Wednesday, May 29, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி -(2)

சில குறிப்பிட்ட சமயங்களில் மனம் சம நிலை
இழந்து விடுவதால் உணர்வுகள் பேயாட்டம்
ஆடிவிடுவதனால வருகிற விளைவா அல்லது
உணர்வுகள் பேயாட்டம் போடத் துவங்கியதும்
மனம் சம நிலை இழந்துவிடுவதனால் வருகிற
விளைவா என  மிகச் சரியாகக்
கணிக்க முடியவில்லை

ஆயினும் எப்படித்தான் கவனமாக இருந்த போதிலும்
நம்மையும் மீறி சில சமயங்களில் நம் வயது, தரம் மீறி.
நமக்கு உரிமையுள்ள இடங்களில்
சில தடித்த வார்த்தைகள்நம்மையறியாதே
வந்து விழுந்து தொலைந்து
கேட்பவரை மட்டுமில்லாது நம்மையும் பல நாள்
நிம்மதி இழக்கச் செய்துவிடுவது நடந்தேவிடுகிறது

என் நண்பன் விஷயத்தில் கூட பல நாள் அவனிடம்
அவன் அலுவலகத்திற்குச் செல்லுகையில் தனியாக
ஒரு கேரியரி ல் கீழ் அடுக்கில் சாதம் அடுத்து
நடுத்தட்டில் காய்கறி மேல் தட்டில்  அப்பளம் ஊறுகாய்
மூன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் சாம்பார்
ரசம் மோர் பின் இலை என எடுத்துச் செல்வது
தேவையற்ற அலட்டல் விஷயம்.
வக்கணையாகச் சாப்பிட வேண்டுமென்றால்
காலையில் வீட்டில் அதுபோல் சாப்பிட்டு விட்டு
குறைவாக அலுவலகத்தில் சாப்பிடும்படியாக
ஒரு சிறு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் மட்டும்
கொண்டு செல்லலாம்.
இதனால் ஒரு நாள் போல வீட்டில்
மனைவிக்குத் தரும் சிரமம் குறையும் நமக்கும்
தேவையற்ற சுமைகளைச் சுமப்பது குறையும்
எனவும்  வற்புறுத்தியுள்ளேன்

நண்பனின் மனைவி கூட அப்படிச் செய்தால்
அவர்களுக்கும் கொஞ்சம் காலைவேளை
சிரமம் குறையும் எனவும் பிள்ளைகளைக் கவனிக்க
ஏதுவாகவும்  இருக்கும் எனவும் என் முன்னாலேயே
சொல்லியுள்ளார், இருவர்  பேச்சையும்வம்படியாகக்
கேட்காமல் என் நண்பன் தன் பழக்கத்தைத்
தொடர்ந்ததால் என் மனத்தில் இதுவிஷயத்தில்
அவன்மேல் வன்மம் வளர்ந்துள்ளது என எனக்கே
நான் மிக மட்டமாகப் பேசிய பின்புதான்
எனக்கேப் புரிந்தது

அதைப்போலவே என நண்பனும் இந்த
தெருவோரக்கடைகளில் பஜ்ஜி வடை
சாப்பிடுவதனால் வரும் கெடுதி குறித்து
அதிகம் பேசி இருக்கிறான்.
தெருவோரத்தில் தூசி விழும் இடங்களில் தயாரிப்பது./
மற்றும் திறந்தபடி வைத்திருப்பது/பயன்படுத்திய
எண்ணையையே மீண்டும் பயன்படுத்துவது/
என்பதையெல்லாம் விளக்கிச்சொல்லி பலமுறை
அவனுக்காகவேணும் அதை மட்டும் விட்டுவிடும்படி
பலமுறை கெஞ்சி இருக்கிறான்,நானும் அதைக்
கண்டுகொண்டதில்லை என்கிற கோபமே திடுமென
அவனை அப்படிப் பேச வைத்திருக்கிறது எனவும்
அவன் பேசிய பின்புதான் என்னாலும் புரிந்து கொள்ள
முடிந்தது,அவனும் என்னைப்போல் தனியாக
யோசிக்கையில் இதைப் புரிந்து கொண்டிருப்பான்
என நான் புரிந்து கொண்டேன்

வழக்கம்போல ஒரு வாரம் குற்ற உணர்வில்
கழிந்ததும் இரண்டு பேரில் மிக மோசமாகப்
பேசியவனாக நானே இருந்த படியால் நானே
அலுவலகம் விட்டு வந்ததும்
அவனைப் பார்க்கக் கிளம்பினேன்

இந்த நேரம் என்றால் அவன் தினசரி அட்டவணைக்
கணக்குப்படி நன்றாக ஒரு குளியல் போட்டு
பட்டையடித்து ஒரு துண்டைமட்டும் போர்த்தியபடி
மொட்டைமாடியில் உலாத்திக் கொண்டிருப்பான்
அந்த மாதிரியான மாலை கடந்த இரவுப் பொழுதுகள்
மிக ரம்மியமாக இருக்கும்,அப்போதுதான்  உலக
நடப்புகள் முதல் உள்ளுர் விஷயங்கள் வரை
துவைத்து அலசி காயப் போடப்படும் என்பதால்
அரட்டைப் பிரியனான எனக்கும் அந்தப் பொழுதுகள்
ரொம்பப் பிடிக்கும்,இன்று ஒரு அரைமணி நேரம்
பரஸ்பரம் நீவி விட்டுக் கொண்டாலும் பேசுவதற்கும்
நிறைய  சூடான நாட்டு நடப்புகள் இருந்ததால்
வீட்டிலேயும் கொஞ்சம் தாமதாகத்தான் வருவேன்
என சொல்லி வந்திருந்தேன்

இந்த மன நிலையில் நான்  வந்த  இரு சக்கர
வாகனத்தை அவன் வாசலிலேயே
 நிறுத்திவிட்டு   அவன் வீட்டு காம்பவுண்டுக்குள்
நுழைந்ததும் வாசல் வராண்டாவில் ஈஸி சேரில்
சாய்ந்துப் படுத்தபடி  சேவிங் செய்யப்படாத  சோர்ந்த
சோக முகத்துடன் அவன் இருக்க அவன் காலடியில்
கால்களை பிடித்துவிட்டபடி அவன் மனைவி
அமர்ந்திருக்கஅவன் பக்கவாட்டில்  விசிறியபடி
மகனும் மகளும்  இருந்தது
எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது

(தொடரும் )\

54 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் நல்லது தான் நினைத்து சொல்லி உள்ளீர்கள்... அவர் புரிந்து கொள்வதில் தாமதம் இருக்கலாம்...

நீங்கள் சொன்னதை தான் 'தவறாக எடுத்துக் கொண்டு விட்டாரோ' என்று நினைத்து மறுபடியும் அவரை சந்திக்க சென்றது - இந்த மனப்பான்மை இன்று பலரிடம் இல்லை என்பதும் உண்மை...

அதிர்ச்சியுடன்.... ஆவலுடன்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆயினும் எப்படித்தான் கவனமாக இருந்த போதிலும்
நம்மையும் மீறி சில சமயங்களில் நம் வயது, தரம் மீறி.
நமக்கு உரிமையுள்ள இடங்களில் சில தடித்த வார்த்தைகள் நம்மையறியாதே வந்து விழுந்து தொலைந்து கேட்பவரை மட்டுமில்லாது நம்மையும் பல நாள் நிம்மதி இழக்கச் செய்துவிடுவது நடந்தேவிடுகிறது//

மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வாசல் வராண்டாவில் ஈஸி சேரில் சாய்ந்துப் படுத்தபடி சேவிங் செய்யப்படாத சோர்ந்த சோக முகத்துடன் அவன் இருக்க அவன் காலடியில் கால்களை பிடித்துவிட்டபடி அவன் மனைவி அமர்ந்திருக்கஅவன் பக்கவாட்டில் விசிறியபடி மகனும் மகளும் இருந்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது//

உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. ’தொடரும்’ போடவேண்டிய இடங்களை மிகச் சரியாகவே கையாண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

தொடருங்கள் ...... வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

//வழக்கம்போல ஒரு வாரம் குற்ற உணர்வில்
கழிந்ததும் இரண்டு பேரில் மிக மோசமாகப்
பேசியவனாக நானே இருந்த படியால் நானே
அலுவலகம் விட்டு வந்ததும்
அவனைப் பார்க்கக் கிளம்பினேன்//

நம் மனம் நல்லதை நாடுகிறதா இல்லை என்பதை இது போன்ற சோதனை வேதனைகளில் தான் தெரிந்து கொள்ள முடியும், நம் மீது(ம்) தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு வருந்தி அதை சரி செய்ய முயல்பவர்கள் எல்லோரையும் அரவணைத்து செல்ல விரும்புவராக இருப்பர்.

rajalakshmi paramasivam said...

இன்னும் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்களே.
சில சமயங்களில் நம் நாக்கு எதையாவது சொல்லி விட்டு பின் வருத்தப்படும் . என்ன செய்வது?

Anonymous said...

தங்கள் 2 அங்கங்களும் வாசித்தேன். சுவைபட எழுதப்பட்டுள்ளது.தொடருங்கள் தொடருவேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Seeni said...

aakaa...

appuram....

கவியாழி கண்ணதாசன் said...

சோக முகத்துடன் அவன் இருக்க அவன் காலடியில்
கால்களை பிடித்துவிட்டபடி அவன் மனைவி
அமர்ந்திருக்கஅவன் பக்கவாட்டில் விசிறியபடி
மகனும் மகளும் இருந்தது
எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது//அய்யோடா அப்புறம் ??

பால கணேஷ் said...

உ ங்களின் வார்த்தைகள் தந்த வருத்தமா? இல்லை வேறு ஏதாவது காரணமா? ஏன் அவர் சோகமுகத்துடன் இருந்தார்? சீக்கிரம் தொடருங்கள் ஸார்...!

கரந்தை ஜெயக்குமார் said...

நாங்களும் அதிர்ச்சியோடு காத்திருக்கின்றோம்.சீக்கிரம் தெடருங்கள்

G.M Balasubramaniam said...


When you look at the caption of the post, and the details explained, I expect some serious twist in the story.

சந்திரகௌரி said...

இப்படியான சந்தர்ப்பங்களில்தான் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்போம் . என்று எண்ணத் தோன்றும். உங்கள் அதிர்ச்சிக்கான காரணம் என்ன என்று அறிய அடுத்த அங்கத்தில் சந்திக்கின்றேன்

ராஜி said...

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறதோ!? காத்திருக்கிறோம்.

T.N.MURALIDHARAN said...

ஹார்ட் அட்டேக்காக இருக்குமோ? அப்படி இல்லாமல் இருந்தால் நல்லது

T.N.MURALIDHARAN said...

த.ம.5

உஷா அன்பரசு said...

கோபத்தில் எதையோ சும்மா சொல்ல நிஜமாவே அந்த நண்பருக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டதோ?
உங்கள் அதிர்ச்சிக்கான காரணம் என்னவாக இருக்கும்?
த.ம-5

அப்பாதுரை said...

காட்சி ஒன்று போதுமே, குற்ற உணர்வுத்தீயை தூண்டிவிட!
இருவர் பேச்சின் காரணங்களுக்கான ஆய்வும் சமாதானமும் யதார்த்தம்.

Sasi Kala said...

எதாவது உடல் நலக்குறைவாக இருக்குமோ ? இருப்பினும் மனம் தாங்கள் சொன்ன வார்த்தையால் தானோ நீங்கள் எந்த விதம் வருந்தியிருப்பீர்கள். அடுத்த பகிர்வுக்காக காத்திருக்கிறோம்.

புலவர் இராமாநுசம் said...

நிகழ்வுகளை சொல்லிப்போகும் விதம் நெஞ்சை நெகிழ வைக்கிறது அருமை! இரமணி! அடுத்து!!!!!!!?

கவிப்ரியன் said...

நட்புல இதெல்லாம் சகஜம்தானே! அப்புறம் என்னாச்சு? ஆவலைத் தூண்டுகிறீர்களே!

கவிப்ரியன் said...

த.ம. 9

கோமதி அரசு said...

சில சமயங்களில் நம் வயது, தரம் மீறி.
நமக்கு உரிமையுள்ள இடங்களில்
சில தடித்த வார்த்தைகள்நம்மையறியாதே
வந்து விழுந்து தொலைந்து
கேட்பவரை மட்டுமில்லாது நம்மையும் பல நாள்
நிம்மதி இழக்கச் செய்துவிடுவது நடந்தேவிடுகிறது//
உண்மை, உண்மை. சில நேரங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

உங்களால் தான் அவர் சோகமாக இருந்தாரா.... இல்லை வேறு எதும் காரணமோ! தொடர்கிறேன்.

த.ம. 10

மாதேவி said...

அவரை பார்க சென்ற உங்கள் நல்ல எண்ணத்துக்கு வாழ்த்துகள்.

அடுத்து ..? தொடர்கிறேன்.

Ramani S said...

திண்டுக்கல் தனபாலன் //..
நீங்கள் நல்லது தான் நினைத்து சொல்லி உள்ளீர்கள்... அவர் புரிந்து கொள்வதில் தாமதம் இருக்கலாம்..\

\தங்கள் முதல் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...
This comment has been removed by the author.
Ramani S said...


வை.கோபாலகிருஷ்ணன் //

மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. ’தொடரும்’ போடவேண்டிய இடங்களை மிகச் சரியாகவே கையாண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

தொடருங்கள் ...... வாழ்த்துகள்

\தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

.

Ramani S said...

கோவி.கண்ணன்//

நம் மனம் நல்லதை நாடுகிறதா இல்லை என்பதை இது போன்ற சோதனை வேதனைகளில் தான் தெரிந்து கொள்ள முடியும், நம் மீது(ம்) தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு வருந்தி அதை சரி செய்ய முயல்பவர்கள் எல்லோரையும் அரவணைத்து செல்ல விரும்புவராக இருப்பர்.//

\தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

rajalakshmi paramasivam //

இன்னும் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்களே.
சில சமயங்களில் நம் நாக்கு எதையாவது சொல்லி விட்டு பின் வருத்தப்படும் . என்ன செய்வது?//\

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

kovaikkavi //

தங்கள் 2 அங்கங்களும் வாசித்தேன். சுவைபட எழுதப்பட்டுள்ளது.தொடருங்கள் தொடருவேன்.
இனிய வாழ்த்து.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

Seeni //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிRamani S said...

கவியாழி கண்ணதாசன் //.

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Ramani S said...

பால கணேஷ் //

உ ங்களின் வார்த்தைகள் தந்த வருத்தமா? இல்லை வேறு ஏதாவது காரணமா? ஏன் அவர் சோகமுகத்துடன் இருந்தார்? சீக்கிரம் தொடருங்கள் ஸார்...!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

கரந்தை ஜெயக்குமார் //

நாங்களும் அதிர்ச்சியோடு காத்திருக்கின்றோம்.சீக்கிரம் தெடருங்கள்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

G.M Balasubramaniam //

When you look at the caption of the post, and the details explained, I expect some serious twist in the story.

மிகச் சரியான அவதானிப்பு//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Ramani S said...

சந்திரகௌரி //
.
இப்படியான சந்தர்ப்பங்களில்தான் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்போம் . என்று எண்ணத் தோன்றும். உங்கள் அதிர்ச்சிக்கான காரணம் என்ன என்று அறிய அடுத்த அங்கத்தில் சந்திக்கின்றேன்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

ராஜி //

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக்கிறதோ!? காத்திருக்கிறோம்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

T.N.MURALIDHARAN //

ஹார்ட் அட்டேக்காக இருக்குமோ? அப்படி இல்லாமல் இருந்தால் நல்லது//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

உஷா அன்பரசு //

கோபத்தில் எதையோ சும்மா சொல்ல நிஜமாவே அந்த நண்பருக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டதோ?//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Ramani S said...

அப்பாதுரை //

காட்சி ஒன்று போதுமே, குற்ற உணர்வுத்தீயை தூண்டிவிட!
இருவர் பேச்சின் காரணங்களுக்கான ஆய்வும் சமாதானமும் யதார்த்தம்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

Sasi Kala //

எதாவது உடல் நலக்குறைவாக இருக்குமோ ? இருப்பினும் மனம் தாங்கள் சொன்ன வார்த்தையால் தானோ நீங்கள் எந்த விதம் வருந்தியிருப்பீர்கள். அடுத்த பகிர்வுக்காக காத்திருக்கிறோம்.//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

புலவர் இராமாநுசம் //

நிகழ்வுகளை சொல்லிப்போகும் விதம் நெஞ்சை நெகிழ வைக்கிறது அருமை! இரமணி! அடுத்து!!!!!!!?//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

கவிப்ரியன் //

நட்புல இதெல்லாம் சகஜம்தானே! அப்புறம் என்னாச்சு? ஆவலைத் தூண்டுகிறீர்களே!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

கோமதி அரசு //

உண்மை, உண்மை. சில நேரங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

வெங்கட் நாகராஜ் //

உங்களால் தான் அவர் சோகமாக இருந்தாரா.... இல்லை வேறு எதும் காரணமோ! தொடர்கிறேன்./

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

மாதேவி //

அவரை பார்க சென்ற உங்கள் நல்ல எண்ணத்துக்கு வாழ்த்துகள்.
அடுத்து ..? தொடர்கிறேன்./

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Avargal Unmaigal said...

நான் சொல்ல நினைப்பதையே பலரும் எனக்கு முன்னால் சொல்லிவிட்டதால் பதிவை தொடர்கிறேன்

Ramani S said...

Avargal Unmaigal
நான் சொல்ல நினைப்பதையே பலரும் எனக்கு முன்னால் சொல்லிவிட்டதால் பதிவை தொடர்கிறேன்


தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

கீத மஞ்சரி said...

நட்பின் பெருமையை உணர்த்திய வரிகள். நம்முடைய அறிவுரை உதாசீனப்படுத்தப்படும்போது உள்ளுக்குள் மெலிதாய் எழும் வன்மம் நம்மையறியாமலேயே நேரம் பார்த்து தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்கிறது என்றாலும் புரிதலுடனான நட்பின் மூலம் உளப்புகைச்சலை அடக்கி மீண்டும் உறவைத் தழைக்கவைக்கமுடியும் என்பதையும் உணர்த்திவிட்டீர்கள். நன்று ரமணி சார்.

ஸாதிகா said...

எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது
//அதே அதிர்ச்சி கலந்த பரபரப்புடன் பகுதி மூன்றை வாசிக்க செல்லப்போகிறேன்.

Ramani S said...

கீத மஞ்சரி //

புரிதலுடனான நட்பின் மூலம் உளப்புகைச்சலை அடக்கி மீண்டும் உறவைத் தழைக்கவைக்கமுடியும் என்பதையும் உணர்த்திவிட்டீர்கள். நன்று ரமணி சார்./
/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Ramani S said...

ஸாதிகா //
.
எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது
//அதே அதிர்ச்சி கலந்த பரபரப்புடன் பகுதி மூன்றை வாசிக்க செல்லப்போகிறேன்./

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

/

Ranjani Narayanan said...

உங்களுக்கு மட்டுமல் எங்களுக்கும் இந்த கடைசி வரி அதிர்ச்சியைக் கொடுக்கிறது.
உங்கள் நண்பர் உடல்நலம் தேறி நீங்களிருவரும் எப்போதும்போல சந்தோஷமாக இருக்க பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

Ramani S said...

Ranjani Narayanan //

தங்கள் வரவுக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Post a Comment