Saturday, July 20, 2013

"வலி " தீர்க்கும் " வழி "

குளத்திற்கு குளிக்கச் சென்று
சேறு பூசி  வீடு திரும்பல் சரியா ?

கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்று
"நோட்டம் "விட்டுத் திரிவது முறையா ?

வேலைக்குச் சம்பாதிக்கச் சென்று
'சம்திங்கில் "கவனம் கொள்வது தெளிவா ?

சேவை செய்ய அரசியலுக்கு வந்து
"சுருட்டல் "நினைப்பில் திரிவது நெறியா

அதனைப் போலவே

கல்லூரிக்கு படிக்கச் சென்று
"காதல் வலையில் " சிக்கி வீழ்வது அறிவா ?

கல்லூரிக் காலங்களில்
அரசியலைப் புரிந்து கொள்வோம்
அரசியல் வேண்டாம் நமக்கு
அதற்கு காலம் நிறைய இருக்கு

கல்லூரிக் காலங்களில்
காதலையும் புரிந்து கொள்வோம்
காதல் வேண்டாம் நமக்கு
அதற்கும் காலம் நிறைய இருக்கு

மேற்ச்சொன்னவையெல்லாம்
ஜாதி மதம் கடந்து
அனைவருக்கும் பொதுவானவதே
இதனை தெளிவாய் யாவரும் அறிவோம்

வேதனையும் வலிகளுமற்ற
ஒரு புதிய விடியலை
இனியேனும் படைக்க முயல்வோம்

தடங்களும்  தடைகளுமற்ற
ஒரு புதிய வழியை
இனியேனும் வகுக்கத் துணிவோம்

25 comments:

Ambal adiyal said...

திட்டமிட்டு நடத்தப்படும் செயல்கள் கூடாது .எனினும்
சந்தர்ப்ப வசத்தால் நிகழ்பவை யாவும் இயற்கையின்
நியதி .எல்லாவற்றிற்க்கும் பொதுவில் எந்த விசயத்திலும் மனிதன் தன்னைத் தானே கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் நற் குணத்தை வளர்த்தலே முறையாகும் .சிறப்பான இவ் வரிகளுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
ஐயா .

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாவற்றிர்க்கும் தீர்வாக, சமத்தான நிதானம் இருந்தாலே எல்லாம் அந்தந்த நேரத்தில் [[காலத்தில்]] நடக்கும் நிதானமாக இல்லையா குரு...!

Seeni said...

unmaithaanga ayyaa..!

Avargal Unmaigal said...

மிகவும் நல்லதொரு வழிகாட்டல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரஸித்தேன். அறிவுரைகள் அருமையாக உள்ளன. நன்றி.

ரமேஷ் வெங்கடபதி said...

பருவ வயதில் வராத காதலா..
அப்போது வராமல் எப்போது
என்று கவித்துவம் பேசுகிறார்களே..?
காதலின் ஆதரவாளர்கள்!

வேடந்தாங்கல் - கருண் said...

கவிதை அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

உணர்ந்து கொள்ள வேண்டிய ஆலோசனைகள்... வாழ்த்துக்கள்...

கவியாழி கண்ணதாசன் said...

மாணவப் பருவம் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டும்
மாற்றங்கள் வாழ்க்கைக்கும் உயர்வுக்குமே எழுச்சியாய் இருக்க வேண்டும்.நீங்கள் சொல்லும் அறிவுரைகள் அனைத்தும் சரியே.இந்த ஆலோசனையை பகிர்ந்தே அனைவரிடத்திலும் சொல்ல வேண்டும்

கரந்தை ஜெயக்குமார் said...

இளஞ்சிறார்கள்
அறிய வேண்டிய
உணர வேண்டிய
அற்புத வரிகள் அய்யா

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிவுரை.... உணர்ந்து கொண்டால் சிறப்பு....

முகப்புத்தகத்திலும் இங்கேயும் படித்தேன். ரசித்தேன்...

த.ம. 7

மாதேவி said...

உணர்ந்துகொள்ள வேண்டியவை.

இளமதி said...

ஐயா... காலத்தின் கொடுமை கட்டுக்கடங்காத கொடுமைகளும் வன்முறைகளும் நலிந்துவிட்டன.

யாவரும் உணர்ந்துகொள்ள நல்லவரிகள், அருமையான ஆலோசனைகள் கூறினீர்கள்.
அனைத்தும் சிறப்பே!
வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

சன் டிவியில் குட்டி சுட்டிஸ் என்றொரு நிகழ்ச்சி. அதில் ஒரு சிறுவன் பெரியவனான பின் கல்லூரிக்குப் போவேன் என்பான். கல்லூரிக்குப் போய் என்ன செய்வாய் என்று கேட்டதற்கு “ காதல் செய்வேன்” என்பான்.இப்படி இருக்கிறது குழந்தைகள் எண்ணம் கலேஜே காதல் செய்ய என்னும் எண்ணம் வலுக்கிறது.அறிவுரைகள் காதில் ஏற வேண்டுமே.

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான அறிவுறுத்தல் அன்பரே.

T.N.MURALIDHARAN said...

நல்ல கேள்விகள். அதற்கான விடையும் கூறி விட்டீர்கள். நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்

T.N.MURALIDHARAN said...

த.ம.10

அருணா செல்வம் said...

வணக்கம் இரமணி ஐயா.
உங்களைத் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளேன். என் அழைப்பைத் தயவுகூர்ந்து ஏற்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Suresh Kumar said...

//மேற்ச்சொன்னவையெல்லாம்
ஜாதி மதம் கடந்து
அனைவருக்கும் பொதுவானவதே
இதனை தெளிவாய் யாவரும் அறிவோம்//

ஆம் ஐயா, சிலர் இதை புரிந்து கொள்ளாமல் வலி நிறைந்த வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள். இன்னும் சிறிது அதிகமாக எழுதி இருக்கலாமோ என்று எண்ண வைத்த வரிகள்.... தொடருங்கள் தொடர்கிறோம் ! நன்றி !

ezhil said...

எவ்வெவற்றை எப்போது செய்ய வேண்டுமென ஒரு கால நேரம் உண்டு அதை உணர்ந்து நடந்துகொள்ளச் சொல்வதாய் உங்கள் கவிதை...

Ranjani Narayanan said...

அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டியதை செய்வோம். காலம் மாறிச் செய்வதால் தீமையே.
//தடங்களும் தடைகளுமற்ற
ஒரு புதிய வழியை// நிச்சயம் வகுக்க வேண்டும்.

அருமையான படைப்பு.
பாராட்டுக்கள்!

Anonymous said...

அறிவுரைகள் கொஞ்சம் சிரமமானது (பலரிற்கு.).
நல்லது நடப்பது நலம் தான்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

அப்பாதுரை said...

அறிவுரை வழங்கும் தகுதி இருக்குதா நமக்கு என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறதே :)

ஹேமா said...

மூளையில் பதித்துக்கொண்டாலும் மனம் தாவிவிடுகிறதே....அதுதான் கஸ்டம் !

கோமதி அரசு said...

மாணவ பருவ பொறுப்புணர்ந்து நடக்க நல்ல அறிவுரை.
காதல் செய்வது தப்பில்லை காலம் வரும் வரை காத்து இருப்பது நலம்.

Post a Comment