கவிதைகள் குறித்து நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்
"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்
கருவின் விளக்கத்தையே
இலக்காகக் கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்
வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே நினைவூட்டிப்போகின்றன
மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன " என்றேன்
"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தான் "என்றாள் துணைவி
"குழம்பு எப்படி கவிதையாகும் ? " என்றேன்
அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்
"அப்படியானால் நன்கு சமைக்கிற
பெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தானா ? "என்றேன்
" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்
விவாதித்துக் கொண்டிருந்தோம்
"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்
கருவின் விளக்கத்தையே
இலக்காகக் கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்
வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே நினைவூட்டிப்போகின்றன
மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன " என்றேன்
"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தான் "என்றாள் துணைவி
"குழம்பு எப்படி கவிதையாகும் ? " என்றேன்
அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்
"அப்படியானால் நன்கு சமைக்கிற
பெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தானா ? "என்றேன்
" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்
101 comments:
ஆகா உங்க வீட்டுக்குள்ளேயும் ஒரு கவிதாயினி.....!!!
-----வாழ்த்துக்கள் குரு--------
" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு"//
சான்ஸே இல்லை இது சூப்பர் "கவிதை குழம்பு" மிகவும் ரசித்தேன்....!!!
ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது நண்பரே
தமிழ்மணம் 1 to 2
//நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்//
மிகவும் காரசாரமான குழம்பு தான்
உங்கள் கவிதையும்,
கவிதாயினிகளாகிய இந்தப்
பெண்களின் சமையலும்.
நல்ல பதிவு. டேஸ்ட் ஆகவே இருந்தது.
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு"
ஆஹா இது நல்லா இருக்கே.
நல்ல கவிதை.. நல்ல கவிதை சமைக்க நல்ல குடும்பம் வேண்டும்....
நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.
இது பற்றி கவிதாயினிகளிடம் தான் விசாரிக்க வேண்டும்.
அழகான விளக்கம் அருமை சார்
பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு
கவிதையையும் குழம்பையும் அனுப்பி வைங்க ரமணி சார்... -:)
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
suryajeeva //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //.
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும
மனமார்ந்த நன்றி
ஜ.ரா.ரமேஷ் பாபு //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரெவெரி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பல்சுவைகளை சரியான விகிதத்தில்
கலப்பதுதான் என்றால்
சுவைமனக்கும் குழம்பும்
கவிதைதானே...
ஆஹா அருமையான சிந்தனை..
தினம் தினம் அறுசுவைகளுடன்
இனிக்கவி படைக்கும்
கவிதாயினிகளுக்கும்
கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்...
கவிதைக்குழம்பு தெளிவாக இருக்கிறதே!
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" ///
வாவ்..அடுத்த பதிவர் தயாரிக்கொண்டு இருக்கின்றார்.வரவேற்க தயாராகிக்கொண்டுள்ளோம்.
குழம்பும் ஒரு கவிதைதான்.. ஆஹா.. உங்களுக்குப் போட்டியா வீட்டிலேயே ஆள் உருவாகுது போலிருக்கே ;-)
//புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு "//
கவிதைக்கு இலக்கணம் சொல்லி, கூடவே தரமான சமையலுக்கும் இலக்கணம் சொல்லி விட்டீர்கள்! மிக அருமை!
குழம்பை சொன்னாலும் குழம்பாமலும் குழப்பாமலும் சொல்லியுள்ளீர்கள்!
மகேந்திரன் //.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
.ஷைலஜா //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி.
ஸாதிகா //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
bandhu //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்மா உங்களுக்கு சரியான போட்டியாக வாய்ப்பு இருக்கிறது ரமணி சார்
rufina rajkumar //
போட்டி இருந்தால் தானே வளர்ச்சிக்கும்
வாய்ப்பு அதிகம் ?
தங்கள் மேலான வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரசிப்பும் ருசிப்பும்- நல்ல விளக்கம்.
எல்லா விசயங்களும் குடும்பத்தலைவியின் பார்வையில் மற்றுமொரு கோணத்தில் வடிவெடுக்கின்றன. அருமை.
அட என்னா விளக்கம் கவிதைக்கு ஆமா சரியாக பொருத்தமாகத்தான் இருக்கு பாஸ்
அம்மாவின் ”கவிதை’யால்தான், அப்பாவின் கவிதை ருசி மிகுந்த்தாய் உள்ளதோ! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமென்றால்..., அந்த வரம் உங்களுக்கு கிட்டியது எனக்கு பெரு மகிழ்ச்சியே. தம்பதியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
தமிழ்மணம் 10
நல்ல கருத்துக்களை நீங்கள் பதிவாக இட்டுச் சென்று எல்லோரிடமும் பாராட்டு பெற்று விட்டீர்கள். வழக்கம் போல லேட்டாக வரும் நான் என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை ஏனென்றால் எல்லா பாராட்டு வார்த்தைகளையும் எல்லோரும் யூஸ் பண்ணிவிட்டதால் அதையே மறுபடியும் பயன்படுத்த முடியவில்லை. அதனால் எனது வாழ்த்தை மட்டும் இங்கே வழங்குகிறேன். வாழ்க வளமுடன் & நீண்ட ஆயுளுடன்
நல்ல உவமான உவமேயம். சிந்தனை அபாரம். நல்ல கவிதைக் குழம்பு செய்வோம். சிறப்பான ஆக்கம். தொடரட்டும் பணி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வத்தக் குழம்பு போல் மணமாகவும் ருசியாகவும் இருக்கிறது.
அருமை.
இரண்டையுமே சமைக்கையில் அமையும் மனநிலை முக்கியமானது.
இல்லையா ரமணியண்ணா?
கவிதைக்கு ஒரு துலாக்கோல்.?பேஷ், பேஷ்.!
உங்க வீட்டில்(வலை பதிவில்) வைக்கும் எல்லா வகை குழம்புகளும்(கவிதைகளும்) சுவையாக இருக்கின்றன.
ராஜி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நம்பிக்கைபாண்டியன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சுந்தர்ஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஆஹா அருமை சகோ!
ஆஹா.கவிதை-குழம்பு ஒப்பீடு அருமை.
ஓஹோ...!
இரண்டும் ஆக்கம் தான்.
இருப்பைக் காட்டிக்கொள்ளாமல் எல்லாம் இருக்கனும்.
நல்லாக இருக்கிறதே.
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அசத்தலான, ரசிக்கவைத்த ஒப்பீடு.
மொத்தத்தில், குழம்பு ரொம்ப ருசி! :)
சத்ரியன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சுந்தரா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
smart.
கவிஞர் என்பது இருபாலுக்கும் பொதுச்சொல் தானே?
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு"
இரு கவிதை கவினர்கள் ஒரே வீட்டில் ருசியான குழம்பு
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு"
கண்டிப்பாக இந்த அருமை வரிகள் சார்
இனி குழம்பை பார்க்கும் போதெல்லாம் எனக்கு கவிதையின் நினைவு வந்து விடும் போலிருக்கிறது
வெரி நைஸ்..
கடைசி வரிகள் ரொம்ப அழகு
" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்/
சுவை மிக்க குழம்பு.. பகிர்வுக்கும், உருக்கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்...
காட்டு பூச்சி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
r.v.saravanan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
குணசேகரன்... //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
தங்கள் கேள்வி ஒரு படைப்புக்கான
கருவை தந்து போகிறது நன்றி
தங்கள் துணைவியாரின் கூற்று உண்மையே நண்பரே
கடைசி பத்தியே ஒரு ஹைகூ கவிதையே
த.ம. 14
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
super
"என் ராஜபாட்டை"- ராஜா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான விவாதத்தின் உருவத்தில் ஒரு கவிதை... அருமை...
தங்களுடைய இந்த புதிய குழம்பு மிகவும் அருமை ..:)
Thamizh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கவிதையிலும் சுவையிருக்கின்றது, குழம்பிலும் சுவையிருக்கின்றது. . .அருமை . . .
\\நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்//
அட.
எங்கள் வீட்டு ஃ பிரிட்ஜில்
கவிதைகள்.
அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்
ஐயா இந்த விளக்கத்தைத் தந்தவரும் தங்கள்
துணைவியாராகின் அவசியம் அவர்களுக்கு
நேரம் கிடைக்கும்போதெல்லாம் எனது
கவிதைகளைப் பார்க்கவும் கருத்துரைக்கவும்
நீங்கள்தான் வழிசமைக்க வேண்டும் .அடடா
என்ன ரசனை!....வாழ்த்துக்கள் ஐயா நல்ல
துணைவியாரைப் பெற்றுள்ளீர்கள் .மிக்க
நன்றி அழகிய இந்தப் பகிர்வுக்கு ........
கவிதை = குழம்பு அற்புதம் !
ஹேமா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பிரணவன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சிவகுமாரன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ருசியான குழம்பு
கவிதை விடயத்தை நீங்களும் மனைவியும் அலசி ஆராய்ந்திருக்கின்றீர்கள் என்றால், உங்கள் வீட்டிலேயே உங்கள் கவிதைகளுக்கு விமர்சகர் இருக்கிறார். ஒப்பீட்டுப் பார்வையில் உங்கள் மனைவி எவ்வளவு கெட்டிக் காரி என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது; இன்று உங்களுக்கு வாழ்த்துக் கிடையாது. உங்கள் மனைவிக்கே. நான் கவிப்பொங்கள் என்னும் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதில் கவிதையை பொங்களுக்கு ஒப்பிட்டிருந்தேன். அந்த ஞாபகம் இப்பொழுது வருகின்றது. எங்கே என் வலைப்பக்கம் காணவில்லை.
சந்திரகௌரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அடுத்த ஆக்கத்தைத் தேடி வந்தேன் .உங்கள் கருத்துக்காக என் தளமும் காத்திருக்கின்றதையா .முடிந்தால் வாருங்கள் .
ராக்கெட் ராஜா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவிரசம் ததும்பும் கவிதைக்குழம்பு படைத்தத் தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள் ரமணி சார். பந்திக்கு முந்து என்பார்கள். நான் பிந்தி வந்துவிட்டேன். பின்னூட்டங்கள் யாவற்றையும் தாண்டிய கருத்து என்னிடம் இனி இல்லை. வழக்கம்போல் பிரமிக்கச் செய்துவிட்டீர்கள்.
கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஆஹா என்ன பொருத்தமான ஜோடி நீங்கள் !
வள்ளுவனும் வாசுகியும் போல் !
வாழ்த்துக்கள் !
ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment