Saturday, October 12, 2013

காடாகிவரும் நாடு

வனத்தொடு வாழும் விலங்குகளாய்
தன்இனத்தோடு வாழுவதே பாதுகாப்பென
மனிதன் நிலையும்
ஆகிப் போகுமாயின்
நாடும் ஒருவகையில் காடுதானே
மனிதனும் நிச்சயம் மிருகம்தானே !

எதிர்படுபவை எல்லாம்
எதிரியெனப் பார்த்துப் பாய்வதும்
மூர்க்கமாய் முதலில் தாக்குதலே
நிலைத்தலுக்கான விதியென்றாயின்
மனிதனும் விலங்குதானே
அவன் மனமும் கொடிய காடுதானே !

உணவும் புணர்தலுமே
வாழ்விற்கான அர்த்தமாயின்
உடல் வலிமை ஒன்றே
அதனை அடையும் வழியென்றாயின்
காட்டின் விதிதானே நாட்டின் விதியும்
நாட்டிற்கெதற்கு தனியாய் சட்டமும் நீதியும் ?

காடுகளை நாடாக்கும்
கொடுமையைத் தடுக்கும்முன்
காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம் !

விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !

31 comments:

ஸ்ரீராம். said...

மனதில் மனிதன் என்றுமே மிருகம்தானே...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைக்கு விலங்கு மனம் அதிகம் தான் ஆகி விட்டது... மாற வேண்டும்...

Anonymous said...

''...காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம்!
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம்...''
ஆம் இதை நிச்சயம் செய்ய வேண்டும்.
வேதா. இலங்காதிலகம்.

கரந்தை ஜெயக்குமார் said...

///காடுகளை நாடாக்கும்
கொடுமையைத் தடுக்கும்முன்
காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம் !‘////
நன்றாகச் சொன்னீர் ஐயா. நன்றி
ஒரு வகையில் நாட்டைவிட , காடு
பாதுகாப்பானது. பார்த்த மாத்திரத்தில் இந்த
விலங்கால் நமக்கு ஆபத்து வருமா, வராதா என்று அறிந்து கொள்ளலாம், ஆனால் நாட்டில் திரிகிற விலங்குகளைப் பார்த்து, இது புலியா, நரியா என அடையாளம் காணுதல் இயலவே இயலாது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காடுகளை நாடாக்கும்
கொடுமையைத் தடுக்கும்முன்
காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம் !//

மனித விலங்குகளை அடையாளம் காண்பது மிகவும் கஷ்டமே.

பகிர்வுக்கு பாராட்டுக்கள்.நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரியும் விலங்கினை ஒடுக்கப் பயில்வோம் !

சிறப்பான ஆக்கம்..!பாராட்டுக்கள்.

Muruganandan M.K. said...

இதை எப்பொழுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ?
"..காடுகளை நாடாக்கும்
கொடுமையைத் தடுக்கும்முன்
காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம் .." அருமை

Anonymous said...

புலி போல பதுங்குகிறோம்.
நரி போல நயவஞ்சகம் செய்கிறோம்.
சிங்கம் போல வேட்டையாடுகிறோம்.
ஆம். நாடும் காடே.

கே. பி. ஜனா... said...

அற்புதமான கவிதை!

Anonymous said...

வணக்கம்
ஐயா
காடுகளை நாடாக்கும்
கொடுமையைத் தடுக்கும்முன்
காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம்
கவிச்சக்கர வர்த்தி உங்களின் கவிதையில் சமுக விழிப்புணர்வு அதிகம்... அருமை வாழ்த்துக்கள் ஐயா..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி said...

விலங்கினைக் கூடப் பழக்கிவிடலாம்..

விலங்கு மனம் கொண்ட மனிதம் மாறுவது என்று...

நல்ல சிந்தனை! அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

தி.தமிழ் இளங்கோ said...

மனிதன் - ஒரு சூப்பர் விலங்கு என்பதைச் சொல்லாமல் சொன்னீர்கள்.

Unknown said...

யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு யானை ஊருக்குள் வருவதாக கூப்பாடு !அதற்குபதிலாக விலங்கு மனம் படைத்தோரை காட்டுக்குஅனுப்பி விடலாம் !

Iniya said...

உண்மை தான் மிருகங்களை அடையாளம் கண்டு விலகலாம். மனித மிருகங்களை இனம் காண முடியாமல் மாட்டிக் கொண்டு விடுகிறோம்.நாட்டை விட காடு பாதுகாப்பு போல் தெரிகிறது

நல்ல சிந்தனை அருமை தொடர வாழ்த்துக்கள்

vimalanperali said...

வாஸ்தவம்தான்.மனங்களில் விலங்குகளை குடிகொள்ள அனுமதிக்காமலிருப்பது.ஆனால் சமீபங்களாக சாலைவிரிவாக்கம் மற்றும் இதரப்பணிகளுக்காகாய் அரசின் கையாலேயே சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு கழுத்தறுபட்ட மனித உடலாய் நிற்பது இயற்கையைப்பற்றியான எந்த விழிப்புணர்வை எட்ட நாம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய அவலத்தில் உள்ளோம்/

Unknown said...

விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !//

ஒப்பீடு அருமை! மனிதன் உணர்ந்து நடந்தால் மனித நேயம் மலரும்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம் !// உண்மைதான் ஐயா! காட்டில் கூட எந்த விலங்கு எப்படி வரும் என்று ஒருவாறு அறிந்து தப்பித்துக்கொள்ளலாம்..நாட்டில்? :(
த.ம.8

”தளிர் சுரேஷ்” said...

விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !// சிறப்பான வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

மகேந்திரன் said...

///உணவும் புணர்தலுமே
வாழ்விற்கான அர்த்தமாயின்
உடல் வலிமை ஒன்றே
அதனை அடையும் வழியென்றாயின்
காட்டின் விதிதானே நாட்டின் விதியும்
நாட்டிற்கெதற்கு தனியாய் சட்டமும் நீதியும் ?////
சரியான கேள்வி ஐயா...
உழைத்து வியர்த்து உண்டு களித்து..
இன்புறுதல் விடுத்து
வன்கொடுமையால் உடல்பலத்தால்
ஏச்சி பிழைக்கும்
ஏக்கத்தவர்கள் இருக்கும்
இந்நாட்டுக்கு காட்டின் சட்டம் போதுமே..
ஆட்சியும் ஆள்வோரும்
சட்டமும் காவலும் எதற்கு..

வெங்கட் நாகராஜ் said...

//விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !//

இதை மட்டும் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தால்....

நம்பள்கி said...

[[[காடுகளை நாடாக்கும்
கொடுமையைத் தடுக்கும்முன்
காடாகி வருகிற நாட்டைக்
காக்க முயல்வோம் !]]

மூன்றாவது உலகப்போர் தண்ணீர்க்கு தான்; நம் உடம்பில் ஓடும் ரத்தமே தண்ணீரினால் ஆன கலவை. காட்டை மரங்களை அழிக்கும் அரசு முட்டாள் அரசு!

vote plus 1

பால கணேஷ் said...

மனக்காட்டில் திரிகிற விலங்கினை ஒடுக்குதல்...! அருமை! அது மட்டும் முடிந்துவிட்டால்... குற்றங்கள்தான் ஏது?

கவியாழி said...

உண்மைதான்

Typed with Panini Keypad

மாதேவி said...

மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !//
நன்றாகச்சொன்னீர்கள். அவசியமானதும் கூட.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மையை அழுத்தமாக சொல்லி விட்டீர்கள். மன விலங்குகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது இன்றைய முக்கிய தேவை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம 12

G.M Balasubramaniam said...


Man is a social animal என்றுதானே அறியப் படுகிறான். ஒப்பிட்டுப் பதிவு இட்டு அந்த நிலை மாற வேண்டும் என்ற எண்ணம் ஓக்கேதான்.

சக்தி கல்வி மையம் said...

மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !.// கண்டிப்பா...

சக்தி கல்வி மையம் said...

தம. 13..

கோமதி அரசு said...

விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !//
மனதில் விலங்கின பதிவுகளை களைந்தால் மனிதன் தெய்வமாய் மாறி விடுவான் .
அருமையான கவிதை.

சசிகலா said...

விலங்குகளைப் பழக்கி
வெற்றி கொள்ளும்முன்
மனக்காட்டில் திரிகிற விலங்கினை
ஒடுக்கப் பயில்வோம் !

நல்ல வழிமுறையை சொன்னீர்கள் ஐயா. பின்பற்றினால் காடும் செழிக்கும் நாடும் வளமாகும்.

Post a Comment