Wednesday, August 15, 2012

முடிவின் விளிம்பில்

குழப்பம் என்னுள் சூறாவளியாய்
சுழன்றடிக்கிறது
நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?
இருக்கிறேன் என்பது சரியா?
அல்லது
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 
கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாது இருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன
பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன
பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி
முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது
விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்
என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன
எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எறிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்
இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்
தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர
அது கடந்த வழியெல்லாம் சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம் பரவசம்  பரந்து விரிய
நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் சேரவேண்டிய வெட்டவெளிக்கும்
இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி
"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்
கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறதுமீள்பதிவு  

57 comments:

Seeni said...

enna sollanumnu theriyala.........!!!!!!!!!!!!!!!!

கே. பி. ஜனா... said...


காலத்தில் நிற்கும் கவிதை!

Anonymous said...

மரண அவஸ்தை நேரத்தில் உணர்வுகள் எப்படி இருக்கும் ?
இப்படிதானோ ? எப்படி இவ்வாறு எல்லாம் சிந்திக்கிறீர்கள் ?
கனத்த இதயத்துடன் .....நான்.

ஸாதிகா said...

அப்பப்பா....நடுக்கமாக உள்ளது.

சக்தி கல்வி மையம் said...

நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது// மனதை நெகிழ செய்து விட்டீர்கள்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உணர்வுக்கோர்வை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

தங்களின் இந்த மீள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

அன்புடன்
vgk

Yaathoramani.blogspot.com said...

Seeni

enna sollanumnu theriyala...//

தங்கள் முதல் வரவுக்கும் உணர்வு பூர்வமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா...

காலத்தில் நிற்கும் கவிதை!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

மரண அவஸ்தை நேரத்தில் உணர்வுகள் எப்படி இருக்கும் ?இப்படிதானோ ? எப்படி இவ்வாறு எல்லாம் சிந்திக்கிறீர்கள் ?
கனத்த இதயத்துடன் .....நான்.//

சுக போகங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதுதான்
கற்பனையா என்ன ?கொஞ்சம் இருண்ட
நாம் விரும்பாத பகுதிகளையும்
நினைத்துப்பார்க்கலாமே என எழுதியது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

அப்பப்பா....நடுக்கமாக உள்ளது.//

தங்கள் உடன் வரவுக்கும் உணர்வு பூர்வமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருண் //

மனதை நெகிழ செய்து விட்டீர்கள்..//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு

உணர்வுக்கோர்வை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

பலர் நினைக்கவே பயப்படும் விசயத்தை கவிதை மூலம் சொல்லியிருப்பது மனதை நெகிழ வைக்கிறது...

நன்றி சார்... (TM 4)

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

பலர் நினைக்கவே பயப்படும் விசயத்தை கவிதை மூலம் சொல்லியிருப்பது மனதை நெகிழ வைக்கிறது..

சுக போகங்களை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதுதான்
கற்பனையா என்ன ?கொஞ்சம் இருண்ட
நாம் விரும்பாத பகுதிகளையும்
நினைத்துப்பார்க்கலாமே என எழுதியது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Rasan said...

// தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி
மீண்டும் இணைதல்தான் காலமாதலா? //

எல்லாரும் பயப்படும் மரணத்தை இப்படி கவிதையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

Unknown said...ஒர் உயிரின் ஓலத்தை, அவலத்தை இதைவிட
தெளிவாக வேறு யாரும் கூறிவிட இயலாது! அருமை!
உள்ளம் உருகும் உவமைகள் பல ஆங்காங்கே வந்துள்ளன!வாழ்க ! வளர்க! தங்கள் சிந்தனைத் திறன்!

Yaathoramani.blogspot.com said...

Rasan //

எல்லாரும் பயப்படும் மரணத்தை இப்படி கவிதையாக
வெளிப்படுத்தியுள்ளீர்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

உள்ளம் உருகும் உவமைகள் பல ஆங்காங்கே வந்துள்ளன!வாழ்க ! வளர்க! தங்கள் சிந்தனைத் திறன்! //


தங்கள் உடன் வரவுக்கும் உணர்வு பூர்வமான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

குறையொன்றுமில்லை. said...

உண்மைதான் மரண அவஸ்தையை உணர வச்சுட்டிங்க.

CS. Mohan Kumar said...

சார் பயமுறுதிடீங்க

வல்லிசிம்ஹன் said...

மரணத்தை வெல்லும் மார்க்கண்டேயக் கவிதை.
உர்சாகமாக இருக்கிறது. மரணமும் ஒரு அங்கம் தானே.

மரணித்தவன் கூட இவ்வளவு விவரம் சொல்லி இருக்க முடியாது. மனம் நிறைந்த வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

எபி
உற்சாகமாக என்று தயவுசெய்து படிக்கவும்.

Unknown said...

ஜீவாத்மா..மீண்டும் பரமாத்மாவோடு இணையும் தருணம்..
அதை ஜீவனோடு திரைக்கதை போல..
ஒவ்வொரு காட்சியாக வர்ணித்தமை புதுமை..!

அற்புதம்! வாழ்த்துக்கள்!

சசிகலா said...

ஒவ்வொரு நொடியும் மரணம் அடுத்த நொடியின் ஆரம்பம் அவஸ்தைகளும் மகிழ்ச்சியும் கூடவே நடந்து வரும் மனித மரணமும் அப்படித்தான். சிலருக்கு அவஸ்தை சிலருக்கு விடுதலை.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல//
அற்புதமான நடையில் அழகழகான வரிகளுடன்..அருமை சார்

NKS.ஹாஜா மைதீன் said...

அட்டகாசம்.....வேற என்ன சொல்ல?!

NKS.ஹாஜா மைதீன் said...

tm 9

செய்தாலி said...

சார்
மரணம் அப்படி ஒன்றை
நாம் சித்திக்கும் போது பயம் நம்மை
தொத்திக் கொள்ளும்

வரிகளில்
ஆன்மாவின்
நடுக்கம்

சிந்திக்க வேண்டிய விஷயம் சார்

ஆத்மா said...

மிக நீண்ட தொரு மீள் பதிவு......
அழகானது

”தளிர் சுரேஷ்” said...

மனதை நெகிழவைக்கும் மரணம் பற்றிய பகிர்வு! சிறப்பு! நன்றி!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

உண்மைதான் மரண அவஸ்தையை உணர வச்சுட்டிங்க.//

தங்கள் உடன் வரவுக்கும் உணர்வு பூர்வமான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார் //

சார் பயமுறுதிடீங்க//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வல்லிசிம்ஹன் //

மரணித்தவன் கூட இவ்வளவு விவரம் சொல்லி இருக்க முடியாது. மனம் நிறைந்த வாழ்த்துகள் //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...


ரமேஷ் வெங்கடபதி //

ஜீவனோடு திரைக்கதை போல..
ஒவ்வொரு காட்சியாக வர்ணித்தமை புதுமை..!
அற்புதம்! வாழ்த்துக்கள்! //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

தங்கள் உடன் வரவுக்கும் உணர்வு பூர்வமான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

அற்புதமான நடையில் அழகழகான வரிகளுடன்..அருமை சார்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

NKS.ஹாஜா மைதீன் //

அட்டகாசம்.....வேற என்ன சொல்ல?!//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வு பூர்வமான
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அ .கா . செய்தாலி //

வரிகளில்
ஆன்மாவின்
நடுக்கம்
சிந்திக்க வேண்டிய விஷயம் சார் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

மிக நீண்ட தொரு மீள் பதிவு......
அழகானது//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

s suresh //

மனதை நெகிழவைக்கும் மரணம் பற்றிய பகிர்வு! சிறப்பு! நன்றி!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விருதினுக்கும் மனமார்ந்த நன்றி

எம்.ஞானசேகரன் said...

பாராட்ட வார்த்தைகளில்லை நண்பரே!

அருணா செல்வம் said...

காலன் வென்றாலும்
காலத்தை வெல்லும்
கவிதை ஐயா உங்கள் கவிதை.

மரண நேரத்தைக் கண்முன் காட்டியுள்ளீர்கள். நான் கவிதையைப் படிக்கும் பொழுது நான் பெற்ற உள்ளுணர்வை வார்த்தையில் சொல்ல முடியாது.
வணங்குகிறேன் ரமணி ஐயா.

இடி முழக்கம் said...

அருமை ..அருமை அருமை....

ஸ்ரீராம். said...

அவஸ்தைகள் அணு அணுவாய்....

அப்....பா...!

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிப்ரியன் //

பாராட்ட வார்த்தைகளில்லை நண்பரே!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

மரண நேரத்தைக் கண்முன் காட்டியுள்ளீர்கள். நான் கவிதையைப் படிக்கும் பொழுது நான் பெற்ற உள்ளுணர்வை வார்த்தையில் சொல்ல முடியாது.//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வு பூர்வமான
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இடி முழக்கம் //

அருமை ..அருமை அருமை..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம்.

அவஸ்தைகள் அணு அணுவாய்....

அப்....பா...!//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வு பூர்வமான
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

வாசிக்கும் ஒவ்வொருவரையும் மரணத்தின் வாயில் வரை அழைத்துச் சென்று மீள வைத்தது கவிதை. உணர்ந்தவற்றை எழுத்தில் வடிக்க இயலவில்லை. உணராததையும் எழுத்தாக்கிய தங்கள் திறமையைப் பாராட்டுகிறேன் ரமணி சார்.

நிலாமகள் said...

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி
மீண்டும் இணைதல்தான் காலமாதலா?//

க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர்; விண்ட‌வ‌ர் க‌ண்டில‌ர் என்ற‌தைப் பொய்த்துப் போக‌ச் செய்த‌து க‌விதை! துல்லிய‌மான‌ விவ‌ர‌ணை. உயிர‌ட‌ங்கும் நேர‌ம் இப்ப‌டியெல்லாம் தான் இருக்கும் போல்! பிர‌மாத‌மான‌ அவ‌தானிப்பு!!

Yaathoramani.blogspot.com said...

.

கீதமஞ்சரி //

உணர்ந்தவற்றை எழுத்தில் வடிக்க இயலவில்லை. உணராததையும் எழுத்தாக்கிய தங்கள் திறமையைப் பாராட்டுகிறேன் ரமணி சார்.//

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த
உணர்வுப்பூர்வமான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள்

க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர்; விண்ட‌வ‌ர் க‌ண்டில‌ர் என்ற‌தைப் பொய்த்துப் போக‌ச் செய்த‌து க‌விதை! துல்லிய‌மான‌ விவ‌ர‌ணை. உயிர‌ட‌ங்கும் நேர‌ம் இப்ப‌டியெல்லாம் தான் இருக்கும் போல்! பிர‌மாத‌மான‌ அவ‌தானிப்பு!!//


தங்கள் அருமையான பாராட்டைப் படித்து
என் மனம் அதிக மகிழ்ச்சி கொள்கிறது
கள்ளிக்காட்டு இதிகாசத்தில் கவிப்பேரரசு அவர்கள்
பிரசவிப்பை அப்படியே அனைவரும் உணரும்படி
மிக மிக அழகாக வர்ணித்திருப்பார்
மரணத்தை அப்படிச் சொல்லிப் பார்ப்போமே என்கிற
விதத்தில் இதை எழுதிப்பார்த்தேன்
தங்கள் பாராட்டு ஏதோ நான் பெயிலாகவில்லை
என எனக்கு தைரிய மூட்டிப்போகிறது
தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

மரணத்தினையும் நினைத்துப் பார்ப்பது.... அபூர்வம்...

உணர்வுகளைத் தூண்டிய கவிதை....

த.ம. 11

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

மரணத்தினையும் நினைத்துப் பார்ப்பது.... அபூர்வம்...

உணர்வுகளைத் தூண்டிய கவிதை..//


தங்கள் வரவுக்கும் மனம் திறந்த
உணர்வுப்பூர்வமான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment