந்து கொள்வதும்
பாராட்டப் படவேண்டியதை மிகச் ச்ரியாக
தேர்ந்தெடுத்து பாராட்டுவதும் உங்கள் சிறப்பம்சம்
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்

Ramani said...

மாய உலகம்//

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

மரண பயம் மிகவும் கொடியது தான் ..ஆனால் மனதை வேறு செயற்ப்பாடுகளில் திசை திருப்புவதன் மூலம் ஒருஅளவுக்கு தவிர்க்கலாம்...கவிதை சூப்பர் ஐயா

Ramani said...

கவிநயா //


தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் நன்றி

Ramani said...

கந்தசாமி. //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்கள் சொந்தத்தின் உணர்வுகளின் வெளிப்பாடு...அருமை என்று சொல்லி முடிக்க மனமில்லை ரமணி சார்..
என் சொந்தங்களிலே பலர் அந்த பயத்தோடு 20 ஆண்டுகள் வாழ்ந்த நினைவும் எனக்குண்டு...சில நேரங்களில் மருத்துவர் செய்ய முடியாததை ஒரு பேரனோ பேத்தியோ இலகுவாய் நிவர்த்தி செய்யக்கூடும்...

நாய்க்குட்டி மனசு said...

//வீட்டுக்குள் கரு நாகம்படமெடுத்து நுழைந்ததை
கண்ணாரப் பார்த்தும்
இருப்பிடம் தெரியாது வீட்டுக்குள்
பயந்து திரிபவன் ..நிலையாய் //
மிகவும் ரசித்த வரிகள்
ஒத்த வயதினர் உயிர் நீக்கும் போது
உள்ளுக்குள் ஒரு உதறல்
வரத் தான் செய்கிறது.

Chitra said...

நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்
அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்
காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்........ மனதில் ஒரு வகை கலக்கத்தை உண்டு செய்த கவிதை வரிகளும் கருத்தும். எந்த நேரமானாலும், எந்த வயதினருக்கும் வரும் "அந்த நாளை" மற்ற வயதினர் நினைத்து பார்ப்பதில்லையே. வாழும் ஒவ்வொரு நாளும் வரப்பிரசாதமே - அனைவருக்குமே!

வெங்கட் நாகராஜ் said...

பெரியவர்களின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல இருந்தது உங்களது இக்கவிதை. மனதைத் தொட்டது.

எப்படி உரைக்க முடியும் அப்பெரியவரால்.... காலனுக்காய் காத்திருப்பதை.....

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

Ramani said...

Reverie //

தங்கள் வரவுக்கும் விரிவான சரியான
பின்னூட்டத்தற்கும் நன்றி
சில நேரங்களில் சில உணர்வுகள்
நம்மை நிலை குலையச் செய்து போகிறது
அந்த நிலையில் அந்த உணர்வை
மிகச் சரியாக சொற்களால் படம் பிடித்துக் காட்ட முடியுமா
என முயற்சிக்கிறோம்
சில சமயம் வெற்றி பெறுகிறோம்
பல சமயம் தோற்றுப் போகிறோம்
இதில் நான் குறிப்பிட்டுள்ள சில காலம்
மரண பயத்தில் உறைந்து போயிருந்த எனது உறவினர்
இப்போதும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்
விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Ramani said...

நாய்க்குட்டி மனசு//

ஒத்த வயதினர் உயிர் நீக்கும் போது
உள்ளுக்குள் ஒரு உதறல்
வரத் தான் செய்கிறது.

இந்த உணர்வைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்
மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ஸாதிகா said...

குறிப்பிட்ட வயதில் எல்லாம் மனிதர்களுக்கும் வரும் ஒரு உணர்வை கவிதையில் நயம் பட பிழிந்தெடுத்து தந்தது மனதை நெகிழச்செய்தது.

முதல் ஆறு பாராக்களையும் படிக்கும் பொழுது எதற்கு இந்த இந்த சோகம் என்று நினைத்து,கணிக்க கூட முடியாமல் நெகிழ்வாக கவிதையை முடித்திருப்பது அருமை.வாழ்த்துக்கள் சகோ.

கோகுல் said...

இயல்பான வரிகளில் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வரிகள்.
நாம் நேசிப்பவர்களும்,நம்மோடு இருப்பவர்களும் இல்லாத போது ஏற்படும் உணர்வை எளிமையாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் வயதை ஒத்தவர்களும், எதிர்பாராமல் நம்மை விட கொஞ்சம் வயதில் இளயவர்களும், இந்த உலகைவிட்டுப்பிரியும் போது, எல்லோருக்குமே, அடுத்து க்யூவில் நாம் தான் என்பது போன்ற ஒரு மரணபயம் ஏற்படுவது மிகவும் இயற்கையே. நிச்சயம் ஒரு நாள் நிகழப்போகும் மரணம் தான் என்றாலும், அது என்றைக்கு, எந்த ரூபத்தில், என்னென்ன கஷ்டங்களை உண்டாக்கி, எப்படி ஏற்படுமோ என்பது தான் மிகவும் மர்மமான விஷயம். அதை எதிர் நோக்கிக்காத்திருப்பவருக்கு யார் தான் என்ன ஆறுதல் கூறிட முடியும்.

நல்ல கற்பனை. நல்ல எழுத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

Rathnavel said...

நல்ல பதிவு.

Lakshmi said...

ரொம்ப யதார்த்தமான கவிதை. எத்தரை வசதி
சவுரியங்களுடன் வாழ்ந்தாலும் மரணபயம் வயதானவர்
களை பய்ப்பட்வே வைக்கிரதுதான்.அதுவும் சக வயதுடையவரின் மரணம் அவர்களை ரொம்வே வாட்டி
வதைக்கும் விஷயம்தான். அதை யதார்த்தமான வரி
களில் சொல்லி இருந்த விதம் அழகு.

Murugeswari Rajavel said...

மரண பயமும் உங்கள் கைவண்ணத்தில் நல்ல கவிதையாய்.முதுமை எத்தனை சுமை அவரவர்க்கே என்பதை உங்கள் எழுத்து படம் பிடித்துக் காட்டிவிட்டது ரமணி சார்.

! ஸ்பார்க் கார்த்தி @ said...

உபயோகமான பதிவு, வாழ்த்துக்கள்.
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகலாமே!!!!!

அமைதிச்சாரல் said...

உலகத்துல பிறந்தா எல்லோரும் ஒரு நாளைக்கு கிளம்பத்தான் வேணும். யாருங்க இங்கே சாஸ்வதம்!!!.. பக்குவப்பட்ட மனிதர்களும் சற்றே ஆடிப்போகும் இடம் இதுதான். என்றாலும் வருவதை புன்னகையுடன் எதிர்கொள்ளும் துணிச்சலை, அந்தக்கடவுள்தான் கொடுக்கணும்..

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி...
நாகரிக மோகத்தின் காரணத்தினால் அந்தரிக்கும் வயதான பெற்றோரின் நிலையினையும், பாராமுகமாய் இருக்கும் அவர்களின் பிள்ளைகளின் நிலையினையும், தத்ரூபமாக உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

Ramani said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

கோகுல் //


தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

Rathnavel //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

Murugeswari Rajavel //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

ஸ்பார்க் கார்த்தி //
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

நிரூபன்

தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

காட்டான் said...

கவிதை அருமை ஐயா தாமத வரவிற்கு மன்னிக்கவும்... 

Ramani said...

காட்டான்//

வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

கோவை2தில்லி said...

யதார்த்தமான கவிதை. மரண பயம் என்பது எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படுவது தான்.....

Ramani said...

கோவை2தில்லி //.

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி

vanathy said...

ரமணி அண்ணா, சூப்பரோ சூப்பர். மரண பயம் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான பயம்.

குணசேகரன்... said...

Do not worry sir..but full fill your likes and enjoy the life..birth and death is not in our hands...

Ramani said...

vanathy//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Ramani said...

குணசேகரன்... //..

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
எழுதியதுதான் நான்
நான் அவரில்லை

ஸ்ரீராம். said...

சிறு வயதில் முதலில் மரணம் எல்லோருக்கும் உண்டு என்பதே அதிர்ச்சியாகும், முதலில் தெரிய வரும்போது!
அப்புறம் பெரியவர்களாகித்தான் மரணம் வரும் என்ற எண்ணம் மணத்தில் நிற்கும். வீட்டில் வயதானவர்கள் மரணங்களைச் சந்திக்கும்போது 'பரவாயில்லை, நமக்கு நாள் இருக்கிறது' என்று தோன்றும்! நம் வயதை ஒத்த வயதினர் மரணம் கேள்விப் படும்போது மனசுக்குள் ஒரு 'பக்' இருக்கும்தான்!

Anonymous said...

மரண பயம்... வயோதிகத்தின் கடைசி நாட்களில்..

அழகாய் சொல்லியிருக்கிறது கவிதை வடிவிலான் ஒரு கதை..

முடியும் நாளை எண்ணி எண்ணியே விடியும் ஒவ்வொரு நாளையும் பயத்தில் கழிக்காமல் ஆழ்ந்து அனுபவித்து வாழ்ந்திடல் வேண்டும்

மனோ சாமிநாதன் said...

மரணத்தை நினைத்து அவஸ்தைப்படும் ஒரு வயதானவரின் பார்வையில் அழகான கவிதை வழக்கம்போல! சிலருக்கு அது அவஸ்தை! சிலருக்கு அதுவே ஒரு அமைதியான காத்திருத்தல்! வாழ்க்கையின் எல்லா உணர்வுகளுமே இப்படி இரு பக்கங்களைக் கொண்டது தான்!

Ramani said...

ஸ்ரீராம். //.

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Ramani said...

ஷீ-நிசி //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Ramani said...

மனோ சாமிநாதன் //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

அப்பாதுரை said...

நட்பின் மரணத்தைப் போல் பயமூட்டுவது ஒன்றில்லை. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

Ramani said...

தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

Ramani said...

அப்பாதுரை //

தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

புலவர் சா இராமாநுசம் said...

பிறப்பது வாழ்வில் ஒருமுறைதான்
இறப்பது வாழ்வில் ஒருமுறைதான்
இருக்கும் வரையில் வாழ்ந்திடுவோம்
இயற்கையின் முடிவில் வீழ்ந்திடுவோம்

நேற்று உள்ளார் இன் றில்லை
நினைத்தால் இரமணி எது எல்லை
ஆற்றுவோம் நாளும் நம் கடமை
அழிவே இறுதியில் நம் உடமை

புலவர் சா இராமாநுசம்

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

யதார்த்தத்தை உணர வைக்கும் வரிகள்.

இருந்தும் இல்லாமல் இருக்க பயிலவேண்டும்.
மனதை உற்சகமாக வைத்து

காலா என்னெருகே வாடா உன்னைக் காலால் உதைத்த காலகாலனின் பக்தன் நான்

என அறைகூவும் தைரியம் வாய்க்கப் பெறவேண்டும்.

பாரத்... பாரதி... said...

உங்கள் எழுத்தின் வீரியம் முழுமையும் இந்த வரிகளில் புலப்படுகிறது.

//நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்
அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..//

பதிவின் முடிவும் அதிர்ச்சியையும், கொஞ்சம் அயர்ச்சியையும் உண்டாகிறது. எப்படியாயினும் அது தானே உண்மை என்ற எண்ணமே நிலைக்குலையாமல் காக்கிறது.

Ramani said...

இராஜராஜேஸ்வரி//

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

Ramani said...

பாரத்... பாரதி...//

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
எனது மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

கீதா said...

அருமையான உள்ளடக்கம் கொண்ட கவிதை. பல முதியவர்களின் இறுதிக்கால மனநிலையைப் பக்குவமாக வெளிக்காட்டியவிதம் நன்று. எப்போதான் எமன் வந்து அழைப்பானோ என்று ஆதங்கப்படும் நிலையிலிருக்கும் முதியவர்களோடு ஒப்பிடுகையில் இவர் கொண்ட மரணபயம், சூழ்ந்திருக்கும் உறவுகளின் அன்பையும் ஆதரவையும் அழகாக எடுத்தியம்புகிறது. மனம் தொட்ட கவிதை.

Ramani said...

கீதா//

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான வாழ்த்துரைக்கும்
மனமார்ந்த நன்றி

மஞ்சுபாஷிணி said...

அன்பு நன்றிகள் ரமணி சார்.....

பின்னூட்டத்திற்கும் ஒரு அருமையான பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள்.....

G.M Balasubramaniam said...

மரணம் பற்றிய நினைவே பயத்தை உண்டு பண்ணும்.
மரண பயத்தில் இருந்த ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். அது பற்றி என் சிறுகதை வாழ்வின் விளிம்பில்- ல் எழுதியிருக்கிறேன். எதுவும் செய்ய இயலாத நிலைமை வாழவேண்டும் எனும் ஆசை எல்லாம் அவர் கண்களில் கண்டேன். நாம் என்ன மார்கண்டேயர்களா சிவ லிங்கத்தை இருகப் பற்றி உயிர் பிழைக்க. காலா அருகினில் வாடா காலால் உன்னை உதைக்கிறேன் என்று சொன்ன பாரதியும் காலனை உதைக்க முடியவில்லை. என்ன செய்யலாம். ஒன்றும் செய்ய முடியாது. மரணம் தவிர்க்க முடியாது. முடிந்தவரை பற்றில்லாமல் இருந்தால் ஓரளவு மரண பயத்தை குறைக்கலாம் (தடுக்கலாம் அல்ல ) என்று எண்ணுகிறேன்.

Ramani said...

G.M Balasubramaniam //.


தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கவி அழகன் said...

ரமணி சார் உங்க கவிதையை வாசித்த்ததும் எனக்கு பயம் வந்திட்டு

Ramani said...

கவி அழகன் //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

VENKAT said...

உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்று நினக்கிறேன், ம்ருத்யூஞ்ஜெய மந்திரம் என்று ஒன்று உண்டு. இதன் பொருளை ஆரோக்கியமாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டு மரணபயம் வரும் போது தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்வதற்காகவே நம் முன்னோர்கள் எழுதி வைத்தார்கள். பொருள் தெரியாமல் மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி அவற்றின் பயன்பாடு அவசியமாகும் பொழுது மனப் கலக்கத்தில் மாட்டிக்கொண்டு திணருவதே நமது கலாச்சாரமாகி விட்டது. பல முதியவர்களின் மன நிலையை உங்கள் கவிதையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மந்திரம் உணர்ந்த பெரியவர்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்வார்களென்று தெரியவில்லை. மந்திரம் என்னவோ ஒர்க் அவுட் ஆகும் என்றுதான் படுகிறது.

மாலதி said...

இன்றைய சூழலின் உளவியலை அழகாக படம் பிடித்து வடித்து உள்ளீர்கள் நல்ல ஆக்கம் பாராட்டுகள் இந்த தலைமுறையின் புரிதல் சற்று மாறுபட்டதாக இருக்கிறது கற்று கொடுப்பதும் கற்று கொள்ளுவதும் குறைந்து போனதால் வந்த பிழை தொடர்க.

Ramani said...

VENKAT //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான தெளிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramani said...

மாலதி //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான தெளிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

M.R said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

நியாயமான பயம் எல்லோருக்கும் அரைவாசிக் காலத்தின் பின் கிட்டத் தட்ட முக்கால் வாசிக் காலத்தில் வரும் பயம் தான் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்தகள்.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

பாரத்... பாரதி... said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Ramani said...

M.R //

தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி

சாகம்பரி said...

தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு மரணமும் தன்னுடைய இறுதி நாட்களை நினைவுபடுத்தும் கொடுமை. இதுவேதான் ஒரு விபத்தை பார்க்கும்போது பாதிப்பேற்படுத்துகிறது. நாளை நடப்பது உறுதியென்று தெரிந்தும் கடைசி நொடிக்காக தயாராகும் இதயம் ஏது? சிந்திக்க வைக்கும் பதிவு.

Ramani said...

சாகம்பரி //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

அம்பாளடியாள் said...

நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்
அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்
காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?

வலிதரும் கவிதை வரிகள் அருமை!.....
மனம் மகிழ என் தளத்தில் இன்று
ஒரு காதல்க் கவிதை உங்கள்
அனைவரின் வரவுக்காகவும் காத்திருக்கிறது .
நன்றி ஐயா பகிர்வுக்கு .....

Ramani said...

அம்பாளடியாள் //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

raji said...

மரண தேதி குறிக்கப்பட்டும் அந்த உண்மை தெரிந்தும் தன்னம்பிக்கையுடன்
வாழும் மனிதர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.அதை என் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுள்ளேன்.
மரண பயம் வந்தால் இருக்கும் நாளின் நிம்மதி குறையுமல்லவா?

Ramani said...

raji //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

இமா said...

அருமையான கவிதை. படித்துவிட்டு சிந்தனைகள் வேறு எங்கோ போய் விட்டது. :)

மரணபயம், என்னைப் பற்றி எனக்கு இல்லை. ஆனால் வேறு சிலரையிட்டு உண்டு. இதைப் படித்ததும் மீண்டும் உணர்ந்தேன் அந்த வலியை.

இழப்புகளுக்கு எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும். ஹும்! எப்பொழுதும் போல் இறைவன் துணை இருப்பான். எப்பொழுதும் போல் கடந்து வர சுற்றமும் துணையிருக்கும்.

நிறையச் சிந்திக்க வைக்கிறது உங்கள் கவிதை.

Ramani said...

இமா //

தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Post a Comment