Tuesday, December 20, 2011

உயிரேணி

சிறு புன்னகைதானே
என்னசெய்துவிடப் போகிறது என
அலட்சியமாய் எப்போதும் இருப்பதில்லை

என்று எங்கு எப்போது கிழியும் எனத் தெரியாது
நைந்துபோன சட்டையாய்
பிரச்சனைகளில் அசுரப் பிடியில்
மனம் துடிக்க அலைபவனுக்கு அது ஒரு
சால்வையாகக் கூட ஆகலாம்

சிறு ஆறுதல் வார்த்தைதானே
அதனால் என்ன பயன் என எண்ணி
அசட்டையாய் இதுவரை இருந்ததில்லை

நிலைத்தலுக்கான  அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்

சிறு பாராட்டு மொழியில்
என்ன விளைந்துவிடப் போகிறது என எண்ணி
சோம்பி இருக்க முயன்றதில்லை

உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
அசந்து தூங்கிக் கிடப்பவனை
எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
தாரக மந்திரமாகக்  கூட அது இருக்கலாம்

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
என்றேனும்  கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக  மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்

97 comments:

ராமலக்ஷ்மி said...

/விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும்/

உண்மை. கவிதை அருமை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அர்த்தமுள்ள நம்பிக்கை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வழிகாட்டியாக இருந்துக்கொண்டு, புன்னகையோடு நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கு ஊக்குவித்தம் பணியை செம்மையாக செய்பவர்கள் காலத்தால் அழியமாட்டார்கள்...

அர்த்தமுள்ள பதிவு

வாழ்த்துக்கள்...

Radhakrishnan said...

//போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
என்றேனும் கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்//

அன்பின் மகத்துவம் தனை, ஆறுதலின் அற்புதம் தனை, பாராட்டுகளின் பாக்கியம்தனை செப்பிய நல்முத்து கவிதை. அருமை ஐயா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

ராஜி said...

கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்
>>>
நம்பிக்கை பொய்க்காது ஐயா

தமிழ் உதயம் said...

அழகான, அருமையான, தேவையான நம்பிக்கை.

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

Arumai. Azhagu. Vivarikka Vaarthai illai.
TM 8.

Yaathoramani.blogspot.com said...

V.Radhakrishnan //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ramani //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

எங்களிலுள்ளும் விதைத்ததர்க்கு நன்றிகள்! த.ம 9!

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

அருமையான கருத்துக்களை அழகாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.தொடர வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சிசு said...

//நிலைத்தலுக்கான அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்//

எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
சிறு ஆறுதல் ஒரு ஜீவனுக்குள் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் சக்தி படைத்தது....

சிசு said...

//விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும்//

இது அதீத நம்பிக்கையல்ல...
அர்த்தமுள்ள நம்பிக்கை.

அன்புடன் நான் said...

சிந்தனை நச்சின்னு ஏற்புடையதாய் இருக்கு..... நெகிழ்வான பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சி.கருணாகரசு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிசு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

குறையொன்றுமில்லை. said...

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
என்றேனும் கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்



அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

//விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்//

நம்பிக்கை தானே எல்லாம்... நல்ல விதைகள் நிச்சயம் விருட்சமாகி பலன் தரும் என நம்புவோம்....

நல்ல கவிதை வரிகள்.... பகிர்வுக்கு மிக்க நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்//

வீரியமுள்ள விதை முளைத்து விருட்சமாகி தன் பலனை நிச்சயம் தந்துவிடும் குரு...!!!

Anonymous said...

கண்டிப்பாக இந்த பண்பு ஒரு சிறந்த ஆளுமைத் திறன்
மட்டும் அல்ல மனிதாபிமானமும் கூட.
இதழில் முறுவலும் நெஞ்சில் நெகிழ்ச்சியும் வருகிறது படித்தவுடன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்//

இந்த தங்கள் நம்பிக்கை என்றும் வீண் போகாது.
நல்ல கவிதை.பாராட்டுக்கள்.

தமிழ்மணம்: 11

Angel said...

ஒரு கட்டத்தில் கடந்து வந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது இப்படி செய்திருக்கலாமே அல்லது அதை செய்திருக்கலாமே என்று வருந்துவதைவிட அந்தந்த நேரத்திலேயே ஒரு சிறு புன்னகை /பாராட்டு /ஆறுதல் வார்த்தைகளை விதைத்தால் //விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் //


மிகவும் அருமையான கவிதை

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மகேந்திரன் said...

நன்றியடஹி விதைத்தால்
குன்றாது விளையும்...

அழகான வாக்குக்கு அற்புதமான
விளக்கக் கவிதை.

கீதமஞ்சரி said...

புன்னகையோ, ஆறுதலோ, பாராட்டோ தேவைப்படும் மனங்களை, வாழ்க்கைகளைத் துல்லியமாக எடுத்துக்காட்டி மனம் தொட்ட வரிகள்.

முடங்கிக்கிடக்கும் மனங்களை முடுக்கும் விதமாய், சரிந்து கிடக்கும் வாழ்க்கைகளை தூக்கிநிறுத்தும் விதமாய்,
நலிந்துபோன நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் விதமாய்
அழகாய் மொழிந்த அற்புத வரிகளுக்கு என் நன்றியும் பாராட்டும் ரமணி சார்.

சுதா SJ said...

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்<<<<<<<<<<<<<<<<<<<<

உன்னதமான வரிகள் பாஸ்...
இப்படியே எல்லோரும் இருந்துட்டா
இந்த உலகம் எவ்ளோ அழகா இருக்கும்

Yaathoramani.blogspot.com said...

கீதா

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
// போகிற வழியில் முடிந்தவரையில
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்//

வலைப்பதிவு திரட்டிகளில் புதியவர்களையும் உற்சாகப் படுத்தும் உங்களைக் கண்டவுடனேயே தெரிந்து கொண்டேன் நீங்கள் புதுமையானவர் என்று!

Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

சாதாரணமாக உணராமல் தாண்டிச் செல்லும் இந்த விஷயங்களின் மகத்துவம் இப்படி யாஆவது ஒருமுறை எடுத்துச் சொன்னால்தான் தெரிகிறது/உரைக்கிறது. உயிரேணியை (எப்படி வார்த்தை கோர்த்தீர்கள் அருமை!) நிறைய பயிர் செய்வோம்.

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
அசந்து தூங்கிக் கிடப்பவனை
எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
தாரக மந்திரமாகக் கூட அது இருக்கலாம்


விஸ்வரூபமாய் மனதை ஆக்ரமிக்கும் உன்னத பகிர்வு ஐயா..

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

K.s.s.Rajh said...

////நிலைத்தலுக்கான அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்////

சிறப்பான வரிகள்

CS. Mohan Kumar said...

அருமையா இருக்கு. இத்தகைய பாசிடிவ் விஷயங்களே அனைவருக்கும் தேவை

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Advocate P.R.Jayarajan said...

புன்னகை, ஆறுதல், பாராட்டு - வேண்டும் சார் வாழ்வில்..

அவை மிகப் பிரமாண்டமான மாற்றங்களை, ஏற்றங்களை ஒருவனின் வாழ்வில் ஏற்படுத்தும். ஆனால் அதே நேரத்தில் ஏளனப் புன்னகை, வஞ்சக வார்த்தைகள், முகஸ்துதி இவற்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்..
உற்சாகப் பதிவுக்கு வாழ்த்துகள் !

சசிகுமார் said...

//விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்//

அருமையான வரிகள் சார்... நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை...

M.R said...

நல்ல நம்பிக்கை ,அருமை நண்பரே

த.ம 18

MaduraiGovindaraj said...

சுவாரஸ்யங்கள் தொடரட்டும்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V

மாலதி said...

நிலைத்தலுக்கான அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்// சிறந்த பா இந்த மனிதம் நிலைத்தளுக்கான ஓட்டத்தில் தவறுதலாகவோ அல்லது எப்படியோ வீழ்ந்து போனவனுக்கு வழிகாட்டுதல் அல்லது சிறு நம்பிக்கையூட்டுதல் சிறந்த பண்பு பாராட்டுகள் தொடர்க...

ADHI VENKAT said...

அருமையான வரிகள் சார். இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் எல்லோருக்கும் வர வேண்டும்.
த.ம - 19

Yaathoramani.blogspot.com said...

Advocate P.R.Jayarajan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவிந்தராஜ்,மதுரை. //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

M.R //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

r.v.saravanan said...

நம்பிக்கை அருமை பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஹேமா said...

எப்போதும் நீங்கள் கவிதைக்காக எடுக்கும் கரு என்னை அதிசயிக்க வைக்கிறது !

Yaathoramani.blogspot.com said...

ஹேமா

தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

"உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
அசந்து தூங்கிக் கிடப்பவனை
எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
தாரக மந்திரமாகக் கூட அது இருக்கலாம்"

ஆஹா! ஆக்கத்தின் உச்சமிங்கே ஆலாபனை செய்கிறது...
தர்மங்களில் எல்லாம் சிறந்தது இதுவே என்பேன்...
மிகவும் சுலபமானது, சிக்கனமானது ஆனால் வலியது...
அருமையான கருத்தை மிக எழிலாக கவிதையாய்
சமைத்துள்ளீர்கள்.....

பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே!

Yaathoramani.blogspot.com said...

தமிழ் விரும்பி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

நல்ல (க)விதை விதைத்துள்ளீர்கள். எதை நான் விதைக்கிறோமோ அதை நாம் அறுவடை செய்வோம் என்பதற்கிணங்க நீங்கள் விதைத்த இந்த விதை எல்லோருக்கும் நல்பலன் கொடுக்கும்.

ரமணி சார். உங்கள் கவிதைகள் அருமை. அதில் குற்றம் கண்டுபிடிக்க இன்னொரு நக்கீரன் பிறந்து வந்தாலும் முடியாது

vetha (kovaikkavi) said...

நம்பிக்கையிலும், அங்கீகாரத்திலும் வாழ்வின் அச்சாணி உள்ளது என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை உறுதிப்படுத்தினீர்கள் சகோதரா. வாழ்த்துகள் உண்மையும் அது தான்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மாய உலகம் said...

அட்டகாசமான வரிகள் சகோ! மனதுக்கு மிகவும் பிடித்துபோனது... வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்

அழகு வரிகள்

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kavithai (kovaikkavi)

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சி.பி.செந்தில்குமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சசிகலா said...

உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
அசந்து தூங்கிக் கிடப்பவனை
எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
தாரக மந்திரமாகக் கூட அது இருக்கலாம்
நன்றி

Yaathoramani.blogspot.com said...

sasikala //
தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சாகம்பரி said...

அழகான ஆழமான கருத்து. பலன் எதிர்பார்க்காமல் விதைத்த விதைகள் விருட்சமாவதுபோல் சிந்தனையை தூண்டுகிறது.

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை!

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

நம்பிக்கை மொழிகள் நன்று.

Yaathoramani.blogspot.com said...

guna thamizh //

தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

vimalanperali said...

உதட்டோரம் கசிகின்ற சிறு புன்னகைகீற்றுதான் எப்போதும் நம்ம உசுப்பி விடுகிற நம்பிக்கை விளக்காய்/நல்ல கவிதை ,வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவ வரிகள் அருமை! உங்கள் நம்பிக்கை வீண் போகாது!
பகிர்விற்கு நன்றி Sir!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

தங்கள்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

நிலாமகள் said...

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
என்றேனும் கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்//

உயிரேணியாகும் அபூர்வ‌ தார‌க‌ ம‌ந்திர‌ம்தான்!

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஔவை said...

கவிதை கூறும் கருத்துகள் யாவும் உண்மை உண்மை.

நாம் தவறே செய்தாலும் அதிலும் நன்மை கண்டு பாராட்டித் தவறைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர்கள் நம் மனதுக்கு எத்தனை பிடித்தவர்களாக இருக்கின்றார்கள்?

மிக அருமையான கவிதை.

Yaathoramani.blogspot.com said...

ஔவை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

radhakrishnan said...

''எனக்காக மட்டுமல்ல, என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும்''---அடேயப்பா,
பெரிய சொத்தை வாரிசுகளுக்கு விட்டுச் செல்கிறோம்.
அருமையான கருத்து.மிக்க நன்றி சார்

Yaathoramani.blogspot.com said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அய்யா, விதைத்தது விருட்சமாவது நிச்சியம். விதைப்போம் பலமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

Post a Comment