Saturday, April 21, 2012

பெண் சிசுப் பிறப்பை இன்னும் சிறிது காலம் ஒத்திவைப்போமா ?

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது நண்பனின்
மகள் திருமணத்திற்காக மணமகன் தேடி
அவர்கள் சமுதாயத்தின் சார்பாக நடைபெற்ற
சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்

அந்த நிகழ்ச்சிக்கு திருமணத்திற்கு மணமகள் தேடி
 மண மகன்கள் இரு நூறுக்கும் மேற்பட்டோர்
 பதிவு செய்திருந்தார்கள்
மணமகன் தேடி பெண்கள் இருபது பேர் மட்டுமே
பதிவு செய்திருந்தார்கள்.
இத்தனைக்கும் மணமகள் பதிவுக்கு
மிகக் குறைந்த கட்டணமே விதித்திருந்தார்கள்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேடையில்
இருபது மணமகனகள் விவரம் வாசித்து முடித்து
பின் இரு பெண்கள் குறித்த
விவரங்கள் மட்டும் வாசிப்பதும்
அடுத்து அதேபோல இருபது மணமகன்கள் பெயர்கள்
வாசிப்பதும் பின் இரண்டு மணமகள்கள் விவரம்
வாசிப்பதுமாகத் தொடர்ந்தார்கள்

விவரம் விசாரித்த போது பெண்கள் விவரம் முழுவதும்
படித்துவிட்டால் மண்டபம் உடன் காலியாகிவிடும்
கூட்டம் எல்லாம் பெண் தேடி வந்துள்ள கூட்டமே
என விளக்கினர்

மணமகள் விவரம் வாசிக்கத் துவங்கியதும்
மண மகனின் பெற்றோர் கொண்ட துடிப்பும்
மணமகள் தாய் தந்தையரை நோக்கி பரபரப்பாக
ஒட்டு மொத்தமாய் ஓடியதையும் நினைக்க
இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது

 தொடர்ந்து இது சம்பந்தமாக நான விசாரிக்கையில்
 நண்பனின் சமுதாயத்தில் மட்டும் இல்லை
அனைத்து சமுதாயத்திலும் இப்போது திருமணத்திற்கு
காத்து நிற்கும் பெண்களின் சதவீதம்
மிகக் குறைவாக இருப்பதையும் அதன் காரணமாக
முன்பு நிறைய முதிர் கன்னிகள்
காத்திருத்தலைப் போலஇப்போது நிறைய
முதிர் கண்ணன்கள் அதிகமாகக்
திருமணத்திற்கு காத்திருப்பதையும்
கண் கூடாக அறிந்தேன்

இதன் விளைவாக தற்போது பரவலாக
கீழ்குறித்த மாறுதல்கள்
தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

முன்பு போல பெண் வீட்டார் மாப்பிள்ளை
தேடி வரட்டும் என மப்பாக உட்கார்ந்திருப்பதில்லை
பெண் இருக்கிற விவரம் தெரிந்தால் போதும்
பெண் வீட்டைத் தேடி ஓடத் துவங்கிவிடுகிறார்கள்

 கறாராக வரதட்சனை  சீர் செனத்தி  பேசுவதை குறைக்கத்
துவங்கியுள்ளார்கள்

வெளி நாட்டு பையன் என்றாலே
பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்துவிடுவதால்
பையன் வீட்டார் வெளி நாட்டுச் ஜம்பப் பேச்சை
குறைத்துக் கொண்டு சார்ட் டெர்ம்தான் போய் உள்ளான்
இங்கேயேதான் இருப்பான என உறுதி தருகிறார்கள்

பையன் குறித்து நிச்சயதார்த்தத்திற்குப் பின் கூட
ஏதாவது தவறான தகவல்கள் தெரிந்தால் பெண்களே
துணிந்து திருமணத்தை நிறுத்தத் தயாராகிவிடுகிறார்கள்
பெண்ணுக்கு நிச்சயம் வேறு பையன் கிடைப்பான்
பையன் பாடுதான் கஷ்டம்

இப்படிபல நம்பிக்கையூட்டும் மாறுதல்கள் ஒருபக்கம்
நேர்ந்து கொண்டிருந்தாலும் கூட ......
.
அதிகத் தகுதியும் அதிக சம்பாத்தியமும்
 உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய
நேர்கிற நிலையிலு ம அடுத்த மாதம் முதல்
பெண்ணின் சம்பளம் அவர்கள் விட்டிற்குத்தான்
வரப் போகிறது என்கிற போதிலும்
பெண் வீட்டார்தான் முழுச் செலவையும் ஏற்கவேண்டும்
என்கிற பழைய பத்தாம் பசலித்தனம் மாறவில்லை
செலவினைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை

பெண் வீ ட் டார் திருமணம் நடத்துபவர்கள் எனவும்
பையன் வீ ட்டாருக்கு ம் அதற்கும் சம்பந்தமில்லை 
என்பதுபோலவும் இவர்கள் வெறும்
கௌரவ விருந்தினர்கள் 
போலவுமே நடந்துகொள்கிறார்கள்  
அதனால் கல்யாணத்தில்
 மாப்பிள்ளை வீட்டாரின் பந்தா வழக்கம்போல்
எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன

பையன்கள் மிகத் தெளிவாக திருமணம் முடியும்வரை
அம்மா முந்தானையில் ஒளிந்து கொண்டு
கல்யாணப் பேச்சுவார்த்தைகளில் தனக்கு
சம்பந்தம் இல்லாத விஷயம் போலஇருந்து கொண்டு
வேடிக்கைப் பார்க்கிறார்கள்

இவையெல்லாம் மாறவேணும்  இன்னும் சிறிது காலம்
பெண் சிசுப் பிறப்பை தள்ளிப் போட்டால்
எல்லாம் சரியாகிப் போகுமோ என்கிறஆதங்கம்
என்னுள் வளர்வதை ஏனோ  தவிர்க்க இயலவில்லை

62 comments:

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துக்கள்.

முத்தரசு said...

//பெண் சிசுப் பிறப்பை தள்ளிப் போட்டால்
எல்லாம் சரியாகிப் போகுமோ என்கிறஆதங்கம்//

ஆமா..

பகிர்வுக்கு நன்றி

துளசி கோபால் said...

நடப்பதைப் பார்த்தால் நீங்க சொல்றது சரிதான்!

பால கணேஷ் said...

மணமகள்கள் வரன் தேடுதல் குறைந்திருப்பதும், மணமகன்கள் ‘முதிர் கன்னன்’களாக இன்று அலைவதும் சுடுகின்ற நிஜம்! ஆனால் இந்த நிலையிலும் மனங்கள் மாறத்தான் வேண்டியுள்ளது என்பதை நினைக்கையில் உங்கள் ஆதங்கக் கேள்வியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. பெரிய மண்டபங்களைப் பிடித்து, கன்னாபின்னாவென்று (உணவுக்கு மட்டுமே) செலவு செய்வதையே இன்னும் நிறையப் பேர் குறைத்துக் கொள்ளவில்லையே..! (த.ம.2)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இன்னும் சிறிது காலம் பெண் சிசுப் பிறப்பை தள்ளிப் போட்டால்//

ஐயோ அதுபோல யாரும் தயவுசெய்து நினைக்காதீர்கள்.

ஏற்கனவே திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

இப்போது தான் பிள்ளைவீட்டார் இதை நன்கு உணரத் தொடங்கியுள்ளனர். ஓரளவு மனம் மாறி விட்டனர்.

தாங்கள் கூறியுள்ளது எல்லாம் நல்ல விஷயங்களே!

ஆனால் பெண் சிசுப்பிறப்பை எல்லோரும் வரவேற்போம். அதுவே அனைவருக்கும், நம் சமுதாயத்திற்கும் என்றும் நல்லது.

Yaathoramani.blogspot.com said...

பழனி.கந்தசாமி //
.
நல்ல கருத்துக்கள்.//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி™ ..
//பெண் சிசுப் பிறப்பை தள்ளிப் போட்டால்
எல்லாம் சரியாகிப் போகுமோ என்கிறஆதங்கம்//

பகிர்வுக்கு நன்றி //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
.//

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //

நடப்பதைப் பார்த்தால் நீங்க சொல்றது சரிதான்!/

/தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

மணமகள்கள் வரன் தேடுதல் குறைந்திருப்பதும், மணமகன்கள் ‘முதிர் கன்னன்’களாக இன்று அலைவதும் சுடுகின்ற நிஜம்! ஆனால் இந்த நிலையிலும் மனங்கள் மாறத்தான் வேண்டியுள்ளது என்பதை நினைக்கையில் உங்கள் ஆதங்கக் கேள்வியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தாங்கள் கூறியுள்ளது எல்லாம் நல்ல விஷயங்களே!
ஆனால் பெண் சிசுப்பிறப்பை எல்லோரும் வரவேற்போம். அதுவே அனைவருக்கும், நம் சமுதாயத்திற்கும் என்றும் நல்லது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Anonymous said...

''..ஆனால் பெண் சிசுப்பிறப்பை எல்லோரும் வரவேற்போம். அதுவே அனைவருக்கும், நம் சமுதாயத்திற்கும் என்றும் நல்லது...''
இதையே நானும் ஏற்கிறேன்
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

ஒன்று தெரியுமா ரமணி சார்.எங்கள் பகுதியில் இப்பொழுது பெண்சிசுக்கள் ஜனிப்பது குறைந்து கொண்டே வருகிறது.இப்பொழுதெல்லாம் பெண்சிசுக்களுக்குத்தான் மவுசு அதிகம்.எங்கள் பகுதியில்.

ADHI VENKAT said...

தாங்கள் சொல்வது சரியே....

பெண் கிடைப்பது தான் அரிதாகி விட்டது. பெண் வீட்டாரும் அவ்வளவு சீக்கிரம் பெண்ணுக்கு திருமணம் செய்து விடுவதுமில்லை. எதிர்பார்ப்பும் நிறைய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
த.ம.3

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

''..ஆனால் பெண் சிசுப்பிறப்பை எல்லோரும் வரவேற்போம். அதுவே அனைவருக்கும், நம் சமுதாயத்திற்கும் என்றும் நல்லது...''
இதையே நானும் ஏற்கிறேன் //

தங்கள் வரவுக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

.இப்பொழுதெல்லாம் பெண்சிசுக்களுக்குத்தான் மவுசு அதிகம்.எங்கள் பகுதியில்.//

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி . //

தாங்கள் சொல்வது சரியே....
பெண் கிடைப்பது தான் அரிதாகி விட்டது. பெண் வீட்டாரும் அவ்வளவு சீக்கிரம் பெண்ணுக்கு திருமணம் செய்து விடுவதுமில்லை. எதிர்பார்ப்பும் நிறைய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Unknown said...

எனது ஏரியா கிராமப்புறம் தான்.., ஆனால் எங்கள் ஏரியாவில் ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண் குழந்தைகளுக்குத்தான் மவுசு அதிகம் ..,

ஆனால் சிட்டிகளில் வாழும் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை மோகம் தான் அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன் ..!

சென்னை பித்தன் said...

இப்போதே பெண் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.இன்னும்நீங்கள் செய்வது போல் நடந்தால்?ஆனால் மனமாற்றம் நிச்சயம் வரும்;நம்புவோம்!

Jaleela Kamal said...

காலம் காலமாய் எல்லாரும் விரும்புவது ஆண் குழந்தை தான் ஆனால் இப்ப மேட்ரிமோனியில் வலை வீசி தேடினலும் பெண் கிடைப்பதில்லையாம்

Avargal Unmaigal said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி சிறிது நாளுக்கு முன்னாள் நான் படித்த செய்தி இரண்டாம்தார கல்யாணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் அதிகம் என்று அவர்களைப் போல உள்ளவர்கள் இந்த மாதிரி சுயவரத்திற்கு வ்ருவது அரிதுதான்

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //

சிட்டிகளில் வாழும் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை மோகம் தான் அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன் //

அந்த மோகத்தினால் வந்த பிரச்சனைதான் இது.
.தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

மனமாற்றம் நிச்சயம் வரும்;நம்புவோம்!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Jaleela Kamal //

காலம் காலமாய் எல்லாரும் விரும்புவது ஆண் குழந்தை தான் ஆனால் இப்ப மேட்ரிமோனியில் வலை வீசி தேடினலும் பெண் கிடைப்பதில்லையாம் //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி //

.தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

மாற்றங்கள் நிறைய வேண்டும்.... இப்போதே பெண் குழந்தைகள் இல்லாத பல மாநிலங்களில் நிறைய பிரச்சனைகள். ஹரியானாவில் சில இடங்களில் பெண்கள் இல்லாத காரணத்தினால் எதைச் செய்தும் கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

நியாயமான ஆதங்கம். பார்க்கலாம் என்று இந்த நிலைமை மாறும் என.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்

நியாயமான ஆதங்கம். பார்க்கலாம் என்று இந்த நிலைமை மாறும் என //

..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

துரைடேனியல் said...

முதிர்கண்ணன்கள் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது? பேசாம சாமியாராகிப் போயிடலாமோ?

நிலைமை படுமோசம்தான். உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

ஸ்ரீராம். said...

கட்டாயம் ஆதரிக்க வேண்டிய கருத்து.

S.Venkatachalapathy said...

பெண்கள்:ஆண்கள் விகிதம் என்ன ஆகி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

முழு நேரமும் காதுலுக்கு மரியாதை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் காலமிது.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு என்பது மாறி பெரியோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு என்று கல்யாணப் பத்திரிகைகள் அச்சாகும் காலம் வந்துவிட்டதன் அறிகுறி தான் இந்தப்பதிவு விளக்கும் நிலை என்று தோன்றுகிறது.

இது இப்படி இருக்க, பெண் சிசுப் பிறப்பை தள்ளிப் போட்டால் கதை கந்தலாகிவிடாதோ?

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

நிலைமை படுமோசம்தான். உங்கள் ஆதங்கம் நியாயமானதே.//

..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

கட்டாயம் ஆதரிக்க வேண்டிய கருத்து.//

..தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

VENKAT //

இது இப்படி இருக்க, பெண் சிசுப் பிறப்பை தள்ளிப் போட்டால் கதை கந்தலாகிவிடாதோ? //

கந்தலானாவது
மணமகன் வீட்டாரின் மனோபாவம் மாறாதா என்கிற
ஆதங்கத்தில் எழுதியதே இந்தப் படைப்பு
மிகச் சரியாகப் புரிந்து விரிவான அழகான
பின்னூட்டமிட்டமைக்கு மனமார்ந்த நன்றி

தருமி said...

//.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

எல்லோருக்கும் இது ஒன்று தானா ..?!!

Yaathoramani.blogspot.com said...

தருமி //

முரண்பட்ட அல்லது வித்தியாசமான பின்னூட்டமெனில்
அதற்கென தனியாக விரிவாக பின்னூட்டமிடுவேன்
மற்றபடி அவர்கள் பாராட்டு தெரிவிக்கிற என்னைக் கவர்ந்த்
பகுதியை எடுத்துக் காட்டி எனது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன் மற்றபடி பிறர் படைப்புகளுக்கான எனது
பின்னூட்டங்களை கவனித்தீர்கள் ஆயின்
படைப்பின் ஜீவனை மிகச் சரியாகத் தொட்டுப் பாராட்டி
பின்னூட்டம் இட்டிருப்பேன்.தற்போதைய மின்வெட்டுச் சூழலில்
இதற்கு மேல் ஏதும் முடிவதில்லை
தங்கள் வரவுக்கும் வித்தியாசமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் எண்ணமும், பெற்றுவிட்டால் அவர்களின் எதிர்காலம் பற்றிய பயமுமாக இருந்த நிலை மாறி இன்று பெண்ணைப் பெருமையுடன் பெற்றெடுத்து வளர்க்கும் நிலை இருப்பதை எண்ணிப் பெருமைப்படத்தான் வேண்டும். மேலும் சில சமுதாய மாற்றங்களுக்கு இது வித்திடுமானால் இன்னும் சிறப்பே. நல்லதொரு சமுதாய அலசல். பாராட்டுகள் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

மிகச் சரியான கருத்து.இன்று பல திருமணங்கள்
நிச்சயிக்கப் படாமல் இழுபறியாக இருப்பதன் காரணமே
விகித்தாச்ச்சார வித்தியாசம் மட்டுமல்லாது
பெண்களின் கூடுதல் தகுதியே
ஆண் என்பதை மட்டுமே தகுதி
என நினைத்துக் கொண்டு
திருமணச் சந்தையில் அலைந்தால் இன்று
வெறும் கையுடந்தான் திரும்ப வேண்டும்
தங்கள் வரவுக்கும் அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

வித்தியாசமான அனுபவப் பதிவு! நன்று!

ராமலக்ஷ்மி said...

நிதர்சனத்தைக் கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

கண் கூடாக அறிந்த நிதர்சனமான பகிர்வு..

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

வித்தியாசமான அனுபவப் பதிவு! நன்று!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

நிதர்சனத்தைக் கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள்.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

கண் கூடாக அறிந்த நிதர்சனமான பகிர்வு..//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

கே. பி. ஜனா... said...

//செலவினைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை//
வரவேண்டும்! மிக நல்ல பதிவு!

ராஜி said...

பெண்களை பெற்று அவதிப்பட்டு திருமணம் செய்தவங்களே, தன் மகனுக்கு பெண் போடும்போது யோசிப்பதில்ல. யோசித்தாலே பெண் வம்சம் தழைக்கும்

mohan baroda said...

One more thing is required to be added in your articles Shri Ramani - Nowadays, girls are calling the shots while fixing the marriage and they are very clear in one aspect i.e. my parents i.e. bride's parents will stay with her after marriage as she being the only daughter for them.

G.M Balasubramaniam said...

இம்மாதிரி திருமண சுயம்வரங்கள் குறித்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. பழங்காலத்தில் அரச குமாரியைத் தேடி அரச குமாரர்கள் வர நடக்கும் சுயம்வரங்கள் பற்றி படித்தது மட்டும் தெரிகிறது.

காட்டான் said...

வணக்கம் ஐயா..!
இந்த பதிவு எனக்கு மகிழ்வை தருகிறது. இப்படியே போனால் எதிர்காலத்தில் பெண் சிசு கொலை என்ற ஒன்றே இல்லாது போய்விடும்,!!!

அருணா செல்வம் said...

உண்மையின் வெளிபாடு ஐயா உங்களின் பதிப்பு. நன்றி.

ஹேமா said...

வாசிக்க வாசிக்க எத்தனையோ சொல்ல வருகிறது.நல்லதே நடக்கட்டும்.பெண்ணாய்ப் பிறந்ததால் நான் பெருமையாய் நினைக்கிறேன் வாழ்கிறேன் !

சசிகலா said...

எனக்கு இரண்டும் ஆண் பிள்ளை ஐயா பெண் தேட நானும் ஓடவேண்டும் போல சிந்திக்க வேண்டிய பதிவு .

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

//செலவினைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை//
வரவேண்டும்! மிக நல்ல பதிவு!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

பெண்களை பெற்று அவதிப்பட்டு திருமணம் செய்தவங்களே, தன் மகனுக்கு பெண் போடும்போது யோசிப்பதில்ல//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.//
.

Yaathoramani.blogspot.com said...

mohan baroda
One more thing is required to be added in your articles Shri Ramani - Nowadays, girls are calling the shots while fixing the marriage and they are very clear in one aspect i.e. my parents i.e. bride's parents will stay with her after marriage as she being the only daughter for them.//

நீங்கள் சொல்வது மிகச் சரி
என் உறவுக்குக்குள்ளே கூட அப்படி நடந்தது
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

துளசி கோபால் said...

மகளுக்கு செலவழிச்சதை மகன் மூலம் சம்பாதிக்கலாம் என்றுதான்...... இப்படி:(

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam /

பழங்காலத்தில் அரச குமாரியைத் தேடி அரச குமாரர்கள் வர நடக்கும் சுயம்வரங்கள் பற்றி படித்தது மட்டும் தெரிகிறது /

/நீங்கள் சொல்வது மிகச் சரி
இதே நிலை நீடித்தால் நிச்ச்யம்
அப்படித்தான் நடக்கும்

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டான் //

இப்படியே போனால் எதிர்காலத்தில் பெண் சிசு கொலை என்ற ஒன்றே இல்லாது போய்விடும்,!!!//

நீங்கள் சொல்வது மிகச் சரி
இல்லாத போதுதானே அதன் அருமை தெரியும்
எவ்வளவு உயர்ந்த பொருளாயினும்...

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

உண்மையின் வெளிபாடு ஐயா உங்களின் பதிப்பு. நன்றி.//

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //
.
வாசிக்க வாசிக்க எத்தனையோ சொல்ல வருகிறது //

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //

எனக்கு இரண்டும் ஆண் பிள்ளை ஐயா பெண் தேட நானும் ஓடவேண்டும் போல சிந்திக்க வேண்டிய பதிவு //.

இது ஒரு ஆதங்கப் பதிவு தானே

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //

மகளுக்கு செலவழிச்சதை மகன் மூலம் சம்பாதிக்கலாம் என்றுதான்...... இப்படி:(

நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

Awesome! Its in fact amazing paragraph, I have got much clear idea concerning from this piece of writing.
Also see my web page > Wedding Photographer in Yorkshire

Post a Comment