Sunday, May 19, 2013

பதிவு மேடை

 இந்த மேடை நமக்குப்
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

நமக்கு இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்  சுமைகளின்றி
போலி முக வேஷங்களின்றி
நமது குளியறையில் பாடுதல் போல்
நமது தோட்டத்தில் ஆடுதல்  போல
இயல்பாகவே இருக்க  முடிவதாலே

நமக்கு இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

இருள் உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவருமே
படைப்பாளிகளாகவே இருப்பதாலே

நமக்கு இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

நேரக்கணக்கின்றி  நம் இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்
பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்
வெளிச்சமும் சப்தமும்
ஆரவார ரசிகர்கள் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நமக்கானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும் நமக்குள்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது
நமக்குள் நிலையாக
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது

46 comments:

கவியாழி said...

நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது
நமக்குள் நிலையாக
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது//
இந்த மேடை அழகானதும் தெளிவானதும்கூட.. அருமைங்க சார்

Anonymous said...

பலத்த கரவொலி என்றுமே உண்டு இந்த மேடைக்கு !
வாழ்த்துக்கள் !

கரந்தை ஜெயக்குமார் said...

நன்று சொன்னீர் அய்யா
பதிவுலக மேடையை
இதைவிட
அழகாக
அருமையாக
சொல்ல இயலாது.
இது நமது மேடை
நாமே
பார்வையாளர்கள்
நாமே
பேச்சாளர்கள்
நாமே
எழுத்தாளர்கள்
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த திருப்தி போதும் நமக்கு...

அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

மிகச் சரி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆடை அலங்காரச் சுமைகளின்றி

போலி முக வேஷங்களின்றி

நமது குளியறையில் பாடுதல் போல்

நமது தோட்டத்தில் ஆடுதல் போல

இயல்பாகவே இருக்க முடிவதாலே

நமக்கு இந்த மேடை மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது//

ஆஹா, அழகோ அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

[மொக்கைக்கான மேலும் விளக்கமாகவும் இது அமைந்துள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி]

Avargal Unmaigal said...

இந்த மேடைக்கு 'சரக்கு'(Drinks) வாங்கி கொடுத்து அழைத்து வரத் தேவையில்லை ஆனால் நல்ல சரக்கு (நல்ல விஷயங்கள்) இருந்தால் அழைக்காமலே உலகமெங்கும் இருந்து வருகிறார்கள்

G.M Balasubramaniam said...


இந்த மேடை பெரும்பாலும் பாராட்டு மேடையாய் இருப்பதாலும் பலருக்குப் பிடிக்கிறது..

சிவகுமாரன் said...

இந்தச் சிறியவனையும் தங்களைப் போன்ற பெரியோர்களிடம் அறிமுகப் படுத்தியது இந்த மேடை தானே,
இந்த மேடை புறக்கணிக்கப் பட்டவர்களின் புகலிடம்.
மனம் கவர்ந்த பதிவு
நன்றி

Yaathoramani.blogspot.com said...

Manju Bashini Sampathkumar//

அருமையான தலைப்பு… பொருத்தமான தலைப்பு…. இயல்பான வார்த்தைகள்…. சுதந்திரமான எழுத்துகள்…. நிம்மதியாக சுவாசிக்க இயன்ற அருமையான கரு.. முகநூல் எல்லோருமே பயன்படுத்த தொடங்கிவிட்டோம். மொபைலில் அழைத்து கிடைக்கவில்லையா? அவசரமா? சட்டுனு முகநூலில் ஒரு மெசெஜ் அனுப்பினால் போதும்… அவரைப்பற்றிய தகவல் கிடைத்துவிடுகிறது.. நமக்கு தோணின நல்லவை எல்லாம் பகிர ஏதாவது ஒரு தளம் அவசியமாகிறது.. நம் படைப்புகள் நம் உணர்வுகள் நம் சந்தோஷங்கள் , கண்ணீர் இது எல்லாமே வெளியாகிவிட்டால் நம் மனமும் லேசாகிறது…. நம் படைப்புகள் ஆமாம் ரமணி சார் நீங்க சொன்னது போல் எல்லோருமே பார்ப்பதால் உடனுக்குடன் கருத்து பதிந்து உத்வேகம் அளிக்கிறார்கள். உற்சாகத்துடன் கருத்து அளிக்கிறார்கள். நம் படைப்புகளுக்கு அங்கீகாரம் வேகமாக கிடைத்துவிடுகிறது…

நல்லவை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க இந்த வழி மிகவும் எளியவழி.. முகநூலை நல்லதற்காக நாம் பயன்படுத்துவது நல்ல நோக்கில் மட்டுமல்லாது சுதந்திரமாக செயல்படவும் முடிகிறது, யாருடைய ஆளுமைக்கு உட்படாமல் யாராலும் அடக்கி வைக்கப்படாமல் நம்மால் செயல்பட முடிகிறது.. ஆமாம் வெளிச்சம் குறைவு தான்.. பார்வையாளர்களும் குறைவு தான். அதனால் என்ன உன்னதமான மேடை இது.. நட்பு நாடி வரும் அருமையான அன்புச்சோலை இது.. படைப்புகளை அங்கீகரிக்கும் உத்தமமான மேடை இது..

அற்புதமா முகநூலுக்கு மட்டுமல்லாது நம் எழுத்துகள் எத்தனை மேன்மையாகிறது எத்தனை அழகாய் கௌரவிக்கப்படுகிறது என்பதையும் அற்புதமாக சொல்லிட்டீங்க ரமணிசார்.. உங்கள் எழுத்துகள் இங்கே பார்ப்பது எனக்கு மிக மிக சந்தோஷம் ரமணிசார்.. எப்போதும் போல் உங்கள் எழுத்துகளின் ரசிகையாக

சசிகலா said...

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே...
தங்களைப் போன்ற அற்புதமான அறிமுகங்களை கொடுத்திருக்கிறது. நல்ல பகிர்வு நல்ல சிந்தனை நன்றி ஐயா.

Unknown said...

மன மேடை..
வார்த்தைகளில் ஜாலம் !
பதிவர் மட்டுமே போற்றும்
எழுத்துக் கோலம் !

அழகு..அருமை !

குட்டன்ஜி said...

இந்த மேடையிலும் சில நேரங்களில் பிரச்சினை வந்து விடுகிறதே சார்!

குட்டன்ஜி said...

த.ம.7

கோமதி அரசு said...

நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது
நமக்குள் நிலையாக
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது//

ஆம், உண்மை. நீங்கள் சொல்வது.

”தளிர் சுரேஷ்” said...

உண்மை! பதிவு மேடை நமக்கெல்லாம் பிடித்த மேடைதான்!

ezhil said...

அருமையான கவிதை சார்... நேர்த்தியான ,இயல்பான வரிகள் ... நம்பிக்கையூட்டும் மேடைதான்... நம்முடையதும் படிக்கப்படுகிறதே அதன் மகிழ்வு உண்மையில் சுகமானது....

மாதேவி said...

சரியாகச் சொன்னீர்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

வலைப்பதிவு என்பதனை “ உயிரோட்டமுள்ள
சின்ன மேடை” – என உருவகித்து, அதன் உயர்வுகளைச் சிறப்பித்து, ” உருவக அணி” மிளிர ஒரு கவிதை. பெரும்பாலும் உஙகள் கவிதைகள் யாவும் ” உருவக அணி” தான். எனது பாராட்டுக்கள்!

Unknown said...

உண்மை நிலையை உணர்த்தும் பதிவு!

கே. பி. ஜனா... said...

நன்றாய் சொன்னீர்கள்!

அப்பாதுரை said...

மேடை மேல் புது நம்பிக்கை பிறக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

பலத்த கரவொலி என்றுமே உண்டு இந்த மேடைக்கு !
வாழ்த்துக்கள் !/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் ///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

இந்த திருப்தி போதும் நமக்கு...
அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்.../

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

மிகச் சரி.//

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

ஆஹா, அழகோ அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal s//

இந்த மேடைக்கு 'சரக்கு'(Drinks) வாங்கி கொடுத்து அழைத்து வரத் தேவையில்லை ஆனால் நல்ல சரக்கு (நல்ல விஷயங்கள்) இருந்தால் அழைக்காமலே உலகமெங்கும் இருந்து வருகிறார்கள்/

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam s//..

இந்த மேடை பெரும்பாலும் பாராட்டு மேடையாய் இருப்பதாலும் பலருக்குப் பிடிக்கிறது..

சரியாகச் சொன்னீர்கள்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

தங்கள் அருமையான அழகான
ஆழமான கருத்துடைய
கவிதைகளின் தீவீர ரசிகன் நான்
தங்களால் பாராட்டப்படுவது எனக்கு
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

Manju Bashini Sampathkumar//

என்னுடைய படைப்புகள் கூடுதல் மதிப்பு [எறுவது
எப்போதும் தங்கள் விரிவான அழுத்தமான
பின்னூட்டங்களால்தான்.வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala//

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே...
தங்களைப் போன்ற அற்புதமான அறிமுகங்களை கொடுத்திருக்கிறது. நல்ல பகிர்வு நல்ல சிந்தனை /

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //
.
மன மேடை..
வார்த்தைகளில் ஜாலம் !
பதிவர் மட்டுமே போற்றும்
எழுத்துக் கோலம் !///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

குட்டன் //

பல்வேறு மன/தர/வயது நிலைகளில்
உள்ளவர்கள் சங்கமிக்கிற இதுபோன்ற
ஊடகங்களில் கருத்து வேறுபாடு
தவிர்க்க இயலாததே
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்


Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு ///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருண் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

s suresh s/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ezhil s//

அருமையான கவிதை சார்... நேர்த்தியான ,இயல்பான வரிகள் ... நம்பிக்கையூட்டும் மேடைதான்... நம்முடையதும் படிக்கப்படுகிறதே அதன் மகிழ்வு உண்மையில் சுகமானது..//

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி ///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

வலைப்பதிவு என்பதனை “ உயிரோட்டமுள்ள
சின்ன மேடை” – என உருவகித்து, அதன் உயர்வுகளைச் சிறப்பித்து, ” உருவக அணி” மிளிர ஒரு கவிதை. பெரும்பாலும் உஙகள் கவிதைகள் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் //

உண்மை நிலையை உணர்த்தும் பதிவு!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

S. Hameeth said...

//உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நமக்கானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும் நமக்குள்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது//

ஆழமும் அர்த்தமும் பொதிந்த வரிகள்...

உயிரோட்டத்தோடு
உணர்வோட்டமும் நிறைந்த இந்த
அழகான மேடையில்
நாமே நடிகர்கள்..
நமதே கதை வசனம்..
நம்முடையதே நெறியாள்கை...

பார்வையாளர்களாக வருவோரின்
பாராட்டுகளும் கண்டனங்களும்...

சந்தோஷமாகத்தான் இருக்கிறது ஐயா...

தங்கள் எழுத்துக்களை இரசிப்பவர்களில்
நானும் ஒருவன்!


Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை//

மேடை மேல் புது நம்பிக்கை பிறக்கிறது.//


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உறசாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

S. Hameeth //

ஆழமும் அர்த்தமும் பொதிந்த வரிகள்...

உயிரோட்டத்தோடு
உணர்வோட்டமும் நிறைந்த இந்த
அழகான மேடையில்
நாமே நடிகர்கள்..
நமதே கதை வசனம்..
நம்முடையதே நெறியாள்கை...

பார்வையாளர்களாக வருவோரின்
பாராட்டுகளும் கண்டனங்களும்...
சந்தோஷமாகத்தான் இருக்கிறது ஐயா...
தங்கள் எழுத்துக்களை இரசிப்பவர்களில்
நானும் ஒருவன்!//

தங்கள் வரவும் வாழ்த்தும் விரிவான
அழுத்தமான அழகான பின்னூட்டமும்
எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி

Post a Comment