உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது
குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு
வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்
நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்
நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்
உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்
மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்
எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்
வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்
44 comments:
உண்மை நேர்மைக்கு மதிப்பில்லை
\\மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்//
நல்லதொரு விழிப்புணர்வூட்டும் கவிதை !
தொடர வாழ்த்துகள்...
ஒவ்வொரு பத்தியும் , சீர்கெட்டுக் கிடக்கும் இன்றைய சமுதாயத்திற்குத் தரப் பட்ட சம்மட்டி அடி! கவிதை நன்று இரமணி!
மிக அற்புதமான உபமான உபமேயங்கள்..
மனதும் அறிவும் சேர்ந்து ஐம்புலன்களை அடக்கி ஆளாமல், ஐம்புலன்கள், மனதையும் அறிவையும் தங்கள் விருப்பத்திற்கு ஆட்டி வைக்கும், அவல நிலையை இதை விட தெளிவாக சொல்ல முடியாது..
எண்ணிக்கையின் அடிப்படையில்
நரிகளும்,நாய்களும் காட்டை ஆள,
செய்வதறியாது திகைக்கின்றன
சிங்கங்களும்,யானைகளும்..
நல்லா சொன்னீங்க.... பொதுநலம்
நல்லதோர் கவிதை சீர்கெட்ட சமுதாயத்தை விவரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
//புலம்பி அலையுது பொது நலம்
//- சமுதாய உண்மையை அப்படியே படம் பிடித்து கவிதையாக்கி விட்டீர்கள். அருமை!
மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்
எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்
//என்ன அழகாக சொல்லி இருக்கீங்க...!!!!!!!!
நாட்டின் இன்றைய நிலையை நயமாக உரைத்துள்ளீர்கள் ...
இயல்பான கவிதை முதலும் முடிவும் ரொம்பவே சரி ...அருமை..
வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரி வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்//
இதை எல்லாம் பார்த்து பொது நலத்தால் புலம்பத்தான் முடியும் வேறு என்ன செய்ய!
கவிதை நன்றாக இருக்கிறது.
நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்
உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்
சிறப்பான பகிர்வு !!..மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்
நிதர்ச்னத்தை படம் பிடித்துக் காட்சிப்படுத்தும்
அரிய வரிகள்.. பாராட்டுக்கள்..
திண்மையான ஓர் கருத்தை எடுத்துக்கொண்டு செம்மையாக ஓர் கவிதை படைத்துள்ளீர்கள்.
மிக அருமையான புனைவு!
(//திமிரி வளருது சுய நலம்// திமிறி?)
அறிவு குழம்பித்தவிப்பதையும் நியாங்கள் அழிவதையும் தர்மம் தடுமாறுவதையும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
நிதர்சன உண்மைகளை அழகாய்ச் சொல்லிச் செல்கிறது கவிதை. பாராட்டுக்கள்.
நன்றாகச் சொன்னீர்கள் எங்கு போய் முடியப்போகின்றதோ?
சிறப்பான கவிதை! நன்றி!
எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்....!
உடலைக்கெடுத்து நாவுக்கு அடிமையாகி உணவு சாப்புடுகிற பழக்கத்தை கைக்கொண்ட நாம் மற்ற எல்லா பழக்கத்திலும் அப்படியே இருக்கிறோம் என்பதே உண்மை.
''..திமிரோடு வளருது சுய நலம்
மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்..''
இதனால் தான் உலகே கெட்டுவிட்டது..
நன்றாகக் கூறினீர்கள்.
வேதா. இலங்காதிலகம்.
சிறப்பான பகிர்வு.
சாட்டையும் கைப்பழக்கம்.
எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்
வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்
தயங்காமல் சுழலும் சாட்டை வரிகள் !
வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்
அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.
வழக்கமான ரமணி சார் இதில் மேலும் மிளிர்கிறார்.
"நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது
குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு"
அருமையான அறிவுரையாகக் கவிதை
அருமையான கவிதை இரமணி ஐயா.
த.ம 8
எளிமையான வார்த்தைகள், ஆழமான கருத்துக்கள், ரசித்தேன், தொடர்கிறேன், நன்றி.
கவியாழி கண்ணதாசன் //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சேக்கனா M. நிஜாம் //
நல்லதொரு விழிப்புணர்வூட்டும் கவிதை !//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
ஒவ்வொரு பத்தியும் , சீர்கெட்டுக் கிடக்கும் இன்றைய சமுதாயத்திற்குத் தரப் பட்ட சம்மட்டி அடி! கவிதை நன்று இரமணி!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ganpat //
எண்ணிக்கையின் அடிப்படையில்
நரிகளும்,நாய்களும் காட்டை ஆள,
செய்வதறியாது திகைக்கின்றன
சிங்கங்களும்,யானைகளும்..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முத்தரசு //.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புரட்சித் தமிழன் //
.
நல்லதோர் கவிதை சீர்கெட்ட சமுதாயத்தை விவரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
உஷா அன்பரசு //
//புலம்பி அலையுது பொது நலம்
//- சமுதாய உண்மையை அப்படியே படம் பிடித்து கவிதையாக்கி விட்டீர்கள். அருமை!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
/என்ன அழகாக சொல்லி இருக்கீங்க..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
koodal bala //
நாட்டின் இன்றைய நிலையை நயமாக உரைத்துள்ளீர்கள்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//...
ezhil //
இயல்பான கவிதை முதலும் முடிவும் ரொம்பவே சரி ...அருமை..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //
இதை எல்லாம் பார்த்து பொது நலத்தால் புலம்பத்தான் முடியும் வேறு என்ன செய்ய!
கவிதை நன்றாக இருக்கிறது./
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
சிறப்பான பகிர்வு !!..மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு /
/
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
G.M Balasubramaniam //
நிதர்ச்னத்தை படம் பிடித்துக் காட்சிப்படுத்தும்
அரிய வரிகள்.. பாராட்டுக்கள்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
சிறப்பான கவிதை! நன்றி!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment