Wednesday, June 19, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடு (12 )

இரவு  மணி எட்டை நெருங்கியது
இப்போது போனால்தான் எதிரிலுள்ள மெஸ்ஸில்
டிபன் ஏதாவது கிடைக்கும்.நான் கடிகாரத்தைப்
பார்ப்பதை டாக்டரும் கவனித்துவிட்டார்

அவர் தன் மனைவியின் பக்கம் திரும்பி
" நீ போய் எடுத்து வை சரியாய் இருக்கும்"என்றார்

பின் டாக்டர் எங்களைப் பார்த்து தொடர்ந்து
பேசத் துவங்கினார்.

"இப்போது இதுவரை நான் பேசியது எல்லாம்
பொதுவானது.மிகச் சரியாக நோயைக் குறித்து
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசியது
இப்போது உங்கள் நிலைபற்றிப் பேசுவோம

நீங்கள் துவக்கத்திலேயே நோயை நிர்ணயம்
செய்யாததால் கொஞ்சம் நோய் முற்றி உள்ளது

இந்நிலையில் அறுவைச் சிகிச்சையோ
கதிரியக்கச் சிகிச்சையோதான் இந்த நிலைக்கு
சரியான தீர்வாக இருக்கும்,அது குறித்து
உங்களிடம் தெளிவாகப் பேசத்தான் நான்
இங்கே உங்களை வரவழைத்தேன்
அதன் சாதக பாதகங்கள் குறித்து மிகத் தெளிவாகப்
புரிந்து கொண்டு நீங்கள்தான் சரியான
முடிவெடுக்க வேண்டும்"என்றார்

இந்த சமயத்தில் "எல்லாம் ரெடி
வாங்க சாப்பிடலாம் "என்றபடி டாக்டரின்
மனைவி வராண்டாவில் இருந்து குரல் கொடுத்தார்

"சரி சார் நாங்கள் வருகிறோம் " காலையில்
திரும்பவும் தங்களைப் பார்க்கிறோம் : என்றபடி
நானும் கணேசனும் எழுந்தோம்

"உங்களுக்கும் சேர்த்துதான் டிபன் ரெடி
செய்துள்ளார்.இன்று நீங்கள் இருவரும் எங்கள்
விருந்தாளி.வாருங்கள் " என எங்களைக்
கைபிடித்துஅழைத்தபடி விட்டினுள்
அழைத்துச் சென்றார்

எங்களால் மறுக்க இயலவில்லை

சாப்பிட்டு முடித்து மீண்டும் தோட்டத்து
நாற்காலியில்வந்து அமர்ந்தோம்

நான் தான் பேச்சைத் துவங்கினேன்
"சரி டாக்டர் அறுவை சிகிச்சையோ கதிரியக்கச்
சிகிச்சையோதான் முடிவென்றால் நோய்
குணமடைய வாய்ப்பிருக்கிறதா ?அதற்கு
உத்தேசமாக எத்தனை மாதமாகும் ?
எவ்வளவு செலவழியும் "என்றேன்

"சரியாகக் கேட்டீர்கள் இதைச் சொல்லத்தான்
நான் சுற்றிவளைத்துப் பேசுகிறேன்
நீங்கள் நேரடியாகக் கேட்டுவிட்டது கூட
நல்லதுதான் "என்றார்

பின் சிறிது நேரம் அமைதியாக எதையோ
யோசிப்பது போல இருந்தவர் பின் வருத்தம்
தோய்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்

"நீங்கள் நான் சொல்கிற எதையும் நெகட்டிவ்வாக
எடுத்துக் கொள்ளக் கூடாது.
எனது பத்தாண்டு கால அனுபவத்தில்
இதே முற்றிய நிலையில் வந்தவர்கள் பலரை
சந்தித்திருக்கிறேன்.சிலருக்கு கதிரியக்கச்
சிகிச்சையும் பலனற்றுப் போய் இருக்கிறது
சிலருக்கு தொடர்ந்து மாத்திரைச் சாப்பிட்டே
கடைசி வரை அதிகத் தொந்தரவு செய்யாமலும்
இருந்திருக்கிறது.

வசதியற்ற ஏழைகள் ஒரே முடிவாக
எங்களுக்கெல்லாம் அவ்வளவு வசதி இல்லை சார்
எல்லாம் ஆண்டவன் விட்ட வழி
மாத்திரை போதும் சார் என சட்டென
முடிவெடுத்துவிடுகிறார்கள்

பணக்காரர்களுக்கும் பிரச்சனையில்லை
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சார்
எந்த சிகிச்சையும் பார்த்துவிடுவோம் என
உடனடியாக முடிவெடுத்துவிடுகிறார்கள்

இடையில் மாட்டிக்கொண்டு முடிவெடுக்க முடியாது
அல்லாடுவதும் தவறான முடிவெடுத்து பின்
அவரது குடும்பத்தையேபொருளாதார ரீதியாக
நிராதரவாக விட்டுவிட்டும் போய் விடுவதும்
பெரும்பாலும் நடுத்தர மக்கள்தான்

நான் நோயின் நிலைகுறித்து ஆராய்வதோடு
மட்டுமல்லாது நோயாளியின் நிலை குறித்தும்
தீர விசாரித்துத் தெரிந்து கொண்டுதான்
வைத்தியதை முடிவு செய்வது என்பதில்
கவனமாக இருக்கிறேன்.அதிலும் குறிப்பாக
நோய் முற்றிவர்களிடத்தும் நடுத்தர மக்களிடத்தும்"
எனச் சொல்லி நிறுத்தினார்

டாக்டருடைய அன்னியோன்யமான அணுகுமுறை
எடுத்தவுடனேயே அதிர்ச்சிதராமல் விரிவாக
நோய் குறித்துப் பேசி பின் கணேசன் நிலை
குறித்துப் பேசியது,இப்போது அதற்காக இருக்கிற
சரியான தீர்வுகளைச் சொல்லி தீர்மானம் செய்யும்
முடிவை எங்களிடமே விட்டது எனக்குப்
பிடித்திருந்தது

கணெசன் அப்செட் ஆகிப் போயிருந்தான்
பரமபத விளையாட்டைப் போல நம்பிக்கையும்
அவ நம்பிக்கையும் மாறி மாறி வர அவன்
குழம்பிக் கிடப்பது அவன் முகத்தில் தெரிந்தது

"உங்களுக்கு நாளை இரவு வரை அட்மிஷன் உள்ளது
நிதானமாக யோசித்து உங்கள் முடிவைச்
சொல்லுங்கள் அவசரமில்லை.
அதற்கேற்றார்போல வைத்தியத்தைத்
துவங்கிவிடலாம் " என டாக்டர் முடிவாகச் சொல்ல
நாங்கள் விடைபெற்றுக் கொண்டு வார்டுக்கு வந்தோம்

இருவருக்கும் இரவு முழுவதும் தூக்கமில்லை
தூங்குவது போல் அவனுக்குத் தெரியட்டும் என நானும்
எனக்குத் தெரியட்டுமென அவனும் காலைவரை
தூங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தோம்

(தொடரும் )

23 comments:

Anonymous said...

''..தூங்குவது போல் அவனுக்குத் தெரியட்டும் என நானும்
எனக்குத் தெரியட்டுமென அவனும் காலைவரை
தூங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தோம்...'''

mmmmm....என்ன சொல்வது! பெருமூச்சைத் தவிர......
வேதா. இலங்காதிலகம்.

”தளிர் சுரேஷ்” said...

வேதனையான அனுபவம்! தொடர்கிறேன்! நன்றி!

G.M Balasubramaniam said...


சிகிச்சைக்காக உத்தேச செலவு என்று டாக்டர் ஏதாவது சொன்னாரா.? தொடர்கிறேன்/

ரிஷபன் said...

பரமபத விளையாட்டைப் போல நம்பிக்கையும்
அவ நம்பிக்கையும் ..

பரபரப்பும் ஆர்வமும் எங்களுக்கு !

மாதேவி said...

டொக்டரின் அணுகு முறை பிடித்திருந்தது.

அடுத்து...........

ezhil said...

அருமையான மருத்துவராக இருக்கிறாரே....

கவியாழி said...

குடும்பத்தையேபொருளாதார ரீதியாக
நிராதரவாக விட்டுவிட்டும் போய் விடுவதும்
பெரும்பாலும் நடுத்தர மக்கள்தான்//ஆமாம்இறுதியில் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சும்

இளமதி said...

மருத்துவரின் அணுகுமுறை அருமை. ஆனாலும் உங்கள் இருவரின் மனப்போராட்டத்தையும் நன்கு உணரமுடிகிறது.

தொடர்ந்து.....

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த நேரத்தில் மனம் எத்தனை வேதனைப் பட்டிருக்கும் என்பதை உணர முடிகிறது...

சசிகலா said...

பணக்காரர்களுக்கும் பிரச்சனையில்லை
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சார்
எந்த சிகிச்சையும் பார்த்துவிடுவோம் என
உடனடியாக முடிவெடுத்துவிடுகிறார்கள்

இடையில் மாட்டிக்கொண்டு முடிவெடுக்க முடியாது
அல்லாடுவதும் தவறான முடிவெடுத்து பின்
அவரது குடும்பத்தையேபொருளாதார ரீதியாக
நிராதரவாக விட்டுவிட்டும் போய் விடுவதும்
பெரும்பாலும் நடுத்தர மக்கள்தான்.

அவரவர் சூழலை அப்படியே சொன்னிங்க. மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ஓட எங்கிருந்து தூக்கம் வரும்.

அப்பாதுரை said...

நடுத்தர வர்க்கத்தின் இன்னொரு பரிமாணம். சரியாகச் சொன்னீர்கள்.

ஸாதிகா said...

வரிகளில் மனதை கலங்கடித்து விட்டீர்கள்:(

சென்னை பித்தன் said...

நடுத்தர வர்க்கத்தின் நிலை பற்றி அழகாகச் சொல்லி விட்டார் மருத்துவர்

கரந்தை ஜெயக்குமார் said...

நடுத்தர வர்க்கம்தான் என்றுமே அல்லல் படும் வர்க்கம். வேதனையாக இருக்கின்றது அய்யா.

Avargal Unmaigal said...

இந்த காலத்தில் இப்படியும் சில நல்ல டாக்டர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சிரியப் பட வைக்கும் விஷயம்தான்


வாழ்க்கையில் இப்படிபட்ட பல துயரங்களை நாம் பல சமயங்களில் அனுபவித்து வருகிறோம் ஆனால் அதை எடுத்து சொல்லும் முறையும் அருவி போல உங்களிடம் வார்த்தைகள் வந்து விழுவதையும் கண்டு ஆச்சிரியப் பட வைக்கின்றன. பாராட்டுக்கள் சார்

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

vimalanperali said...

இது போல டாக்டர்கள் அமைவது அபூர்வம்.

துளசி கோபால் said...

இப்போதுதான் விட்டுப்போன பகுதிகள் அனைத்தையும் வாசித்தேன். மருத்துவரின் அணுகுமுறை அபாரம்.

கணேசனுக்கு என்னஆகுமோ..... என்ற பதைப்பைவிட அவர் மனைவியின் நிலை நினைத்துதான் மனம் விம்முகிறது:(

தி.தமிழ் இளங்கோ said...

இந்த பதிவின் முக்கிய தகவல்: கொடுமையான நோயின் போது ஏழை, பணக்காரன், இவர்களுக்கு இடைப்பட்ட நடுத்தர வர்க்கம் எடுக்கும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை உணர்த்திய டாக்டரின் அனுபவம்.

பால கணேஷ் said...

மருத்துவம் ஒரு சேவை அல்ல, வியாபாரம் என்றாகி விட்ட இக்காலத்திலும் இப்படி சில நல்ல மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். மிடில் கிளாஸ் மென்டாலிட்டி பற்றி மருத்துவர் சொன்னது ரொம்பச் சரி. அனுபவத் தொடர் மனதை நெகிழ வைக்கிறது ஒவ்வொரு பகுதியிலும்!

RajalakshmiParamasivam said...

உங்களது இந்தத் தொடரைப் படிக்கும் தைரியத்தை இழந்து விட்டேன்... உண்மை.

இராஜராஜேஸ்வரி said...

மருத்துவரின் பக்குவமான அணுமுறை பாராட்டுக்குரியது..

Ranjani Narayanan said...

மருத்துவர் எத்தனை நல்லவராக இருக்கிறார்! அவரது அன்பான அன்னியோன்யமான வார்த்தைகளிலேயே பாதி நோய் குணமாகும் போலிருக்கிறதே!

Post a Comment