Wednesday, January 30, 2013

ஆணவமும் காற்றிடைப்பட்ட கற்பூரமும்

அதீத உடல் பலமும்
அனைத்தையும் அழிக்கும்
ஆதிக்கவெறியும் கொண்டு திரியும்
சிங்க இனமும் புலி இனமும்
தொடர்ந்து சிறுத்துக் கொண்டே போக

காற்றிடைப்பட்ட கற்பூரமாய்
தானே கறைந்து போக

காட்சிபொருளாக வேணும்
காத்துவைக்க வேணும்  என்கிற
அவல நிலைக்குப் போக

பயமொன்றே
பதுங்குதல் ஒன்றே அறிந்த
பலமற்ற
பாவப்பட்ட
அணில்களும் மான்களும்
பல்கிப் பெருகுவது கூட

வன்முறை குறித்த
அதீத பலம் குறித்த
ஆணவம் குறித்த
ஏதோ ஒரு செய்தியை
சொல்லித்தான் போகிறது

நல்லவர்களுக்கு புதியநம்பிக்கையைக்
கொடுத்துத்தான் போகிறது


22 comments:

Anonymous said...

நல்ல கருத்துள்ள கவிதை.

MANO நாஞ்சில் மனோ said...

முகத்தில் அறையும் உண்மை இது குரு...!

ராமலக்ஷ்மி said...

நன்று.

சேக்கனா M. நிஜாம் said...

காலச்சூழலுக்கேற்ற கவிதை !

T.N.MURALIDHARAN said...

புதிய பார்வை. கொடிய மிருகங்கள் நாளடைவில் எண்ணிக்கையில் குறைவது போல மனித மிருகங்களின் எண்ணிக்கையும் குறைய வேண்டும்.

T.N.MURALIDHARAN said...

த.ம 3

K.s.s.Rajh said...

என்ன சொல்லவருக்கின்றீர்கள் என்று முழுவதும் புரியவில்லையானினும் கொஞ்சம் புரியுது.அருமையான வரிகள்

அமைதிச்சாரல் said...

ரொம்பவும் நல்லாருக்குது கவிதை.

Sasi Kala said...

தலைப்பே சிந்திக்க வைத்தது ஐயா.

G.M Balasubramaniam said...


பயந்து பதுங்குவது பல்கிப் பெருக வழி என்னும் கருத்துக்கு உடன் படுதல் சிரமமாயிருக்கிறதே.

முனைவர்.இரா.குணசீலன் said...

உண்மைதான் நண்பரே.

முனைவர்.இரா.குணசீலன் said...

ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம். ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.
மறுபக்கம் புலி..

என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது. இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.

அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.

முயல் சிந்தித்தது...

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??

என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.

உஷா அன்பரசு said...

சரியாக சொன்னீர்கள் ஐயா! பொருத்தமாக முனைவர் குணசீலன் குட்டி கதையும் விளக்கமாக சொல்லிவிட்டார்.

மாதேவி said...

நல்ல கவிதை.

s suresh said...

காலத்துக்கேற்றகவிதை! மறைபொருள் புரிகிறது! நன்றி!

Anonymous said...

Timely punch Ramani Sir...

அகலிக‌ன் said...

அப்படின்னா வலிமையுள்ளது எஞ்சும்ன்னு சொல்றதெல்லாம் சும்மாவா?
நல்ல சிந்தனை .

Anonymous said...

ஆக - நல்லவர்களுக்குப் புது நம்பிக்கை வருகிறது.
அது போதுமே!....
வரிகளை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
ஆயினும் நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

கோவை2தில்லி said...

அர்த்தமுள்ள வரிகள்.

அருணா செல்வம் said...

அருமையான கவிதை இரமணி ஐயா.
த.ம. 7

பால கணேஷ் said...

உங்களின் கருத்தை ரசித்துப் பாராட்ட வந்தநான், முனைவரையா சொன்ன பொருத்தமான குட்டிக் கதையையும் ரசித்து மகிழ்ந்தேன். இரட்டைப் பதிவு படித்த திருப்தி எனக்குள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கருத்துள்ள கவிதை....

த.ம. 8

Post a Comment