Tuesday, December 4, 2012

நிஜமாகும் கட்டுக்கதை

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

63 comments:

அம்பாளடியாள் said...

எங்கிருக்கும் உடலையும் எங்கிருக்கும் உயிரும்
சவமாகாது இயக்குதெலென்பது
அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது
இப்போதெல்லாம் அரக்கனின் கதையும் கூட
சாத்தியமென்றேப் படுகிறது

உண்மைதான் ஐயா !............

கரந்தை ஜெயக்குமார் said...

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இவரின் வரிகளை இன்றைய கணினியுகம் சாத்தியமாக்கியுள்ளது,எனவேதான்
முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
தமிழென்றும் உறவால்
நற்சிந்தனையாலும் செயலாலும்
ஒன்று பட்டுள்ளோம்,
தொடரட்டும் இந்த உறவு


தி.தமிழ் இளங்கோ said...

// சவமான என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது //

உணர்ச்சி பூர்வமாக உரத்த சிந்தனையுடன் எழுதப்படும் உங்கள் படைப்பு சவம் அல்ல. என்னைப் போன்றவர்களுக்கு உங்களைப் போல தொடர்ந்து எழுத எண்ணம் தோற்றுவிக்கிறது.

Avargal Unmaigal said...

//சவமான என் படைப்பினுக்கு ///

உங்கள் படைப்புகள் இதுவரை மோசமானதாக இல்லை அதனால் இந்த வரிகளை சற்று மாற்றி அமைத்து எழுதினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். நான் அதிகபிரசங்கி தனமாக இதை சொல்வதாக இருந்தால் மன்னிக்கவும்

மகேந்திரன் said...

உண்மை உண்மை உண்மையே ஐயா,
என்னைப்போல் வெளிநாட்டில் இருப்பவர்கள்
நிதர்சனமாக உணரும் செய்தி இது....

விட்டு வந்த நாள் முதல்
உயிரற்று உணர்வுடன்
மட்டுமே வாழ்வு நடத்தும்
அரக்க வாழ்க்கை தான்....

அனைவருக்கும் அன்பு  said...

எழுத வேண்டும் என்ற ஆர்வமே உயிர்புடையதுதான் தோழரே .......நீங்கள் சொன்ன கூற்றை நானும் உணர்கிறேன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அன்பு ஓன்று மட்டுமே நம்மை உயிர்ப்புள்ளதாக இருக்க செய்யும் என்பதை உணர்துகிறது உங்கள் எழுத்து வாழ்த்துக்கள்

Unknown said...

//சவமான என் படைப்பினுக்கு// என்பதை எதிர்க்கிறேன்...உங்களது படைப்புக்களை நாங்கள் உயிரூட்டவில்லை, உங்களது படைப்புகள்தான் எங்களுக்கு உயிரூட்டுகிறது சார் ! நன்றி....தொடர வாழ்த்துக்கள் !

உஷா அன்பரசு said...

அன்பை, பண்பை, வளர்ச்சியை,சமுதாயத்தை.. இப்படி நற்சிந்தனைகளையே எண்ணி படைக்கும் போது அது எப்படி சவமாகும்? உங்கள் சிந்தனை விதையாய் விழுந்து மரமாய் அல்லவா எழுகிறது..!

semmalai akash said...

ஆஹா ! ஆஹா ! என்ன அற்புதமான வரிகள் ஒவ்வொன்றும் ரசிக்கவைக்கிறது. சூப்பர்.தம

கதம்ப உணர்வுகள் said...

நிஜம் என்றுச்சொல்லி அதை கட்டுக்கதை என்று சொல்லும்போது அழகிய முரண் தலைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது.... சின்னக்குழந்தைகளிடம் போய் கதைச்சொல்றேன் வாங்கடா செல்லங்களான்னு கூப்பிட்டு பாருங்க... வராது... ஏன்னா இந்த காலம் அப்படி... கதைச்சொல்லிகளை விட குழந்தைகள் அதிகம் விரும்புவது கம்ப்யூட்டர்ல வேகமாக ரேஸ் அடிக்கும் கார் ரேஸும் பைக் ரேஸும் பென் டென் களும் இன்னும் இன்னும் இன்னும்...... ஆனால் இதில் இருந்து பெறப்போகும் நல்லவை எதுனா ஒன்று சொல்லமுடியுமா?? புத்தி தான் வளருமா??? ஹுஹும்.... இல்லை என்று தான் சொல்லமுடியும்... குழந்தைகளுக்கு டைம் பாஸ்... பெற்றோருக்கு தன்னை பிடுங்காமல் தன்னை சந்தேகம் கேட்காமல் கொடுத்ததை வெச்சுக்கிட்டு குழந்தைகள் விளையாடுகிறதே என்ற நிம்மதியுடம் சீரியல் பார்ப்பதில் ஆழ்ந்துவிடுவார்கள்.. இல்லையெனில் தான் ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்துக்கொண்டு சாட் செய்துக்கொண்டோ அல்லது ஆன்லைன் வழி புத்தகங்கள் பார்த்துக்கொண்டோ.....

மஞ்சு மஞ்சு.... நிறுத்தும்மா... என்னது இது நான் எழுதின கவிதை வரிகளுக்கும் நீ சொல்லிட்டு போற கதைக்கும் துளி கூட சம்மந்தமே இல்லாம.....

துளி பொறுத்துக்கோங்க ரமணி சார்... சாதம் வெந்து அதை வடிக்கும்வரை அரிசி தானே சொல்வோம்.. இன்னும் கொஞ்சம் முடிச்சிடறேன் ரமணி சார்....

அந்த காலத்தில் பாட்டி தாத்தா அம்மா அப்பா நிறைய கதைகள் சொல்வாங்க குழந்தைகளுக்கு... அதில் கருத்து இருக்கும்... ஒழுக்கத்தை வலியுறுத்தும்.... நேர்மையாய் இருக்கச்சொல்லி தூண்டும்.. உதவும் மனப்பான்மயை வளர்க்கும்.... அதெல்லாம் இன்றைய சீரியலில் பார்க்க தான் முடிகிறதா ? இல்லை குழந்தைகள் விளையாடும் கம்ப்யூட்டர் கேம்ஸில் தான் கிடைக்கிறதா?

குழந்தைகளிடம் அந்த காலத்தில் விடுகதை சொல்லி பதில் சொல்ல சொல்வாங்க. குழந்தைகள் புத்தியை உபயோகப்படுத்தும்... இப்ப அதுக்கு வாய்ப்பே இல்லாம மழுங்கடிக்கும் அளவுக்கு எல்லாமே கைல வெச்சே கொடுத்துருவாங்க...

அப்பெல்லாம் ஒரு எஞ்ஜினியரிங், டாக்டர் படிக்கனும்னா கூட அதுக்கு வேல்யூ இருந்தது. இப்ப அப்படி இல்ல தடுக்கி விழும் இடத்தில் எல்லாம் டாக்டருக்கும் எஞ்ஜினியருக்கும் படிக்க கொஞ்சம் பணம் செலவு செய்தால் போதும்.. இப்படி தான் குழந்தைகளின் மூளை மழுங்கப்பட்டுக்கொண்டு இருப்பது....

நான் இதுவரை கதைச்சொல்லியைப்பற்றி சொன்னேன்...

கதம்ப உணர்வுகள் said...

இனி கவிதைச்சொல்லியாக உங்க எழுத்துகளைப்பற்றி சொல்கிறேன்....

இங்க ரமணி சார் உங்க கவிதைகளை தினம் தினம் வாசிக்கும்போது எனக்கு அதில் ஒரு கருத்து கிடைக்கும்... எப்படி இருக்கவேண்டும் எப்படி இருக்கக்கூடாது என்று....

தாய்மையின் அன்பைச்சொல்லி செல்லும்போதே தாயின் கண்டிப்பை சொல்லும் கவிதை வரிகள்.....

தந்தையின் கண்டிப்பைச்சொல்லி செல்லும்போதே தந்தையின் கருத்துகள் பொறுப்புடன் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லிச்செல்லும் கவிதை வரிகள்.....

ஆசானின் அறிவுரையைப்பற்றி சொல்லி செல்லும்போதே கல்வியுடன் நல் ஒழுக்கங்களையும் தோழமையுடன் சொல்லும் கவிதை வரிகள்....

உறவுகள் பற்றி, நட்பைப்பற்றி... ஆஹ் இங்க கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிறேன் ரமணி சார்.... முக நக நட்பு பற்றிய உங்க வரிகள் அன்னைக்கு நான் படித்துவிட்டு கருத்து எழுதும்போதே என்னால் அடக்கமுடியாத அளவு அழுகை அதிகமானது... என்னை இதுவரை துரோகித்த பாசாங்கு காண்பித்த ஏமாற்றிய முதுகில் குத்திய குழி பறித்த அத்தனை உறவுகள், நட்புகள் எல்லாவற்றையும் நினைக்க வைத்தது.... மனம் பட்ட பாட்டை சொல்ல இயலவில்லை... அதே சமயம்.... நட்பா சகோதரமா உறவா எதுவுமே இல்லாது தாய்மையின் அன்புடன் ஏற்றுக்கொண்ட அருமையான அற்புதமான அன்பு மனதையும் நினைக்க வைத்தது.... அத்தனையும் அரைமணி இடைவெளியில் நடந்துமுடிந்துவிட்ட விஷயம்... நெஞ்சுவலி வந்து துடித்து மருத்துவமனையில் போராட்டமாய் என்னை கிடக்கவைத்த வைர வரிகள் ரமணி சார்..... இத்தனை அற்புதமாக எளிமையான வரிகளில் சொல்லும் உங்கள் கவிதைகளின் ரசிகை நான்....

கவிதை என்றால் அதை என்னாலும் கிறுக்கி விட முடியும்.. ஆனால் அதில் ஒரு நல்ல கருத்தை வைத்து அதை நீங்கள் எங்களுக்கு பகிர்ந்துவிடும்போது அதில் இருக்கும் சமூக நலனும் எல்லோரின் மேல் கொண்ட அக்கறையும் தாய்மையான அன்பையும் நன்றியுடன் நினைவு கூற வைக்கிறது ரமணி சார் உங்களை.....

சிந்திக்கவைத்து.... சட்டென மனதை செயலிழக்கவைத்து.... ஸ்தம்பிக்க வைக்கும் அருமையான கவிதை வரிகளுக்கான சொந்தக்காரர் நீங்கள்....

நிஜமான கட்டுக்கதை என்றால் ஒப்புக்கொள்ளமாட்டேன் ..

அந்த காலத்தில் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி கிளியிடம் தன் உயிரை வைத்திருக்கும் அரக்கனைப்பற்றி சொல்லும்போதே பிள்ளைகளின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுமே.... அவரவர் சிந்தனைக்கேற்றபடி கற்பனைகளை சஞ்சாரிக்க வைக்குமே... இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்ற க்ரியேட்டிவிட்டியை நமக்குள் தோற்றுவிக்கும் இதுபோன்ற கதைகளை கேட்க தான் எத்தனை சுவாரஸ்யம்.....

உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு இருப்பதால் உயிரை எடுத்து வேறெங்கோ வைப்பது எல்லாம் கண்டிப்பாக கதைக்கு மட்டுமே சாத்தியம்... உங்களோடு நானும் சேர்ந்துக்கொள்கிறேன் ரமணிசார்.... உண்மை உண்மை....

மூன்றாம் பத்தி நிதர்சனம் அருமையாய் உரைத்துச்செல்கிறது.... இதுவரை பார்த்தே இராத வெறும் தொலைபேசியில் பேசி எழுத்துகளில் மட்டுமே குண இயல்பை அறிந்து அதில் கட்டுண்டு நல்லதைச்சொல்லி செல்லும் இப்படி ஒரு அற்புதமான எழுத்து எத்தனை பேருக்கு சாத்தியம்..... நல்லதை சொல்லி சொல்லி தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட அன்னை தெரசாவை நாம் யாரும் நேரில் பார்த்திருக்க சாத்தியமில்லை... ஆனால் அவரின் நல்லவைகளை செய்திகளின் மூலமாகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ பார்த்தோ கேட்டோ படித்தோ அறிந்து வியக்கிறோம்.. வியப்பதோடு நின்றுவிடாமல் அவர் செய்த சேவையை பாராட்டுகிறோம்... பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் நாமும் அப்படி முயன்றால் என்ன என்று சிந்திக்கிறோம்.. சிந்திப்பதுடன் நின்றுவிடாமல் செயல்படுத்துவதில் முனைகிறோம்... இத்தனையும் எப்படி எப்படி சாத்தியமானது??? ஒருவரின் செயல்கள் நல்லவையாக இருக்கும்போது அவர் யார், எங்கிருந்துவந்தார் அவர் குலம் என்ன மதம் என்ன ஆத்திகமா நாத்திகமா என்று எதைப்பற்றியும் கவலைபடாமல் அவர் கொண்ட நோக்கத்தினை மட்டும் பார்க்கிறோம் பாராட்டி அதைப்போல் நாமும் முயல்கிறோம் நல்லவை செய்திட...

இதோ உங்களின் எழுத்தும் அப்படியே ரமணி சார்... கவிதை வரிகளை படிக்கிறோம்... சிந்திக்கிறோம்... அட ஒரு கருத்து வைக்கிறாரே ஒவ்வொரு கவிதையிலும் என்று வியக்கிறோம்.. அடடா அப்படியா என்று ஆச்சர்யப்படுகிறோம்.... ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்பினை தான் பெற்ற குழந்தையாக நினைப்பதால் தான்..... குழந்தையை போற்றி அழகு செய்து கொஞ்சி மகிழ்ந்து அதை எல்லோருக்கும் காட்டுகிறோம்.. பார்த்தியா நல்லது சொல்லும் என் குழந்தை என்று... பார்ப்போர் அதன் அழகில் மெய்மறந்து அதன் நல்லவைகளில் மனம் ஒன்றி பாராட்டுகிறோம்... மகிழ்கிறோம்.. ஊக்குவிக்கிறோம்.. உற்சாகப்படுத்துகிறோம். கவிதையின் தந்தையான கவிஞருக்கு மனம் மகிழ்கிறது.. இன்னும் எழுதவேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது... அந்த உத்வேகத்தில் மனம் முழுதும் சிந்தனையில் உழல்கிறது... சிந்தித்து மற்றொரு முத்தான கரு பிறக்கிறது மனதில்.. அடுத்த பிரசவத்திற்கு தயாராகிறது முத்தான கவிதைக்குழந்தை ஒன்று....


கதம்ப உணர்வுகள் said...

எல்லோரின் எழுத்துகளையும் உள்ளங்களையும் இயக்கும் ஒரே சக்தி அன்பு தான் ஒப்புக்கொள்கிறேன்.. பூரணமாக ஒப்புக்கொள்கிறேன்... அந்த அன்பு கூட புரிதல் இருக்கும்போது ஒரே அலைவரிசையில் பயணிக்கும் அற்புதமான எண்ணங்கள் ஆகிவிடும்போது இன்னமும் எழுத்துகளுக்கு பலம் கூடுகிறது... உள்ளங்களுக்கு அன்பு பெருக்கெடுக்கிறது... புரிதலுடன் கூடிய அன்பு குற்றங்களை காண்பதில் கவனம் செலுத்துவதில்லை.. குறைகளை களைவதில் மட்டுமே தன் அன்பை விதைக்கிறது....

அருமை அருமை ரமணி சார்... நிறைய சிந்திக்கவைத்த அருமையான வரிகள் இன்றைய கவிதை வரிகள்.... அற்புதமான கவிதைகளின் பிரம்மா நீங்க.. ஆனால் இங்கு சவம் என்று குறிப்பிட்டிருக்கும்போது கூட அதில் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் எந்த ஒரு கவிஞரும் தன் படைப்பை சவம் என்று சொல்லமுனைய மாட்டார். என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது மனதில் தோன்றியது இது...

கல்லை தெய்வமாக நினைத்து அபிஷேகம் ஆராதனை செய்யும் நாம் கல் எழுந்து வந்து நம்மை காக்கும் என்ற நம்பிக்கையிலா இல்லை கண்டிப்பாக இல்லை.. கல்லாக நாம் நினைக்கவில்லை... கல்லில் உறைந்த தெய்வம் என்று தான் நாம் நம்பிக்கையுடன் இருப்பது.... அதனால் தான் அபிஷேகமும் ஆரத்தியும் நம் வேண்டுதலும்.... நிறைவேறும் என்ற நம்பிக்கையுடனும்....

அதே போல் படைப்பை படைத்தவருக்கு தெரியும் அது நம் குழந்தை என்று... ஆனால் அது கையைகாலை காட்டி சிரிப்பது எப்போது??? எதிரில் ஒருவர் நின்று அதை என்கரேஜ் செய்யும்போது அதைப்பார்த்து சிரிக்கும்போது அதன் அழகிய மிழற்றலை ரசித்து அதனிடம் பேசும்போது அதன் பொக்கைவாய் சிரிப்பு மலர்கிறது... கையைக்காலை உதைத்து தன் சந்தோஷத்தை வெளிக்காட்டுகிறது... அதே போல் இங்கே “ சவம் “ என்றச்சொல் உவமையாக மட்டுமே கொடுத்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது... தன் கருவுக்கு உயிர் கொடுப்பது படைப்பாளியாகிய ஒரு பிரம்மா என்றால் அந்த உடலை அசைக்கவைத்து ஆனந்த தாண்டவம் புரியவைப்பது வாசகர்கள் என்ற பிரம்மாக்களின் ஊக்குவிக்கும் அற்புதமான கருத்துகளால் தான் என்பதை மனம் நெகிழ சொல்லிட்டீங்க ரமணி சார்... தன் படைப்பை சவம் என்று சொல்லக்கூட திண்மை வேண்டும்.. அந்த மனத்திண்மை தங்களிடம் இருக்கிறது.. பெருமையாக இருக்கிறது ரமணிசார்... தன்னை பணிவுடன் இருத்தி ஊக்குவிப்போரை உயர்வாக சொல்லும் மிக அற்புதமான அன்பு ரமணி சார் உங்களுடையது....


உயிர் கொடுத்து உலவ விடுவதே நீங்க தான் உங்க படைப்புகளை... படைப்பாளிகளின் சந்தோஷமே தன் படைப்பான கவிதையோ கதையோ உயிரோடு தவழ விடும்போது ஆசையுடன் ஓடி வந்து அதன் அழகில் வரிகளில் மயங்கி எடுத்து மகிழ்கிறோமே அதை விட பேரின்பம் படைத்தவருக்கோ வாசகருக்கோ என்ன இருக்கமுடியும்??

ஊக்குவிப்பதிலும் முதன்மை.... உயிருள்ள கவிதையை படைப்பதிலும் முதன்மை... சவமில்லை சவமில்லை.... அற்புதமான கருவைக்கொண்டு படைக்கப்பட்ட ஆழ்ந்த வரிகள் கொண்ட அருமையான நிஜக்கவிதை வரிகள்... நல்லவை விதைக்கும் சிந்தனை வரிகள்....


பயணிக்கிறோம் நாமும் உங்களுடன் வாசகராக, ரசிகராக, உயிர்ப்புள்ள உங்கள் கவிதையை வாசிக்கும் உத்வேகத்துடன்....


அன்பு நன்றிகள் ரமணி சார் அற்புதமான படைப்புக்கு....

கவியாழி said...

உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும்

ஆத்மா said...

இப்போதெல்லாம் கவிதையில் புதுமை தெரிகிறது சார்...
அழகான கற்பனைகள் பலருடைய சிந்தனைக்கு எட்டாதவைகள் (8)

Anonymous said...

ஓம் மிக நல்ல சிந்தனை. சில பேருக்குத் தானே ஓகோ என்று கருத்துகள் விழுகிறது. சிலரை யாரும் கண்கெடுப்பதே இல்லையே! அவர்களிற்கு இது பொருந்தாது....அல்லவா!...
வேதா. இலங்காதிலகம்.

Ganpat said...

ரமணி ஸார்..ஒரு வேண்டுகோள்..

சில அறச்சொறகளை(சவம்) தவிர்க்கவும்..நேர்மையும்,நல்லொழுக்கமும் கொண்ட உங்களைப்போன்ற ஒரு நல்ல மனிதர் நாவில் அவை வருவது உசிதமல்ல.தயைகூர்ந்து கருத்தில் கொள்ளவும்.நன்றி வணக்கம்..

சசிகலா said...

நாலு சுவத்துக்குள்ள இருக்கும் எங்களுக்கும் ஒரு அறிமுகத்தை கொடுப்பதும் இந்த அன்பே . தயங்காமல் தொடருங்கள்.

Unknown said...


//முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
சாரமற்ற என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது//

என்னைக் கவர்ந்த வரிகள்!நல் வாழ்த்துக்கள்! இரமணி!

G.M Balasubramaniam said...


சாரமற்ற படைப்பினையும் ஊக்குவிக்கும் முகமறியா நல்லவர்கள் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! படைப்பினை படித்து ஊக்குவிக்கும் வாசகர்கள் படைப்பாளியின் உயிர்தான்! அருமையான சிந்தனை! நன்றி!

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

ரமணி ஸார்..ஒரு வேண்டுகோள்..
சில அறச்சொறகளை(சவம்) தவிர்க்கவும்/

தவிர்த்துவிட்டேன்
தங்கள் வரவுக்கும் சிந்திக்கும்படியான
அறிவுரைக்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



.

ADHI VENKAT said...

//எங்கிருக்கும் உடலையும் எங்கிருக்கும் உயிரும்
ஓயவிடாது இயக்குதெலென்பது
அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது//

நிச்சயம் உண்மை தான். அன்பு ஒன்றே உலகை ஆட்டுவிக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //
.
முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
தமிழென்றும் உறவால்
நற்சிந்தனையாலும் செயலாலும்
ஒன்று பட்டுள்ளோம்,
தொடரட்டும் இந்த உறவு//

தங்கள் வரவுக்கும் அருமையான
மனம் கவரும் பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //.

உணர்ச்சி பூர்வமாக உரத்த சிந்தனையுடன் எழுதப்படும் உங்கள் படைப்பு சவம் அல்ல. என்னைப் போன்றவர்களுக்கு உங்களைப் போல தொடர்ந்து எழுத எண்ணம் தோற்றுவிக்கிறது.//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

//சவமான என் படைப்பினுக்கு ///

உங்கள் படைப்புகள் இதுவரை மோசமானதாக இல்லை அதனால் இந்த வரிகளை சற்று மாற்றி அமைத்து எழுதினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்//

மாற்றி எழுதிவிட்டேன்
தங்கள் வரவுக்கும் என் மீது கொண்ட
அளவில்லா நேசத்திற்கும் மனமார்ந்த நன்றி
.

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //
.
உண்மை உண்மை உண்மையே ஐயா,
என்னைப்போல் வெளிநாட்டில் இருப்பவர்கள்
நிதர்சனமாக உணரும் செய்தி இது...//.

தங்கள் வாவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை மு சரளா //
.
எந்த மூலையில் இருந்தாலும் அன்பு ஓன்று மட்டுமே நம்மை உயிர்ப்புள்ளதாக இருக்க செய்யும் என்பதை உணர்துகிறது உங்கள் எழுத்து வாழ்த்துக்கள்//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Suresh Kumar //

//சவமான என் படைப்பினுக்கு// என்பதை எதிர்க்கிறேன்.//

மாற்றி எழுதிவிட்டேன்
தங்கள் வரவுக்கும் என் மீது கொண்ட
அளவில்லா நேசத்திற்கும் மனமார்ந்த நன்றி

settaikkaran said...

கவிதையின் முத்தாய்ப்பாக நீங்கள் சொன்ன கருத்து மிக அருமை!

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //.

உங்கள் சிந்தனை விதையாய் விழுந்து மரமாய் அல்லவா எழுகிறது..!//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

semmalai akash //

ஆஹா ! ஆஹா ! என்ன அற்புதமான வரிகள் ஒவ்வொன்றும் ரசிக்கவைக்கிறது. சூப்பர்.//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //

தங்கள் பின்னூட்டங்களே எனக்கு
இந்தப் பதிவை எழுதும் கருவைக் கொடுத்தது

எனவே இந்தப் படைப்பை தங்களுக்கு
அர்ப்பணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வழக்கம்போல்
அருமையான விரிவான இன்னும் ஆழமாக
சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



மாதேவி said...

"அன்பிருந்தால் சாத்தியமென்று" நிச்சயமாக.
கவிதை வரிகள் அருமை.

கதம்ப உணர்வுகள் said...

//Ramani said...


தங்கள் பின்னூட்டங்களே எனக்கு
இந்தப் பதிவை எழுதும் கருவைக் கொடுத்தது

எனவே இந்தப் படைப்பை தங்களுக்கு
அர்ப்பணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வழக்கம்போல்
அருமையான விரிவான இன்னும் ஆழமாக
சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி //

என்ன சொல்வதென்றே தெரியவில்லை ரமணிசார்... அன்பை மட்டுமே என் குருவுக்கு காணிக்கையாக்குவதைத்தவிர.....

மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படைப்பு ரமணி ஜி..

த.ம. 11

கே. பி. ஜனா... said...

ஆம் அன்பிருந்தால் அனைத்தும் சாத்தியம்.
நிற்க, சாரமற்ற படைப்பல்லவே தங்களுடையது? 'சாரமிக்க' அல்லவா?

ஹேமா said...

அன்பின் ஆட்சியை அழகாக அரக்கனின் கதை சொல்லிப் புரியவைதிருக்கிறீர்கள் ஐயா !

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஆத்மா //

இப்போதெல்லாம் கவிதையில் புதுமை தெரிகிறது

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிசார்.//

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi /
.
ஓம் மிக நல்ல சிந்தனை//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிசார்.//

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

நாலு சுவத்துக்குள்ள இருக்கும் எங்களுக்கும் ஒரு அறிமுகத்தை கொடுப்பதும் இந்த அன்பே . தயங்காமல் தொடருங்கள்

.தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

என்னைக் கவர்ந்த வரிகள்!நல் வாழ்த்துக்கள்! //

.தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

சரியாகச் சொன்னீர்கள்/

.தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///






Yaathoramani.blogspot.com said...

s suresh //

அருமையான சிந்தனை! நன்றி!//.

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

அப்பாதுரை said...

ஆகா!

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //.

நிச்சயம் உண்மை தான். அன்பு ஒன்றே உலகை ஆட்டுவிக்கிறது.//

தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

சேட்டைக்காரன் //
.
கவிதையின் முத்தாய்ப்பாக நீங்கள் சொன்ன கருத்து மிக அருமை!//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

"அன்பிருந்தால் சாத்தியமென்று" நிச்சயமாக.
கவிதை வரிகள் அருமை. //

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //
.
நல்ல படைப்பு ரமணி ஜி.//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

.

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா...//

ஆம் அன்பிருந்தால் அனைத்தும் சாத்தியம்.//

தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

அன்பின் ஆட்சியை அழகாக அரக்கனின் கதை சொல்லிப் புரியவைதிருக்கிறீர்கள் ஐயா !//

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

ஆகா!/

/சுருக்கமான ஆயினும் மனதிற்கு
நெருக்கமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Ganpat said...

எங்கள் கருத்திற்கு மதிப்பளித்ததிற்கு நன்றி.
மஞ்சுபாஷிணியின் பிண்ணூட்டங்களுக்கு நீங்கள் அளித்துள்ள நன்றி நவிலும் பதிவும் அருமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்க்கையின் பல அம்சங்களை புதிய கோணத்தில் பார்ப்பது உங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது.அது அழகான கவிதையாகவும் மின்னுகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 13

kowsy said...

சரியாகச் சொன்னீர்கள் . எந்த அளவிற்கு சிந்தித்து இருக்கின்றீர்கள் . முகமறியாது நாடறியாது ஊக்குவிக்கும் உறவுகள்பற்றி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்னும் உண்மை பற்றி எங்களையும் உங்கள் சிந்தனைக்குள் இழுத்துச் சென்றீர்கள் .

Yaathoramani.blogspot.com said...

Ganpat //

எங்கள் கருத்திற்கு மதிப்பளித்ததிற்கு நன்றி.
மஞ்சுபாஷிணியின் பிண்ணூட்டங்களுக்கு நீங்கள் அளித்துள்ள நன்றி நவிலும் பதிவும் அருமை.//

அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டேன்
தாங்கள் என் மீது கொண்டுள்ள அக்கறைக்கு
எப்படி நன்றி சொல்வது எனப் புரியாது
குழம்பிக் கிடக்கிறேன்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

வாழ்க்கையின் பல அம்சங்களை புதிய கோணத்தில் பார்ப்பது உங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது.அது அழகான கவிதையாகவும் மின்னுகிறது//.

தங்கள் வரவுக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

சரியாகச் சொன்னீர்கள் . எந்த அளவிற்கு சிந்தித்து இருக்கின்றீர்கள் . முகமறியாது நாடறியாது ஊக்குவிக்கும் உறவுகள்பற்றி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்னும் உண்மை பற்றி எங்களையும் உங்கள் சிந்தனைக்குள் இழுத்துச் சென்றீர்கள் .//

உங்கள் சமுக அக்கறையுள்ள அருமையான
எழுத்து மற்றும் தமிழ் உச்சரிப்பின் தீவீர ரசிகன் நான்தங்கள் பாராட்டு எனக்கு மிகப் பெரிய கௌரவமே
வரவுக்கும் அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அருணா செல்வம் said...

எவ்வளவோ பெரிய உண்மையை
மிகச் சாதாரணமாக எழுதியிருக்கிறீர்கள்...

வணங்குகிறேன் இரமணி ஐயா.

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

வரவுக்கும் அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

நண்பரே, உங்கள் படைப்புகள் உயிர்ரோட்டம் உள்ள வை.

Post a Comment