" வா பரமபதம் விளையாடலாம் "
என்றான் பேரன்
" சகுனிபோல் எனக்கு
சோளி உருட்டும் சாமர்த்தியமில்லை
அதனால் ஏணிகளுக்கும் எனக்கும்
எப்போதும் ஏழாம் பொருத்தமே
என்னை என்றுமே
அவைகள் ஏற்றி விட்டதே இல்லை
சூட்சுமம் சிறிதும் அறியாத
விளையாட்டுக்காரன் என்பதால்
பாம்புகளுக்கோ என்னிடம்
கோபம் மிக மிக அதிகம்
அதனால் என்னை தீண்டாது
விட்டதும் இல்லை
பாதிக்கு மேல் என்னை
ஏறவிட்டதும் இல்லை
என்வே நான் வரவில்லை "என்றேன்
பேரன் தலையிலடித்துக் கொண்டான்
"தாத்தா நீ பழங்கதைகள் பேசுகிறாய்
விதிகளை மாற்றி வெகு நாட்களாகிவிட்டது
இப்போது பாம்பின் வால் பிடித்து
உயரம் போகலாம்
ஏணிதான் இறக்கி விடும்
வா விளையாடலாம்
வெற்றி நிச்சயம் " என்றான்
நான் விளையாடத் துவங்கினேன்
பாம்பின் வழி உயரம் போவது
மிக மிக எளிதாய் இருந்தது
ஏணியின் இறக்கம்
பாதிக்கும் படியாய் இல்லை
"இந்த விதி வசதியாய் இருக்கிறதே
சிகரத்தை எட்டுதல்
வெகு எளிதாய் இருக்கிறதே
இந்த புதிய விதியை
சொல்லிக் குடுத்தது யார் "என்றேன்
"ரமேசின் தாத்தா " என்றான்
"அவர் என்ன செய்கிறார் " என்றேன்
" அரசியலில் இருக்கிறார் "என்றான்
( சாகம்பரி அவர்களின் கருவை புதிய உருவில்
கொடுத்துள்ளேன் நன்றி சாகம்பரி )
என்றான் பேரன்
" சகுனிபோல் எனக்கு
சோளி உருட்டும் சாமர்த்தியமில்லை
அதனால் ஏணிகளுக்கும் எனக்கும்
எப்போதும் ஏழாம் பொருத்தமே
என்னை என்றுமே
அவைகள் ஏற்றி விட்டதே இல்லை
சூட்சுமம் சிறிதும் அறியாத
விளையாட்டுக்காரன் என்பதால்
பாம்புகளுக்கோ என்னிடம்
கோபம் மிக மிக அதிகம்
அதனால் என்னை தீண்டாது
விட்டதும் இல்லை
பாதிக்கு மேல் என்னை
ஏறவிட்டதும் இல்லை
என்வே நான் வரவில்லை "என்றேன்
பேரன் தலையிலடித்துக் கொண்டான்
"தாத்தா நீ பழங்கதைகள் பேசுகிறாய்
விதிகளை மாற்றி வெகு நாட்களாகிவிட்டது
இப்போது பாம்பின் வால் பிடித்து
உயரம் போகலாம்
ஏணிதான் இறக்கி விடும்
வா விளையாடலாம்
வெற்றி நிச்சயம் " என்றான்
நான் விளையாடத் துவங்கினேன்
பாம்பின் வழி உயரம் போவது
மிக மிக எளிதாய் இருந்தது
ஏணியின் இறக்கம்
பாதிக்கும் படியாய் இல்லை
"இந்த விதி வசதியாய் இருக்கிறதே
சிகரத்தை எட்டுதல்
வெகு எளிதாய் இருக்கிறதே
இந்த புதிய விதியை
சொல்லிக் குடுத்தது யார் "என்றேன்
"ரமேசின் தாத்தா " என்றான்
"அவர் என்ன செய்கிறார் " என்றேன்
" அரசியலில் இருக்கிறார் "என்றான்
( சாகம்பரி அவர்களின் கருவை புதிய உருவில்
கொடுத்துள்ளேன் நன்றி சாகம்பரி )
86 comments:
அருமை.
'மாத்தி யோசி' தத்துவ மொழியையே 'யோசித்து மாற்று' என மாற்றும் வலிமை, அரசியல்வாதிகளுக்கு உண்டு!
ரமேசின் தாத்தா மு க வாக இருக்க வாய்ப்புகள் அதிகம்...ரமணி சார்...
புதிய பரம பதம் ...நன்று...
இதுதான் உண்மையும்கூட ரமணி சார். அரசியல்வாதிகள்தான் பரமபதம் விளையாட்டினை சிறப்பிக்கிறார்கள். என்னுடைய கவிதையின் இறுதி வரியும் உண்மையாகிவிட்டது. வழக்கம் போலவே சிறப்பான விளக்கம் தந்துள்ள கவிதை. நன்றி சார்.
சகோ
பரம பதமே நான் ஆடியதில்லை
அதுபற்றி எதுவும் தெரியாது இதிலே பழைய
புதிய என்பது வேறு
இதிலே ஏதேனும் உட் பொருள்
இருக்கா..
நன்றி!
ப்லவர் சா இராமாநுசம்
புதிய பரமபதம்-தலைப்பிலே பொடி வைத்து
கவியிலே கலக்கி விட்டீர்கள்.
களுக்கென்று சிரித்து விட்டேன்!
கடைசியில்!
உங்களின் ஒவ்வொரு கவிதையும் வியக்க வைக்கிறது. விளையாட்டாக கவிதை எழுதுபவர்கள் மத்தியில் விளையாட்டையே அழகிய கவிதையாக ஆக்கி உள்ளீர்கள்.
கரு தோன்ற காரணம் இன்னொருவர் என்றாலும் உரு கொடுக்கவும் ஒரு சிந்தனைத் திறன் தேவை.அது தங்களிடம் அதிகமாகவே கொட்டிக் கிடக்கிறது
இன்றைய வாழ்க்கைக்கு மாத்தி யோசித்தல் மிக மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. அரசியல் வாதிகள் பற்றி நன்றாகவே சொல்லி விட்டீர்கள். வழுக்கும் பாம்புகளின் வாலைப்பிடித்து தலையில் ஏறி, தலைவர்கள் ஆகிவிடுவார்கள். நல்ல நகைச்சுவையான படைப்பு. மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
கருவின் சொந்தக்காரரான திருமதி சாகம்பரி அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று இனி தான் மீண்டும் போய் பார்க்கப்போகிறேன்.vgk
[தமிழ்மணத்தில் தங்களுக்கு 10 க்கு 10 கொடுக்கும் வாய்ப்பு பெற்றதற்கு மகிழ்கிறேன்]
விதியை மாற்றி
நம் நன் மதியை மாற்றும் அரசியல் ..!
சூட்சுமம் சிறிதும் அறியாத
விளையாட்டுக்காரன் என்பதால்/
விதி மாற்றி நாட்டின் தலை
விதியும் மாற்றி அமைக்கும்
அலங்கோல அரசியல்வாதி!
பரம பதத்தை மாற்றி விளையாடி, வாழ்க்கையையும் அதைப்போல யோசித்து விளையாட அருமையான கவிதையைக் கொடுத்து வழக்கம்போல அசத்தியிருக்கிறீர்கள்!
very good thoughts
அண்ணே இதை விட நச்சுனு சொல்ல முடியாது அருமை!
Rathnavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
ஏணி பாம்பு தாயக் கட்டம்தான்
தவறானதை மிகச் சரியாகச் செய்வதன் மூலம்
பலர் மிக விரைவாக முன்னேறிவிடுவதையும்
பழைய நியாய தர்மங்களை பேசிக்கொண்டிருப்பவர்கள்
தோற்றுப் போவதையும் சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோகுல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமை.
பாஸ்... அற்புதம் என்ற வார்த்தையில் அடக்கமுடியாத கவிதை..
கடைசி பன்ச்... “அரசியல்”.... வாரே...வாவ்....
ரியலி சூப்பர்ப்...
:-))
அரசியல் எப்படி எல்லாவற்றையும் மாற்றிப்போடுகிறது?
அருமையான கவிதை.
ஆயிஷா அபுல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
RVS //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமேசின் தாத்தாவின் அரசியல் பரமபதம்..
கேலியை சரியாக கையாண்டுள்ளீர்கள்..
அற்புதம்
ரமணி சார் நன்றாகவே மாத்தி யோசிச்சு இருக்கீங்க.
அற்புதமான கவிதை... கரு அடுத்தவருடையதாக இருந்தாலும், அந்தக் கருவிற்கேற்ற கவிதை படைக்கும் திறன் உங்களுடையதல்லவா... கவிதை அருமையாக வந்து இருக்கு.... அரசியல்வாதிகளின் போக்கையும் காட்டியது...
கே.ஆர்.பி.செந்தில் ..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
திகழ் //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
திகழ் //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் said...
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அரசியலில் இருக்கிறார் "என்றான்//
ஹா ஹா ஹா ஹா மாட்டிகிட்டீங்களே குரு ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா ஹா பேரனும் இனி அரசியல்வாதிதான் போங்க...
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..
Madhavan Srinivasagopalan //
.. எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாதபடி
ஒரு பின்னூட்டமிட்டு கலங்க அடித்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
சங்கத்தின் புகழ் ஓங்குக...
சார்.. சில விஷயங்கள் ஆரம்பத்துல புரியாது.. காலம் புரியவைக்கும்... சற்று பொறுத்திருங்கள்..
:-)
அருமை விதி ,நமக்கு தகுந்தது போல் மாற்றியாச்சு ,ஹா ஹா
தமிழ் மணம் 16
பதிவின் முடிவு சும்மா நச்சென்று இருந்தது
Madhavan Srinivasagopalan //.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
M.R .
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
r.v.saravanan //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//பாம்பின் வால் பிடித்து
உயரம் போகலாம்
ஏணிதான் இறக்கி விடும்//
அருமை.
fantastic!
உயரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் எந்த விதையையும் மாற்றி போடலாம், விதியையே அழித்தும் விடலாம். அரசியல்வாதி.......... நல்ல பதிவி sir. . .
" அரசியலில் இருக்கிறார் "என்றான்//
கிளைமாக்ஸ் அர்த்தத்துடன் சிரிக்க வைத்துவிட்டது... சூப்பர் சகோ... வாழ்த்துக்கள்.
சென்னை பித்தன் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பிரணவன் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம் //. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புதியபரமபதம் எனத்தலைப்பிட்டு நடைமுறையை அருமையாக கவிதையில் கொணந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
புதிய பரமபதம் வித்தியாசமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
ஸாதிகா //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ShankarG //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விதிகளை மாற்றி விளையாட்டு - வாழ்க்கைப் பாடம்.
அந்தக் கேலிக்கு பின்னாடி உள்ளார்ந்த வாழ்க்கைப் பாடமும் ஒளிஞ்சுக்கிட்டிருக்குது.. :-)
ஸ்ரீராம்.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அப்பப்பா அரசியல் யாரைத்தான் விட்டு வைக்கிறது. உங்கள் சிந்தனை பிரமாதம். இந்த ரீதியில் போனால் பிள்ளைகள் மனதிலும் நஞ்சு தான். ஊரைத் திருத்த யாருளர் உலகை நஞ்சாக்கப் பலருளர். சிந்திக்க வைக்கும் ஆக்கம் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com.
அமைதிச்சாரல் .//
தங்கள் வரவுக்கும் ..
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kavithai (kovaikkavi) //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம் ஐய்யா..
இப்பிடி நச்சென்று ஒரு விடயத்தை சொல்வது கடினம் அது உங்களுக்கு கைவந்த கலை வாழ்த்துக்கள்..
காட்டான் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்
இன்றைய விதிகள் எல்லாமே மாற்றப்பட்டு உள்ளமையை அழகாக பதிவு செய்து உள்ளீர் அதாவது முன்னர் மாணவர் நிற்க ஆசிரியர் அமர்ந்து படம் எடுப்பார் இப்போது மாணவன் அமர்ந்து இருக்க ஆசிரியர் நிற்கிறார் முன்பு உரல் ஒரே இடமாக இருந்து குழவி சுற்றியது இப்போது உரல் சுற்ற குழவி நிற்கிறது பாமபதமும் அப்படியே நல்லபதிவு பாராட்டுகள் தொடருங்கள்.....
என் ஆறு வயது பேரனுடன் பரமபதம் ஆடினேன். அவன் சொல்லிக்கொடுத்தான். தெரியாமல் நான் வென்றுவிட்டேன். எல்லாவற்றையும் தட்டிவிட்டு அது எப்படி நீ ஜெயிக்கலாம். நாந்தானே சொல்லிக் கொடுத்தேன் என்றான். அரசியல் வாதிகளின் விதிகளை இவன் எங்கிருந்துதான் கற்றுக் கொண்டானோ. ?தொடர்கிறேன் வாழ்த்துக்கள்.
மாலதி //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //.
மனம் கவர்ந்த குசும்பு
தொடர வாழ்த்துக்கள்
விளையாட்டிலும் அரசியல் புகுந்து குழந்தைகளின் மனத்திலும் நச்சுப் பரவுவதை நச்சென்று கவிதையாக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் ரமணி சார்.
கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
என்ன தான் பரமபதம் என்றாலும் தாயக்கட்டைகளை உருட்டும் வித்தை அறிந்தவர் கூட அங்கு சர்ருனு பாம்புல இறங்கி பெப்பேன்னு முழிப்பதை பார்த்திருக்கிறேன்....
இம்முறை எளிய கவிதை வரிகளால் நச்னு ஒரு கருத்து சொல்ல முனைந்திருப்பது சிறப்பு ரமணி சார்....
குழந்தைக்கு ஈடாய் உட்கார்ந்து ஆடினால் குழந்தையை ஈசியா தோற்கடித்திடலாம்னு கணக்கு நாம போட்டு வெச்சுக்கிட்டு உட்கார்ந்தால் இந்த காலத்து வாண்டுகள் கற்பதும் கற்பிப்பதும் நம்மை விட புயல் வேகம்....
எங்க காலத்துல எல்லாம் அப்டின்னு இழுத்தாலே அங்க ஒரு கதை இருப்பதை எதிர்ப்பார்க்கலாம் நாம. அந்த கதையில் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் சகுனி மாமாக்களும் கூட இருப்பதை அறியவும் முடியலாம்.
அந்த காலத்து அரசியல் திட்டமே ரொம்ப அருமையா நேர்மையா பார்ப்போர் கேட்போர் எல்லோருமே போற்றும்படி இருந்தது உண்மை...
எடுத்துக்காட்டா அண்ணல் காந்தி அரசியலே வேணாம்னு ஒதுங்கி இருந்தாலும் இன்னிக்கு நாமெல்லாம் சுதந்திரமா தெருவில நடக்கவும் சுதந்திர மூச்சை சுவாசிக்கமும் முதல் அடி எடுத்து வைத்தவர்... நினைச்சிருந்தால் அவருக்கு எத்தனையோ பெரிய பதவி கிடைத்திருக்கும்.. சம்பாரித்தும் இருந்திருக்கலாம்.. ஆனா அப்படி செய்யாததால் தான் ஏழைல இருந்து பணக்காரன் வரை எல்லோரும் உபயோகிக்கும் காசுல காந்தியை தினம் தினம் பார்க்கும்படி அமைந்தது....
இப்ப இருக்கும் அரசியல்வாதிகளின் கூழைக்கும்பிடும் ஒருவரை ஒருவர் பொதுவில் சாடுவதும் சேற்றை வாரி தூற்றிக்கொள்வதும் காணும்போது கண்டிப்பா அரசியல் என்றாலே குமட்டுகிறது. எரியிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக்கொள்ளி என்பது வரை....
அப்துல்கலாம் அவர்கள் தெரியாம சொல்லிட்டார் புள்ளைகளா கனவு காணுங்க வெற்றியின் இலக்கை தொட அப்டின்னு... இப்ப இருக்கும் பிள்ளைகள் யப்பா...... தன் வாழ்க்கையை தன் எதிர்க்காலத்தை அழகாய் திட்டமிட்டு கொள்வதில் இருந்து மூத்தோருக்கும் தன் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சில குறுக்கு வழிகளையும் அதனால் பெறும் பயனையும் சொல்லும்போது அசந்து ஆஆஆஆஆ என்று பார்க்கிறேன்...
உங்க கவிதை வரியில் இருக்கும் அந்த வாண்டு பார்த்தீங்களா? உங்களுக்கே விளையாட வழி காண்பிப்பது மட்டுமில்லாம ஜெயிக்கவும் வழி சொல்கிறது, தோற்றுப்போகாமலிருக்க ஆலோசனையும் சொல்கிறது. நம் காலத்தில் இது சாத்தியமா சொல்லுங்க? இல்லை தானே? ஒப்புக்கொள்ளவேண்டும் இதை கண்டிப்பா....
அப்போதைய காலங்களில் எதுவுமே கடினம் தான். சமைப்பதும் படிப்பதும் பள்ளி ஊர் தாண்டி நடந்து போவதும், உழைப்பதும் எதுவுமே கடினம் தான். ஆனா இப்ப எல்லாமே விரல் நுனி வித்தையில் உலகை கைவசத்தில் அடக்கிவிடலாம். எதுவுமே ஈசி... உண்ண வீட்டில் உணவில்லையா வீட்டில் இருந்தே ஆர்டர் பண்ணிட்டால் போன்ல வீடு தேடி வந்துரும் பிட்சா...
பிள்ளைகளின் அறிவுத்திறன் அசகாய வேகம்.... இது சரி இல்லைன்னா அடுத்து வேற முயற்சிப்போம் என்ற வெறி..... இப்படி இல்லன்னா அப்டி செய்தா என்ன என்று ரிஸ்க் எடுக்கும் திடம்.... இதெல்லாம் தான் இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமாகிறது, வேகமும் விவேகமும் மனிதனை வெகு சீக்கிரம் வெற்றி சிகரத்திற்கு எட்டிவிட வைக்கிறது.... சரி எடுத்த காரியம் நஷ்டத்தில் போனாலும் விடுவதில்லை... அதனால் என்ன வழி மாத்தி பார்ப்போமே என்று தைரியமாக முயல்வது...
நம் காலத்தில் பெண்களை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க... பெரியவங்க முன்பு உட்காரமாட்டோம் அப்படி எத்தனையோ.. ஆனா இப்ப பெண்கள் அரசியலில் எப்படி நெளிவு சுழிவு பார்த்து நடக்கிறாங்கன்னு பார்த்துட்டு தானே இருக்கோம்...
பழைய பஞ்சாங்கம் போல அன்றைய காலத்து மேட்டுமை பேசிக்கிட்டு இப்போதைய சூட்சுமத்தை எட்ட முடியாம தவிப்போரை பார்த்திருக்கிறேன்...
அன்றைய காலத்தின் வழிமுறைகளை வைத்து கொஞ்சமே கொஞ்சம் மாற்றி நமக்கு லகுவாக மாற்றிக்கொள்வதால் எனன் நஷ்டம் வந்துவிட போகிறது? என்று முடிச்சிருக்கீங்க.....
எங்குமே நேர்மை உழைப்பு ஈடுபாடு இருந்தால் மட்டும் முன்னேற முடியாது சாமி.... கொஞ்சம் நெளிவு சுழிவு கற்று வைத்தால் விருட்டுனு மேலே ஏறலாம்னு கூட வழி இருக்குன்னு இத்துனூண்டு வாண்டு மூலமா அழகான ஒரு கருத்து சொன்னது ரொம்ப இனிமை ப்ளஸ் புதுமை.....
நேற்று பௌர்ணமி பூஜைக்கு வீட்டில் பூஜை சாமான் வாங்கணும், இவர் வர தாமதம் ஆகுது, தனியா போக எனக்கும் தெரியாது வழி... இபானை துணைக்கு கூட்டிக்கிட்டு போகலாம் கடைக்கு என்று நினைத்து இபானை கூப்பிட்டால் அவன் வந்து என்னை கேட்கிறான் என்ன வழி தெரியாதா க்ராண்ட் ஹைபர் போக? சரி பரவாயில்லை நான் கூட்டிட்டு போறேன். பெரிய மனுஷன் போல கூட்டிட்டு போய்.... என் ஆபிசு பேக் அங்க எண்ட்ரன்ஸ்ல கொடுக்கனும்னு தெரியாம எடுத்துட்டு கடைக்குள்ள போயிட்டேன், அட ஒன்னுமே தெரியலை அப்டின்னு சொல்லி என் பேகை வாங்கி அங்க கொடுத்து காயின் வாங்கி ட்ராலி எடுத்துக்கிட்டு சொன்ன காய் பழம் தேங்கா எல்லாம் எடுத்து போட்டுக்கிட்டு அழகா கௌண்டர்ல போய் கொடுக்குது . உன்னிப்பா போட்ட பில் கவனிச்சு என்னிடம் காசு வாங்கி கொடுத்துட்டு என்னிடம் சொல்றான் உன்னால இதை தூக்கிட்டு நடக்க முடியாது நான் ட்ராலிலயே வெச்சு வீடு வரை தள்ளிட்டு வரேன். ரோடு கரடுமுரடா இருக்குன்னு சொன்னதும் வேற வழில கூட்டிட்டு வந்துட்டு எங்கம்மா கிட்ட சொல்றான். அம்மாக்கு ஒன்னுமே தெரியலை, கடை தெரியலை சரியா பார்த்து வாங்க தெரியலை ரோடு பார்த்து நடக்க தெரியலை.. நான் தான் கூட்டிட்டு போய் வந்தேன் அப்டின்னு பெரிய மனுஷனை போல சொல்வதை பார்த்து வியந்து பார்க்கிறேன்...
அரசியலில் தான் எல்லாமே உலட் - புலட்..... நல்லவை எல்லாம் அங்கே நஞ்சாகும், நச்சுகள் எல்லாம் நல்லவை போல மின்னும்... நாம் கொஞ்சம் பார்த்து தெரிந்து அதன்படி நடந்துக்கொண்டால் கண்டிப்பா அரசியலில் ஜெயிக்கலாம் என்ற மிக அருமையான கருத்தை வலியுறுத்தும் அழகிய கவிதை வரிகள் ரமணி சார்....
அரசியலில் ஒரு சௌகர்யம்..... நம்ம இஷ்டப்படி விதிகளை மாற்றிக்கொள்ளலாம், தளர்த்திக்கொள்ளலாம், வேண்டாமா கடாசிடலாம், வேணுமா சேர்த்துக்கலாம், எப்படியும் போகலாம், இப்படியும் வாழலாம்.. அரசியலில் புகுந்துவிட்டால் உலகில் எப்படியும் வாழறதுக்கான அனுபவ நிகழ்வுகள் தினம் தினம் காணலாம்....
அரசியலும் பரமபதம் போல தான், யார் ஆட்சியை எப்படி எப்போது பிடிப்பாங்கன்னு சொல்லவே முடியாது. சமீபத்துல நடந்த தேர்தல் ரிசல்ட் அதற்கு சரியான உதாரணம்.....எதுவும் நடக்கலாம்.. சரியா பொருத்தமான தலைப்பு வெச்சிருக்கீங்க ரமணி சார்....
பரமபதம் அசத்தல் தலைப்பு ரமணி சார்..... இந்த கவிதை வரிகளிலும் ஒரு நுணுக்கம் கவனித்தேன்... எப்போதும் கவிதை வரிகளில் அசால்டா உவமானம் சொல்லிப்போவீங்க. இதில் யதார்த்தம் இருக்கு அழுத்தமா....உவமானம் இல்லாமல் எதார்த்தத்தை சொல்லி நீங்களும் இப்படி இருக்க கத்துக்கோங்கன்னு சொல்லவைத்த படிப்பினை கவிதை வரிகள் ரமணி சார்...
பரமபதம் விளையாடனும்னா எனக்கும் பயம் தான்.. ஏன்னா எல்லோரும் உட்கார்ந்து விளையாடும்போது முதல்ல தாயம் யாருக்கு விழுதோ அவங்க தான் ரொம்ப நல்லவங்க புண்ணியம் பண்ணவங்க ஏணில யாரு முதல்ல ஏறுறா பாம்புல யாரு சறுக்கிறா அவங்க தான் நிறைய பாவம் பண்ணினவங்க என்பது போல ஒரு கேவலமான பார்வை பார்ப்பாங்க பாருங்க. அதுக்கு பயந்தே நான் விளையாட மாட்டேன். பாட்டி காலத்தோட சரி பரமபதம் விளையாடினது....
நேர்மையா நடந்தா பொழைக்க முடியாதுப்பா இந்த காலத்துல.. கொஞ்சம் அப்டி இப்டி தான் இருக்கணும்னு சொல்லியே தான் அரசியலில் அடி எடுத்து வைப்பது..... அப்படியே நேர்மையா யாராவது தப்பித்தவறி வந்துட்டாலும் அவங்களையும் தம் வழிக்கு இழுத்துவிடுவது, ஒத்துவரலையா ஒதுக்கு வைப்பது....
தேர்தல் சமயத்துல பொருத்தமான படைப்பு தான் ரமணி சார் கொடுத்திருக்கீங்க...
வீட்டில் அம்மாவுக்கும் இபான் அப்பாவுக்கும் உடல்நலம் சரியில்லை என்பதாலும், இபான் தேர்வு சமயமென்பதாலும், நான் நாளை இந்தியா போக இருப்பதாலும் அதிக வேலைப்பளு... பதிவு இட அதிகமாவே டைம் எடுத்துக்கொண்டேன் ரமணி சார் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்....
மஞ்சுபாஷிணி //
படைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு
அதற்காக கொடுக்கப்படும் அழகான விரிவான பின்னூட்டமே
படைப்பாளிக்கு மிகப் பெரி கௌரவம்
அதை மிகச் சரியாகச் செய்துவரும் தங்களுக்கு
என் சிரம் தாழ்ந்த நன்றி வாழ்த்துக்கள்
தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Post a Comment