நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்
என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப் புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச் சுழிப்பு
நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்
என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி
நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்
உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "
"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்
கேட்டவன் குழப்பமடைகிறான்
சீரான வேகத்தில்
நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்
என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப் புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச் சுழிப்பு
நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்
என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி
நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்
உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "
"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்
கேட்டவன் குழப்பமடைகிறான்
சீரான வேகத்தில்
நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்
48 comments:
ஓடும் வேகத்தில் சொல்லியுள்ளீர்கள் அருமை ,உண்மை ஜெயிக்க ஓடித்தான் ஆகவேண்டும்
சிந்திக்க வேண்டிய விஷயங்களை உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டீர்கள்.அருமை சார்.
த.ம.3
//எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை //
மிகவும் சரி. :)
மிகவும் சரியான வார்த்தைகளில் சொல்லிட்டீங்க.
// விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி //
பொறா'ஆ'மை - இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்
கவிதை அருமை !
தொடர வாழ்த்துகள்...
த.ம தில் பரிந்துரை செய்துள்ளேன்
வாழ்த்துகள் !
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "
தெளிவான பார்வை .பாராட்டுக்கள்...
//எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை//
அர்த்தமுள்ள வரிகள்...பாராட்டுகள் சார்.
த.ம.4
"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்
அருமையான சிந்தனை பாராட்டுகள்.
மிகவும் ரசித்து படித்தேன்.
த ம -ஐந்து..
அருமையான சிந்தனை!
ஆம் சீரான வேகம் தன்னிலக்கு- இது புரியாதவர் பாதை சீரின்றியே போகும்.
பொறாமை போன்ற தடைகளும் இப்படித்தானே சீரளிக்கும் . இவையெல்லாம் ஓர வயது வரப் புரியும்
மிக்க நன்று. நல்ல பதிவு. இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ஒவ்வொரு வரிகளும் அருமை..! எல்லோருமே சீரான வேகத்தில் போய் கொண்டிருந்தால் நாட்டில் போட்டி, பொறாமை ஒழியமல்லவா? அருமையான பாடம் சொல்லும் கவிதை மனதை விட்டு அகலாது.
// எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை //
அருமை! அருமை!
//எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை//
இந்த இரண்டு வரி மட்டுமே கம்பீரத்தை உணர்த்துகிறது.
கவியாழி கண்ணதாசன் //
ஓடும் வேகத்தில் சொல்லியுள்ளீர்கள் அருமை
தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
T.N.MURALIDHARAN //
சிந்திக்க வேண்டிய விஷயங்களை உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டீர்கள்.அருமை''
சார்
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
மீனாக்ஷி //
மிகவும் சரி. :)//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
மிகவும் சரியான வார்த்தைகளில் சொல்லிட்டீங்க//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
சேக்கனா M. நிஜாம் //
// விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி //
பொறா'ஆ'மை - இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்
கவிதை அருமை !//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சேக்கனா M. நிஜாம் //
த.ம தில் பரிந்துரை செய்துள்ளேன்//
மிக்க நன்றி
இராஜராஜேஸ்வரி //
தெளிவான பார்வை .பாராட்டுக்கள்...//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
.
அர்த்தமுள்ள வரிகள்...பாராட்டுகள் சார்.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
semmalai akash //
அருமையான சிந்தனை பாராட்டுகள்.
மிகவும் ரசித்து படித்தேன்.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
koodal bala //
அருமையான சிந்தனை!//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
ஆம் சீரான வேகம் தன்னிலக்கு- இது புரியாதவர் பாதை சீரின்றியே போகும்.
பொறாமை போன்ற தடைகளும் இப்படித்தானே சீரளிக்கும் . இவையெல்லாம் ஓர வயது வரப் புரியும்
மிக்க நன்று. நல்ல பதிவு. இனிய நல்வாழ்த்து//.
உடன் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
உஷா அன்பரசு //
ஒவ்வொரு வரிகளும் அருமை..! எல்லோருமே சீரான வேகத்தில் போய் கொண்டிருந்தால் நாட்டில் போட்டி, பொறாமை ஒழியமல்லவா? அருமையான பாடம் சொல்லும் கவிதை மனதை விட்டு அகலாது.//
உடன் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
அருமை! அருமை!//
உடன் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அருமையான சிந்தனை.
Sasi Kala //
இந்த இரண்டு வரி மட்டுமே கம்பீரத்தை உணர்த்துகிறது.//
உடன் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
அருமையான சிந்தனை.//
உடன் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அருமையான கவிதை! நம் ஓட்டம் சீராக இருந்தால் கவலை இல்லைதான்! வாழ்த்துக்கள்!
s suresh //
அருமையான கவிதை! நம் ஓட்டம் சீராக இருந்தால் கவலை இல்லைதான்! வாழ்த்துக்கள்!
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
சீரான பயணம் சிந்திக்கவும் வைத்தது ..
இலக்குகளின் தெரிவில் / தெளிவில் இருக்கிறது சூட்சுமம்!
அரசன் சே //
சீரான பயணம் சிந்திக்கவும் வைத்தது //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
.
ஸ்ரீராம். //
இலக்குகளின் தெரிவில் / தெளிவில் இருக்கிறது சூட்சுமம்!//
உடன் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
//எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்//
பிடித்த சிந்தனை....
த.ம. 10
நம் இலக்கை அடைவது தான் லட்சியம் என்றால்..
இடையில் பள்ளம் இருந்தால் என்ன?
மேடு இருந்தால் என்ன...? கடக்க வேண்டியது தான் நம் கடமை.
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை இரமணி ஐயா.
//எனக்கு நான் மட்டுமே இலக்கு//
வைரவரி.அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ஒன்று!
த.ம.11
வெங்கட் நாகராஜ் //
பிடித்த சிந்தனை....//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
மதுரை சொக்கன் //
தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை இரமணி ஐயா./
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///
The kingdom of heaven is within you என்பதுபோல் The kingdom of hell is also within you. அவனவனை அவனவனே வெற்றி கொள்ள வேண்டும். கவிதை யதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
பாதை விலகாமல் பயணம் போகும் ரகசியம்.
G.M Balasubramaniam //
The kingdom of heaven is within you என்பதுபோல் The kingdom of hell is also within you. அவனவனை அவனவனே வெற்றி கொள்ள வேண்டும். கவிதை யதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.//
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
பாதை விலகாமல் பயணம் போகும் ரகசியம்.//
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி நன்றி
Dear sakothara.
are you taking interval? Or traveling some where. I visited here so many time and went back. but I saw your comments some where..other Places ...on new dates...
Vetha.Elangathilakam.
Post a Comment