Thursday, September 29, 2011

நவராத்திரிச் சிந்தனை


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை
மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும் பெண்கள்தான்
காரணம் என்பதைஇந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனை
ஆதியிலேயே மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக கலைக்கும்
கல்விக்குமான கலைமகளை துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்
காக்கும் திருமாலுக்கு இணையாக கருணையும்
செல்வத்திற்குமான திருமகளை துணைவியாக்கி
குதூகலித்திருக்கிறான்
அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக ஆக்ரோஷமும்
சக்தி மிக்கவளுமான மலைமகளை இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

அதைப் போன்றே 
குழந்தையாய் முழுமையாக அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக  அன்னையாக
கணவனாக அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாக தாரமாக 
வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக
 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே
மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
 நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்
அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
 சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்
அவர்களோடு இணந்து இந்தச் சீர்கெட்ட சமூகம் சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

76 comments:

கடம்பவன குயில் said...

பெண்களுக்கான முக்கியமான திருவிழா நவராத்ரி. நவராத்ரி நாட்களில் அலங்காரமான அம்மனாக ஒவ்வொரு பெண்களும் பூஜை கோயில் என்று பரபரப்பாய் இருப்பதே ஒரு அழகுதான். நாளை என் பதிவிலும் நவராத்ரி சிறப்புக் கட்டுரைதான். வாருங்கள். தங்கள் கருத்தைக் கூறுங்கள். மகிழ்வேன்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.....

உங்கள் நவராத்திரி சிறப்புப் பகிர்வு மிக அருமை...

Unknown said...

//வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய் தாங்கும் அன்புமிக்க மகளாக//

அருமையான இருக்கு எனக்கு மிக மிக பிடித்த வரிகள்
என் பாட்டி தாத்தாவை இப்படிதான் கவனித்து கொள்கிறார்

தமிழ் உதயம் said...

பக்திக்கும், பண்பாட்டுக்குமாய் ஒரு கவிதை - தங்களின் நவராத்திரி சிந்தனை. அருமை.

சாகம்பரி said...

அத்துடன் குடும்பம் ஒரு கோவில் என்பதை உண்மையாக்கும் வித்தையும் பெண்கள் கையில்தான் உள்ளது என்பதை வருங்கால குடும்பத்தலைவிகளுக்கு மறைமுகமாக உணர்த்துகிறது என்று நான் நினைக்கிறேன். எத்தனை முன்னேற்பாடுகள்! மிகவும் திட்டமிட்டு நவராத்திரியை கொண்டாடும் லாகவம் அம்மாவிடமிருந்து பெண்ணிற்கு மாற்றும் பயிற்சி காலமும் இதுதான் சார்.

M.R said...

நல்லதொரு தகவல் நண்பரே பகிர்வுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

நவராத்திரி வாழ்த்துக்கள் குரு....

MANO நாஞ்சில் மனோ said...

பெண்கள் நாட்டின் கண்கள்னு சொல்றது சும்மாயில்லை...!!!

bandhu said...

முற்றிலும் உண்மை. ஏனோ இதை இன்னும் பலரும் புரிந்துகொள்ளவே இல்லை!

மோகன்ஜி said...

அழகான நவர்ராத்திரி சிந்தனை ரமணி சார்! உங்களுக்கு என் நவராத்ரி வாழ்த்துக்கள்

kowsy said...

நவராத்திரி மகிமையை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். பெண்ணின் மகத்துவம் தெரிவிக்க வந்த ராத்திரிகள். சிவனுக்கு ஒரு ராத்திரி. சக்திக்கு 9 ராத்திரிகள். தாமரையில் அமர்ந்திருக்கும் தத்துவமுமு; உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். பொருத்தமான நாளில் தந்த இந்த ஆக்கத்திற்கு மிக்க வாழ்த்துகள்.

கோகுல் said...

நவராத்திரி வாழ்த்துக்கள்.
நாமும் நம்மாலானதை செய்வோம்!

மகேந்திரன் said...

நவராத்திரியின் பெருமையை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே. பெண்களுக்கும் நவராத்திரிக்கும் உள்ள தொடர்பை
செம்மையாய் விளக்கியிருக்கிறீர்கள்.
பதிவு அழகு...

Anonymous said...

இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்...
நவராத்திரி சிறப்புப் பகிர்வு அருமை...

மாய உலகம் said...

நல் குணம் உள்ள பெண்களை எந்நாளும் வணங்குவோம்.. ஏனென்றால் அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்க்ள்... பகிர்வுக்கு நன்றி சகோ

Unknown said...

சிறப்பாக உள்ளது!

த ம ஓ8

புலவர் சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

கடம்பவன குயில் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராக்கெட் ராஜா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

bandhu //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
பின்னூட்டத்திற்குமமனமார்ந்த நன்றி
சனி குறித்தான தங்கள் பதிவினில் பல அரிய
அறியாத தகவல்கள் இருந்தது
அதனைப் போல் தாங்கள் தாமரையினைக் குறித்த
விரிவான பதிவினை நவராத்திரி சிறப்புப் பதிவாகக்
கொடுத்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

மோகன்ஜி //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

wow! இவ்வளவு பெரிய கொலுவை இப்போது தான் பார்க்கிறேன்.

Avargal Unmaigal said...

உலகிலுள்ள அனைத்துமக்களுக்கும், வலை நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும் செய்யும் தொழில் சிறக்கவும்,எல்லோரும் எல்லாம் வளமும் பெற வாழ்த்துக்கள் என் மனம் கனிந்த இனிய நவராத்திரி / விஜயதசமி வாழ்த்துக்கள்...

இந்த பதிவின் வாயிலாக அனைவரையும் வாழ்த்த சந்தர்ப்பம் அளித்த ரமணி சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Yaathoramani.blogspot.com said...

கோகுல் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
நாமும் மகிழ்கின்றோம்/

சீராய் சிறப்புற்ற சிந்தனை ஆக்கத்திற்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மங்கையராய்ப் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்.
பெண்களே நமது கண்கள்.
பெண்கள் இல்லையென்றால் இந்த உலகே ஒரு வறண்ட பாலைவனம் ஆகி விடும்!
கருணை கொண்ட பெண்களாலேயே ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் அனைத்தும் இயங்கி வருகின்றன.

இவற்றையெல்லாம் அழகாக நவராத்திரி நன்னாளுடன் இணைத்து, பெண்களைப் போற்றிடுவோம் என்று தாங்கள் இன்று எழுதியுள்ளது, எனக்கு மிகுந்த சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஏதோவொரு பெண்ணோடு [தாயாக, சகோதரியாக, தோழியாக, சக பதிவராக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக] பின்னிப்பிணைந்துள்ள நம் வாழ்க்கைக்கு மிகவும் அர்த்தம் சேர்ப்பதான அருமையான படைப்புக்கு நன்றிகள். அன்புடன் vgk

தமிழ்மணம்: 10 to 11

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

பிரணவன் said...

நவராத்திரி வாழ்த்துக்கள் sir. . .

தனிமரம் said...

நவராத்திரியின் பெருமையைச் சிறப்பாக சொல்லியிருக்கிறீங்க ஐயா!

சென்னை பித்தன் said...

உங்கள் வீட்டுக் கொலுவா?பிரம்மாண்டமா இருக்கே!
மிக நல்ல சிந்தனை.

ADHI VENKAT said...

நவராத்திரி சிறப்பு பதிவு அருமை சார்.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

Unknown said...

அண்ணே நவராத்திரி வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

நவராத்திரியின் தாத்பர்யத்தை தங்களது அழகு கவிதை மூலம் நாங்களும் அறிந்து கொண்டோம்.

Yaathoramani.blogspot.com said...

பிரணவன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தனிமரம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //
எங்கள் வீட்டு கொலு கொஞ்சம் சிறியது
இது நெட் உபயம்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

இறைவனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

நவராத்திரி பற்றிய விளக்கம் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

சுதா SJ said...

வணக்கம் பாஸ் :) எப்பிடி இருக்கீங்க..? விடுமுறையில் போய் இப்போத்தான் வந்து இருக்கோம்...

பாஸ்... ஆன்மிக பதிவு அழகா இருக்கு... இவற்றை எல்லாம் படிக்கும் போதுதான் ஊர ஞாபகம் வருது பாஸ் :(

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

நவராத்திரி கொண்டாட்டம் மங்கையருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனை மாறுபட்ட முறையில் அனுஷ்டிப்பதைக் காட்டுகிறது என்பது என் எண்ணம். அநீதிக்கெதிராக முப்பெரும் தேவியரும் வெற்றிக்கொடி நாட்டியதைக் கொண்டாடும் நாம் அன்றாடம் போராடும் நம் வீட்டு மஹாலக்‌ஷ்மிகளை மறக்கக் கூடாது. இந்நாளில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தானே சிறந்தது. வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

நவராத்ரி பற்றிய விளக்கம் நல்லா இருக்கு.

கதம்ப உணர்வுகள் said...

நவராத்திரியிலும் ஒரு அழகிய சிந்தனை....
ஆழமான சிந்தனை..... இப்படி யாரும் நினைத்து பார்த்திராத சிந்தனை....

எப்படி ரமணி சார் உங்களால் மட்டும் வித்தியாசமாகவே சிந்திக்கமுடிகிறது?? ஆச்சர்யமா இருக்கு.....

கணபதி சதுர்த்திக்கு ஸ்வாமி மேலே தான் பாட்டா போட்டிருக்கீங்கன்னு எல்லாருமே நினைச்சப்ப.. நீங்க சொல்லி தான் தெரிஞ்சுது நிரையசைலயே வரிகள் எல்லாம் அமைத்திருக்கீங்கன்னு…

இம்முறை நவராத்திரிக்கு கண்டிப்பா அம்பாள் மேலே தான் கவிதை இருக்கும் ஆனா எப்படி இருக்குமோன்னு ஒரு பயத்தோடவே இருந்தேன்.

கண்டுபிடித்து எழுதும்படி எளிமையா இருக்குமா? இல்லை இலக்கணத்தில் எதுனா செய்திருப்பாரா? இலக்கணத்தில் பூஜ்யம் நான். அந்த பயம் தான்..

1. ஹப்ப்பா நிம்மதி மூச்சு விடுகிறேன் கவிதை வரிகள் ரொம்ப எளிமையா இருக்கு….

2. ரெண்டு ஷர்ட் காலரை தூக்கி விட்டுக்கமுடிகிறது ஹை பெண்ணை கவுரவப்படுத்தி வரைந்த அட்டகாச வரிகள்….

3. வித்தியாச சிந்தனை இம்முறையும் பரிசை தட்டிச்சென்று விட்டீர்கள் போங்க நீங்க…

ஒருமுறையாவது எல்லோரையும் போல சராசரியா சிந்திக்கவே மாட்டீங்களா? அதென்ன எப்பவும் வித்தியாசம் வித்தியாசம் தானா படைப்புக்கு படைப்பு??

கதம்ப உணர்வுகள் said...

மரத்தில் தொடங்கி வீட்டின் அஸ்திவாரத்தில் தொடர்ந்து பரமன் வரை மிக அருமையான ஒரு ஆய்வுப்பா…

சிவனுடன் சக்தி இணைந்து ஆடும் அந்த தாண்டவமே அழகு அழகு கண்கொள்ளா அழகு…

நிலைத்து நிற்பது எது? என்ற கேள்விக்கு… நீங்க பெண்மையை பெருமைப்படுத்தி சொல்லி அப்படியே நைசா ஒரு குட்டியூண்டு விஷயத்தையும் பெண்கள் மனதில் உணருமாறு எழுதிய வரிகளுக்கு சபாஷ் சபாஷ் அட்டகாசம்னு கைத்தட்டி சொல்லத்தோணுகிறது ரமணி சார்…

பெண்கள் ஒரு உயிரை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்….

தாயாய் அரவணைப்பதில் தொடங்கி மனைவியாய் இணைவதில், மகளாய் பெருமைக்கொள்வதில், சகோதரியாய் அன்புடன் இருப்பதில், காதலியாய் தோழியாய் தோள்கொடுப்பது வரை பெண்களின் ஒவ்வொரு கட்டத்திலும் அன்பை மட்டுமே தான் தரும் எல்லாவற்றிலும் சேர்த்து கொடுக்கும்போது அங்கே பெண்களின் முக்கியத்துவம் பெருமைப்படுத்தப்படுகிறது….

கதம்ப உணர்வுகள் said...

பிறந்தவீட்டில் ரௌடியை போல் திரிந்துக்கொண்டு மிரட்டிக்கொண்டு அம்மா அப்பாவை ஏச்சிக்கொண்டு இருந்தாலும் திருமணம் ஆகி ன்புக்ககம் புகும்போது அங்கேயும் இந்த ரௌடிசம் தொடர்ந்தால் அங்கே காண்பது சந்தோஷமாய் கண்டிப்பாக இருக்கமுடியாது…

திருமணம் ஆகி கணவன் வீட்டில் புகும் பெண் மாமியார் மாமனார் என்று வேறுபடுத்தி பார்க்காமல் தாயாய் தந்தையாய் தன்னை அவர்களுடன் அன்புடன் இணைத்துக்கொள்ளும்போது அங்கே குடும்பமே ஒரு நந்தவனமாகி சந்தோஷம் குடிக்கொள்கிறது…

எங்குமே பெண் உயர்வுப்படுத்தப்படுவது தன் இனிய மொழியாலும் நல்ல குணத்தினால் அன்பான கனிவான தன் செய்கைகளால் மட்டுமே என்பதை உங்கள் வரிகளில் உணரமுடிகிறது ரமணி சார்….

தெய்வம் கூட தன் இணை இன்றி வாழ வழி இல்லை என்பதும் நமக்கு வரலாறு போல படிப்பினை போல எத்தனையோ கதைகள் மூலம் உணர்த்தி இருக்கிறது…

கதம்ப உணர்வுகள் said...

நவராத்திரி கொண்டாடுவது தெய்வங்களுக்காக தான் என்று எல்லோரும் நினைத்து தங்கள் படைப்பை படிக்க ஆரம்பிப்பார்கள்.. ஆனால் அதிலும் ஒரு அழகிய வித்தியாச சிந்தனை இருப்பதை படித்து முடிக்கும்போது மட்டுமே உணரமுடியும் ரமணி சார்…

வியக்கிறேன்….. ஒவ்வொரு படைப்புமே இப்படி சிறப்பா கொடுக்க எப்படி முடிகிறது உங்களால்? சிந்தித்து சிந்தித்து சோர்வதே இல்லை நீங்கள் என்று மட்டும் அறிந்துக்கொள்ள முடிகிறது….

ஒவ்வொரு அனுபவங்கள் படைப்பாகிறது…
ஒவ்வொரு நிகழ்வும் படைப்பாகிறது….
கண்டதும் கேட்டதும் கூட படைப்பாகிறது…
ஆனால் கண்டதை கேட்டதை இப்படி வித்தியாசமாக சிந்திக்க உங்களால் மட்டுமே முடிகிறது…

ஒரு பெண் குழந்தையாய் இருக்கும்போதும் சரி வளர்ந்து வீட்டில் மகளாக சகோதரியாக இருக்கும்போதும் சரி தோழியாக நட்பில் சிறக்கும்போதும் சரி திருமணம் ஆகி கணவனின் வீட்டுக்கு போனாலும் மாமியார் மாமனாரை வீட்டை விட்டு துரத்தாத நல்ல மகளாகும்போதும் சரி, கணவனுக்கு நல்லதை மட்டுமே சொல்லும் நல்லதொரு மந்திரியாக இன்னொரு அன்னையாக அணைக்கும்போதும் சரி, வயதாகி தன் விழுதுகளிடமே சரணடைந்து இறுதிகாலம் வரை வாழ்ந்து மடியும்போதும் சரி பெண் என்பவள் பொறுமையில் பூமாதேவியை மிஞ்சும்படி, அன்பில் கருணையில் அன்னைதெரசாவின் நகலாக இருந்து வாழும்போதே அப்பெண் சரித்திரத்தில் இடம்பெறுகிறாள் எல்லோர் மனதிலும் தனக்கொரு இடம் அமைத்தும் கொள்கிறாள்…

கதம்ப உணர்வுகள் said...

நம் பரம்பரையில் இப்படி ஒரு பெண் இருந்தாள் என்று பெருமைப்படும்படி வாழ்ந்து சிறப்பதே பெண்ணுக்கு சிறப்பு என்பதை உங்கள் முத்தான கவிதை வரி அழகாக சொல்கிறது ரமணி சார்….

பெண் உங்கள் இந்த வரிகளில் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை காணமுடிகிறது… தெய்வத்துக்கு இணையாக பெண்ணை போற்றுவதை காணவும் முடிகிறது….அதே பெண்ணை அகங்காரத்தில் ஆணவத்தில் தன்னை அழித்துக்கொள்ளாதே என்று அன்புடன் சொல்வதையும் காணமுடிகிறது ரமணி சார்…

அடக்கமும் அன்பும் எளிமையும் யாரையுமே இஷ்டப்படவைக்கும் என்பதை அருமையாக படைத்த அற்புத வரிகள் ரமணிசார்….

எங்க வீட்டிலும் நவராத்திரிக்கு கலசம் வைத்திருக்காங்க…. பாட்டி இருந்த காலத்தில் ஊரில் பொம்மைகளை எல்லாம் அழகா படி போல் அமைத்து அடுக்கி தினமும் சுண்டல் பலகாரம் செய்து எல்லோரையும் கூப்பிட்டு உட்காரவெச்சு கீர்த்தனை பாட வெச்சு சுண்டல் கொடுத்த காலத்திற்கே என்னை அழைத்து சென்றுவிட்டது உங்க படைப்பு ரமணி சார்….

பெண்களை கௌரவப்படுத்திய மாமனிதராக என் கண்முன் உயர்ந்து நிற்கிறீர்கள் ரமணி சார்…..

கதம்ப உணர்வுகள் said...

கல்யாணத்திற்கு முன் எல்லா திறமைகளும் உள்ளடக்கிய பெண் சுதந்திரமாக வலம் வருகிறாள் தாய்வீட்டில்…. ஆனால் தாய்வீட்டில் இருப்பதை போலவே புக்ககமும் இருக்கும் என்று சொல்லமுடியாது….அங்கே இருப்போருக்கு பாட்டு பாடவும் தெரியாது… ரெண்டு பஜனோ அல்லது கீர்த்தனையோ பாடவும் அனுமதி கிடைக்காது…நடனம் என்றால் உயிராக இருக்கும் எத்தனையோ பேருக்கு அங்கே போனால் பாட்டே பாடமுடியாதபோது ஆட அனுமதி கிடைக்குமா? கவிதை எழுத வாய்ப்பு கிடைக்குமா? வீணை வாசிக்கும் அந்த கணம் கிடைக்குமா? படம் வரைய விடுவார்களா? ஹுஹும் ஒன்னுமே கிடைக்காது…. அங்கே அவர்கள் விருப்பப்படி இருந்து அங்கே ஒரு புதிய பாதையில் வாழ்க்கையின் மற்றொரு கதவு திறந்திருக்கும்…. அங்கே இருந்து மற்றொரு வாழ்க்கை ஆரம்பமாகிறது கணவன் பிள்ளைகள் மாமியார் மாமனார் என்று புதிதாய் துவங்குகிறது…. அங்கே ஆட்டம் பாட்டம் எல்லாம் இருக்காது….அதனால் வாழ்க்கை அஸ்தமிப்பதில்லை கண்டிப்பாக… அன்பெனும் அழகிய மலரால் எல்லோர் மனதையும் தன் வசப்படுத்தி எல்லோராலும் போற்றப்படும் சக்தியாக உருவெடுக்கும் மற்றதொரு ரூபம் தான் அது என்று எடுத்துக்கொண்டு வாழ்க்கையின் நாட்களை சந்தோஷத்துடன் நகர்த்தவும் பெண்கள் அறிந்து வெற்றி பெறுவர்….

அன்பு நவராத்திரி தின நல்வாழ்த்துகள் ரமணிசார்….

ShankarG said...

அன்னையாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெண்மையின் தொண்டில் ஆண்களும் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாய்ப் பதிவு செய்துள்ளமைக்கு வாழ்த்துக்கள்.

raji said...

வாவ்!நல்ல விளக்கம்தான்.

அப்படியே சாகம்பரி மேடத்தோட கமென்ட்டுக்கும்
ஒரு சல்யூட்! :-))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நவராத்ரி காலத்தின் விழாக்கோலம் வேறெதிலும் இத்தனை அற்புதமாய் ஜொலிப்பதில்லை.

அது தொடர்பான உங்களின் சிந்தனைகளும் படிக்க மிக நேர்த்தியாய்.

அருமை ரமணியண்ணா.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ShankarG //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே
மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
நாமும் மகிழ்கின்றோம்//

நவரசமாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

பெண்களின் பெருமையை அழகாய்ப் பறைசாற்றி பிரமாதமாய் சிலாகித்துப் படைக்கப்பட்டப் படைப்புக்கு என் வந்தனம். நன்றியோடு பாராட்டுக்கள் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

கீதா //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //

இப்போதெல்லாம் என் பதிவுக்கு இடும்
தரமான பின்னூட்டங்களையும்
பிறர் பதிவுக்கு நீங்கள் இடும் பின்னூட்டங்களையும்
தொடர்ந்து படித்து வருகிறேன்
ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஒரு தெளிவான கருத்தும்
சொல்லிச் செல்லும் லாவகமும் பிரமாதம்
சரியாக பின்னூட்டமிட வேண்டுமென்றால்
மிகச் சரியாகப் படிக்கவேண்டியிருக்கிறது
மாற்றுக் கருத்து எனில் இன்னும் கூடுதலாக ஒருமுறை
படிக்கவேண்டியிருக்கிறது.அது நமது வளர்ச்சிக்கு
மிகவும் உபயோகமாக இருக்கிறது
உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்த்தே பலர் இருக்கும்படியாக
உங்கள் பின்னூட்டம் சிறப்பாக உள்ளது இம்முறை
ராஜி அவர்களின் பின்னூட்டத்தைப் படித்தீர்களா ?
தங்கள் வரவுக்கும் விரிவான தரமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

படித்தேன் ரமணி சார்... ராஜி அவர்களின் பின்னூட்டம்

\\வாவ்!நல்ல விளக்கம்தான்.

அப்படியே சாகம்பரி மேடத்தோட கமென்ட்டுக்கும்
ஒரு சல்யூட்! :-)) \\

அதனால் உடனே சாகம்பரி மேடத்தோட கமெண்டும் படித்தேன் ரமணி சார்....

சாகம்பரி மேடத்தோட கமெண்ட் படித்ததும் என் நினைவுகள் சரியா என் பாட்டி என் அம்மா அப்படி போய் நின்றது.... மஹாத்மா என்றால் காந்தி நினைவுக்கு வருவது எத்தனை சிறப்போ அப்படி இருந்தது சாகம்பரி மேடத்தோட கமெண்ட் படிக்கும்போதும் அதை எடுத்துச்சொன்ன ராஜி மேடத்தோட பின்னூட்டமும் ரமணி சார்.... இத்தனை விஷயங்கள் அறியவும் நான் தெளியவும் உங்கள் படைப்புகளை படிக்கும்போது தான் முடிந்தது என்றால் அது மிகையில்லை ரமணி சார்...

எதுவோ தேடி நெட்ல வந்தபோது உங்கள் பிளாக்ஸ்பாட் கிடைக்க அட என்று அன்றுமுதல் உங்க படைப்புகளை படிக்க ஆரம்பித்து உங்கள் மூலமாக உங்களுக்கு பின்னூட்டமிடும் பதிவர்களின் படைப்புகளை படிக்க தொடர்ந்தேன்..

இதுவும் ஒரு நல்ல விஷயமே ரமணி சார். நம் காலம் முடியும் வரை நாம் ஏதாவது கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம் தினம் தினம்...

இங்கு வலைப்பூவில் நல்ல படைப்புகளை படித்து கருத்து இடுவதும் அப்படியே தொடர்ந்துவிட்டேன் ரமணி சார். அதற்கு இன்ஸ்பிரேஷன் உங்க படைப்புகள் தான். அன்பு நன்றிகள் ரமணி சார்...

Post a Comment