Saturday, August 18, 2012

" யாதோ"

கவிஞனாக அறிமுகமாயிருந்த 
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக்  கறுக்கத் துவங்கியது 

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம்  ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத்  தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்


மீள்பதிவு 

62 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அதனால் தான் // Labels: யாதோ //வா ?.

மோகன் குமார் said...


யாரோ யாதோ ஆனதோ?

பால கணேஷ் said...

யாதோ ரமணி என்ற பெயருக்கு விளக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் இருந்தது. இன்று விடை கிடைத்தது. அந்த நண்பன் போன்று எனக்கும் உங்களின் எழுத்து ரசனைக்கான முழுத் திருப்தியை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

மீள்பதிவு-படித்ததில்லை சார்...
இந்த பதிவின் மூலம் தான் அறிய முடிந்தது... நன்றி...(TM 5)

கோவை மு சரளா said...

ஒரு கை தட்டல் உங்களுக்கு

இருப்பின் நிலை உணர்ந்து இருக்கிறீர்கள்

அனுபவம் உங்களை செப்பனிட்டு இருக்கிறது

எதை துச்சமாக நினைகிறோமோ அது ஒட்டிக்கொண்டு வருகிறது
எதை உயர்வாக நினைகிறோமோ அது எட்டி செல்ல நினைக்கிறது

ஆகவே சமநிலையில் கொள் மனதை என்று பெரும் தத்துவார்தங்களை சொல்லாமல் சொல்லுகிறது உங்கள் நடை ஞானியாகி கொண்டு இருக்கிறீர்கள்

அருமை படைப்பு

ரிஷபன் said...

நம் கடன் எழுதுவதே.. அதை எந்தப் பெயரில் யார் அழைத்தால் என்ன.. சுவையாக இருக்கும் வரை.

அரசன் சே said...

யாதோ சிறப்பாக இருக்கிறது சார் .. என் வாழ்த்துக்கள்

s suresh said...

சிறப்பான பெயர் விளக்கம்! அருமையான பதிவு! நன்றி!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

தி.தமிழ் இளங்கோ said...

யாதோ பெயர்க் காரணம் தெரியாமல் விழித்ததுண்டு. இன்று தெரிந்து கொண்டேன். லட்சக் கணக்கில் பணம் போட்டு படம் எடுத்தாலும் அதனை உண்மையாக ஆரவாரத்தோடு ரசிப்பவன் தரை டிக்கெட் நண்பன்தான்.

சின்னப்பயல் said...

நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்

Lakshmi said...

ஆமா யாதோ ரொம்ப நல்லாவே இருக்கு.

G.M Balasubramaniam said...


யாதோவுக்கு அளித்த விளக்கம் அருமை. உங்கள் எழுத்து எப்போதும் யாதோவா என்ன. ? சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள்.

கோவி said...

ஒ.. சூப்பரான விளக்கம்.. tha ma 7

Rasan said...

அருமையான விளக்கம். யாதோ அறிந்து கொண்டேன்.

சென்னை பித்தன் said...

யாதோ! எதனுள்ளும் அடங்காத மட்டுமல்ல ,எதனுள்ளும் அடக்க முடியாத சிந்தனைகளும் யாதோவில் தான் பிறக்கும்!
அருமை

சென்னை பித்தன் said...

த.ம.7

AROUNA SELVAME said...

மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரனுமா..?

படைப்பாளிகள் உருவாக்கப் பட்டவர்களா...?

யாரோ, யாதோவொன்றை எழுதினாலும் கருத்து நிறைந்திருந்தால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்திருக்கும்.. உங்களின் கருத்துக்களைப் போல்!
நன்றி ரமணி ஐயா.


இராஜராஜேஸ்வரி said...

அமர்க்களமாய் யாதோ நிறைந்திருக்கிறது...

Murugeswari Rajavel said...

யாதோவுக்கு விளக்கம் கிடைத்தது மீள்பதிவின் மூலம்.
புரியும்படி இருத்தல் கவிதைக்கான இலக்கணமில்லை என சில அறிவுஜீவிகள்!எண்ணுவார்கள் போலும்!

கே. பி. ஜனா... said...

என்ன பெயரிட்டு அழைத்தாலும் குழந்தை! யாதோ! அருமையான தீர்வு!

ஹேமா said...

எழுத்து ஒரு வரம்.அதற்கு என்ன பெயரிட்டாலும் எமக்கென்ன.எழுதிக்கொண்டேயிருப்போம்.யாதோ அருமை !

கோமதி அரசு said...

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா"
என்றான்//

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்//

உங்கள் நண்பர் அருமையாகச் சொல்லி விட்டார். இதைவிட வேறு என்ன வேண்டும்.
யாதோவிற்கு விளக்கம் அருமை.
எல்லோருக்கும் புரிய வேண்டும் நாம் எழுதுவது
அதில் நீங்கள் தேர்ந்தவராய் இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.அன்பு உள்ளம் said...

ஒரு வட்டம் ஒரு கோடு எங்கோ சுளித்து வந்து
மேலும் கிளுமாய் ஆடி முடிய "அ" வந்து விட்டதே!!!..
யாதோ அருமை !...அருமை !......என்று சொல்ல .
(இப்ப நான் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ?.. )

அப்பாதுரை said...

திருவிழாவில் உங்கள் பங்கெடுப்பை தவற விடுகிறேனே என்று.. தாங்கவில்லை.

Ganpat said...

"யாதோ" எழுதுவதில் தவறில்லை.
"ஏதோ"எழுதுவதுதான் தவறு.

Avargal Unmaigal said...

யாதோவுக்கு விளக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. என் வாழ்த்துக்கள் ..

Ramani said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

ஆம் முதலில் அவனி. எஸ் வி. ரமணி
என எழுதிக்கொண்டிருந்தேன்
இப்படி மாறியதும் பெயரையும்
இப்படி மாற்றிக்கொண்டேன்
தங்க்கள் முதல் வரவுக்கும்
பின்னூட்டத்திர்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மோகன் குமார்


யாரோ யாதோ ஆனதோ?//

இதை புதுக்கவிதை எனவோ
வசன கவிதையெனவோ
சொல்லிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை
எனவே இப்படி பெயர் வைத்துக்கொண்டேன்
அதற்கு விளக்கமாக இருக்கட்டுமே என இதை
எழுதினேன்.தங்க்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

பால கணேஷ் //.

எனக்கும் உங்களின் எழுத்து ரசனைக்கான முழுத் திருப்தியை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

திண்டுக்கல் தனபாலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

கோவை மு சரளா //

சமநிலையில் கொள் மனதை என்று பெரும் தத்துவார்தங்களை சொல்லாமல் சொல்லுகிறது உங்கள் நடை ஞானியாகி கொண்டு இருக்கிறீர்கள்
அருமை படைப்பு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ரிஷபன் //

நம் கடன் எழுதுவதே.. அதை எந்தப் பெயரில் யார் அழைத்தால் என்ன.. சுவையாக இருக்கும் வரை.//

சரியான கருத்து தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

அரசன் சே //

யாதோ சிறப்பாக இருக்கிறது சார் .. என் வாழ்த்துக்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

s suresh //

சிறப்பான பெயர் விளக்கம்! அருமையான பதிவு! நன்றி!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

தி.தமிழ் இளங்கோ //

லட்சக் கணக்கில் பணம் போட்டு படம் எடுத்தாலும் அதனை உண்மையாக ஆரவாரத்தோடு ரசிப்பவன் தரை டிக்கெட் நண்பன்தான்.//

சரியான கருத்து
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சின்னப்பயல்//

நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்//

அதனால்தான் தங்கள் படைப்பு
என்னைக் கூடுதலாகவே கவர்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

ஆமா யாதோ ரொம்ப நல்லாவே இருக்கு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam s//


யாதோவுக்கு அளித்த விளக்கம் அருமை. உங்கள் எழுத்து எப்போதும் யாதோவா என்ன. ? சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

கோவி //

ஒ.. சூப்பரான விளக்கம்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Rasan //

அருமையான விளக்கம். யாதோ அறிந்து கொண்டேன்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சென்னை பித்தன் //

யாதோ! எதனுள்ளும் அடங்காத மட்டுமல்ல ,எதனுள்ளும் அடக்க முடியாத சிந்தனைகளும் யாதோவில் தான் பிறக்கும்!
அருமை//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

யாதோ பெயர் விளக்கம் ஏற்கனவே படித்து, மனதில் அப்படியே அதை நிறுத்தி வைத்துள்ளேன். மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சியே. அன்புடன் vgk

Ramani said...

AROUNA SELVAME //

யாரோ, யாதோவொன்றை எழுதினாலும் கருத்து நிறைந்திருந்தால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்திருக்கும்.. உங்களின் கருத்துக்களைப் போல்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //

அமர்க்களமாய் யாதோ நிறைந்திருக்கிறது...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Murugeswari Rajavel //

யாதோவுக்கு விளக்கம் கிடைத்தது மீள்பதிவின் மூலம்.புரியும்படி இருத்தல் கவிதைக்கான இலக்கணமில்லை என சில அறிவுஜீவிகள்!எண்ணுவார்கள் போலும்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அம்பாளடியாள் said...

எதை எப்படி எழுதினாலும் அதில் ஒரு பொருள்
நிட்சயம் மறைந்திருக்கும் அந்த மறை பொருளே
அழகிய சிந்தனையாக வெளிப்படும் விளக்கம்
கொடுக்கும்போது .விளக்கம் என்பது சிலருக்கு தேவை சிலருக்கு தேவை இல்லை .எப்படிப் பார்த்தாலும் யாதோ ஒருவகையில் அருமை!...அருமை !..என்றே சொல்வேன் .தொடர வாழ்த்துக்கள் ஐயா .

மனோ சாமிநாதன் said...

மீள் பதிவு தானென்றாலும் மறுபடியும் ஒரு முறை ரசித்துப்படித்தேன்!!

Ramani said...

கே. பி. ஜனா...

என்ன பெயரிட்டு அழைத்தாலும் குழந்தை! யாதோ! அருமையான தீர்வு!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //

எழுத்து ஒரு வரம்.அதற்கு என்ன பெயரிட்டாலும் எமக்கென்ன.எழுதிக்கொண்டேயிருப்போம்.யாதோ அருமை !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

கோமதி அரசு //

உங்கள் நண்பர் அருமையாகச் சொல்லி விட்டார். இதைவிட வேறு என்ன வேண்டும்.
யாதோவிற்கு விளக்கம் அருமை.
எல்லோருக்கும் புரிய வேண்டும் நாம் எழுதுவது
அதில் நீங்கள் தேர்ந்தவராய் இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

அன்பு உள்ளம்

யாதோ அருமை !...அருமை !......என்று சொல்ல .
(இப்ப நான் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம் ?.. )

மிகச் சரியாக யூகிக்க முடியவில்லை
அனேகமாக உங்கள் பெயரின் முதல் எழுத்து "ம "
சரியா?

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

அப்பாதுரை //

திருவிழாவில் உங்கள் பங்கெடுப்பை தவற விடுகிறேனே என்று.. தாங்கவில்லை.//

நாங்கள் சொல்ல நினைப்பதை
எப்படியோ யூகித்து நீங்கள்
முதலில் சொல்லிவிட்டீர்களே !
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Ganpat s//

"யாதோ" எழுதுவதில் தவறில்லை.
"ஏதோ"எழுதுவதுதான் தவறு.//

உன் பதிவை விட
உன் பதிவுக்கான கண்பத் அவர்களின்
பின்னூட்டம் சிறப்பாக இருக்கும் என
என் நண்பன் சொல்வான்
இம்முறையும் அப்படித்தான் உள்ளது
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Ramani said...

Avargal Unmaigal //

யாதோவுக்கு விளக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. என் வாழ்த்துக்கள் ..

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன் //

யாதோ பெயர் விளக்கம் ஏற்கனவே படித்து, மனதில் அப்படியே அதை நிறுத்தி வைத்துள்ளேன். மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சியே.//

நேரமின்மையால் தாங்கள்
பின்னமிடுகிற சில பதிவுகளுள் என் பதிவும்
ஒன்றாக இருப்பதை நினைத்து
நான் பெருமிதம் கொள்கிறேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

.அம்பாளடியாள் //

எப்படிப் பார்த்தாலும் யாதோ ஒருவகையில் அருமை!...அருமை !..என்றே சொல்வேன் .தொடர வாழ்த்துக்கள் ஐயா .//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மனோ சாமிநாதன் //

மீள் பதிவு தானென்றாலும் மறுபடியும் ஒரு முறை ரசித்துப்படித்தேன்!!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அம்பாளடியாள் said...

உள்ளத்தில் அன்பு இருந்தால்தான் இப்படி எல்லாம் சிந்திக்க முடியும் .என் எந்த ஆக்கத்திற்கும் அதிகம் ஊக்கம் கொடுப்பவர் தாங்கள்தானே (முதல் எழுத்து எப்போதும் "அ" தான் "ம "என்று சொல்ல முடியுமா :) .......வாழ்த்துங்கள் ஐயா முதலாளாக )

Ramani said...

அம்பாளடியாள்

தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அ எனபதுதான் முதலெழுத்து
அதை இணைத்துச் சொன்னவிதம்
மனம் கவர்ந்தது
ம்.. ம் ..
சரியாகச் சொல்லியிருக்கலாம்
(ம்+அ என்றால் கூட " ம "தானே )

வெங்கட் நாகராஜ் said...

பெயர் தான் யாதோ என்றாலும் சிறப்பான பகிர்வுகள்....

மீள் பதிவு என்றாலும் மீண்டும் ரசித்த பதிவு....

த.ம. 12

Ramani said...

வெங்கட் நாகராஜ் //.

பெயர் தான் யாதோ என்றாலும் சிறப்பான பகிர்வுகள்....மீள் பதிவு என்றாலும் மீண்டும் ரசித்த பதிவு...//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

யுவராணி தமிழரசன் said...

"யாதோ" என்பதற்கு அர்த்தம் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் இருந்தது! இன்று அறிய முடிந்தது சார். தங்களது பதிவுகள் அனைத்தும் ஒரு அறிய வேண்டிய விஷயமாகவும் உணர வேண்டியவையாகவுமே இருக்கிறது சார்! அது எவ்வகையிலும் சேராவிடினும் சேர வேண்டிய இடத்தில் சேர்பவையாகவே இருக்கிறது! தங்களது ஒவ்வொரு பதிவுகளுக்காகவும் எனது நன்றிகள் சார்!

Post a Comment