ஊர் இரண்டுபட்டுக்கொண்டிருந்தது
கையில் கிடைத்த
ஆயுதங்களைத் தூக்கியபடி
யார் யாரோ
எதிர் எதிர் திசையில்
வெறியோடு ஓடிக் கொண்டிருந்தார்கள்
தனித்து வந்த ஒருவரை நிறுத்தி
காரணம் கேட்டேன்
"விஷயம் தெரியாதா
நம்ம ஆளை அவங்கஆளு
வெட்டிப்போட்டாங்களாம் " என்றார்
இப்போது நான் என்ன செய்யனும் என
குழம்பிக் கிடைக்கையில்
மாமா ஓடி வந்தார்
"கிளம்பு கிளம்பு
கருப்புவை சின்னான் வெட்டிபுட்டான் " என்றார்
"அவர்களுக்குள்தான்
இடத் தகராறு இருந்ததே
அதனால் அடித்துக் கொண்டிருப்பார்கள் " என்றேன்
"அது எனக்குத் தெரியாதா
நமக்கும் இதே மாதிரி
வயல் பிரச்சனை இருக்கு
நமக்கும் நாலு பேரு வேணும்
நாம வெட்டப் போறோமா ?
வெட்ட வாங்கப் போறோமா ?
எவனோ நாலு முட்டப் பயக வெட்டப் போறான்
நாலு முட்டப்பயக வாங்கப் போறான்
போலீசெல்லாம் வந்தாச்சு
கிளம்பு கிளம்பு
கூட்டத்தோட நின்னுட்டு வருவோம் " என்றார்
மாமா அனுபவஸ்தர்
எது சொன்னாலும் அதில்ஆயிரம் காரணமிருக்கும்
நானும் சட்டையைப் போட்டு கிளம்பினேன்
தூரத்தே கலவர ஒலி
யுத்த பூமியை நினைவுறுத்தியது
வெட்டுப் பட்டு ரத்தம் கொப்பளிக்க
ஆஸ்பத்திரியை நோக்கி
நாலைந்து பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்
வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்
70 comments:
//வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்
//
நான்கே வரிகளில் எத்தனை ஒரு பெரிய விஷயம் சொல்லி இருக்கீங்க....
நல்ல கவிதை.. பகிர்வுக்கு நன்றி.
நன்றி.
படித்தவன் தவறிழைத்தால் நாடு தாங்காது! எனினும் படித்தவன் மட்டுமே இங்கு இல்லையே! அவனுள் முட்டாளுமல்ல சேர்ந்து
ள்ளான்! அவனை முட்டாள்ளாக்க பலவெறிகள் அல்லவா ஊட்டி வளர்க்கப்படுகின்றன!
உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தவேண்டும். படித்திருந்தும் வாழும் இடத்தை சார்ந்திருக்க வேண்டும் ,உறவிருந்தும் அவர்கள் செய்யும் தவருகளை சகித்துக் கொள்ள் வேண்டும். த.ம 5
அண்ணே நடக்குற யதார்த்தத்தை பதிவு செய்து இருக்கீங்க...நன்றி!
வெங்கட் நாகராஜ் //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சார்வாகன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்//
இதுக்குள்ளே ஆயிரம் விஷயங்கள் இருக்குன்னு நச்சுன்னு சொல்லிட்டீங்க குரு...!!!
வெட்டுப் பட்டு ரத்தம் கொப்பளிக்க
ஆஸ்பத்திரியை நோக்கி
நாலைந்து பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்//
யாரு யாரை வெட்டினாலும், ரத்தத்தின் கலரோ மாறுவதே இல்லை!!!!!
ஸாரி குரு, தமிழ்மணத்தில் இருந்து நான் விலகிட்டேன் அதனால ஓட்டு போட இயலாது மன்னிக்கவும்.
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
யதார்த்தத்தை உணர்த்தும் விதமான கவிதை.அருமை.
கவிதைகள் எப்போதுமே அழகு. அதுவும் சமூக அக்கறையில் எழுதப்படும் போது அது மேலும் வலுப்படுகிறது. உங்கள் கவிதைகளில் இது நிறையவே இருக்கிறது.
அருமையான (கவிதைப்) பதிவு
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சிவானந்தம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
/ வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்/என்
இதைத்தான் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.என்றுதான் விடியப் போகிறதோ.?
G.M Balasubramaniam
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//படித்தவன் எப்போதும் புத்திசாலி//
தலைப்பு அருமை
//வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்//
தலைப்பின் அருமை தலைதூக்கிய இந்த இடம்,
அதுவும் அருமை.
அங்கே தான் நம் ரமணி சார், நிற்கிறார்!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
தமிழ்மணம்: 7
எப்பவுமே படிச்சவன்தான் ட்ரிக்கா மாட்டிக்காம 420 வேலை செய்வான்னு சொல்லுவாங்க..
கவிதைத் தமிழிலேயே நீங்க எழுதறது ரொம்ப நல்லா இருக்கு சார்! :-)
தம 8 அருமையான பதிவு & கருத்து
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RVS //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நாம வெட்டப் போறோமா ?
வெட்ட வாங்கப் போறோமா ?
எவனோ நாலு முட்டப் பயக வெட்டப் போறான்
நாலு முட்டப்பயக வாங்கப் போறான்
போலீசெல்லாம் வந்தாச்சு
கிளம்பு கிளம்பு
கூட்டத்தோட நின்னுட்டு வருவோம்
வாழ்வின் எதார்த்தத்தை வரிகளில் அருமையாய் செதுக்கியுள்ளீர்கள் சார்
படித்தவர்கள்....? படிப்புதான் ரொம்பவும் யோசிக்க வைக்கிறதுபோல். சிந்திக்க வைக்கும் கவிதை. பகிர்விற்கு நன்றி சார்.
நல்ல சிந்திக்க வைக்கும் கவிதை.. பகிர்வுக்கு நன்றி ரமணி சார்...
r.v.saravanan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சூழலைச் சார்ந்திருக்க வேண்டியிப்பதால் நேர்மையைக் கூட தள்ளி வைக்க வேண்டும். இதைத்தான் அன்று ஊரோடு ஒத்து வாழ் என்றனர். மிகவும் சிரமமான அனுசரிப்புத் தான் மிக அருமையாக யதார்த்தம் நிறுக்கப் பட்டுள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வரிகள் தோறும் யதார்த்தம்
வழங்கினீர் அனத்தும் யதார்த்தம்
முடிவே முற்றும் யதார்த்தம்
முத்தே கருத்தாம் யதார்த்தம்
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எதார்த்தத்தை மிக எளிமையாக மனதில் தைக்கும் வண்ணம் விளக்கியுள்ளீர்கள்! அருமை!!
சுயநலமிக்க மனிதரைச் சாமர்த்தியமாய்க் காட்டிக்கொடுக்கும் கவிதை வெகு பிரமாதம். முத்தாய்ப்பாய் மனத்தின் சிந்தனையைச் சொல்லியவிதமும் வெகு பொருத்தம். பாராட்டுக்கள் ரமணி சார்.
brilliant.
தலைப்பும், சமூக அக்கறையுடன் சொன்ன கவிதையும் நல்லா இருக்கு.
நெல்லி. மூர்த்தி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தூரே கலவர ஒலி
யுத்த பூமியை நினைவுறுத்தியது
வெட்டுப் பட்டு ரத்தம் கொப்பளிக்க
ஆஸ்பத்திரியை நோக்கி
நாலைந்து பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்//நல்ல கவிதை.. பகிர்வுக்கு நன்றி.
மாலதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம் பாஸ் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன்
K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
படிச்சவன் எப்பவுமே புத்திசாலிங்க தான்.
பெயருக்கு பின்னிருக்கும் எழுத்தக்கலைக் கொண்டே பலபேர் தான் பலதும் அறிஞ்சவன் -னு நம்பிக்கெடக்கது உலகம்.
உண்மையில ’அதை’ சரி செய்யத்தான் வேணும்.
(ரமணி ஐயா, //தூரே// என்பது “தூரத்தே” என இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.)
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
(மதுரை பாஷையில் அவசரத்தில் எழுதிவிட்டேன்
நீங்கள் சொன்னபடி தற்போது மாற்றி விட்டேன் )
//வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்//
நல்லதொரு முத்தாய்ப்பு :-))
முன்னும் பின்னும் ஆங்கில எழுத்துக்கள்... புரியவில்லை என்று சொன்னால் தவறா?
அமைதிச்சாரல்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
பெயருக்கு முன்னால் எஞ்சினியர் டாக்டர் என்றும்
பெயருக்குப் பின்னால் பட்டங்களை
போட் டுக் கொண்டிருப்பதையும் சொல்ல
முயன்றிருக்கிறேன் .தங்கள் பின்னூட்டத்திலிருந்து
சரியாகச் சொல்லவில்லை என உணர்கிறேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
இப்போ புரியுது.. நீங்க நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. எனக்கு சட்னு பிடிபடலை.
விளக்கத்துக்கு நன்றி. இப்போ இன்னும் சுவையா இருக்கு கவிதை.
படித்தவன் புத்திசாலி நல்ல கவிதையும், சிந்தனையும் சேர்ந்த கலவை. வாழ்த்துக்கள்.
நன்று. நானும் சற்றுக் குழம்பி, அப்பாதுரைக்கு அளித்த பதிலில் தெளிந்தேன்.
அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்//
நான்கு வரிகளில்
முத்தான கருத்து ..
எப்போதும் போல் அழகாக ஆரம்பித்து அழகாகவே முடித்துள்ளீர்கள்!
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நம்பிக்கைபாண்டியன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
படித்தவன் சூதும வாதும் பண்ணா போவான போவான் அய்யோன்னு போவான் என்று பாரதி சொல்வான். பெயருக்குப் பின்னால் உள்ள எழுத்துக்கள் சிறிதாகத் தெரிவது நமது மனம்தான். மனப்பாங்கை மாற்றாத வரையில் எந்த மாற்றமும் தீர்வும் இல்லை. ஜிஎம்பி அவர்கள் சொன்னதுபோல நாம் உணரவேண்டும். படிக்காத பாமரன் தெளிவாக இருக்கிறான். இயங்குகிறான். படித்தவனிடத்தில்தான் எல்லா கோளாறும்.
Harani //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமை சார்
வாழ்த்துக்கள்
Rathnavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கரெக்ட் தான் சார். நான் எல்லாம் ஏட்டு சுரைக்காய் ....
என்ன கொஞ்சம் இங்கிலிபீசு வரும் அவ்ளோதான்.
மத்தபடி சைக்காலஜியில் அவர்களை மிஞ்ச முடியாது.
ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment