Friday, December 28, 2012

காலமும் கவிஞனும்

கலைஞனுக்கேயுரிய மென்மையையும்
கொலைகாரனுக்கேயுரிய கோடூரத்தையும்
ஒன்றாய்க் கொண்டவனை
நீங்கள் பார்ப்பதுண்டா ?
கவிஞன் தினமும் பார்க்கிறான்

ஒரு கையில் தூரிகையையும்
மறுகையில் கூர்வாளையும்
ஏந்தித் திரிபவனை
நீங்கள் சந்திப்பதுண்டா ?
கவிஞன் தினமும் சந்திக்கிறான்

ரசித்து ரசித்து
ஒரு படைப்பை உருவாக்கி மெருகேற்றி
பின் அதை சிதைத்து அழித்து ரசிப்பவனை
நீங்கள் உணர்ந்ததுண்டா ?
கவிஞன் தினமும் உணர்கிறான்

பருவ உருவ மாறுதல்மட்டுமின்றி
அத்தனை மாறுதலுக்கும் காரணமாயிருந்தும்
பிடிபடாது திரிபவனை
நீங்கள் புரிய முயன்றதுண்டா ?
கவிஞன் புரிந்து கொண்டிருக்கிறான்

காலனுக்கு ஏதுவாக
காரிய மாற்றிக் கொண்டிருந்தும்
பழியேற்கா பாதகனை
நீங்கள் அறிய முயன்றதுண்டா ?
கவிஞன் தெளிவாய் அறிந்திருக்கிறான்

அதனால்தானே
எதனையும் எளிதாய் மென்று விழுங்கி
ஏப்பமிட்டு ரசிக்கும் அவன்
"காலமான"தாக்கிச் சிரிக்கும் அவன்
கவிஞனிடம் மட்டும் காலிடறி விழுகிறான்

அதனால்தானே
காலத்திற்கே காலனாகும் கவிஞன் மட்டுமே
காலம் கடந்தவனாகிப் போகிறான்
காலத்தை வென்றவனாகிப்  போகிறான்
காவியமாகியும் போகிறான்

59 comments:

Anonymous said...

''..ஒரு கையில் தூரிகையையும்
மறுகையில் கூர்வாளையும்
ஏந்தித் திரிபவனை
நீங்கள் சந்திப்பதுண்டா ..!''
Yes.
''...கலைஞனுக்கேயுரிய மென்மையையும்
கொலைகாரனுக்கேயுரிய கோடூரத்தையும்
ஒன்றாய்க் கொண்டவனை
நீங்கள் பார்ப்பதுண்டா ?..''
yes...
ரசித்து ரசித்து உருவாக்கி மெருகேற்றி
பின் அதை சிதைத்து அழித்து ரசிப்பவனை
நீங்கள் உணர்ந்ததுண்டா ?
yes இதை நானும் செய்வதுண்டு.
நல்ல கேள்வி பதில் ..
இதை நானும் செய்வதுண்டு.
நல்ல கேள்வி பதில் ..
Vetha. Elangathilakam.

ஆத்மா said...

உண்மை சார்
இல்லாவிட்டால் அவனைக் கவிஞனாக்கியது எது ?

ஆத்மா said...

த.ம 2

Unknown said...

காலத்தை வெல்லும் கவிஞர்கள் பிறக்கும்... காலமும் அரிதாகி வருகிறது !

கவிஞனுன்..வறுமையும் கூடித் திரிவதால் ..நிகழ்காலத்தைத் தேடி அலைவதில் அவன் காலம் கடந்துவிடுகிறது..!

படிக்கும் பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில் ..காலத்தைக் கடக்கும் நாயகர்கள் வருவது இனி அரிதாகுமோ?

சிந்திக்கத் தூண்டும் எழுத்துக்கள்..நன்று..வாழ்த்துக்கள்!

பால கணேஷ் said...

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கவிஞன் பாடியதும் இந்தக் காரணங்களால் தானோ? அருமை ஐயா!

ஸ்ரீராம். said...

படிக்கும்போது எனக்குத் தோன்றியதை டைப் செய்வதற்குள் பாலகணேஷ் முந்திக்கொண்டு விட்டார்! :)) அதே அதே.

Seeni said...

azhakaa sollideeka...

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
என் எழுத்துக்கு மதிப்பு சேர்த்த அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஆத்மா //

உண்மை சார்
இல்லாவிட்டால் அவனைக் கவிஞனாக்கியது எது /

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

படிக்கும் பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில் ..காலத்தைக் கடக்கும் நாயகர்கள் வருவது இனி அரிதாகுமோ?

சிந்திக்கத் தூண்டும் எழுத்துக்கள்..நன்று..வாழ்த்துக்கள்!

மிகச் சரியான கருத்து
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கவிஞன் பாடியதும் இந்தக் காரணங்களால் தானோ? அருமை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். s/

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

Seeni //

azhakaa sollideeka...//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

கவியாழி said...

கவிஞன் மட்டுமே
காலம் கடந்தவனாகிப் போகிறான்
காலத்தை வென்றவனாகிப் போகிறான்
காவியமாகியும் போகிறான்// உண்மை உங்களின் கூற்றை ஆமோதிக்கிறேன்

அனைவருக்கும் அன்பு  said...

கவிஞனுக்கே உரிய கவித்துவம்
உணர்ந்தவர்களுக்கு புரியும்
புரிந்தவர்கள் உணர்வார்கள்

குறையொன்றுமில்லை. said...

அதனால்தானே
காலத்திற்கே காலனாகும் கவிஞன் மட்டுமே
காலம் கடந்தவனாகிப் போகிறான்
காலத்தை வென்றவனாகிப் போகிறான்
காவியமாகியும் போகிறான்

அருமை. இதற்குமேல் எப்படி சொல்வது?

ராஜி said...

கலைஞனுக்கேயுரிய மென்மையையும்
கொலைகாரனுக்கேயுரிய கோடூரத்தையும்
ஒன்றாய்க் கொண்டவனை
நீங்கள் பார்ப்பதுண்டா ?
கவிஞன் தினமும் பார்க்கிறான்
>>
முரண்பட்ட விசயங்களை சந்திப்பதால்தான் அவன் கவிஞனாகிறானோ?!

G.M Balasubramaniam said...


கவிஞன் என்று நினைத்துக் கொள்பவர்கள் எல்லாம் காலத்தை வென்றவர்களா.?கவிஞன் கவிதாயினி என்பதற்கெல்லாம் என்ன இலக்கணம் ரமணி சார்.?நீங்கள் பட்டியலிட்ட குணங்கள் கொண்டவரா.மிக சாதாரணமானவர்கள் கூட இந்த குணங்கள் கொண்டிருந்தால் கவிஞர்களாவாரா.? நான் தெளிவாயில்லாததால் இக்கேள்விகள்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

உலகிலேயே யாரும் சரிவர புரிந்து கொள்ளாமல்
புரிந்து கொள்ளமுடியாமல் ஆளுக்கொரு வியாக்கியானம்
கொடுப்பது காலம் குறித்தும் காலன் குறித்துமே
அதனையே தெளிவாகப் புரிந்து கொண்டவன்
நிச்சயம் காலத்தை வெல்லும் கவிதையைக் கொடுத்துவிடுவான்
உலகின் பார்வையில்அவன் கவிஞனாக இல்லாத போதும்
இந்தப் பதிவின் மையப்புள்ளிகாலம்குறித்ததே
காலத்தை சொல்வதற்காக கவிஞனை
ஊறுகாயாய் பயன்படுத்துயுள்ளேன்


தங்கள் வரவுக்கும் அருமையான சிந்திக்கவைக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


அன்புடன் மலிக்கா said...

கலைஞனுக்கேயுரிய மென்மையையும்
கொலைகாரனுக்கேயுரிய கோடூரத்தையும்
ஒன்றாய்க் கொண்டவனை
நீங்கள் பார்ப்பதுண்டா ?//

இதோ பார்த்துவிட்டோமே அய்யா.மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

இது அத்தனையையும் வெளிக்காட்டமுடியா எழுததெரியா கவிஞர்களும் ஏராளம் இருகிறார்கள் ஏக்கத்துடன்,எதுகைமோனை வார்த்தைகளுடன்.

Unknown said...

//அதனால்தானே
காலத்திற்கே காலனாகும் கவிஞன் மட்டுமே
காலம் கடந்தவனாகிப் போகிறான்
காலத்தை வென்றவனாகிப் போகிறான்
காவியமாகியும் போகிறான்//

உண்மைதான் இரமணி! காலத்தை வென்று வாழ்பவன் கவிஞன் மட்டுமே1

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞனைப் பற்றி கவிஞராகிய நீங்கள் சொன்ன விதம் அருமை! எனக்கு பழைய இலக்கிய செய்தி ஞாபகம் வந்தது. கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் அம்பிகாவதி – அமராவதி காதல் காரணமாக விரோதம். எனவே கம்பர் மீது உள்ள கோபம் காரணமாக புலவர்களையே சோழமன்னன் திட்டி பாடியதாக ஒரு பாடல் உண்டு.

போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடியர் ஆவரே!
- தனிப்பாடல்

RajalakshmiParamasivam said...

//கலைஞனுக்கேயுரிய மென்மையையும்
கொலைகாரனுக்கேயுரிய கோடூரத்தையும்
ஒன்றாய்க் கொண்டவனை
நீங்கள் பார்ப்பதுண்டா ?//

எத்தனை அருமையான வரிகள்.இந்த வரிகளை விட்டு என் கண்கள் நகர மறுக்கின்றன.

ராஜி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை மு சரளா //
.
கவிஞனுக்கே உரிய கவித்துவம்
உணர்ந்தவர்களுக்கு புரியும்
புரிந்தவர்கள் உணர்வார்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

அருமை. இதற்குமேல் எப்படி சொல்வது?//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

ராஜி //

முரண்பட்ட விசயங்களை சந்திப்பதால்தான் அவன் கவிஞனாகிறானோ?!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அன்புடன் மலிக்கா //

இதோ பார்த்துவிட்டோமே அய்யா.மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

இது அத்தனையையும் வெளிக்காட்டமுடியா எழுததெரியா கவிஞர்களும் ஏராளம் இருகிறார்கள் ஏக்கத்துடன்,எதுகைமோனை வார்த்தைகளுடன்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

உண்மைதான் இரமணி! காலத்தை வென்று வாழ்பவன் கவிஞன் மட்டுமே1//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு s//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

கவிஞனைப் பற்றி கவிஞராகிய நீங்கள் சொன்ன விதம் அருமை//

பண்டை இலக்கியங்களில் தாங்கள் கொண்டுள்ள
பர்ந்து விரிந்த் ஆழ்ந்த பரிச்சியம் பிரமிக்கவைக்கிறது
தங்கள் பின்னூட்டம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு
புதிய விசயத்தைக கற்றுக் கொள்கிறேன்.மிக்க நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam //

எத்தனை அருமையான வரிகள்.இந்த வரிகளை விட்டு என் கண்கள் நகர மறுக்கின்றன.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

பட்டிகாட்டான் Jey said...

கவிஞர்கள்போலவே, காலத்தை கடந்து நிற்கும் கருத்துக்களை பதித்தவர்களும், காலத்தை வென்றிருப்பதகவே படுகிறது.

சசிகலா said...

உண்மை தான் ஐயா காலத்தை வென்று வாழ்பவன் கவிஞன் மட்டுமே. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

//நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை//
என கண்ணதாசன் படைத்த வரிகள் நினைவுக்கு வருகின்றன அய்யா. நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

காலத்திற்கே காலனாகும் கவிஞன் மட்டுமே
காலம் கடந்தவனாகிப் போகிறான்
காலத்தை வென்றவனாகிப் போகிறான்
காவியமாகியும் போகிறான்//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

காலத்தை வென்றவர்கள் தான் கவிஞர்கள்.
அருமையான கவிதை.

”தளிர் சுரேஷ்” said...

அழகான சிந்தனை!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அழியாக் கவிகள் படைக்கும் கவிஞர்களை மகுடத்தில் ஏற்றி விட்டீர்கள் தங்கள் அருமையான கவிதையால்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.14

Yaathoramani.blogspot.com said...

பட்டிகாட்டான் //.
கவிஞர்கள்போலவே, காலத்தை கடந்து நிற்கும் கருத்துக்களை பதித்தவர்களும், காலத்தை வென்றிருப்பதகவே படுகி

நீங்கள் சொல்வதும் சரி
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

உண்மை தான் ஐயா காலத்தை வென்று வாழ்பவன் கவிஞன் மட்டுமே. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //
.
//நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை//
என கண்ணதாசன் படைத்த வரிகள் நினைவுக்கு வருகின்றன அய்யா. நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


கோமதி அரசு //

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
காலத்தை வென்றவர்கள் தான் கவிஞர்கள்.
அருமையான கவிதை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

அழகான சிந்தனை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

அழியாக் கவிகள் படைக்கும் கவிஞர்களை மகுடத்தில் ஏற்றி விட்டீர்கள் தங்கள் அருமையான கவிதையால்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Jana said...

அற்புதமான வரிகள். இந்தக்கவிகளின் ஒவ்வொரு வரிகளிலும் எனக்கு ஒவ்வொருவரை நினைவு கொள்ள முடிந்தது.
தங்கள் அறிமுகம் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி.
இணைந்திருப்போம்

Yaathoramani.blogspot.com said...

Jana //

அற்புதமான வரிகள். இந்தக்கவிகளின் ஒவ்வொரு வரிகளிலும் எனக்கு ஒவ்வொருவரை நினைவு கொள்ள முடிந்தது.
தங்கள் அறிமுகம் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி.
இணைந்திருப்போம்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

காலத்திற்கே காலனாகும் கவிஞன் ... சிந்திக்கவைக்கிறான்

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

காலத்திற்கே காலனாகும் கவிஞன் ... சிந்திக்கவைக்கிறான்
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

கவிதை அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

குட்டன்ஜி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...

குட்டன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


பூந்தளிர் said...

இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

பூந்தளிர்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அருணா செல்வம் said...


அதனால்தானே
எதனையும் எளிதாய் மென்று விழுங்கி
ஏப்பமிட்டு ரசிக்கும் அவன்
"காலமான"தாக்கிச் சிரிக்கும் அவன்
கவிஞனிடம் மட்டும் காலிடறி விழுகிறான்

எவ்வளவு ஆழ்ந்த வரிகள்....!!!

கவிஞன்! கவிதை! வரலாற்றின்
கணக்கைக் காட்டும் கண்ணாடி!
கவிஞன்! கடவுள்! படைக்கின்ற
கடமை ஆற்றும் உழைப்பாளி!
கவிஞன்! உலகம்! ஒன்றாகக்
கலந்த சேர்க்கை! நல்லதமிழ்க்
கவிஞர் சீரைக் கணக்கிட்டால்
கரைசேர் அலைபோல் தொடர்ந்திடுமே!!

வாழ்த்தி வணங்குகிறேன் இரமணி ஐயா.
த.ம.15

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

எவ்வளவு ஆழ்ந்த வரிகள்....!!!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Post a Comment