என்ன செய்வது முன்புபோல
நான்கு வகை காய்கறிகளோடும்
ரசம் சாம்பார் மோர் அப்பளம் என
வகை வகையாக சமைத்துண்ண
வசதி வாய்ப்புகள் பெரும்பாலோருக்கு இல்லை
அப்படி ஒருவேளை சமைத்தாலும்
பொறுமையாக ரசித்து உண்ண நேரமோ
செரிக்கிற உடல் நலமோ இல்லை
என்ன செய்வது முன்புபோல
உயர்கல்வி பயிலுகிற கன்னியராலோ
வேலைக்குச் செல்லும் பெண்களாலோ
தாவணி சேலை கட்டி
இயல்பாக வெளிச்செல்ல முடிவதில்லை
அப்படி ஒருவேளை போக முயன்றாலும்
இயல்பாக இருக்கவோ
சௌகரியமாய் உணரவோ இயலவில்லை
எப்படிச் சொல்வது முன்புபோல
ஆறு ஏழு பத்தி வீடுகளில்
தாய் தந்தை தாத்த பாட்டியென
உற்றார் உறவினரோடு
ஒன்று சேர்ந்து வாழ முடிவதில்லை
அப்படி ஒருவேளை இருக்க ஆசைப்பட்டாலும்
பணிச் சூழலோ வசதி வாய்ப்புகளோ
அப்படி இருக்க அனுமதிப்பதில்லை
எப்படிச் சொல்வது முன்பு போல
எதுகை மோனை அணிகளென
யாப்பிலக்கணத்திற்கு ஏற்ப
கவிதைகள் இயற்ற இயலுவதில்லை
அப்படி ஒருவேளை முயன்று
கவிதைகள் படைத்துக் கொடுத்தாலும்
படித்து ரசிக்கவோ சிறப்பை உணரவோ
நேரமோ மனமோ இடம் கொடுப்பதில்லை
என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது
இல்லையெனில் அன்னம்போல் யாளிபோல்
எத்தனை உயர்வுடையதாயினும்
கற்பனை போலாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது
நான்கு வகை காய்கறிகளோடும்
ரசம் சாம்பார் மோர் அப்பளம் என
வகை வகையாக சமைத்துண்ண
வசதி வாய்ப்புகள் பெரும்பாலோருக்கு இல்லை
அப்படி ஒருவேளை சமைத்தாலும்
பொறுமையாக ரசித்து உண்ண நேரமோ
செரிக்கிற உடல் நலமோ இல்லை
என்ன செய்வது முன்புபோல
உயர்கல்வி பயிலுகிற கன்னியராலோ
வேலைக்குச் செல்லும் பெண்களாலோ
தாவணி சேலை கட்டி
இயல்பாக வெளிச்செல்ல முடிவதில்லை
அப்படி ஒருவேளை போக முயன்றாலும்
இயல்பாக இருக்கவோ
சௌகரியமாய் உணரவோ இயலவில்லை
எப்படிச் சொல்வது முன்புபோல
ஆறு ஏழு பத்தி வீடுகளில்
தாய் தந்தை தாத்த பாட்டியென
உற்றார் உறவினரோடு
ஒன்று சேர்ந்து வாழ முடிவதில்லை
அப்படி ஒருவேளை இருக்க ஆசைப்பட்டாலும்
பணிச் சூழலோ வசதி வாய்ப்புகளோ
அப்படி இருக்க அனுமதிப்பதில்லை
எப்படிச் சொல்வது முன்பு போல
எதுகை மோனை அணிகளென
யாப்பிலக்கணத்திற்கு ஏற்ப
கவிதைகள் இயற்ற இயலுவதில்லை
அப்படி ஒருவேளை முயன்று
கவிதைகள் படைத்துக் கொடுத்தாலும்
படித்து ரசிக்கவோ சிறப்பை உணரவோ
நேரமோ மனமோ இடம் கொடுப்பதில்லை
என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது
இல்லையெனில் அன்னம்போல் யாளிபோல்
எத்தனை உயர்வுடையதாயினும்
கற்பனை போலாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது
96 comments:
ஆஹா சபாஷ்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது
மிகவும் சரியான வார்த்தைகள்;
///என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது
இல்லையெனில் அன்னம்போல் யாளிபோல்
எத்தனை உயர்வுடையதாயினும்
கற்பனை போலாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது///
என்ன உவமானம்...!அருமை!
//என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது//
ஆம் ஐயா, எல்லாமே எல்லா இடங்களிலும், என்றும் மாறிக்கொண்டே தான் வருகின்றன. பழங்கதைகளைச் சொன்னால் பரிகசிக்கவே செய்கின்றனர்.
நல்ல கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் 2 vgk
suryajeeva //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
என்ன செய்வது என்று கேட்ட
என்ன செய்யவேண்டியதைச் சொல்லி
எப்படி சொல்வது என்று கேட்ட
சொல்லவேண்டியதைச் சொல்லி
எப்படி முடிக்க வேண்டுமோ அப்டியே
முடித்துள்ளீர் சகோ
த ம ஒ3
புலவர் சா இராமாநுசம்
என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது/
மாறாவிட்டால் காலம் கைகொட்டி நகைத்துப்போகிறதே!!
மாறுதலின் பின்னால் மாறாத ஆசை, பேராசை எதையும் நியாயப்படுத்தி என்றும் வெற்றிவாகை சூடி நிற்பதும், தொலைந்து போன சந்தோஷங்களை கவிதை வடிவில் ரசிப்பதும் உலக இயல்போ???.
என்ன செய்வது?
இது ஏக்கத்தின் கேள்வி.
ஆதங்கத்தின் கேள்வி.
இயலாமையின் கேள்வி.
பதில் நீங்கள் சொன்னது போல மாற்றம் ஒன்றே மாறாதது!
இறுதிப்பத்தி மனதில் வெகு காலம் நிற்கும். நன்றிகளும் பாராட்டுக்களும்!
ஆஹா!!.. ஜூப்பர்.. ஜூப்பர்.
கடைசிப் பத்தி செமயா இருக்கு.
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
VENKAT //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான வித்தியாசமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கோகுல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
என்ன செய்வது இப்போது?
புதுமைகள் பல வந்து
நடைமுறைகளை
நினைவுகளாக
மாற்றுகின்றன!
மாற்றங்களை முடிந்தால் ரசித்திவிட்டு
செல்லவேண்டியதுதான்!
த.ம4
சிறப்பான கவிதை....
உணர்வு வழியே சிந்தனைகள் மாறுபடுகின்றன. யாப்பிலக்கணத்துடன் கவிதை எழுதினால் ஆளில்லாத கடையில் தேநீர் ஆற்றுவது போலாகிவிடுகிறது. ரொம்பவும் சரியான கருத்து ரமணி சார்.
நடப்பில் உள்ள முரண்களை
நயமாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.
கூட்டுக்குடும்பம் என்பது அறவே அழிந்து
இவ்வேளையில் அதை ஞாபகப் படுத்துகிறது
தங்களின் வரிகள்.
என்னதான் மாற்றம் இருந்தாலும் வாழக்
கற்றுக்கொள்கிறோம்.
அருமையான படைப்புக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
//மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது//
சரியாச் சொல்லி இருக்கீங்க... மாறுதல் ஒன்று தானே மாறாதது...
என்ன செய்வது. மாற்றம் என்பது காலத்தின் தேவை. அதனால் தான் மாறுதல் ஒன்றே மாறாமல் உள்ளது.
என்ன செய்வது முன்புபோல
நான்கு வகை காய்கறிகளோடும்
ரசம் சாம்பார் மோர் அப்பளம் என
வகை வகையாக சமைத்துண்ண
வாசிக்கவே மணக்குது இதெல்லாம் சாப்பிட்டு எந்த காலம் திருப்பியு கிடைக்குமா
ஏங்குகிறது மனசு
உண்மையை சொல்லுறன் மிச்சகவிதை வாசிக்க வில்லை வாசிச்ச அழுதிடுவன்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கவி அழகன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Chitra //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
என்ன செய்வது நண்பரே ,மாற்றம் எப்பொழுதும் உண்டு .
அருமை நண்பரே
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
த.ம 11
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எதுவும் செய்ய வேண்டாம். மாற்றத்துக்கு நம்மையும் மாற்றிக் கொள்ளப் பழகினால் போதும். தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
//என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது//
அருமை ரமணி சார்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இன்றைய வாழ்கையை வெளிச்சம் போட்டு காட்டும் அதேசமயம் பலருடைய ஏக்கத்தையும் பிரதிபலிக்கும் யதார்த்தமான கவிதை.
நேற்று போல இன்றில்லை....இன்று போல நாளையும் இருக்கப் போவதில்லை.
சிவானந்தம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
''...தாவணி சேலை கட்டி
இயல்பாக வெளிச்செல்ல முடிவதில்லை
அப்படி ஒருவேளை போக முயன்றாலும்
இயல்பாக இருக்கவோ
சௌகரியமாய் உணரவோ இயலவில்லை..''
சரியாகச் சொன்னீங்க. எனது நிலையும் இது தான்..இதற்குக் கணவரும் ஒத்தழைப்பார் மிக வசதியாகப் போய்விடும். மாறுதல் மட்டும் மாறாது மாற வைக்கிறது அனைவரையும், சிறப்பு. வாழ்த்துகள் சகோதரா. இனிய தீபாவளி வாழ்த்துகள் உங்களோடு குடும்பத்தாருக்கும்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
Vetha.Elangathilakm //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஅருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமணி சார் வணக்கம். தொடர் வகுப்புகள். ஓடிக்கொண்டேயிருக்கிறேன். இப்போதுதான் வாய்ப்பு வந்திருக்கிறேன்.
என்ன செய்வது முன்புபோல் இல்லை. மரபு சார்ந்த செய்திகளை நினைப்பதும் அதனைப் பின்பற்றுவதும் அதனைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்கிற அக்கறையும் ரமணிசார் போன்று ஒருசிலர் எழுதி ஏக்கம்கொள்வதைத் தவிர. ஆனாலும் எழுதுங்கள் சார். இவையாவும் நமது பண்பாடு என்றைக்கும் அழிக்கமுடியாது எனும் நம்பிக்கை விருட்சத்தின் மண் அணைப்பாக இருக்கும் மேலும் உறுதிப்பட. அருமை சார்.
Harani //
தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Wish you very Happy diwali sir
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்
என்ன செய்வது கால சூழ்நிலை சாபக்கேட்டால் பழைய அற்புதமான விசயங்களை இழந்துகொண்டே வருகிறோம்... அருமையான கவிதை சகோ! பாராட்டுக்கள்...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...வாழ்த்துக்கள்
அண்ணே நச்!..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மாறிவரும் காட்சிகளுக்கிடையே மாறாதிருக்கும் அபூர்வமாய் நம் நினைவுகளில் மட்டுமே தங்கிப்போன சில பொக்கிஷங்கள் இவை. அருமை ரமணியண்ணா.தீபாவளி வாழ்த்துக்கள்.
சுந்தர்ஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா.
காந்தி பனங்கூர் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா!. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
தமிழ்மணம் 13
ராஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஆம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அழகாய் எடுத்துரைதுள்ளீர்கள் கவிதையில்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்
பதிவர் சார்வாகனின் தளத்தின் பின்னூட்ட வாயிலாக இங்கே!பணம் நம்மை மாற்றித்தான் விட்டுள்ளது.
r.v.saravanan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராஜ நடராஜன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
ரெவெரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமை
14th T.M
சார்வாகன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
//என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது//
இந்த வரிகளில் தற்போதைய வாழ்கையின் உண்மை
தெறிக்கிறது ..
கவிதை மிகவும் அருமை
சில இடங்களில் சூழ்நிலைக் கைதியாகிறோம்.மாறியே ஆகவேண்டியே கட்டாயம் !
மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்.
ஸாதிகா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தவிர்க்கமுடியாமல்தான் போகிறது.
சிறப்பான கவிதை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள் உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........
கவிதை படித்த பின்- "...'மாற்றம்'-என்பதற்கு சுயம் உண்டா"? என்ற ஒரு கேள்வி எழுகிறது... சுயம் இல்லாததொன்று... அதன் தன்மை யாதென்று தெரியாத ஒன்று என்று எங்கெல்லாமோ இழுத்துச் செல்கிறது- இந்த எண்ணம்... அதிலிருந்து என்னை கொஞ்சம் விடுவித்துக் கொண்டு---
Thamaso Maa Jyothir Gamaya...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... :)
Matangi Mawley //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சுந்தரா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கவிதை அருமை. வாழ்க.
ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்
Rathnavel //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கருத்தாளம் மிக்க கவிதை மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
வாழ்த்துக்கள் வாருங்கள் என் கவிதை காத்திருக்குது
உங்கள் வரவுக்காய் .
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எம்மைப் போல் மரபுக்கவி புனைய முடியாதவர்களுக்கு எல்லாம் புதுக்கவிதை எனும் மாற்றம் வரவேற்கத் தக்கதே .கருப்பொருள் அருமை ரமணி சார் ...
ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment