Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் எடுக்கும் "விஸ்வரூபம் "

கோரிக்கை விளக்கக் கூட்டங்கள்
பெருந்த் திரள் ஆர்ப்பாட்டங்கள்
பேரணி வேலை நிறுத்தங்கள்
தராத பலனை
ஒரு வன்முறை மிரட்டல்
சாதித்துவிடுமோ . என்கிற எண்ணத்தையும்

மத நல்லிணக்கம் என்பது
பெரும்பான்மையினரின் சிறுமைகளை
எப்படி வேண்டுமாலும் தாக்கலாம என்பதுவும்
சிறுபான்மையினரின் சிறுகுறையினையும்
எந்த வகையிலும்  எந்த நிலையிலும்
சொல்லக் கூடாதோ என்கிற கருத்தினையும்

சகிப்புத்தனமை சகோதரத்துவம்
சமதர்மம் என்பதெல்லாம்
பொதுவானது என்பது
பொய்யானது போலியானது என்பதுவும்
ஒரு சார்பானது என்பதே
உண்மையானதுஎன்னும் நம்பிக்கையையும்

வனத்தோடு  வெறிபிடித்து வாழும்
விலங்குகள் மட்டுமல்ல
நாகரீகம் பேசி
நாட்டில் வாழ்வோரும்
இனத்தோடு இணைந்திருத்தலே
பாதுகாப்பனது என்கிற உணர்வையும்

இப்படி அல்லது அப்படி
இருப்பதே இனி சரியெனவும்
இப்படியும் அப்படியும் என்பதெல்லாம்
இனி கதைக்காகாது என
"மதவாதிகளின்" கூற்று இனி
எடுபட்டுவிடுமோ என்கிற கவலையையும்

கண்டு கொள்ளாது மழுங்கச் செய்யவேண்டிய
 "விஸ்வரூபத்தை "
அதன் வீரியம் அறியாது
விஸ்வரூபமெடுக்கவிட்டு
 நாமே உண்டாக்குகிறோமோ?
துவங்கத் தெரியாது துவங்கி
முடிக்கத் தெரியாது திணருகிறோமோ ?

சகித்துக் கொள்ளக் கூடிய
லேசான அரிப்புக்கு
கொள்ளிக் கட்டையை எடுத்து
சொறிந்து கொண்டு சுகம் காண்கின்றோமோ
பூத்துக் குலுங்கும் சமதர்மப் பூங்காவை
நாமே தீயிடத் துணிகிறோமோ

சிந்திக்கச் சிந்திக்க
 பூதாகாரமாய்விஸ்வரூபமெடுக்கிறது
வாமன விஸ்வரூபமே
இனியும்  எதிர்ப்பென்னும் போர்வையில்
அதனை விஸ்வரூபமெடுக்கவிடுவது
நிச்சயம் அறிவீனமே

12 comments:

உஷா அன்பரசு said...

எந்த ஒரு மதமும், சமுதாயமும் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை. தீவிரவாதிகள் என்பவர்கள எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல.
அவர்களின் 'மதம் 'தீவிரவாதமே. ஆனால் சினிமாவின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறோம். மாற்றம் ஏற்பட வேண்டியது சிந்தனைகளில் தான்... சினிமாவில் இல்லை!

Ramani S said...

உஷா அன்பரசு said...

அருமையாகச் சொன்னீர்கள்
தீவீர வாதம் குறித்த சினிமாவாக
அதை எடுத்துக் கொள்ளாமல்
மதத்திற்கு எதிரானதாக ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்
என்பதுதான் ஏன் எனப் புரியவில்லை

பராசக்தியைஇந்துக்கள் மூடத்தனத்திற்கு எதிராகத்தானே
எடுத்துக் கொண்டார்கள்.
கோவிலையும் பூசாரியையும் தாக்கியதால்
இந்துக்களுக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளவில்லையே

அரங்கேற்றத்தைக் கூட வறுமைக்கெதிரானதாகத் தானே
எடுத்துக் கொண்டர்கள்.ஜாதிக்கெதிரானதாக
எடுத்துக் கொள்ளவில்லையே

தற்போது வெளிவந்த லட்டு தின்ன ஆசையா படச்
சாமியாரைக் கூட தீயவராகத்தானே புரிந்து கொண்டார்கள்
இந்துச் சாமியாராக கணக்கில் எடுக்கவில்லையே

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்கிற சிலரைக் கூட
இந்தப் பிரச்சனை குழப்பிவிடும் அபாயம் இருப்பதாகப் படுகிறது
எனக்கு.அதனாலேயே இதை எழுதினேன்

தங்கள் வரவுக்கும் சிந்திக்கத் தூண்டிய தங்கள்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...


கமல் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெறவில்லையோ.?

s suresh said...

அரசியல் விளையாட்டில் நாம் பகடைகளாகி விரோதித்து கொள்கிறோம் சக நண்பர்களை! அருமையான படைப்பு!

Bala Mugundan said...

edhu oru pacchai passisam mattrum vote porriki araseyal

ரெவெரி said...

சகித்துக் கொள்ளக் கூடிய
லேசான அரிப்பு...//

நிதர்சனம் பிரதிபலிக்கும் ஒரு திரைப்படத்தை இப்படி எதிர்க்கக்கிளம்பி கிளம்பி இவர்கள் கடைசியில் ஊழல் பெருச்சாளிகளோடு கை குலுக்கி ஓட்டு வங்கியாய் போவதோடு உறங்கிக்கிடக்கும் பிற மதவாதத்தையும் கூடவே உசுப்பி விடுகிறார்கள்

Well written Ramani Sir...

ரமேஷ் வெங்கடபதி said...

சமுதாயங்களின் இடைவெளி ... அதிகப்படுகிறது ! நடப்பது நடக்கட்டும் ! எப்போதும் போல் கையாலாகாமல் வேடிக்கை பார்ப்போம் !

Ramani S said...

G.M Balasubramaniam //


தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மன்மார்ந்த நன்றி

Ramani S said...


s suresh //

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மன்மார்ந்த நன்றி

Ramani S said...

Bala Mugundan //

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மன்மார்ந்த நன்றி

Ramani S said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மன்மார்ந்த நன்றி

Ramani S said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மன்மார்ந்த நன்றி

Post a Comment