Sunday, December 18, 2011

எதிர் திசையில் ஓரடி .....

புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

78 comments:

சுதா SJ said...

பாஸ் எப்படி இருக்கீங்க??

சுதா SJ said...

ரமணி பாஸ்... அட நான் தான் முதல் ஆளா??? நான் உங்கள் பதிவுகளுக்கு எப்பவும் லேட் தான் :( நான் வரும் போது கமெண்ட்ஸ் நாற்பதை தாண்டிரும்... இன்னைக்கு முதல் முதலா நான் முதல் ஆளா..... தேங்க்ஸ் :)

சுதா SJ said...

கவிதை அருமை.... வழமை போல் அழகாக கவிதை மூலம் நல்லது சொல்லுகிறீர்கள்....

சுதா SJ said...

பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது<<<<<<<<<<<<<<<<

கடைசி வரி என்றாலும் அழுத்தமான வரிகள்....

Anonymous said...

கருத்து சொல்லக் கூடாது [ உங்களுக்குத் தெரிந்ததுதானே ]
என்று நினைத்தும் ......இதோ வந்து விட்டேன்
உங்கள் நம்பிக்கையைப் பொய்க்காமல்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெகு அருமையான நம்பிக்கையூட்டும் வரிகள்.
Something is better than Nothing என்பது போல, ஏதோவொரு சிறிய முயற்சி, சமயத்தில் பெரிய பலனைக்கூட கொடுக்கத்தான் செய்யும்.
தமிழ்மணம்: 4 vgk

துரைடேனியல் said...

Sir. Migavum arumai. Athilum 4th Stanza enakku rompa pidichathu. Thodara Vaalthukkal. Mudinthal tomorrow marupadiyum varukiren tamil-il.

துரைடேனியல் said...

TM 5.

மகேந்திரன் said...

முயற்சி செய் முடியாதது
ஏதுமில்லை,
அன்பால் பேசிப்பார் கரையாத
உள்ளமது உலகில் இல்லை...
என்ன ஒரு சிந்தனை நண்பரே!!
எதிர்வினை செயல்களை
முயன்று முடித்துக்கொள்
என்று இயம்பும் சொற்கள்
எவ்வளவு அழகானவை.

காவியங்கள் போற்றும் வரிகள் அத்தனையும்.

மகேந்திரன் said...

த.ம. 6

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
தொடர் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
சிந்திக்கச் செய்து போகும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

பால கணேஷ் said...

நம்பிக்கை கொப்பளிக்கும் கவி‌தை வரிகள் பிரமாதம். மிக ரசித்தேன் ரமணி சார். நன்றி!

Yaathoramani.blogspot.com said...

கணேஷ்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

//நாளைய மழையை எதிர்பார்த்து உழுது வைத்தது கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது//
சிந்திக்க வைக்கும் வரிகள்.

நான் ஹேக்கர்களிடம் தனி நபர் போராட்டத்தில் இருப்பதால் எல்லா பதிவுகளையும் படித்து பின்னுட்டம் இடமுடியவில்லை மன்னிக்கவும்.

ஸ்ரீராம். said...

என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் நம்பிக்கை வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தாங்கள் போராட்டம் வெல்லவும்
அது அனைத்து பதிவர்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக இருக்கும் படியாக
ஒரு விரிவான ப்திவு தரவும் வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நம்பிக்கை கவிதையில் விதையாக விரவிக்கிடக்கிறது.
நாளை விருச்சமாகும்....!
கவிதை அருமை. வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை...அருமை...

அப்பாதுரை said...

பிரமாதம்!

அப்பாதுரை said...

தலைப்பும் மிக நன்று.

Yaathoramani.blogspot.com said...

-தோழன் மபா, தமிழன் வீதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முழுவதும் கிடைக்காதே என்ற நம்பிக்கை இன்மையில் முயற்சி செய்யாமல் இருப்பதை விட "கொஞ்சம்" கிடைத்தாலும் நல்லது தானே என்று முயல்வதே சிறந்தது .நல்ல கருத்து சொல்லும் நல்ல கவிதை

Yaathoramani.blogspot.com said...

rufina rajkumar //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

K.s.s.Rajh said...

////கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது/////

ஆருமையான வரிகள் பாஸ்

Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தன்னம்பிக்கையோடு ஒரு அடி முன்வைப்போம்...

தமிழ் உதயம் said...

அருமை... நம்பிக்கை கவி‌தை...

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் // //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

’’கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது’’

நலமான நம்பிக்கையை
பலபாய் பகிர்ந்த பதிவு

Yaathoramani.blogspot.com said...

A.R.ராஜகோபாலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ராஜி said...

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது
>>
தெய்வத்தால் ஆகாதெனினும் தன் மெய்வருத்தி உழைக்கும் உழைப்புக்கு கண்டிப்பாய் ஊதியம் கிடைக்கும் எனாற வள்ளுவன் வாக்கு பொய்த்திடுமா ஐயா

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

முயற்சி திருவினையாக்கும் என்று சும்மாவா சொல்லிப் போனார்கள். நீங்கள் சொல்லிப்போகும் விதம் மிகவும் நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது //

இதைதான் காலத்தே பயிர் செய்'ன்னு பெரியவங்க சொன்னாங்க இல்லையா குரு....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை தூண்டும் வண்ணம் உள்ளது நன்றி குரு...!!!

RAMA RAVI (RAMVI) said...

விடாமுயற்சி,தன்நம்பிக்கை இவற்றின் சிறப்பை உணர்த்தும் அருமையான கவிதை.நன்றி பகிர்வுக்கு.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

முயற்சியால் முடியாதது இல்லை....நல்லதொரு கவிதை.
த.ம - 14

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

//கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது //

மிஞ்சியது கொஞ்சம் என்றாலும், எஞ்சியது தங்களுக்கு ஆனந்தமே!

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஹேமா said...

வாழ்வில் முயற்சி எடுத்தும் தோல்விதான் என்றால் எங்கள் கையில் எதுவுமில்லை என்று ஆறுதலடையலாம்.அருமையான தன்னம்பிக்கை தரும் கவிதை !

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

vanathy said...

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது
//வழக்கம் போலவே அசத்தலான கவிதை. தொடருங்கள்.

ஹ ர ணி said...

ரமணி சார்.. எப்பவும் நேராகப் பயனாக யோசிக்கும் உங்கள் கவிதைதளம் நிரம்பப் பிடித்துபோகிறது. இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான டானிக் கவிதை சார். எளிமையாகவும் போகிற போக்கில் சொல்லுகிற லாவகம் கவிதைக்கு அருமை சார்.

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

kowsy said...

எதுவும் முடியும் என்பதுதான் உங்கள் இக்கவிதையின் பொருளா. உங்கள் கவிதைகளில் ஏதோ ஒரு புதுமை எப்போது இருக்கும். நினைக்காத ஒன்றை உங்கள் வரிகளில் தந்து நிஞம் ஆக்கிவிடுவீர்கள். சும்மா சொல்லிக் கொண்டிருப்பதை விட செயலில் இறங்கினால் சிறப்பு என்பதை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.

Angel said...

தன்னபிக்கையூட்டும் வரிகள் .நம்பிக்கைதான் வாழ்க்கை .
அருமையான கவிதை .தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் .

கீதமஞ்சரி said...

நம்பிக்கையூட்டும் வரிகள்.. முடியாது, நடக்காது, மாறாது, திருந்தாது, சரிப்படாது என்று எதிர்மறையாய் எப்போதும் யோசிப்பதை விட்டு அதற்கு எதிர்மறையாய் செயல்பட்டால் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு என்பதை தெளிவுபடவிளக்கும் வைரவரிகள். உங்கள் ஒவ்வொரு படைப்பும் மனதின் ஆழத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதேயில்லை. மனம் நிறைந்த பாராட்டுகள் சார்.

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது //

இதான்.. இதேதான். அசத்தலான கருத்து.

சோம்பியே இருப்பதை விட கொஞ்சம் முயற்சி செய்துதான் வைப்போமே.

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அண்ணே நம்பிக்கை...நன்றி!

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

முடியாது முடியாது என்று முடங்கிக் கிடைப்பதைவிட முயன்று பாருங்களேன் என்று முத்தாய்ப்பாய் முயற்சியின் முக்கியத்தை முழுமையாக / அருமையாக சொல்லியக் கவிதை...
பகிர்விற்கு நன்றிகள் கவிஞரே!

Yaathoramani.blogspot.com said...

தமிழ் விரும்பி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

மாய உலகம் said...

ஊக்கம் தரும் கவிதை.. உற்சாகத்தை தந்தது சகோ! வாழ்த்துக்கள்.

சசிகலா said...

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது
அருமையான படைப்பு .

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

sasikala //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

நிலாமகள் said...

ந‌ம்பிக்கையுட‌னான‌ முய‌ற்சி அனைத்துக்கும் நேர்திசையில் ஓர‌டியாய்...

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

radhakrishnan said...

''நாளைய மழையை எதிர்பார்த்து உழுதுவைத்தது''
தன்னம்பிக்கையை வளர்க்கும் வார்த்தைகள்
அருமையான கவிதை. நன்றி சார்

Yaathoramani.blogspot.com said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment