Monday, December 17, 2012

உலகம் அழிவது நல்லதுதானோ ?


எதிர்படுபவர்கள் எல்லோருடைய பேச்சிலும்
உலக அழிவு குறித்த பேச்சு இருந்தது

அவர்கள் உரையாடலில்
பார்த்து முடித்த திரைப்படம் போல
படித்து முடித்த புத்தகம் போல
இதுவரை வாழ்ந்த வாழ்வு குறித்த
அங்கலாய்ப்பே  அதிகம் இருந்தது
அதில் சந்தோதோஷமானது அதிகம் இல்லை

இருபத்தொன்றுக்குள் செய்து முடிக்கவேண்டிய
நீண்ட பட்டியல் இருந்தது
அதில் உடலால் அனுபவிக்க வேண்டியதே
அதிகம் இருந்தது
சுய நலமே கூடுதலாக இருந்தது
பொது நலமென்பது அறவே இல்லை

அவர்களது உடல் மொழியில்
பரபரப்பு இருந்த அளவு
எதிர்பார்ப்பு தெரிந்த அளவு
மயன் காலண்டரின் மீது கொண்ட
நம்பிக்கை தெரிந்த அளவு
பயமோ வருத்தமோ துளியும் இல்லை

காரணமறிய முயன்ற போது
எல்லோரும்  மிகத் தெளிவாக இருந்தார்கள்
"நாம் மட்டும் அழிந்து உலகம் இருந்தால்
கவலை கொள்ள வேண்டும
நாம் மட்டும் இருந்து உலகம் அழிந்தாலும்
கவலை கொள்ள வேண்டும்
எல்லோரும் அழிந்து போகையில்
கவலைப் பட என்ன இருக்கிறது
ஒரு வகையில் நாம் இல்லாத உலகில்
யாரும் இல்லை எதுவும் இல்லை என்பது கூட
ஒரு வகையில் சந்தோஷம்தான் " என்றார்கள்

மனதையும் உலகையும்
இனியும் பயன்படுத்த இயலாதபடி
அதிகம் முறைகேடாய்ப் பயன்படுத்தி
கழிவாக்கிவிட்டாமோ என பயமாய் இருக்கிறது
மயன் காலண்டர்படி  உலகம் அழிந்தால் கூட
நல்லதுதானோ எனப் படுகிறது எனக்கு

50 comments:

அப்பாதுரை said...

கொஞ்சம் யோசித்தால் சுயநலம் இயல்பே என்று தோன்றுகிறது. நாளைக்கு அழிவென்றால் இன்றைக்கு என்னைப் பற்றித்தான் கவலை.

முத்தரசு said...

பொதுநலம் கிலோ எம்புட்டு? எங்கே கிடைக்கும்?
அப்படிங்கிற சுய உலகம் இதுல மாயன்.... ஹாஹ்ஹா ஹாஹ்ஹா எல்லாம் மாயை.

குறையொன்றுமில்லை. said...

மனதையும் உலகையும்
இனியும் பயன்படுத்த இயலாதபடி
அதிகம் முறைகேடாய்ப் பயன்படுத்தி
கழிவாக்கிவிட்டாமோ என பயமாய் இருக்கிறது
மயன் காலண்டர்படி உலகம் அழிந்தால் கூட
நல்லதுதானோ எனப் படுகிறது எனக்கு


ஆமா அப்படித்தா தோனுது

சாந்தி மாரியப்பன் said...

//"நாம் மட்டும் அழிந்து உலகம் இருந்தால்
கவலை கொள்ள வேண்டும
நாம் மட்டும் இருந்து உலகம் அழிந்தாலும்
கவலை கொள்ள வேண்டும்
எல்லோரும் அழிந்து போகையில்
கவலைப் பட என்ன இருக்கிறது//

யதார்த்தம்..

ezhil said...

நாம் மட்டும் அழிந்து உலகம் இருந்தால்
கவலை கொள்ள வேண்டும
நாம் மட்டும் இருந்து உலகம் அழிந்தாலும்
கவலை கொள்ள வேண்டும்
எல்லோரும் அழிந்து போகையில்
கவலைப் பட என்ன இருக்கிறது
ஒரு வகையில் நாம் இல்லாத உலகில்
யாரும் இல்லை எதுவும் இல்லை என்பது கூட
ஒரு வகையில் சந்தோஷம்தான் -இந்தப் பகுதியை என் முக நூலில் பகிர்ந்துள்ளேன்.

சசிகலா said...

எது நடந்தாலும் ஏற்போம்.

Anonymous said...

நடப்பது நடக்கட்டும்!
நடக்க வேண்டுமென்று இருந்தால் அதைத் தடுக்கவும் முடியாது.
வேதா. இலங்காதிலகம்.

உஷா அன்பரசு said...

போனால் எல்லாரும்தானே என்று அழிவில் கூட சுய நலம்தான் மேலோங்கி இருக்கிறது. அதற்குள் என்னென்ன சாப்பிட்டு விட வேண்டும், என்னென்னெ உடைகள் உடுத்திவிட வேண்டும் என்று சிலர் என்னிடம் பட்டியல் போட்டு சொல்லி கொண்டிருந்த போது உரக்க சிரிப்புதான் வந்தது. அருமையான கவிதை! தங்கள் கவிதை மொத்தமும் தொகுப்பு நூலாக வெளியீட்டு நூலகத்தில் வைத்தால் நிறைய பேருக்கு பயனாக இருக்கும்.

அருணா செல்வம் said...

நடக்கும் என்பார் நடக்காது
நடக்கா தென்பார் நடந்துவிடும்- கவியரசு

வித்தியாசமான சிந்தனையுடைய கருத்து இரமணி ஐயா.

அருணா செல்வம் said...

த.ம 3

கே. பி. ஜனா... said...

//மனதையும் உலகையும்
இனியும் பயன்படுத்த இயலாதபடி
அதிகம் முறைகேடாய்ப் பயன்படுத்தி
கழிவாக்கிவிட்டாமோ என பயமாய் இருக்கிறது//
ரசித்தேன் மிக, இந்த வரிகளை!

Unknown said...


உங்கள் கருத்தே என் கருத்தும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"நாம் மட்டும் அழிந்து உலகம் இருந்தால்
கவலை கொள்ள வேண்டும

நாம் மட்டும் இருந்து உலகம் அழிந்தாலும்
கவலை கொள்ள வேண்டும்

எல்லோரும் அழிந்து போகையில்
கவலைப் பட என்ன இருக்கிறது

ஒரு வகையில் நாம் இல்லாத உலகில்
யாரும் இல்லை எதுவும் இல்லை என்பது கூட
ஒரு வகையில் சந்தோஷம்தான் " //

மிக அருமையான மனித எண்ணங்களை அழகாகச் செதுக்கிக் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள், சார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உலகின் ஒரு பகுதி அழிந்து போகும் என்றால்தான் அதுநம் பகுதியாக இருக்குமோ என்ற அச்சம் இருக்கும். எல்லாம் அழிவது நிச்சயம் என்றால் மனிதனுக்கு பயம் இல்லை.
மனித மனத்தை படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 5

semmalai akash said...

சொல்லவேண்டியதை கவிதை வடிவில் அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. அருமையான பதிவு.

காரஞ்சன் சிந்தனைகள் said...

நன்றாகச் சொல்லி விட்டீர்கள்! உண்மைதான்! தங்களின் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் ஐயா!

சக்தி கல்வி மையம் said...

நியாயமான ஆதங்கம்..

அம்பாளடியாள் said...

உலகம் அழியாது என்று சொல்லி இப்போது மனதை வேதனைப் பட வைக்கிறார்கள் ஐயா :) இனி இருந்துதான் என்ன செய்யப் போகிறோம்
பாழாய்ப் போன இவ்வுலகில் ?....

கோமதி அரசு said...

"நாம் மட்டும் அழிந்து உலகம் இருந்தால்
கவலை கொள்ள வேண்டும
நாம் மட்டும் இருந்து உலகம் அழிந்தாலும்
கவலை கொள்ள வேண்டும்//
கவிதை நல்லா இருக்கிறது.

நான் பலவருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் படித்த கதை நினைவுக்கு வருது உலகம் அழிந்து ஒரு பையன் மட்டும் இருப்பான் அவன் ஆட்களை தேடி தேடி அலைவான், கதைப் பேர் உயிரை தேடி என நினைக்கிறேன். உலகம் அழிந்து நாம் மட்டும் இருந்தால் இந்த கதை மாதிரி கஷ்டம்..

G.M Balasubramaniam said...


வெகுஜன எண்ணங்கள் எதார்த்தத்தின் பிரதிபலிப்புதானே. தவறோ என்ற எண்ணம்
/மனதையும் உலகையும்
இனியும் பயன்படுத்த இயலாதபடி
அதிகம் முறைகேடாய்ப் பயன்படுத்தி
கழிவாக்கிவிட்டாமோ என பயமாய் இருக்கிறது/
என்பதில் தோன்றுவதுபோல் இருக்கிறதே.

மாதேவி said...

இன்னும் இருந்து கழிவுகளைக்கொட்டி பாழாக்கப் போகின்றோம்.

Nagendra Bharathi said...

சிந்திக்க வைத்துள்ளீர்கள் ; நல்ல பதிவு

RajalakshmiParamasivam said...

அருமையான கவிதை.
எல்லோரும் நினைப்பதை அப்படியே படம் படித்துள்ளீர்கள்.
நானும் காத்திருக்கிறேன் மயன் காலெண்டர் உண்மையாகி விடாதா என்ற ஏக்கத்தில்.
அழகான சிந்திக்க வைக்கும் பதிவு.

ராஜி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

மிகச் சரி வேறு வழி ?
ஆயினும் அடுத்தவனும் அழிய
சந்தோஷப்படுகிற மனோபாவம்
அனைவரிடத்தும் வளர்ந்து வருவதைக் குறிக்க
இதை எழுதினேன்.தங்க்கள் முதல் வரவுக்கும்
சிந்திக்கத் தூண்டிய பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முத்தரசு //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi /

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ezhil //

அருமையான கவிதை! தங்கள் கவிதை மொத்தமும் தொகுப்பு நூலாக வெளியீட்டு நூலகத்தில் வைத்தால் நிறைய பேருக்கு பயனாக இருக்கும்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala ///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

வித்தியாசமான சிந்தனையுடைய கருத்து //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //


ரசித்தேன் மிக, இந்த வரிகளை!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //.

உங்கள் கருத்தே என் கருத்தும்!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

மிக அருமையான மனித எண்ணங்களை அழகாகச் செதுக்கிக் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள், சார்./

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

மனித மனத்தை படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

semmalai akash //

சொல்லவேண்டியதை கவிதை வடிவில் அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. அருமையான பதிவு.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s.//

நன்றாகச் சொல்லி விட்டீர்கள்! உண்மைதான்! தங்களின் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

மிக்க நன்றி வலைச்சர ஆசிரியர் பணிக்கிடையிலும்
பதிவு வந்து பார்வையிட்டு பின்னூட்டமிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருண் ''


நியாயமான ஆதங்கம்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

என்னைப் போன்ற தங்கள் கவிதையின்
ரசிகர்களை மறந்து விட்டீர்களா
அதற்காகவாவது உலகம் அழியாது இருக்கட்டும்

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

நான் பலவருடங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் படித்த கதை நினைவுக்கு வருது உலகம் அழிந்து ஒரு பையன் மட்டும் இருப்பான் அவன் ஆட்களை தேடி தேடி அலைவான், கதைப் பேர் உயிரை தேடி என நினைக்கிறேன். உலகம் அழிந்து நாம் மட்டும் இருந்தால் இந்த கதை மாதிரி கஷ்டம்..//

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அருமையானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

வெகுஜன எண்ணங்கள் எதார்த்தத்தின் பிரதிபலிப்புதானே. தவறோ என்ற எண்ணம்//

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அருமையானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

Nagendra Bharathi //

சிந்திக்க வைத்துள்ளீர்கள் ; நல்ல பதிவு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

அருமையான கவிதை.
எல்லோரும் நினைப்பதை அப்படியே படம் படித்துள்ளீர்கள்.
அழகான சிந்திக்க வைக்கும் பதிவு//

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அருமையானபின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

இன்னும் சில பல நல்லவர்கள் மிச்சம் இருக்கிறார்கள் சார், அவர்களுக்காகவாவது....இந்த கவிதைகாவாவது இந்த உலகம் இயங்கட்டும்.

Yaathoramani.blogspot.com said...

Suresh Kumar //

/தங்கள்உடன்வரவுக்கும்அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

ஒரு வகையில் நாம் இல்லாத உலகில்
யாரும் இல்லை எதுவும் இல்லை என்பது கூட
ஒரு வகையில் சந்தோஷம்தான் //

யதார்த்தம்
காலம் கடந்து விட்டாலும் (21.12.12 முடிந்து விட்டாலும்) ’மாயன் காலண்டராவது, மச்சான் காலண்டராவது’ 17.12.12. அன்று நான் எழுதியதை படித்துப் பாருங்களேன்.

’http://manammanamviisum.blogspot.in/2012/12/blog-post_9099.html

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

JAYANTHI RAMANI //

ஒரு வகையில் நாம் இல்லாத உலகில்
யாரும் இல்லை எதுவும் இல்லை என்பது கூட
ஒரு வகையில் சந்தோஷம்தான் //

தங்கள் அருமையான கவிதையை
படித்தேன் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
/தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்

Post a Comment