Thursday, April 26, 2012

சனி பிடித்தல்

சனி பிடித்தல் குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
அது யாரையும் நேரடியாக இஷ்டப்படியெல்லாம்
பிடிக்க முடியாதாம்

பிடிக்கவேண்டிய காலமானலும் கூட
ஆசார அனுஷ்டான பிசகை எதிர்பார்த்து
அப்படிப் பிசகிய இடம் மூலம்தான்
பிடிக்க வேண்டியவரைப் மிகச் சரியாகப்பிடிக்குமாம்

நீங்கள் கூட கேள்விப் பட்டிருக்கலாம் தன்
புறங்காலைமிகச் சரியாக கழுவாத ராஜாவை அந்த
முழங்கால் மூலம் சனிபிடித்த  கதையை

எனக்கும் தங்களைப் போலவே இதிலெல்லாம்
சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்
என் கண் முன்னால் நடந்த ஒரு விஷயம்
இதனை நம்பித் தொலைக்கும்படி செய்துவிட்டது

மதுரையில் எங்கள் வீடு அந்தக் காலனியில்
பஸ் ஸ்டாப்பை ஒட்டி அமைந்திருந்தது
எங்கள் வீட்டின் முன் அமைந்திருந்த வேம்பும்
நான் அடுத்தவர்கள் அமரட்டும் என வாசலில்
போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சும்
அந்தக் காலனியில் வெகு பிரசித்தம்

காலையில் கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச்
செல்லும் பெண்கள் எப்போதும் குறைந்தது
அரை மணிநேரத்திற்குமுன்பாக வருவதும்
எங்கள் வீட்டு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து
ஹோம் ஒர்க் செய்வது அல்லது அரட்டை அடிப்பது
என்பது எல்லோருக்கும் பழகிப் போன ஒன்று

என் மனைவியும் எல்லோரிட்மும்
அனுசரனையாக பேசுவதும்
நான் தேவையில்லாமல் பெரிய மனிதப் போர்வையில்
அவர்களது பேச்சில் கலந்து குழப்பாமலும் இருப்பதும்
அவர்களுக்கும் பிடித்துப் போனதால்
எங்கள் வீட்டு வாசல் எப்போதும் கலகலப்பாய் இருக்கும்

என் மனைவிக்கு கல்லூரி   மற்றும் அலுவலகம்
செல்கிற எல்லோரையும் தனிப்பட்ட முறையில்
மிக நன்றாகத் தெரியும்
யார் யார் எந்த பஸ்ஸுக்குப் போவார்கள்
 யார் யார்இன்று விடுமுறை என்பதெல்லாம் கூட
என் மனைவிக்கு அத்துப் படி
என் மனைவி மூலம் எனக்கும் அத்துப் படி

இப்படித்தான் ஒரு நாள் நான் வீட்டுத் தோட்டத்தில்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க
என் மனைவி வாசலில் கல்லூரிக்குச் செல்லும்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கையில்
பஸ் வருகிற சப்தம் கேட்டது
அவசரம் அவசரமாக எல்லோரும் எழுந்து ஓடினார்கள்
.பி.ஏ,எகனாமிக்ஸ் புவனாவும் எழுந்து வேகமாக ஓடினாள்

அவள் போகிற அவசரத்தில் கையில் இருந்த
கைக் குட்டையை தவறவிட்டுப் போனதை
நான் பார்த்தேன் .சரி எடுத்து வைத்துக் கொடுக்கலாம்
என நினைத்து நான் வாளியை வைத்துவிட்டு
வாசலுக்கு வரும் முன்
காலை எட்டு மணிக்கே பஸ் பிடித்துப் போகும்
பொறியியல் கல்லூரி மாணவன் பிரபாகரன்
அதைக் கையில் எடுத்துவிட்டான்,
அதை எடுத்தவன்எங்களைக் கவனிக்காமல்
சுற்று முற்றும் பார்த்துவிட்டு
சட்டைக்குள் போட்டுக் கொண்டான்.
அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் டென்த் படிக்கிற காலங்க்ளில் இருந்து
இந்த ஸ்டாப்பில்தான் பஸ் ஏறுகிறான்.
அவனுடைய பேச்சு நடவடிக்கை எல்லாமே
 மிக நாகரீகமாக இருக்கும்
ஒரு சாயலில் என் மகன் வயிற்றுப் பேரனின்
சாயலில் இருப்பதால் என மனைவிக்கு அவன் மீது
தனியான அக்கறை.விஷேச நாட்களில் ஏதேனும்
தின்பண்டங்கள் இருந்தாலும் வாங்க மறுப்பான்
என்பதால் நாசூக்காக பிரசாதம் எனச் சொல்லிக்
கொடுக்க முனைவாள்
அப்படிப்பட்டவனின் இந்தச் செய்கை
எனக்கு ஒருமாதிரி வித்தியாசமாகப் பட்டது.
சரி பருவக் கோளாறு என
அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்

மறு நாள் காலையில் எப்போதும் எட்டு மணி
பஸ்ஸுக்கே போகும் பிரபாகரன் இன்றும் தாமதமாக
ஒன்பது மணிக்கு வந்து வாசலில் நின்றிருந்தான்
பெண்கள் ஒவ்வொருவராக வர வர யாரையோ
எதிர்பார்ப்பவன் போல காலனிப் பக்கமே பார்த்தபடி
நின்று கொண்டிருந்தான். தூரத்தில் புவனா
வருவது தெரிந்ததும்மிக வேகமாக அவளை நோக்கி
நடக்க ஆரம்பித்தான்
எனக்குள் சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது

நானும் அவசரம் அவசரமாக மாடிக்குப் போய்
அவர்களைக் கவனிக்கத் துவங்கினேன்.
நேராக புவனாவிடம் சென்றவன்
கொஞ்சம் பணிவாகக் குனிந்து என்னவோ
 சொன்னபடிகைக்குட்டையைக் கொடுத்தான்.
அவளும் அதை மரியாதை நிமித்தம்
சிரித்தபடி வாங்கி நன்றி சொல்வதுபோல் பட்டது
பின் பஸ் ஸ்டாப் வரை பிரபாகரன் என்னவோ
பேசிக் கொண்டேவந்தான்.
 சுய அறிமுகமாக இருக்கலாம்
அவளும் மரியாதை நிமித்தம் தலையாட்டிக்
கொண்டே வருவதுதெரிந்தது.
பின் சிறிது நேரத்தில் பஸ் வரவும் புவனா பஸ்ஸில்
ஏறிக் கொண்டாள்.பிரபாகரனும் அதில் ஏறிக் கொண்டான்
அது பிரபாகரன் போக வேண்டிய பஸ் இல்லை

அப்புறம் பல நாட்கள் பிரபாகரன் அவன் போகவேண்டிய
எட்டரை மணி பஸ்ஸில் போகவே இல்லை
எப்போதும் இந்த ஒன்பது மணி பஸ்ஸுக்குத்தான் வந்தான்
மாலை கூட அவன் கல்லூரி மாணவர்கள் எல்லாம்
நாலு மணி பஸ்ஸில் வந்தால் இவன் தாமதமாக
அந்தக் கல்லூரிப் பெண்கள் வருகிற நேரத்தை
அனுசரித்து வரத் துவங்கினான்.சில சமயம்
சனிக்கிழமைகளில் புவனா மட்டும் கல்லூரி போவாள்
என் மனைவி கேட்டபோது ஸ்பெஷல் கிளாஸ் என்றாள்
சொல்லி வைத்த்தைப் போல பிரபாகரனும் அன்று
அதே பஸ்ஸில் கல்லூரி போய்க்கொண்டிருந்தான்
இப்படியே ஓராண்டு முடிந்தது

கோடை விடுமுறையில் ஒரு நாள் புவனா பெட்டி
படுக்கைககள் சகிதம் பஸ் ஸ்டாப் வந்திருந்தாள்
உடன் அவளுடைய அக்காவும் அவருடைய கணவனும்
நின்றிருந்தார்கள்.

என் மனைவி புவனவைப் பார்த்து
 "லீவுக்கு ஊருக்கா " என்றாள்

புவனா அருகில் வந்து "இல்லை ஆண்டி வீட்டில்
எல்லோரும் மாஸ்டா டிகிரியை சென்னையில் செய்யச்
சொல்கிறார்கள் அப்போதுதான் எக்ஸ்போஸர்
நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
எனக்கு இந்த ஊர் விட்டுப் போக
மனமே இல்லை " என்றாள்
அவள் முகம் வாட்டமாக இருந்தது

அப்புறம் பஸ் வந்ததும் அவர்கள் ஏறிப் போவிட்டார்கள்

அடுத்த ஆண்டு கல்லூரி திறந்த நாளில் இருந்து
எங்கள் பஸ் ஸ்டாப் மீண்டும்
களைகட்ட ஆரம்பித்துவிட்டது
பல புதிய முகங்களுடன் பழைய முகங்களும் சேர
பஸ் ஸ்டாப்பே ஒரு நந்தவனம் போல இருந்தது
எல்லோருடைய முகங்களிலும்
சந்தோஷச் சாயலைப் பார்க்க
எங்களுக்கும் மிக பூரிப்பாய் இருந்தது

அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் மட்டும்
வித்தியாசமாக இருந்தான்
பழைய கல கலப்பில்லை.
அவன் மெலிந்து வாடிப் போய் இருந்ததும்
தாடி மீசையும் அவனைத் தனித்துக் காட்டியது
உண்மையில் எனக்கும் என் மனைவிக்கும்
அவனைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்தது.
எப்படியாவது ஆறுதல் சொல்லி
அவனை பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்
என நினைத்தோம்.ஆனால் மிகச் சாமர்த்தியமாக
மறுபுறம் உள்ள மர நிழலில் நிற்பதைப் போல நின்று
அல்லது மிகச் சரியான நேரத்திற்கு வருவதைப்
போல வந்து பஸ் ஏறி எங்க்களை தவிர்த்தான்

எங்களுக்கு அவன் செயல்கள் மிகுந்த வேதனை அளித்தது
அவன் இவ்வாறு நடந்து கொள்வதன் சரியான காரணத்தைத்
தெரிந்து கொண்டு அவனுடன் பேச முயல்வோம்
 எனஅவன் இல்லாத நேரத்தில்
அவன் நண்பன் கார்த்திக்கிடம் விசாரித்தோம்
அவன் சுருக்கமாக "போன வருடத்தில் கொஞ்சம்
டைவர்ட் ஆகிவிட்டான் ஆண்டி.
யார் சொல்லியும் கேட்கவில்லை
முதல் இரண்டு வருடம் அவன்தான் எங்கள் வகுப்பில்
 முதல் மாணவன்போன வருடம் சரியாக
வகுப்புக்கு வரவில்லை.அரியஸ் விழுந்துவிட்டது
இந்த வருடமும் அப்படித்தான் இருக்கிறான்.
வருடம் முடிப்பான்
கோர்ஸ் முடிப்பது கஷ்டம் "என்றான்

இவன் உறுதியாக காதல் விவகாரத்தில்தான்
திசை தவறி இருப்பான்என நாங்கள் நினைத்துக் கொண்டோம்

.மகா நதி சினிமாவில்கமலும் அவரது குடும்பமும்
 கௌரவமாக மிக சந்தோஷமாக ஊரே மதிக்கும்படி இருக்கும்
ஒரு நாள் தங்கள் முன்னே செல்கின்ற காரைப் பார்த்து
"அது நம்முடைய பழைய காரைப் போல இருக்கிறது
அதை விரட்டிப் பிடிப்பா "என அவர் மகள் சொல்வாள்
கமலும் விரட்டிப் பிடிப்பார்.அவர்கள் மட்டும்
அந்தக் காரைத் தொடர வில்லையெனில் அவர்கள் வாழ்வில்
அத்தனை சீரழவு ஏற்ப்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை
சனி அந்த ஒரு வார்த்தையில்நுழைந்ததைப் போல்
பிரபாகரன் வாழ்க்கையில் அந்த தவறிய கைக்குட்டை
நுழைந்ததோ என எனக்குப் பட்டது

உண்மையில் புவனாவும் அவனைக் காதலித்தாளா
அல்லது இவனாக ஒருதலைப் பட்சமாக காதலை
வளர்த்துக் கொண்டு அவஸ்தைப் படுகிறானா
என குழப்பமாக இருந்தது முத்ல் ஒருமாதம்
 எங்கள் பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிக்
கொண்டிருந்தவன் அப்புறம் வரவேயில்லை

நண்பர்களிடம் விசாரித்த போது "இந்த ஸ்டாப் வரப்
பிடிக்கவில்லை எனச் சொல்லி அடுத்த ஸ்டாப்பில்
ஏறுகிறான் " என்றார்கள்
சில நாட்கள் கழித்து விசாரித்த போது
கல்லூரிக்கு சரியாக வருவதில்லை என்றார்கள்
ஊரில் இல்லை என்றார்கள்.
நாங்களும் அவனை மறந்து போனோம்

கதையும் இங்குமுடிந்து போனது

சினிமாவில் தவிர்க்க முடியாமல் சில
வருடங்களுக்கு பின்பு எனக் காட்டுவதைப் போல..

ஐந்து வருடங்க்களுக்கு பின்பு ஒரு நாள்
ஒரு வெள்ளிக்கிழமை நாங்கள் பூஜை வேலையாக
பிஸியாக இருக்கையில் வாசலில் யாரோ "ஆண்டி "
என அழைப்பது கேட்க வாசலை எட்டிப் பார்த்தேன்

புவனா கைக் குழந்தையுடன் கேட்    அருகே
நின்று கொண்டிருந்தாள்.அவசரமாக கதவைத் திறந்து
உள்ளே வரும்படி அழைத்தேன் வெளியில்
நின்றிருந்தவரைக் காட்டி என் கணவர்
என அறிமுகப் படுத்தினாள்

என மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்.
"வெள்ளிக்கிழமையும் அதுவுமா தம்பதிகள் வீட்டுக்கு
வந்தது ரொம்ப சந்தோஷம் " எனச் சொல்லி
தாம்பூலம் வைத்துக் கொடுத்து உபசரித்தாள்
 பின் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு
குழந்தைக்கு என்ன பேரடி வைத்திருக்கிறாய் "என்றாள்

"பிரபா " என்றாள் புவனா

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்வதைப் பார்த்து என்ன நினைத்தாளோ
"இவங்க அம்மா பேரு பிரபாவதி அதுதான் சுருக்கமாக
பிரபா " என்றாள்


74 comments:

Lakshmi said...

கதை ரொம்ப டச்சிங்கா இருக்கு. வாழ்த்துகள்.

Lakshmi said...

த. ம. 1

சுந்தர்ஜி said...

வழக்கமான உங்கள் பாணியில் சொல்லப்பட்ட அருமையான இடுகை ரமணியண்ணா.

எந்த ஒரு சம்பவத்திலும் நம்மை அறியாமலே நாம் நினைத்துப்பார்த்திராத ஒரு சிறு துரும்பு ஒரு பெரிய பிரச்சனையை உண்டாக்கி அதிலிருந்து மீள்வதற்குள் வாழ்க்கை என்றால் என்ன என்று அனுபவம் போதித்துப் போய்விடும்.

இதையும் எதனால் என்றுணரும் பார்வையும் பலருக்கும் இல்லாமலே காலம் ஓடி மறைந்துவிடும்-பிரபாவின் வாழ்க்கை போல.

சசிகலா said...

ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இது கதையா ? ஆமாம் என்று சொன்னால் மகிழ்வேன் . ஏனெனில் அந்த பையனைப் நினைத்தால் பாவமாக இருக்கிறது . அருமை ஐயா .

சசிகலா said...

த.ம.3

Seeni said...

அய்யா..!

என்னவோ உருத்துதய்யா..!
மனசுல!

ஒரு கசங்கிய கைக்குட்டை-
கசக்கி விட்டதையா!
ஒரு வாழ்கையை!

அருமை என-
சொல்வேன்!
உங்கள் எழுத்தை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கதை சார்.

இப்படித்தான் பலபேரின் காதல் வாழ்க்கை நிறைவேறாமலேயே போகிறது.

குழந்தைக்கு அதே பெயரை வைத்து மனதை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மகா நதி சினிமாவில்கமலும் அவரது குடும்பமும்
கௌரவமாக மிக சந்தோஷமாக ஊரே மதிக்கும்படி இருக்கும்
ஒரு நாள் தங்கள் முன்னே செல்கின்ற காரைப் பார்த்து
"அது நம்முடைய பழைய காரைப் போல இருக்கிறது
அதை விரட்டிப் பிடிப்பா "என அவர் மகள் சொல்வாள்

கமலும் விரட்டிப் பிடிப்பார்.

அவர்கள் மட்டும் அந்தக் காரைத் தொடர வில்லையெனில் அவர்கள் வாழ்வில்
அத்தனை சீரழவு ஏற்ப்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை//

மனதை கலங்க வைத்த திரைப்படத்தை உதாரணமாகக் கூறியுள்ளது மிகச்சிறப்பு.

Anonymous said...

Superb! - Raj

நம்பிக்கைபாண்டியன் said...

இது சிறுகதை மட்டுமல்ல!
நிஜம் ,நிதர்சனம், பலருடைய வாழ்வில் நிகழ்ந்த அனுபவம்!

Madhavan Srinivasagopalan said...

சார்..
கதை அருமையா இருக்கு..
உண்மையா இருந்தாலும் எழுதிய விதம் செமை..
கற்பனை கதையென்றால்.. நல்லா விஷுவலைஸ் பண்ணி எழுதி இருக்கீங்க.. கற்பனா சக்தி அபாரம்..

வரலாற்று சுவடுகள் said...

அற்புதம் .., எதை எதை எந்தெந்த வயதில் செய்ய வேண்டுமோ அதைஅதை அந்தந்த வயதில் செய்வதே சிறப்பாக இருக்கும், அதாவது படிக்கும் வயதில் படிப்பதை ..!

கணேஷ் said...

மனதைத் தொட்டது. சொல்லிய விதம் அபாரம்.

AROUNA SELVAME said...

ரமணி ஐயா வணக்கம்ங்க.
கதை... அது உண்மைதான் என்றாலும் நல்லா எழுதியிருந்தீங்க. நன்றிங்க. (ஆனால் எனக்கு தான் இதயத்தை எதுவோ பிசையிறமாதிரி இருக்குதுங்க.)ஆனாங்க... இப்போ போய் பாருங்க. அந்தப் பிரபாகரனுக்கு நிச்சயமா ரெண்டு பிள்ளையாவது இருக்கும். பிள்ளையின் பெயர் அவன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சவரோட பெயரா இருக்கும். இப்படி உண்மையை எழுதியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

கீதமஞ்சரி said...

ஒரு காதல் அரும்பிய தருணத்திலிருந்து அது கருகிய கணம் வரை மௌன சாட்சியாய் பார்த்து, வருந்தி, தவித்து உளைந்த மனத்தினை மிகவும் அற்புதமாகப் படம்பிடித்த எழுத்து. உண்மை என்றால் இன்னும் மனம் இறுக்கும் யதார்த்தம். எத்தனை வாழ்க்கைகள் இப்படி திசை மாறிப்போய்த் தத்தளிக்கின்றன. அந்தக் கைக்குட்டை மட்டும் அன்று அவனுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால்...? வாழ்க்கையை ரீவைண்டு செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றொரு திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.

மனங்கலங்க வைத்த நிகழ்வு.

கடைசி பத்தியில் வரும் சந்தோஷம் என்னும் வார்த்தையை சரிபார்த்துவிடுங்களேன் ரமணி சார்.

ராஜி said...

நம்பறதா? இல்லா நம்பாம இருக்குறதான்னு புரியாத விஷயத்தை கதைக்கருவ எடுத்துக்கிட்டு இருக்கீங்க. நல்லா இருக்கு சார்

கோவை2தில்லி said...

நீங்கள் சொல்லிச் சென்ற விதம் அருமை. நிறைய பேர் இப்படித்தான் வழி தவறி விடுகிறார்கள். மீள்வது கடினமே.....
த.ம.5

Ramani said...

Lakshmi //

கதை ரொம்ப டச்சிங்கா இருக்கு. வாழ்த்துகள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சுந்தர்ஜி //
.
வழக்கமான உங்கள் பாணியில் சொல்லப்பட்ட அருமையான இடுகை ரமணியண்ணா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சசிகலா //

ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இது கதையா ? ஆமாம் என்று சொன்னால் மகிழ்வேன் . //

கதை மாதிரியெனச் சொன்னால்தான்
சரியான பதிலாக இருக்கும் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //

அருமை என-
சொல்வேன்!
உங்கள் எழுத்தை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

மிகவும் அருமையான கதை சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

.
Superb! - Raj //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

நம்பிக்கைபாண்டியன் //

இது சிறுகதை மட்டுமல்ல!
நிஜம் ,நிதர்சனம், பலருடைய வாழ்வில் நிகழ்ந்த அனுபவம்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Madhavan Srinivasagopalan .
சார்..
கதை அருமையா இருக்கு..
உண்மையா இருந்தாலும் எழுதிய விதம் செமை.. //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கே. பி. ஜனா... said...

கதையும் நடையும் அருமை!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! அந்த காலத்தில் பெரியவர்கள், படிக்கிற வயசிலே இது தேவையா என்று தலையில் அடித்துக் கொள்வார்கள். பாவம் அந்த பையன். படிப்பு போயிற்று!

ஸாதிகா said...

மனதை தொட்டுச்சென்ற அல்ல அல்ல..மனதை விட்டு நீங்காத சிறுகதை. படைத்தமைக்கு மிக்க நன்றி!

Avargal Unmaigal said...

இது உண்மைகதை இல்லையென்றால் அதை எழுதிய உங்களுக்கு பாராட்டும் அதேசமயத்தில் இது உண்மை நிகழ்ச்சியாக இருந்தால் அந்த மாணவனுக்கு எந்து ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்

ஸ்ரீராம். said...

மிக அருமை. நாம் சம்பந்தப் பட்ட நிகழ்வுகளை விட நாம் கவனிக்கும் நிகழ்வுகளில் இருக்கும் சில சுவாரஸ்யங்கள் தனியானவை. அதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.

மனசாட்சி™ said...

பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நிஜம் படித்தேன்

G.M Balasubramaniam said...

நல்ல ஒரு சிறு கதை. வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யம் தொற்றிக் கொண்ட நிதர்சனக் காவியம்....

கபிலன் said...

இன்றைய காலகட்டத்தில், இது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம் என்றாலும், அதை நீங்கள் சொல்லி இருக்கும் விதம், நாங்களே பார்த்தது போல ஒரு உணர்வு.

மேலும் வீட்டு வாசலில் பலரும் உட்கார ஒரு சிமெண்ட் பெஞ்ச் போட்டு இருக்கீங்க...அந்த மேட்டர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

VENKAT said...

இப்பல்லாம் பிரபாகரன்களும் புவனாக்களும் மாறிவருகிறார்கள். குழந்தைக்குப் பெயர் வைக்கும் அளவுக்குப் போவதில்லை. தாடி வளர்த்து அரியர்ஸ் வாங்குவதும் இல்லை. போனாப் போகட்டும் என்று ஒரு ஈமெயில் பாஸ்வோர்டோடு காதலைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டார்கள்.

இருந்தாலும் இளகிய மனமுள்ள உங்கள் வாசகர்கள் நல்லாவே உருகுறாங்க.

( பின்னூட்டம் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கட்டுமே)

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு சிறுகதை.....

கீழே விழுந்த கைக்குட்டை அந்தப் பையனை வாழ்க்கையில் கீழே விழ வைத்துவிட்டது!... :(

கதை சொல்லிப்போகும் உங்களது பாணி அருமை. தொடர்ந்து அவ்வப்போது சில கதைகளையும் உங்கள் பக்கத்தில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

Ramani said...

வரலாற்று சுவடுகள் //

அற்புதம் .., எதை எதை எந்தெந்த வயதில் செய்ய வேண்டுமோ அதைஅதை அந்தந்த வயதில் செய்வதே சிறப்பாக இருக்கும், அதாவது படிக்கும் வயதில் படிப்பதை ..//

மிக அருமையான பின்னூட்டம்
நான் இந்தக் கதையில் சொல்ல விரும்பியதே அதுதான்
கதையின் நடுவில் அவன் போகவேண்டிய பஸ் அதுவல்ல
என்கிற ஒரு வாக்கியம் வரும்
கதையின் மையக் கருத்தே அதுதான்
மிகச் சரியாக கவனித்து பின்னூட்டமிட்டு பாராட்டியமைக்கு
மனமார்ந்த நன்றி


!

Ramani said...

கணேஷ் //

மனதைத் தொட்டது. சொல்லிய விதம் அபாரம் /

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

AROUNA SELVAME //
..
அந்தப் பிரபாகரனுக்கு நிச்சயமா ரெண்டு பிள்ளையாவது இருக்கும். பிள்ளையின் பெயர் அவன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சவரோட பெயரா இருக்கும். இப்படி உண்மையை எழுதியதற்காக என்னை மன்னித்து விடுங்கள் //

நீங்க்ள் சொல்வதுதான் தற்போதைய நிலை.விதி
விதிவிலக்குகள் தானே கதையாக இருக்க முடியும்
தங்கள் வரவுக்கும் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

கீதமஞ்சரி //

வாழ்க்கையை ரீவைண்டு செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றொரு திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது.
மனங்கலங்க வைத்த நிகழ்வு.//

தங்கள் வரவுக்கும் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
தவறினை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி
திருத்திவிட்டேன்

Ramani said...

ராஜி //

நம்பறதா? இல்லா நம்பாம இருக்குறதான்னு புரியாத விஷயத்தை கதைக்கருவ எடுத்துக்கிட்டு இருக்கீங்க. நல்லா இருக்கு சார் //


தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

கோவை2தில்லி //
.
நீங்கள் சொல்லிச் சென்ற விதம் அருமை. நிறைய பேர் இப்படித்தான் வழி தவறி விடுகிறார்கள். மீள்வது கடினமே.//

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
ம்னமார்ந்த நன்றி

Ramani said...

கே. பி. ஜனா... //

கதையும் நடையும் அருமை! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //
.
வணக்கம்! அந்த காலத்தில் பெரியவர்கள், படிக்கிற வயசிலே இது தேவையா என்று தலையில் அடித்துக் கொள்வார்கள். பாவம் அந்த பையன். படிப்பு போயிற்று!//

மிக அருமையான பின்னூட்டம்
நான் இந்தக் கதையில் சொல்ல விரும்பியதே அதுதான்கதையின் நடுவில் அவன் போகவேண்டிய பஸ் அதுவல்லஎன்கிற ஒரு வாக்கியம் வரும்
கதையின் மையக் கருத்தே அதுதான்
மிகச் சரியாக கவனித்து பின்னூட்டமிட்டு பாராட்டியமைக்கு
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸாதிகா //

மனதை தொட்டுச்சென்ற அல்ல அல்ல..மனதை விட்டு நீங்காத சிறுகதை. படைத்தமைக்கு மிக்க நன்றி!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

இது உண்மைகதை இல்லையென்றால் அதை எழுதிய உங்களுக்கு பாராட்டும் அதேசமயத்தில் இது உண்மை நிகழ்ச்சியாக இருந்தால் அந்த மாணவனுக்கு எந்து ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரீராம். //

மிக அருமை. நாம் சம்பந்தப் பட்ட நிகழ்வுகளை விட நாம் கவனிக்கும் நிகழ்வுகளில் இருக்கும் சில சுவாரஸ்யங்கள் தனியானவை. அதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மனசாட்சி™ //
.
பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நிஜம் படித்தேன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

நல்ல ஒரு சிறு கதை. வாழ்த்துக்கள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //

சுவாரஸ்யம் தொற்றிக் கொண்ட நிதர்சனக் காவியம்... //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கபிலன் //

இன்றைய காலகட்டத்தில், இது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம் என்றாலும், அதை நீங்கள் சொல்லி இருக்கும் விதம், நாங்களே பார்த்தது போல ஒரு உணர்வு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

VENKAT //
.
இப்பல்லாம் பிரபாகரன்களும் புவனாக்களும் மாறிவருகிறார்கள். குழந்தைக்குப் பெயர் வைக்கும் அளவுக்குப் போவதில்லை. தாடி வளர்த்து அரியர்ஸ் வாங்குவதும் இல்லை. போனாப் போகட்டும் என்று ஒரு ஈமெயில் பாஸ்வோர்டோடு காதலைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டார்கள் //

. நீங்க்ள் குறிப்பிட்டிருப்பதைப்போலவே
வித்தியாசமான பார்வை.வித்தியாசமான சிந்தனை
வித்தியாசமான பின்னூட்டம்
தங்கள் வரவுக்கும் விரிவான வித்தியாசமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

கதை சொல்லிப்போகும் உங்களது பாணி அருமை. தொடர்ந்து அவ்வப்போது சில கதைகளையும் உங்கள் பக்கத்தில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

T.N.MURALIDHARAN said...

கதை மாதிரியே இல்ல.உண்மை சம்பவம் மாதிரி இருக்கு. உங்கள் நரேஷன் ஸ்டைல் அருமை.

விமலன் said...

கைக்குட்டைகாதல் கடிதம் எழுதிய உறவுகளும்,
சொல்லிச்செல்கிற கதைகளும் ஏராளம் நம் சமூகத்தில்.
இப்படி மனம் புதைத்துக்கொண்ட ஆசைகளுடன் இருக்கிற நிறையப்பேரை நம்நடைமுறை சமூகம் பதிந்து சென்று கொண்டும்,படம் விரித்து காட்டிக்கொண்டுமாய்/

அன்புடன் மலிக்கா said...

அய்யா மிக அருமையான கதை மனதுக்குள் அமர்ந்துகொண்டது சில வரிகளும் வாக்கியங்களும்.. வாழ்த்துகள்..

ஹேமா said...

காதல் கதையைக்கூட பிசகாத உணர்வோடு சொல்லி நெகிழவைத்துவிட்டீர்கள் !

Ganpat said...

தவற விட்ட கைக்குட்டை,அதை ஹீரோ எடுத்துகொடுத்தல்,ஹீரோயின் காதலை நிராகரித்தல்,ஹீரோ தாடி வளர்த்தல்,காணாமல் போதல்,ஹீரோயின் வேறு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு குழந்தைக்கு ஹீரோ பெயர் வைத்தல்,சுபம்.

என்னையே கிள்ளிபார்த்துக்கொண்டேன்;தேதி 29/4/2012 அல்லது 29/4/1980 ஆ என்று..

ஆனால் இதை சனி பிடித்தலுடன் ஒப்பிட்டது அருமை.மகாநதி படம் பார்த்தபோது கூட நான் நீங்கள் சொன்னதைத்தான் நினைத்ததுண்டு.

இவ்வளவு ஏன்;நம்மில் பலருக்கு, ஒரு ஞாயிறு மதியம் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்ட "அந்த முக்கிய" நாளில்,தலையை பக்கவாட்டில் ஆட்டாமல்,மேலுங்கீழுமாக ஆட்டியதால் கூட, சனி பிடித்திருக்கிறது..

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது. சொல்லியவிதம் அருமை.

ரமேஷ் வெங்கடபதி said...

பெண்ணுக்கு 20ம், ஆணுக்கு 25ம் மிக முக்கியமான வயதுகள்! இதைத் தாண்டிவிட்டால் அவசர,அறியாக் காதல்கள் வருவதில்லை! இது நான் அறிந்தவரையில்!

நன்கு விவரிக்கப்பட்ட கதை! வாழ்த்துக்கள்!

Ramani said...

T.N.MURALIDHARAN //

கதை மாதிரியே இல்ல.உண்மை சம்பவம் மாதிரி இருக்கு. உங்கள் நரேஷன் ஸ்டைல் அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

விமலன் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
..

Ramani said...

அன்புடன் மலிக்கா //

அய்யா மிக அருமையான கதை மனதுக்குள் அமர்ந்துகொண்டது சில வரிகளும் வாக்கியங்களும்.. வாழ்த்துகள்../


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //
.
காதல் கதையைக்கூட பிசகாத உணர்வோடு சொல்லி நெகிழவைத்துவிட்டீர்கள் //!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat //

மாட்டு வண்டி ட்ராக்டர் ஆகி உள்ளது மற்றபடி
உழவர் வாழ்வில் மாற்றமில்லாதது போல
காதலிலும் வசதி வாய்ப்புகள் கூடியுள்ளதே தவிர
மன்ச்சாட்சியுள்ளவர்களின் நிலைப்பாடு அப்படியேதான் உள்ளது
தங்க்ள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மாதேவி //

நன்றாக இருக்கின்றது. சொல்லியவிதம் அருமை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //
..
பெண்ணுக்கு 20ம், ஆணுக்கு 25ம் மிக முக்கியமான வயதுகள்! இதைத் தாண்டிவிட்டால் அவசர,அறியாக் காதல்கள் வருவதில்லை! இது நான் அறிந்தவரையில்!//

நான் சொல்ல நினைத்திருப்பதுவும் அதுவே
அந்தப் பெண்ணை அந்த மாய வலையில் இருந்து
காப்பாற்ற உறவினர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியை
பையன் பக்கம் யாரும் எடுக்க இயலாததால் வந்த
வினையே இது.அதனாலேயே
அந்தப் பையன் போகவேண்டிய பஸ் அது இல்லை என்பதை
குறிப்பாக எழுதினேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

புலவர் சா இராமாநுசம் said...

இது, தங்களின்...
அருமையான, முத்தான,முதல் கதையா? அல்லது
நான் படித்த முதல் கதையா? அறியேன்!
நல்ல கவிஞர்! நல்ல கட்டுரையாளர்! என்றபட்டியலோடு நல்ல சிறுகதை மன்னர் இரமணி
என்றே அழைக்க வேண்டும். தரம் உயர்ந்த தனக்கெனத் தனித்தன்மையோடு,இக் கதையை வடித்துள்ளீர்!
சகலகலா வல்லராக திகழும் தாங்கள் இன்னும் பல இதுபோல் தர வேங்கடவன் அருள்
செய்ய வேண்டுகிறேன்
சா இராமாநுசம்

விச்சு said...

சார் நிஜமாகவே படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

Ramani said...

புலவர் சா இராமாநுசம் //.

சகலகலா வல்லராக திகழும் தாங்கள் இன்னும் பல இதுபோல் தர வேங்கடவன் அருள்
செய்ய வேண்டுகிறேன் //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
ஆசிர்வாததிற்கும் ம்னமார்ந்த நன்றி

Ramani said...

விச்சு //

சார் நிஜமாகவே படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சந்திரகௌரி said...

கதை வாசிக்கும் போதே என் மனக்கண்ணில் திரைப் படம் ஓடியது. கைக்குட்டையால் சனி பிடித்தது என்று எண்ணம் வரக் கூடாது . அதற்க்கு முன்னமே பிடித்தது அதனாலேதான் அந்த கைக்குட்டை காரணமானது . ஏதோ அவள் வாழ்கின்றாள். அவனும் ஒருநாள் வாழ்வான் . இதுதான் இயற்கை

சந்திரகௌரி said...
This comment has been removed by the author.
Ramani said...

சந்திரகௌரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment