மையிருட்டு மனம் படைத்த அரசியல் வாதிகள்எல்லாம் ஏன்
தூய வெண்மை ஆடைகளையே அதிகம் அணிகிறார்கள் ?
நேர்மைக்கு சமாதிகட்டும் அவர்களேஅது குறித்து ஏன்
அதிகம் அங்கலாய்க்கிறார்கள் ?
வெகு நாட்கள் என்னைக் குடைந்தெடுக்கும் கேள்வி
யார் யாரிடமோ கேட்டும் தெளிவு பிறக்கவில்லை
கேட்டுத்தான் வைப்போமே என என் துணைவியிடம் கேட்டு வைத்தேன்
"விளக்கமாகச் சொன்னால் அலுப்பு தட்டும்.மறந்தும் போகும்
கதையாகச் சொல்லட்டுமா " என்றாள்
"இதற்கும் கதை இருக்காஅப்படியே சொல் அனைவருக்கும் ஆகும் "என்றேன்
அவள் தொடர்ந்தாள்
ஒரு காட்டுக்குள் நான்கு பேர் போய்க்கொண்டிருந்தார்கள்
ஒருவருக்கு பார்வை கிடையாது
ஒருவருக்கு காது முற்றாகக் கேட்காது
ஒருவருக்கு இரு கால்களும் இல்லை
ஒருவருக்கு இரு கைகளும் இல்லை
காது கேளாதவர் வழி பார்த்துக் கூட்டிச் செல்ல
கண் தெரியாதவ்ர் அவரைப் பற்றித் தொடர
கால்கள் இல்லாதவர் கைகள் இல்லாதவர் மேல் அமர்ந்து கொள்ள....
இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்
அப்போது திடுமென்று காது கேளாதவர்
"தூரத்தில் குதிரைகள் வரும் ஒலி கேட்கிறதே "என்றார்
உடனே கண்கள் இரண்டும் தெரியாதவர்
" ஆமாம் ஆமாம் புழுதி பறப்பது கூடத் தெரிகிறதே
குறைந்தபட்சம் இருபது குதிரைகளாவது இருக்கும் "என்றார்
அப்போது கால்கள் இரண்டும் இல்லாதவர்
"திருடர்களாய் இருக்கக் கூடும் நமக்கேன் வம்பு
வேகமாக ஓடிவிடலாம்" என்றார்
கைகள் இல்லாதவர் அலட்சியமாக
"அதெல்லாம் தேவையில்லை அவர்கள் அருகில் வரட்டும்
நாமா அவர்களா ஒரு கை பார்த்துவிடுவோம் " என்றார்
நான் ஆர்வ மிகுதியால் "அப்புறம் " என்றேன்
"அப்புறமென்ன அப்புறம் எல்லாம் அவ்வளவுதான் "
எனச் சொல்லி எழுந்து போய்விட்டாள்
வழக்கம் போல என்னுள் குழப்பமே கூடிக்கொண்டு போனது
கதைக்கு பதில் விளக்கமே கேட்டிருக்கலாமோ ?
தூய வெண்மை ஆடைகளையே அதிகம் அணிகிறார்கள் ?
நேர்மைக்கு சமாதிகட்டும் அவர்களேஅது குறித்து ஏன்
அதிகம் அங்கலாய்க்கிறார்கள் ?
வெகு நாட்கள் என்னைக் குடைந்தெடுக்கும் கேள்வி
யார் யாரிடமோ கேட்டும் தெளிவு பிறக்கவில்லை
கேட்டுத்தான் வைப்போமே என என் துணைவியிடம் கேட்டு வைத்தேன்
"விளக்கமாகச் சொன்னால் அலுப்பு தட்டும்.மறந்தும் போகும்
கதையாகச் சொல்லட்டுமா " என்றாள்
"இதற்கும் கதை இருக்காஅப்படியே சொல் அனைவருக்கும் ஆகும் "என்றேன்
அவள் தொடர்ந்தாள்
ஒரு காட்டுக்குள் நான்கு பேர் போய்க்கொண்டிருந்தார்கள்
ஒருவருக்கு பார்வை கிடையாது
ஒருவருக்கு காது முற்றாகக் கேட்காது
ஒருவருக்கு இரு கால்களும் இல்லை
ஒருவருக்கு இரு கைகளும் இல்லை
காது கேளாதவர் வழி பார்த்துக் கூட்டிச் செல்ல
கண் தெரியாதவ்ர் அவரைப் பற்றித் தொடர
கால்கள் இல்லாதவர் கைகள் இல்லாதவர் மேல் அமர்ந்து கொள்ள....
இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்
அப்போது திடுமென்று காது கேளாதவர்
"தூரத்தில் குதிரைகள் வரும் ஒலி கேட்கிறதே "என்றார்
உடனே கண்கள் இரண்டும் தெரியாதவர்
" ஆமாம் ஆமாம் புழுதி பறப்பது கூடத் தெரிகிறதே
குறைந்தபட்சம் இருபது குதிரைகளாவது இருக்கும் "என்றார்
அப்போது கால்கள் இரண்டும் இல்லாதவர்
"திருடர்களாய் இருக்கக் கூடும் நமக்கேன் வம்பு
வேகமாக ஓடிவிடலாம்" என்றார்
கைகள் இல்லாதவர் அலட்சியமாக
"அதெல்லாம் தேவையில்லை அவர்கள் அருகில் வரட்டும்
நாமா அவர்களா ஒரு கை பார்த்துவிடுவோம் " என்றார்
நான் ஆர்வ மிகுதியால் "அப்புறம் " என்றேன்
"அப்புறமென்ன அப்புறம் எல்லாம் அவ்வளவுதான் "
எனச் சொல்லி எழுந்து போய்விட்டாள்
வழக்கம் போல என்னுள் குழப்பமே கூடிக்கொண்டு போனது
கதைக்கு பதில் விளக்கமே கேட்டிருக்கலாமோ ?
94 comments:
நல்ல கதை.......
அண்ணே விளக்கம் புரிஞ்சிடுச்சி ஹிஹி!
நல்ல விளக்க கதை ,அருமை நண்பரே த.ம. 2
ஹ ஹா அருமை
அந்த நான்கு பேர் மக்களா.... அரசியல்வாதியா.. இன்றைய காலத்தில் இரு சார்பிலும் இருக்கிறார்கள் ஹா ஹா.. அருமை சகோ
வாழ்க்கையில் ஸ்வாரஸ்யத்தைக் கூட்டுவதில் முரண்களும் அடக்கம்! த.ம 4
K.s.s.Rajh //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
suryajeeva //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம்
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முரண் இல்லாத மனுஷன் யாரு சார்?, உள்ள ஒண்ணு வச்சு வெளிய இன்னொன்னு பேசுறது வழக்கம் தானே. சட்டையிலையாவது வெள்ளை இருக்கட்டும்ன்னு தான் வெள்ளை டிரஸ் போடுராங்களோ என்னவோ?
மையிருட்டு மனம் படைத்த அரசியல் வாதிகள்எல்லாம் ஏன்
தூய வெண்மை ஆடைகளையே அதிகம் அணிகிறார்கள்
>>
அவர்கள் உடையைப் போலவே, வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் என்று நாம் நம்பி ஏமாறத்தான்.
குழப்பமே கூடிக்கொண்டு போனது
முரண் பகிர்வு உணர்த்தும் கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்க்கைத்துணைக்கு!
புரிந்தும் புரியாமலும்...தெளிந்தும் தெளியாமலும். வெள்ளை ஆடை விளக்கமும், நேயர்களின் கருத்துகளும் அருமை. நடையில் வெள்ளைத்தனம் இலலையென வெளிச்சம் போடும் வெள்ளை. துணைவியாருக்கும் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
உண்மையைச் சொல்வதென்றால் எனக்கும் குழப்பமகவே இருக்கிறது.ஒரு வேளை இதற்கெல்லாம் விளக்கம் கேட்கக் கூடாது என்றா, விளக்கம் கூறினாலும் புரியாது என்றா....மருபடியும் முதல் வரி...
ஜ.ரா.ரமேஷ் பாபு
உடன் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ராஜி //
உடன் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Vetha. Elangathilakam. //
அருமையான பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
யாரால் எது முடியாதோ
அதைத்தான் அந்த நால்வரும்
அதிகமாக பில்டப் கொடுக்கிறார்கள்
அதைத்தான் முரண் என தலைப்பிட்டுச் சொல்ல
முயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எதுவுமே இல்லாமல் இருந்தாலும் அவை இருப்பது போல பாவிக்கிறார்கள் அந்தக் கதை நாயகர்கள்.
தூய்மை என்ற அந்த வெண்மை மனதளவில் இல்லாவிட்டாலும் தன்னிடம் இருப்பதாக பாவிக்கத்தான் அந்த வெண்ணிற உடையா?
இதைத்தான் தங்கள் துணைவியார் உணர்த்தினார்களா?
வழக்கம்போல அருமையானதொரு பதிவு!
மனோ சாமிநாதன் //
அருமையான பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமை.வியந்து கொண்டே வாசித்தேன்.கடைசியில் எனக்கும் //வழக்கம் போல என்னுள் குழப்பமே கூடிக்கொண்டு போனது//
இதே கதைதான்.வாழ்த்துக்கள்!!
ஹா ஹா ஹா
சிறந்த கதை
அருமையான கதை கூறிய தங்களின் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்.
தங்களுக்கேற்ற துணைவியார்.
இன்றைய அரசியல் சூழலை புட்டுபுட்டு வைக்கும் கதை.
இல்லாதவற்றை இருப்பதாக எண்ணியும்
இருப்பதை இல்லாதவையாக எண்ணியும்
நம்மையும் நம்மை சுற்றி இருப்போரையும் குழப்பி
தாம் மட்டும் தெளிவாக இருப்போர் பற்றிய
அருமையான கதை நண்பரே.
அருள்
உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
முரண் ..
நல்ல அரசியல் கதை(கவிதை) :)
இந்த கதை எங்க அம்மா சொல்ல கேட்டுருக்குறேன், அரசியல் இப்போதானே நமக்கு புரியுது...!!!
ஆக குரு'வுக்கு இன்னும் பிடிபடலை ஹி ஹி...
எனக்கு வெள்ளைகலர் சட்டை ரொம்பபிடிக்கும்...!!!
மனசு தான் வெள்ளையா இல்லை, சட்டையாவது வெள்ளையா இருக்கட்டுமேன்னு தான் போடுறாங்க போல. கதையில் உள்ள முரண்பாடு போலவே வெள்ளை சட்டையும் முரண்பாடா இருக்குதுன்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.
அட..
நல்லாயிருக்கே...
அன்பு நண்பரே..
இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்த கதையிது..
அறிவும் அரைகுறையறிவும் (கலீல்ஜிப்ரான்)
http://gunathamizh.blogspot.com/2011/05/blog-post_27.html
ரமணி சார் பேசாமல் உங்கள் துணைவியாரையும் வலைப்பூ ஆரம்பிக்க சொல்லுங்கள்.விநோதமான கதைகளை இனிப்படிக்கலாம்.
இல்லாததை இருப்பது போல நினைத்துக்கொள்வது மட்டும் இல்லாது, அதனை உபயோக படுத்துவதாக சொல்வது முரண்.
அது போல அரசியல்வாதிகள் தங்களிடம் இல்லாத வெள்ளை மனதினை இருப்பாதாக காட்டிக்கொள்ள வெள்ளை உடை அணிகிறார்கள்.
எனக்கு புரிந்தது இதுதான், சரியாக இருக்கா?
நடைமுறை அரசியல் பற்றிய தெளிவான
படப்பிடிப்பு சகோ!
உள்ளம் கருப்பே உண்மை!
த.ம ஓ6
புலவர் சா இராமாநுசம்
முரண்கள் இல்லாத வாழ்வு உப்பில்லாத உணவுபோல சப்பென்று இருக்கும். முரண்கள்தான் புதிய கருத்துருவாக்கத்திற்கு வழியமைக்கும். நல்ல பதிவிற்கு நன்றி.
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முனைவர்.இரா.குணசீலன் //
வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
RAMVI //
வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
காந்தி பனங்கூர் //
மிகச் சரி தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
அப்படியும் செய்கிற அபிப்பிராயம் எனக்கிருக்கிறது
அவர்களுக்கு ஏனோ ஆர்வமில்லை
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அம்பலத்தார் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்கள் மனைவி சொன்ன கதை மிக அருமை.
முரணாகவே இருப்பினும், ஏதோ ஒரு நகைச்சுவை உள்ளதை நன்றாகவே புரிந்து கொண்டோம்.
நான் மிகவும் ரசித்தது/சிரித்தது:
//கைகள் இல்லாதவர் அலட்சியமாக
"அதெல்லாம் தேவையில்லை அவர்கள் அருகில் வரட்டும் நாமா அவர்களா ஒரு கை பார்த்துவிடுவோம் " என்றார்//
பாராட்டுக்கள் கதை சொன்ன தங்கள் துணைவியாருக்கும், பதிவாக்கிப் பகிர்ந்த தங்களுக்கும். vgk
Tamilmanam: 6
வை.கோபாலகிருஷ்ணன் //
வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கதை கூறிய தங்களின் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்...
உங்களை மிஞ்சிவிட்டார்கள் ரமணி சார் ...-:)
ரெவெரி //
வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
உடையிலாவது வெள்ளை இருக்கட்டும் என்று நினைக்கிறார்களா? வெள்ளை என்ற நிறம் பற்றியாவது தெரிகிறதே. பகிர்விற்கு நன்றி சார்
கணவன் மனைவி இரு கதாசிரியர்கள் வாழ்வில்
இணைந்துள்ளனர் .அருமை!... முதலில் உங்கள்
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் .முரண் கதை
விளக்கும் கதையின் விளக்கம் சுவாரசியமாய் உள்ளது .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ..........
நல்ல இருக்கு..
இருந்தாலும் அப்புறம் என்ன ?
சாகம்பரி //
வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
அருமையான பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நானும் நீங்கள் கேட்டது போல்
மீண்டும் "அப்புறம் " என்றேன்
"அப்புறம் "எனச் சொல்லிவிட்டார்
நல்ல விளக்கம், பகிர்வுக்கு நன்றி, ரமணி அண்ணா.
அசத்திட்டீங்க போங்க. கதைமூலம் விளக்கத்தை வெளிச்சமாக்கியிருக்கின்றீர்கள்.
முரணுக்குள் இத்தனை விளக்கமான அரசியலா !
vanathy //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஹேமா .//
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான கதை எனக்கொரு சந்தேகம் உங்கள் பதிவு எல்லாமே மிக அருமை. எல்லாமே நீங்களா சொந்தமாக எழுதியதா அல்லது சமையல் அறையில் நீங்கள் உங்கள் மனைவிக்கு உதவும் போது அவர்கள் உளறியதை எல்லாம் நீங்கள் பதிவாக எழுதி பெயர் தட்டிக் கொண்டு போகிறிர்களோ என்று?
ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின் ஒரு பெண்மகள் இருப்பார் என்பார்கள். ஆனால் இந்த பதிவில் இருந்து உங்கள் பதிவின் வெற்றிக்கு பின் உங்கள் மனைவி இருப்பது நன்றாக தெரிகிறது. எனவே அவர்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். வழக்கம் போல் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே
நல்ல கதை ஆனால் இந்த முரணுக்குத்தான் பதில் தெரியவில்லை எல்லோரும் ஒரு செயல்களை ஒவ்வொரு கோணத்தில் அலசுகிறார்கள்.
இருப்பது இல்லாதது என்பதை எல்லாம் விட தாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியே நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு அடுத்தவர்களையும் அப்படியே நினைக்கத் தோன்றுகிறது அதை மறைக்க அதையே எதிர்ப்பது போல பேசுகிறார்கள். ஆக, யார் யார் எதைப் பற்றி பேசுகிறார்களோ அவர்கள் அந்தத் தவறை செய்கிறார்கள்....காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள். (கொடுமையான விளக்கமோ...)
மரியாதைக்கு உரிய நிறத்தை. . .
மாசு மனம் படைத்தவன் அணிந்திருக்கின்றான். . .
அவன் தான் அரசியல்வாதி . . அருமையா சொல்லியிருக்கீங்க sir. . .
காது கேட்காதவர் சத்தம் கேட்பதாகச் சொல்கிறார்; அது போலவே மற்றவர்களும்இலாததை இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்!டிபிகல் அரசியல் வாதிகள்தான்!
அருமையான கதை.
இன்னும் சில கேட்டு எழுதுங்களேன்!
என் சோர்வை தட்டி எழுப்பி ஆர்வத்தையும் சுறுசுறுப்பயும் தருகிறது உங்கள் பதிவுகள் அருமை
Avargal Unmaigal //
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
சில பதிவுகள் இப்படி
சில பதிவுகள் அப்படி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தனிமரம்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் விரிவான
வித்தியாசமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பிரணவன் //
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ராக்கெட் ராஜா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கமையா..
அருமையா சொல்லிபோகிறீர்கள் ஹி ஹி எங்களில் பலரும் அப்படித்தானே??
ஆகா!
காட்டான் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உங்களுக்கு ஏத்த தங்கமணிதான் ...:))
முரண் மிக, மிக அற்புதம். இயலாததைச் சொல்வது அரசியல்வாதிகளுக்கு அடிப்படைத் தகுதி. அதை நன்கு விளக்குகிறது இக்கவிதை. வாழ்க.
உங்கள் வலைப்பூ மிக அருமை. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
தக்குடு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மேடேஸ்வரன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சார் உங்கள் மனைவியின் தெளிந்த கதை அருமை.
Harani //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமை சார்
வாழ்த்துக்கள்
Rathnavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமணி சார் ,
பேஷன் இல் இரண்டு வகை உண்டு .... ஒன்று உடை matching ஆ இருப்பது .
. மற்றொன்று அப்படியே நேர்மாறாக contrast ஆக இருப்பது......
கதையை மிகவும் ரசித்தேன். உங்களுக்கு மட்டும் எப்படி
இப்படி ??
ஸ்ரவாணி //
வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment