Monday, April 22, 2013

உள்ளும் புறமும் ( 9 )

எந்த ஒரு பிரச்சனையும் உச்சம் தொட்டபின்
நாம் விரும்பினபடியோ அல்லது மனம்
வெறுப்படையும்படியோ ஒரு முடிவுக்கு
வந்துதானே ஆக வேண்டும்.

இதில் எங்கள் வீட்டுப் பிரச்சனையும்
விதிவிலக்கா என்ன ?

சிலை உடைப்பு விவகாரம் ஜாதிக் கலவரமாய்
விஸ்வரூபம் எடுத்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு
விடுமுறை அறிவித்திருந்ததும்
நானும் விடுமுறையில் இருந்த காரணத்தாலும்
முதல் நான்கு நாட்களுக்கு நாங்கள் யாரும்
வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே இல்லை

பந்தோபஸ்துக்கு வந்திருந்த துணை ராணுவத்தினர்
வீட்டிற்கு நீரெடுக்க வருகையில் அப்போதைக்கு
அப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற
நிலவரத்தைச் சொல்லிப்போவார்கள்.

ஐந்தாம் நாள் நிலைமை கொஞ்சம்
சீரடைந்திருந்தது,போலீஸ் பாதுகாப்புடன்
பஸ்கள் ஓடத் துவங்க்கின,துணை ராணுவமும்
வாபஸ்பெறப்பட்டு சில குறிப்பிட்ட இடங்களில்
மட்டும் போலீஸ் காவலுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்கள்

சரி இனியும் காலம் தாழ்த்துவதில் பயனில்லை
உடன் பாஸ்போர்ட் விவகாரத்தை முடித்துவிட்டு
வீட்டைக் காலி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்
 எனநான் போலீஸ் ஸ்டேஸன் கிளம்புகையில்
எம்பார்மெண்ட் பிச்சையே சைக்கிளில் எங்கள்
வீடு தேடி வந்தான் அதுவும் நல்லதாய் போயிற்று

கடந்த வாரம் பார்த்ததை விட பிச்சை மிகவும்
சோர்ந்து போயிருந்தான்,நாமாக கேட்கவேண்டாம்
எப்படியும் அவனே சொல்லிவிடுவான் என
அவனுக்கு திண்ணையில் சேரில் உட்காரவைத்து
காபி பலகாரம் கொடுத்து உபசரித்த பின்
வந்த விஷயம் குறித்து விசாரித்தேன்

அவன் கொஞ்சம் சோர்வாகவே முதலில்
பேசத் துவங்கினான்

"சார் இந்த சிலை உடைப்பு பிரச்சனை ரொம்ப
பெரிய பிரச்சனை ஆகிப் போச்சு சார்.
தமிழ் நாடு பூரம் கலவரம் பரவிப் போனதால
சென்னையிலிருந்து பெரிய பெரிய அதிகாரிகள்
எல்லாம் உடனேஸ்பாட்டுக்க்கு
வந்துட்டாங்க சார்,
அவங்க எல்லோருமே மது விலக்கு அமலில்
இருக்கிற போது எப்படி இவ்வளவு தைரியமா
சாராயம் விக்கிறாங்கன்னு அதிர்சியடைஞ்சு
போனாங்க சார்.நிச்சயம் எவனாவது
குடிகாரப் பயதான் இந்த வேலையச் செஞ்சிருப்பான்
சிலை உடைப்புக்கு குடியும் அதுக்கு
சப்போர்ட்டா இருந்த அதிகாரிகளும்தான்
காரணம்னு வி ஏ ஓ ஏட்டுஇன்ஸ்பெக்டர்
எல்லோரையும் உடனடியா வேற மாவட்டத்துக்கு
மாத்திபுட்டாங்க்க சார் " என்றான்

நான் எரிச்சலுடன் :அவங்கள  மாத்தி என்ன
ஆகப் போகுது,அடுத்து வரப்போற அதிகாரிகளும்
காசை வாங்கிட்டு  அதைத்தான்
 செய்யப் போறாங்க "என்றேன்

அவன் அவசரமாக "அதுதான் இல்லை சார்
இந்தப் பிரச்சனை முதல்வர் வரை போனதாலே
கொஞ்சம் எல்லோரும் ஜாக்கிரதையாகவே
இருக்காங்க சார் நீங்க அந்தப் பக்கம்
போகையலையே போய் பாருங்க
முள் காட்டையெல்லாம் ஒரே நாள்ல வெட்டி
நீட்டா ஆக்கிட்டாங்க.சிலைய இப்போ
 துணி போட்டு மூடிவைச்சு வெங்கல சிலைக்கு
ஆர்டர் கொடுத்திருக்காங்க அடுத்து ரோடும்
 போடப்போவதாக சொல்றாங்க "என்றான்

"எல்லாம் நல்லதுதானே நீ ஏன்
வருத்தமா இருக்கே"என்றேன்

அவன் பெருமூச்சுவிட்டபடி சொன்னான்"
எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு கெட்டது
 இருக்கு சார்.இந்த வியாபாரிக
ஸ்டேஷனை கவனிக்கிறப்ப எனக்கும் என்னவாவது
செலவுக்குக் கொடுப்பாங்க.அது கெட்டுப் போச்சு
இனி வரப்போற போலீஸும் ஏட்டும் நமக்கு எப்படி
இருப்பாங்களோ .எல்லாம் சரியாக கொஞ்ச நாளாகும்
அதுவரை நம்ம பாடு கஷ்டம் சார் "என்றான்

பின் அவன் வந்த விவரத்தைக் கேட்க பழைய
தேதியிலேயே இன்ஸ்பெக்டர் கையெழுத்துப்
போட்டுப் போவதாகச் சொல்லி இருப்பதாகவும்
 நாலு பேருக்கு எண்ணூறு ரூபாயும்  நாலு பேரு
 பாஸ்போர்ட் சைஸ் போட்டாவுடன் வரும்படியும்
 சொல்லிப் போனான்

நானும் மறு நாள் பணத்துடனும் பாஸ்போர்ட்
 சைஸ் போட்டாவுடனும் போய் கையொப்பமிட்டு
 வந்தேன் அப்போதுதான் அந்த சாராயம்
விற்ற ஏரியாவைப் பார்த்தேன்.
வெட்டவெளி பத்து ஏக்கருக்கு மேல் இருக்கும்

அதைப்போல சிலை இருந்த இடத்தை சுத்தப்படுத்தி
அகலப்படுத்தி ஒரு பிரதான ஐலாண்ட் போல
ஆக்கி இருந்தார்கள்.

காவலுக்கு இருந்த ஒரு ஆயுதமேந்திய போலீஸ்காரர்
அருகில் அமர்ந்திருந்த சங்கிலி முருகன் என்னைக்
கண்டதும் வேகமாக எழுந்து வந்தார்

சந்தோஷமாக "சார் எல்லா சனியனும் முடிஞ்சு
போச்சு சார் இனிமே இந்த் ஏரியா
சூப்பரா வந்திரும் சார்,
எல்லாம் எங்க  தலைவரால வந்ததுதான் சார்
புதிய சிலை வந்ததும் திறப்பு விழா பெருசா
வைக்கப் போறோம் சார் .நீங்களும்  அவசியம்
கலந்து கொள்ளவேனும் சார் " என்றான்

சரி இவனையும் இனி பழக்கத்தில் வைத்துக்
கொள்ளவேணும் எதுக்குமுதவும் எனக் கருதி
 அவன் பேரைக் கேட்டுவைத்தேன்
"பழ நி " என்றான்

அதற்கு மூன்று மாதத்திற்குள் சாலை வசதி
 வந்து விட்டது சாராய வியாபாரம் இல்லாமல்
போய்விட்டது எனத் தெரிந்ததும்  எங்கள்
காலனியில் ஒவ்வொருவராக
தங்கள் இடம் பார்க்க வருவதும் ஒரு சிலர்
வேலை துவங்கவும் ஏரியா கொஞ்சம்
கலகலப்பாகத் துவங்கியது

அடுத்து இரண்டு மாதத்தில் பாஸ்போர்ட்
 வந்துவிட்டது ஆனாலும் ஏரியாவில்
எந்த பிரச்சனையும் இல்லை என்பதாலும்
இங்கேயே இருக்க முடிவு செய்தோம்

இடையில் ஒருமுறை எங்கள்  வீட்டுப் பக்கம்
வந்ததாகவும் அப்படியே பார்த்துப்
போக வந்ததாகவும் பிச்சை வந்தான்,
அவனுடன் சந்தோஷமாக
பேசிக் கொண்டிருந்த என் மனைவி
"வெங்கடாஜலபதிக்கு வேண்டிக் கொண்டது
வீண் போகலை,எல்லாம் நல்லவிதமாக முடிந்தது
அடுத்த மாதம் திருப்பதி போய் காணிக்கை
செலுத்தனும் "என்றாள்

என்னவோ யோசித்தபடி இருந்த பிச்சை திடுமென்று
"அப்படியே பழ நி முருகனுக்கும் போய் காணிக்கை
செலுத்தி விட்டு வாங்க " என்றான் லேசாகச் சிரித்தபடி
அது எனக்கு என்னவோ நக்கல் சிரிப்பு
போலேனக்குப்பட்டது

"நாங்க பழ நீ முருகனுக்கு வேண்டிக்
கொள்ளவில்லையே "என்றாள்
வெள்ளந்தியாய் என் மனைவி

"நீங்க  வேண்டினது வெங்க்கடாஜலபதி தான்
 ஆனா செஞ்சது என்னவோ
 பழ நி முருகன்தான் "என்றான்சிரிப்பு மாறாமல்

அவன் ஒருவேளை கடவுளை நம்பாதவனாக
இருக்கலாம் என முடிவு செய்து மனைவிக்கு
 கண் ஜாடை செய்து பேச்சை அத்துடன்
முடித்து வைத்தேன்

அடுத்து சில நாட்களில் நாலைந்து பேரோடு
வீடு வந்த சிலை க் காவலன் பழ நி சிலை
 திறப்பு விழா நோட்டீஸ் கொடுத்து அன்பளிப்பும்
 வாங்கிக் கொண்டு அவசியம்
வர வேண்டும் எனச் சொல்லிப் போனான்

நானும் சிலை திறப்பு விழா நாளில் சிறிது
 முன்பாகவே அங்கு போயிருந்தேன்.
விழா ஏற்பாடு மிகப் பிரமாதமாகச்
செய்திருந்தார்கள்.என்னுடன் விழாக் கமிட்டியார்
எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்துக்
கொண்டிருந்த பழ நி திடுமென்று
சாலையில் வந்து கொண்டிருந்த உயர்தர
கார் ஒன்றைக் கண்டதும்
மிக வேகமாக காரை நோக்கி ஓட ஆரம்பித்தார்

அருகில் இருந்தவரிடம் "யார் வருகிறார்கள்
கட்சித் தலவரா " என்றேன்

"இல்லை இல்லை இந்த விழாவுக்கு அதிக நிதி
கொடுத்தவரும் எங்களுக்கு வழி காட்டியும்
அவர்தான்" என்றார் அருகிலிருந்தவர்

அவரை சரியாகத் தெரிந்து கொள்ளும்  நோக்கில்
"அவர் பெயர் என்ன "  என்றேன்

"முருகன் " என்றார் அவர்

நான் ஆவலுடன் யார் எனத் திரும்பிப் பார்க்க
நான் அன்று போலீஸ் ஸ்டேஷனில்
இன்ஸ்பெக்டருக்கு சவால் விட்டுப்போன
பிரகாஷ் ராஜ் போலிருந்தவர்
காரிலிருந்து சிரித்தபடி இறங்கிக் கொண்டிருந்தார்

கூட்டம் பழ நியையும் முருகனையும் நோக்கி
வேகமாக விரைந்து கொண்டிருந்தது

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாடா... பிரச்சனை எப்படியோ எந்த ரூபத்திலோ முடிந்து விட்டது மகிழ்ச்சி...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நிம்மதியான முடிவு.

மிகவும் விறுப்பாக த்ரில்லிங்காகச் சென்ற கதை இந்தக் கடைசிபகுதியில் மட்டும் சற்றே சப்பென்று முடிந்து விட்டது போல இருக்கிறது.

எப்படியோ வீட்டைக்காலி செய்யாமல், அந்த ஏரியாவே சுத்தமாக ஆனது கேட்க மகிழ்ச்சியே.

பதிவுக்குப்பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிக்ள்.

நிம்மதியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.

Unknown said...

ஒருவழியாக குடியிருத்த இடம் நிலைத்தது!

கோமதி அரசு said...

வெங்கடாஜலபதிக்குகாணிக்கை செலுத்தவேண்டும்.
அந்த இடத்தை சரிசெய்த முருகனுக்கு( பிரகாஷ் ராஜ் போலிருந்தவர்)பிச்சை சொன்னது போல் காணிக்கை செலுதவேண்டுமோ!
கதை நன்றாக இருக்கிறது.

கவியாழி said...

அப்பாடா பிரச்னை இல்லாம முடிந்தது நிம்மதி

Avargal Unmaigal said...

இப்பதான் மூச்சு வந்தது உண்மைத் தொடர் மிக அருமை. பாரட்டுக்கள். பலருக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் இருந்தாலும் அதை தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லிச் சென்ற விதம் மிகவும் பாராட்டுக்குரியது

அருணா செல்வம் said...

அனுபவ பதிவு....
அருமை.

இனி இந்த “முருகனுக்கு“ மொட்டைப் போட வேண்டியது தான் பழநியின் வேலையாகி விடும்.

(எப்படி ஐயா கதையின் கருவிற்குத் தகுந்தார் போல் இந்தத் தலைப்பை யோசித்தீர்கள்? ஆச்சர்யமாக இருக்கிறது)
த.ம. 5

பால கணேஷ் said...

உண்மை அனுபவத்தை சுவாரஸ்யமாகச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். அருமை!

Seeni said...

nallathu ayya...

தி.தமிழ் இளங்கோ said...

உள்ளும் புறமும் - முதலிலிருந்து முடிவு வரை (1 to 9) நேற்று இரவுதான் படித்து முடித்தேன். சேர்த்து வைத்துப் படித்தலிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.

உண்மை நிகழ்ச்சி என்றே என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது. புறநகர்ப் பகுதியில் வீடு கட்டும்போது ஏற்படும் சில சங்கடங்களையும், தொல்லைகளையும் தெளிவாக எடுத்துக் காட்டி இருந்தீர்கள். மேலும் ஜாதிக் கலவரத்தின் மூலவேரே சுயநலம்தான் என்பதை தங்கள் தொடரின் மூலம் உணர்த்தி இருக்கீறீர்கள்.

உஷா அன்பரசு said...

திகிலுடனே போய் கொண்டிருந்தது ஒரு வழியாய் நிம்மதி வந்தது. அருமையான தொடர்கதை படித்தது போலிருந்தது.

கீதமஞ்சரி said...

ஓஹோ... இதுதான் விஷயமா... எப்படியோ இதனால் ஒரு பெரிய பிரச்சனை ஒழிந்ததே... பழனி முருகனுக்கும் காணிக்கை செலுத்திவிடவேண்டியதுதானே... அவர்தானே மூலகாரணம்!

சொல்லவந்த செய்தியை சுவை குன்றாமல் இறுதிவரை கொண்டு சென்ற விதம் மனம் கவர்ந்தது. தான் உணர்ந்த அனுபவத்தை அதே தொணியில் வாசிப்பவரும் உணரும் வண்ணம் எழுதியமைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அப்பாதுரை said...

அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே தோன்றியது - ஒவ்வொரு பதிவிலும்.
இவை அத்தனைக்கும் இடையில் உங்களை நீங்கள் நம்பியது தான் பெரிது. இன்னும் ஒரு அடி என்று நம்மை நாமே முன்னேற்றிக் கொள்ளும் பொழுது எத்தனை தொலைவையும் உடைந்த காலுடன் கடக்கலாம்.
அருமையான அனுபவம்.

Ranjani Narayanan said...

அப்பாடி! எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.
முதல் பகுதியின் சுவாரஸ்யம் இறுதிப் பகுதிவரை இருந்தது தான் உங்கள் எழுத்தின் வெற்றி!

வெங்கட் நாகராஜ் said...

அப்பாடி என்ன ஒரு அனுபவம்... ஒவ்வொரு பகுதியிலும் ஒரு அதிர்ச்சி மற்றும் எதிர்பார்ப்போடு முடித்திருந்தாலும் கடைசியில் நல்லதே நடந்தது எனும்போது மகிழ்ச்சி.....

கரந்தை ஜெயக்குமார் said...

கடைசிவரை விறுவிறுப்பைத் தக்க வைத்துக் கொண்டீர்கள் அய்யா. உங்கள் தொடரின் மிகப் பெரிய வெற்றியே இதுதான். அடுத்தத் தொடரினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் அய்யா.
தங்களின் வட நாட்டு சுற்றுலா அனுபவங்களையே ஒரு தொடரா கஎழுதலாம் அய்யா.

Anonymous said...

1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)

26 முதன்முதலில் தமிழர்களுக்கு சாம்பார் வைக்க சொல்லித் தந்த ஊர் சாம்பல்காடு கந்தர்வ கோட்டை.

27.பண்றிகளே இல்லாத ஊர் புதுக்கோட்டை.

28. சாமியார்கள் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவது திருச்செங்கோட்டில் மட்டுமே. அதானாலே திருச்செங்கோட்டில் தாயாரிக்கப்படும் வேஷ்டிகள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.

29.காபித்தூளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெயர் நரசிம்ம நாயுடு இவர் சேலத்தைச் சேர்ந்தவர்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த்ரில்லர் படம் மாதிரி பரபரப்பான தொடர்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.8

Anonymous said...

மூங்கில் முறளீதரன் அண்ணா வாழ்க. உங்க கவிதை சூப்பர்.

G.M Balasubramaniam said...


கதையாகவே கொள்வோம் என்கிறீர்கள்.கதை என்றால் பெரும்பாலும் கற்பனை என்று கொள்ளலாமா.?உண்மை நிலைகளை ஆங்காங்கே குறிப்பிடும் கற்பனைக் கதையென்றால் அருமையாக புனையப்பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள்.

ADHI VENKAT said...

பகுதிக்குப் பகுதி விறுவிறுப்பு. விடுபட்டவைகளையும் படித்து முடித்தேன்.

ஒரு வழியா இப்படி ஒன்று நடந்ததே!

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு! கற்பனை என்று எடுத்துக்கொள்ள‌ இயலவில்லை!

மாதேவி said...

இப்பொழுதுதான் கதை முடிவு படித்தேன். ஏரியா சுத்தமாகி நிம்மதியாகியது.

Post a Comment