Saturday, June 15, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (10)

டாக்டர்  சொல்லியிருந்தபடி அவரைச்
சந்திப்பதற்காக மாலை நாலு மணிக்கெல்லாம்
வார்டில் ரெடியாக இருந்தோம்

வார்டு பையனும் மிகச் சரியான
நேரத்துக்கு வந்து எங்களை அவர் குவார்டஸ்சிற்கு
அழைத்துப் போனான்,குவார்டஸ்ர்ஸ் ஆஸ்பத்திரிக்கு
மிக அருகிலேயே இருந்தது,நாங்கள் காம்பௌவுண்ட்
கேட்டைத் திறக்கிற சப்தம் கேட்டதும் வாசல் முன்புற
தோட்டத்தில் அமர்ந்திருந்த டாக்டர் எங்களை
வரவேற்கும் விதமாக எழுந்து "வாங்க வாங்க
உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன் "என்றார்

நாங்கள் அவர் குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்ததும்
வீட்டை நோக்கி "ராஜி அவங்க வந்துட்டாங்க
கொஞ்சம் வந்து போயேன் " என்றார்

சுருக்கமாகச் சொன்னால் லட்சுமிகரமாக
ஆரோக்கியமாக பார்த்தவுடன் எழுந்து வணங்கத்
தக்கவராக அவர் இருந்தார்,

அவர் டாக்டரின் மனைவியாக இருக்கவேண்டும்
அவரும் டாக்டராகத்தான் இருக்கவேண்டும் என
பார்த்தவுடனே தெரிந்தது

நாங்கள் இருவரும் எழுந்து வணக்கம் தெரிவித்து
விட்டு இருக்கையில் அமரவும் " உங்கள் இருவரில்
யார் கணேசன் " எனக் கேட்டபடி டாக்டரின் அருகில்
இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்

நாங்கள் இருவரும் எங்களை அறிமுகம் செய்து
கொண்டு அமர்ந்ததும் டாக்டரும் அவரது மனைவியை
அறிமுகப்படுத்தியதுடன் அவர்களுக்கு பெண்
குழந்தைகள் இருவர் எனவும் அவர்களில் ஒருவர்
டாக்டருக்கும் ஒருவர் எஞ்சினியரிங்கும் ஹாஸ்டலில்
தங்கிப் படிப்பதாகவும் சொல்லி கொஞ்சம்  லேசாக
ரிலாக்ஸ்டாக தன் சாய்வு இருக்கையில் சாய்ந்தபடி
" ஆர் யூ ஃபீல் ரிலாக்ஸ்ட் "என்றார்

சரி டாக்டர் எதுவோ பெரிதாக எங்களைப்
பாதிக்கும்படியாக எதையோ சொல்லப் போகிறார்
எனப் புரிந்து போயிற்று

,நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன
முழம் என்ன என்கிற மனோ நிலைக்கு ஏறக்குறைய
வந்திருந்ததால் "ஒன்னும் பிரச்சனையில்லை சார்
எதுவானாலும் ஓபனாக சொல்லுங்க சார் "என்றோம்

டாக்டர் வருத்தம் தோய்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்

"கணேசன் நீங்க மனைவி தம்பி என உறவுக்காரங்க
யாரையும் கூட்டி வராததை வைத்தே  உங்க நண்பரை
மட்டும் கூட்டிவந்துள்ளதை வைத்தே உங்கள் நோய்
குறித்த விவரத்தை உங்கள் வீட்டில் யாருக்கும்
சொல்லவில்லை என அனுமானிக்கிறேன் சரியா ?"
என்றார்

நாங்கள் இருவரும் "ஆம்" என்பதுபோல் தலையாட்டினோம்

"அது கூட ஒருவகையில் நல்லதுதான்.இல்லையெனில்
இப்படி ஓபனாகப் பேசமுடியாது.முதலில் கேன்ஸரைப்பத்தி
ஓரு சின்ன விளக்கம் சொல்லிவிட்டு உங்கள் நிலையச்
சொல்கிறேன்.அப்போதுதான் நீங்கள் எந்த முறையில்
 சிகிச்சை மேற்கொள்வது என நீங்கள் முடிவெடுக்க
வசதியாக இருக்கும்"என்றார்

"கொஞ்சம் பேசிக்கொண்டிருங்கள்,இதோ வந்துவிடுகிறேன்"
என டாக்டரின் மனைவி எழுந்து செல்ல டாக்டர்
புற்று நோயினைக் குறித்து சுருக்கமாகச்
சொல்லத் துவங்க்கினார்

அவர் தொடர்ந்து சொல்லச் சொல்லத்தான் நாம்
எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து கொண்டு
நகத்தோடு கிள்ளி எறிய வேண்டிய புற்று நோயை
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கும்படியாக
முட்டாள்தனத்தைச் செய்து கொண்டு
நாமும் அதிகக் கஸ்டப்பட்டுக் கொண்டு நம்மைச்
சார்ந்தவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்
எனப் புரியத் துவங்கியது

(தொடரும் )

26 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//,நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழம் என்ன என்கிற மனோ நிலைக்கு ஏறக்குறைய வந்திருந்ததால் "ஒன்னும் பிரச்சனையில்லை சார் எதுவானாலும் ஓபனாக சொல்லுங்க சார் "என்றோம்//

இந்த இடத்தில் மனம் ஓரளவு பக்குவப்பட்டுள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவர் தொடர்ந்து சொல்லச் சொல்லத்தான் நாம்
எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து கொண்டு நகத்தோடு கிள்ளி எறிய வேண்டிய புற்று நோயை
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கும்படியாக
முட்டாள்தனத்தைச் செய்து கொண்டு நாமும் அதிகக் கஸ்டப்பட்டுக் கொண்டு நம்மைச் சார்ந்தவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம் எனப் புரியத் துவங்கியது//

படிக்கும் அனைவருக்கும் பயனுள்ள முன்னெச்சரிக்கை.

நன்றாகக் கொண்டு போகிறீர்கள். பாராட்டுக்கள்.

எமனோடு விளையாட, உறவாட 20 பகுதிகளாவது காத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் மெதுவாகவே வரட்டும். அதுவரை திக்திக் தொடரட்டும்.

தி.தமிழ் இளங்கோ said...

// அவர் தொடர்ந்து சொல்லச் சொல்லத்தான் நாம்
எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து கொண்டு
நகத்தோடு கிள்ளி எறிய வேண்டிய புற்று நோயை
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கும்படியாக
முட்டாள்தனத்தைச் செய்து கொண்டு
நாமும் அதிகக் கஸ்டப்பட்டுக் கொண்டு நம்மைச்
சார்ந்தவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்
எனப் புரியத் துவங்கியது //

மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப் போகும், அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்!

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு கெட்டப்பழக்கமும் இல்லாதவர்களுக்குத்தான் இப்பிடியான சோதனைகள் வருதோன்னு சந்தேகமா இருக்கு, நண்பர் நலம் பெற வேண்டும்....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் .

அப்பாதுரை said...

முந்தைய பதிவிலே சொல்ல நினைத்தேன்.. இந்தப் பதிவில் மருத்துவரே அப்படி சொல்லும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. புற்று நோய் என்றால் வீட்டில் சொல்லியே ஆக வேண்டும் - வருத்தப்படுவார்கள் என்று சொல்வது பேதமை. அறியாமை. தன் மனைவி பிள்ளைகளை தனக்குச் சமமாக மதிக்காதவர்களே இப்படிச் செய்வார்கள் - மன்னிக்க வேண்டும்.

புற்று நோய் குணமாகும் என்பது தவறான செய்தியாகும். உடலில் ஒரு இடத்தில் புற்று நோய் வந்தால் இன்னொரு விதப் புற்று நோய் வர உடனடியாக 5% சாத்தியம் வந்து விடுகிறது. அது போதாதென்றால் தன் பரம்பரைக்குப் புற்று நோய் சாத்தியம் மிகத் துல்லிய தசமக்கணக்கில் கூடிவிடுகிறது. அதனால் புற்று நோயைப் பற்றிச் சொல்லி, அந்தக் குறிப்பிட்டப் புற்றுநோய் நிலை, குணமாகும் சாத்தியம் அனைத்தையும் சொல்வது தான் முறை. அந்த மருத்துவர் இந்த அறிவுரை வழங்காதது வியப்பாக இருக்கிறது.

பதிவு மனதைத் தொடுகிறது.

அப்பாதுரை said...

'புற்று நோய் 100% குணமாகும் என்பது தவறான செய்தியாகும்' என்று திருத்தி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறேன்.

புற்று நோய் குணமாகும். இன்றைக்கு நிறைய மருத்துவ முன்னேற்றங்கள் வந்துவிட்டன. எனினும், புற்று நோய்ச் சிகிச்சையின் பக்க விளைவுகள் ஆயுள் முழுதும் ஏதாவது ஒரு உபாதையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். யாரையும் கலவரப்படுத்த இதைச் சொல்லவில்லை. தெரிந்து கொள்வது நலம் என்ற எண்ணமே காரணம்.

இளமதி said...

ஆமாம் எதையுமே ஆரம்பநிலையில் கண்டறிந்தால் அதன் விளைவுகள், பாதிப்பு குறைந்த அளவே..
ம்.. தொடர்கிறேன்..

த ம.

கரந்தை ஜெயக்குமார் said...

தீய பழக்கங்கள் என்று ஒன்றுகூட இல்லாதவர்களுக்கு இந் நோய் வருவதுதான் கொடுமை அய்யா. இருபத்து நான்கு மணி நேரமும் குடித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும் இருப்பவர்கள் நன்றாகத்தான் உள்ளார்கள் அய்யா. விதியின் விளையாட்டிற்கு சட்டதிட்டங்கள் கிடையாது போலிருக்கிறது.
பதிவு மனதை நெகிழச் செய்கிறது அய்யா.
கவலையுடன் தொடர்கிறேன்

Unknown said...

இதை படிக்கும்போதே அந்த மெலிதான சோகம் நம்மையும் உள்ளிழுக்கும் எழுத்து நடை.....தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம் !

திண்டுக்கல் தனபாலன் said...

புற்று நோய் பற்றிய டாக்டர் கூறிய விவரங்களை அடுத்த பகிர்வில் எதிர்ப்பார்க்கிறேன்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொஞ்சம் பதற்றத்துடன் படிக்க வேண்டி இருக்கிறது.
தகவல்கள் அறிய அடுத்த பதிவை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 6

வெங்கட் நாகராஜ் said...

புற்று நோய் பற்றிய மேலதிக விவரங்கள் உங்கள் அடுத்த பதிவில் எதிர்பார்த்தபடி.....

G.M Balasubramaniam said...


புற்றுநோயை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும் பல ஆண்டுகள் சராசரி வாழ்க்கையை தொடரும் அளவுக்கு மருத்துவத் துறை முன்னேறி இருக்கிறது. ஆனால் என்ன சொல்ல.? மருத்துவச் செலவு சாதாரணர்களுக்குக் கட்டுப்படியாது.

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்! நன்றி!

கவியாழி said...

நகத்தோடு கிள்ளி எறிய வேண்டிய புற்று நோயை
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கும்படியாக
முட்டாள்தனத்தைச் செய்து வருகிறோம் என்பது உண்மைதான்.

சக்தி கல்வி மையம் said...

தொடருங்கள்..

குட்டன்ஜி said...

நல்லா பில்டப் பண்றீங்க!டென்சன் ஏறுது

மாதேவி said...

வயிற்று வலி தொடர்ந்தபோதே சென்றிருந்தால் நோயின் தாக்கம் குறைந்திருக்கும்.

....தொடர்கின்றேன்.

reverienreality said...

நலமா ரமணிஜி...

தொடருங்கள்..அடுத்த பதிவை எதிர் நோக்கி...

Seeni said...

mmmm...

கீதமஞ்சரி said...

மருத்துவர் தொடர்ந்து சொல்லும் செய்திக்காக காத்திருக்கிறேன். பல திரைப்படங்களில் காட்டப்படும் காட்சி ஒன்று. நோயாளிக்கு என்ன நோய் என்பதை அவரைத் தவிர அனைவருக்கும் தெரிந்திருக்கும். எல்லோரும் அவரைப் பார்த்து பரிதாப்படுவார்கள். கூடிக்கூடி அழுவார்கள். ஆனால் மேலைநாடுகளில் ஒருவருடைய நோய் அவருக்குதான் முதலில் அறிவிக்கப்படுகிறது. நோயாளி சம்மதித்தால் மட்டுமே உறவினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. நோயாளியிடம் நோயின் தன்மையைப் பற்றியும் நோய்க்கான சிகிச்சை குறித்தும் பரவலாய் அறிவுறுத்தப்படுகிறது. இதனாலேயே நோயாளி மனத்தளவில் பக்குவப்படுகிறார். நோயை எதிர்த்துப் போராடும் துணிவையும் பெறுகிறார். இங்கே மருத்துவர் நண்பரிடம் நேரடியாக நோயைப் பற்றிப் பேசுவதும் அந்த அடிப்படையில் அமைந்திருப்பது வரவேற்புக்குரிய செய்தி.

அருணா செல்வம் said...

தொடருகிறேன் இரமணி ஐயா.

ஸாதிகா said...

நகத்தோடு கிள்ளி எறிய வேண்டிய புற்று நோயை
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கும்படியாக
முட்டாள்தனத்தைச் செய்து கொண்டு
நாமும் அதிகக் கஸ்டப்பட்டுக் கொண்டு நம்மைச்
சார்ந்தவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்
எனப் புரியத் துவங்கியது//ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..என்ன சொல்வது?

Ranjani Narayanan said...

நோயைப் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே ரொம்பவும் குறைச்சல் தான்.
என்ன செய்வது?

Post a Comment