Thursday, October 17, 2013

குமுதத்தின் ராஜதந்திரம்

குமுதம் இதழ் இந்த வாரம் தீபாவளி
சிறப்பு மலர்களில் ஒரு மலராக
இணையச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது
அதில் ஒரு கட்டுரை வலைத்தளம் குறித்த
கட்டுரையாக வெளிவந்திருக்கிறது,

அந்த கட்டுரையை வலைத்தளத்தித்தில்
அதிகப் பரிட்சயம் உள்ளவர்தான் எழுதியிருக்கிறார்
 என்பதுநம் வலைத்தளதின் பலம் மற்றும்
 பலவீனங்கள் குறித்து மிக எளிமையாகச்
சொல்லிப் போவதுபோல்அடிஆழம் தொட்டு
இருப்பதில் இருந்து நிச்சயமாக
புரிந்து கொள்ளமுடிகிறது.

சிறந்த முதலாளி என்பவர் எப்போதும்
எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளியை
 பயன்படுத்திக்கொள்வது என்பதிலும்தான் ---

உண்மையில் தொழிலாளிக்கு அதிகம்
பயன்படாமல்பயன்படுவதுபோல் நடிப்பது
எப்படி என்பதிலும்தான்---
மிக கவனமாக இருப்பார்

கெட்டிகார அரசியல்வாதி கூட தான் அதிகம்
 தியாகம்செய்வது போல் நடித்தபடி மக்களை
 எப்படித் தனக்காக அதிக பட்ச தியாகம்
செய்ய வைப்பது என்பதில்
மிகக் குறியாக குறியாக இருப்பார்

இணையத் தளத்தின் வளர்ச்சி நிச்சயம்
 பத்திரிக்கைகளுக்குசாதகமானதில்லையென்பது
 குமுதம் போன்ற வெகு ஜனப்
 பத்திரிக்கைக்காரர்களுக்கு புரியாதிருக்க
வாய்ப்பில்லை,ஆயினும் அவர்கள் ஏன் தனியாக
இணையத் தள சிறப்பிதலும் அதில் வலைத்தளம்
குறித்த கட்டுரையும் வெளியிடுகிறார்கள் எனில்
"அதில்தான் இருக்கிறது ஆச்சாரியரின்
 விபீஷண வேலை "

காலத்தின் போக்கோடு அனுசரித்துப் போகாத எதுவும்
கரையோரம் ஒதுக்கப்படும் என்பதுவும்
அதனோடுஇயைந்து போதலுமே நிலைத்தலுக்கான
சூத்திரம் என்பதுவும்அவர்களுக்குத் தெரியும்

இப்போது வருகிற சினிமாக்களில் எல்லாம்
பத்திரிக்கைகளுக்குநன்றி தெரிவித்து வாசகம்
போடுவதில் நமதுவலைத்தளங்களுக்க்கும்
சேர்த்து நன்றி சொல்வதில்
மிக கவனமாக இருக்கின்றன

காரணம் பத்திரிக்கையில் வருகிற விமர்சனத்தை விட
இணையம் மூலம் வருகிற விமர்சனங்கள் விரைவாக
மட்டுமின்றி மிகவும் கூர்மையாகவும் இருப்பதால் அது
தங்கள்  வசூலை பாதித்துவிடக் கூடாது என்பதில்
ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வே காரணம்.

அதைப்போலவே பத்தாம்பசலித்தனமாக இன்னமும்
சினிமாவுக்கெனவும் பயனற்ற வெறும் பொழுது போக்கு
விசயங்களுக்காக அதிகப் பக்கங்கள் ஒதுக்கியும் தனது
வியாபாரத் தந்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிற
ஒரு பத்திரிக்கை----

மக்கள் கவனம்  கொள்ளவேண்டிய விஷயங்களை
மிகச் சாதுர்யமாய் மறைத்து தேவையற்ற விஷயங்களில்
கவனம் கொள்ளவைப்பதில் மிகக் கவனமாய் இருக்கிற
ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கை---

மிகச் சரியாக தாமும் தற்கால உலகின் போக்கை
புரிந்து கொண்டிருக்கிறோம் என பம்மாத்துக் காட்டி
தன் வியாபார சாம்ராஜ்ஜியத்தை
நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கிற அற்ப
முயற்சியே இது

பிற பத்திரிக்கைகள் போல நல்ல வலைத் தளங்களையும்
நல்ல முக நூல் வாசகங்களையும் அறிமுகம் செய்து
அதன் மூலம் நல்ல கருத்து மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும் என்கிற எண்ணம் இல்லாது----

அதன் மூலம் இணையத் தளம் மற்றும் வலைத்தளம்
ஆகியவற்றின் வீச்சை மக்கள் அறியவிடாது----

வலைத்தளத்தையும் இணையத்தளத்தையும்
மேலோட்டமாக சொல்லிச் செல்வதன் மூலமே--

தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கெட்டிக்காரத்தனமாகச் செய்கிற அற்பத்தனத்தை
 நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்வோம்

அவ்வப்போது இதுபோன்ற அற்பப் பத்திரிக்கைகளுக்கு
நம் வலைத்தளம் மூலம் ஆப்படிப்பதன் மூலம்
அவைகளை மைய நீரோட்டத்திலிருந்து
ஒதுக்கிப் போடுதலே இலக்கியத்திற்கும்
 மக்களுக்கும் நாம் செய்யும்
மகத்தான தொண்டு எனப்புரிந்து
தொடர்ந்து செயல்படுவோம்

42 comments:

கவியாழி கண்ணதாசன் said...

காலத்தின் போக்கோடு அனுசரித்துப் போகாத எதுவும்
கரையோரம் ஒதுக்கப்படும்//உண்மையே

இராஜராஜேஸ்வரி said...

தெளிந்த கருத்துகள் கொண்டு அருமையாய் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்க:..!

Avargal Unmaigal said...


சூரியனை கை கொண்டு மறைக்க முடியாது அது போலத்தான் வலைத்தளங்களின் வளர்ச்சியையும் யாரலும் மறைக்க முடியாது

திண்டுக்கல் தனபாலன் said...

மேலோட்டமாக சொல்லிச் சென்றாலும் வலைத்தளத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதை... அவர்களின் அற்பத்தனத்தை சரியான விளக்கமாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் கருத்துரைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

Bagawanjee KA said...

சகோதரப் பத்திரிக்கையான ஆனந்த விகடனைப் பார்த்தாவது குமுதம் திருத்திக் கொள்ள வேண்டும் !
த .ம 3

MANO நாஞ்சில் மனோ said...

வலைதளங்களின் கூர்முனை எப்படி பட்டது என்று அவர்களுக்கும் தெரியாமலில்லை, எப்படியாவது முடக்க வேண்டும் என்றாலும் அவர்களால் முடியவும் இல்லை, பின்னே சூரியனை கைகொண்டு மறைத்து விட முடியுமா என்ன ?

Anonymous said...

வணக்கம்
ஐயா
வெளிப்படையாக கருத்து சொல்லிய விதம் நன்று..... பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா

புதிய பதிவாக.....நரகாசூரா...!விழித்தெழு...!.
வாருங்கள்.அன்புடன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஹ ர ணி said...

அன்புள்ள ரமணி சார்..

வணக்கம்.

எனக்குப் பிடித்த வலைப்பக்கங்களுள் உங்களுடையதும் ஒன்று. நடுவில் உங்கள் வலைப்பக்கம் தொழில்நுட்பத்தால் மாற்றியிருந்தீர்கள் . அதனால் என்னால் உள்ளே வர தெரியவில்லை.ஏனென்றர்ல் சுவையான பல தகவல்களைத் தங்கள் வலைப்பக்கத்தில் நான் சுவைப்பதுண்டு. அது இல்லாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். இன்றுதான் பழையபடி வந்துள்ளேன். நன்றி. இனித் தொடர்ந்து வருவேன்.

பால கணேஷ் said...

அந்­தக் ­கட்­டு­ரை­யில் ­ப­தி­வர்­கள் ­க­டற்­க­ரை­யி­லும் ­இன்­ன ­பி­ற ­இ­டங்­க­ளி­லும் ­சந்­திப்­ப­தை­ ­எள்­ளல் ­தொ­னி­யில் ­எ­ழு­தி­யி­ருந்­த­தைப் ­ப­டித்­த­போ­­தே ­என் ­வா­யி­லி­ருந்­து ­ப­ல ­கெட்­ட ­வார்த்­தை­கள் ­உ­திர்ந்­த­ன. நீண்­ட­தொ­ரு ­கண்­ட­னம் ­எ­ழு­த ­எண்­ணி­யி­ருந்­த ­எ­னக்­கு ­எ­ழு­த ­அ­வ­சி­ய­மில்லா­மல் ­தெள்­ளத் ­தெளி­வா­க ­அ­ழ­கா­க ­நீங்­கள் ­எ­­ழு­தி ­விட்ட்­டீர்­கள். ­அ­ரு­மை ­சார்!

சாய்ரோஸ் said...

மக்கள் கவனம் கொள்ளவேண்டிய விஷயங்களை
மிகச் சாதுர்யமாய் மறைத்து தேவையற்ற விஷயங்களில்
கவனம் கொள்ளவைப்பதில் மிகக் கவனமாய் இருக்கிற
ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கை--
மிகச்சரியான சாட்டையடி...
சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு...
பூனைக்கு மணிகட்ட இன்னும் பலரும் களத்தில் குதிக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு...

Avargal Unmaigal said...

@பால கணேஷ்
அந்த கட்டுரையை முடிந்தால் எனது இமெயிலுக்கு அனுப்பி வைக்கவும் avargal_unmaigal at yahoo dot com

வேடந்தாங்கல் - கருண் said...

சமகாலத்தில் வரும் மற்ற நல்ல பத்திரிகைகள் பார்த்தாவது இவர்கள் திருந்த வேண்டும்..

Anonymous said...

நெய்க்குத் தொன்னை ஆதாரமா தொன்னைக்கு நெய்
ஆதாரமா ?ஊடகங்கள் ஒன்றுக்கொன்று உரசாமல்
தத்தம் பாதையில் பயணிப்பது நன்று.

Ranjani Narayanan said...

நல்ல பதிலடி கொடுத்திருக்கிறீர்கள், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல.
இந்தக் கட்டுரை இணையத்தில் படிக்கக் கிடைக்குமா?
இணைப்பு இருந்தால் கொடுங்களேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலைப்பூ வளர்ச்சியை கண்டு பத்திரிகைகள் மிரள்கின்றன போல...

தமிழ்வாசி பிரகாஷ் said...

த.ம.7

Anonymous said...

சஞ்சிகைப் போக்கின் அலசல் மிக நன்று.
வேதா. இலங்காதிலகம்.

ஸ்ரீராம். said...

குமுதம் வாங்குவதில்லை என்பதால் படிக்கவில்லை. பழைய முத்து காமிக்ஸ் சைசில் புத்தகம் போடுபவர்களுக்கு எள்ளலுக்கும் நக்கலுக்கும் குறைவில்லை போல...!

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் கட்டுரையை இப்போதுதான் படித்தேன். அந்த குமுதம் பத்திரிகையை படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குமுதம் வாங்குவதோ படிப்பதோ இல்லை என்பதால் இராஜதந்திரத்தை தங்களின் இந்தப்பதிவு மூலமே ஓரளவு அறிய முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

s suresh said...

குமுதம் எப்போதும் இப்படித்தான்! வலைதளங்கள் வளர்ச்சி மூலம் அதற்கு சரியான பதிலடி கொடுப்போம்! நன்றி!

வெற்றிவேல் said...

நல்லா சொல்லியிருக்கீங்க அய்யா...


நான்லாம் குமுதம் படிச்சதே இல்லை...

புலவர் இராமாநுசம் said...

வார மாத இதழ்கள் எதுவும் நான் வாங்குவதோ
படிப்பதோ இல்லை! தங்கள் பதிவே அதைத் தெளிவாக்கி விட்டது !சாட்டை அடி! நன்றி இரமணி!

Ambal adiyal said...

குமுதத்திற்கு வந்த அச்சம் இது வலைத்தளத்திற்குக் கிடைத்த
வெற்றியே மகிழ்வான செய்தியை மிகவும் துணிச்சலுடன் பகிர்ந்துள்ளீர்கள்
ரமணி ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

உஷா அன்பரசு said...

குமுதம் வாங்குவதுமில்லை படிப்பதுமில்லை... இணையத்தின் வளர்ச்சியில் நிறைய வார, மாத இதழ்கள் அடிபட்டு போய்கொண்டிருப்பது நிஜம்தான்! இணைய பரிச்சயம் இல்லாத புத்தகங்களை மட்டும் நாடுபவர்களால்தான் அவை கொஞ்சம் நிலைத்திருக்கிறது. இப்போதே நாவல் படிக்க யாருமில்லை... கால போக்கில் தினசரி செய்தி தாள் மட்டும் வாசிக்கப்படும். வார, மாத இதழ்கள் நிலைப்பாடு கேள்விக்குறிதான். ஒரு காலங்களில் வார இதழ்களில் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு மட்டுமே இடம் கொடுத்து கொண்டிருந்தார்கள்.. இப்போது புதியவர்களுக்கு நிறைய இடம் கொடுப்பதும் வியாபார யுக்திதான்!

இன்னும் சில இதழ்கள் இணையத்திலிருந்தே விஷயங்களை சுட்டு போட்டு கொண்டிருக்கிறது.

வலைத்தளம் நல்ல விஷயம்..! இத்தனை எழுத்தாளர்களை அல்லவா அடையாளம் காட்டி கொண்டிருக்கிறது.

ஒரே விஷயம் வலைப்பக்கங்களில் பொதுப்படையாக வாசிப்பும், ரசிப்பும் அதற்கான கருத்தும் மட்டும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

இளமதி said...

ஓ.. இப்படிமா... !

உங்களால் இதை அறியமுடிந்ததே..
மிக்க நன்றி ஐயா பகிர்வினுக்கு!

துளசி கோபால் said...

அட! இப்படி ஒரு உத்தியா?

சினிமாவுக்கு நடுவில் இதற்கு(ம்) இடம் ஒதுக்க முடிஞ்சதோ அவர்களுக்கு?

ஒரு பத்திரிகையும் வாங்காததால் இதைப்பற்றி ஒன்னும் அறிவில்லை.

தகவல் தெரிஞ்சதே உங்கள் பதிவின் மூலம்தான்.

நன்றி.

அருணா செல்வம் said...

காய்த்த மரம் தான் கல்லடி படும்.

நன்றி இரமணி ஐயா.

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் ஐயா..
காலத்தின் போக்கில் அதன் நீரோட்டத்தில்
மீன்பிடிக்கப் பார்க்கிறவர்கள்..
தங்களின் குறைகளை மறைக்க
மற்ற நிறைகளை தங்களுடன்
இணைத்துக் கொள்வது போல...
நம் பயணத்தை நாம் தெளிவாக தொடர்வோம்...

கீத மஞ்சரி said...

தங்கள் பதிவின் மூலம்தான் தகவல் அறிந்தேன் .சமுதாய வளர்ச்சிக்கு உதவாத பத்திரிகையின் சுயலாபநோக்கைத் தெளிவுற படம்பிடித்த எழுத்து. மிகவும் நன்றியும் பாராட்டும் தங்களுக்கு ரமணி சார்.

தி.தமிழ் இளங்கோ said...

நேற்று சொன்னது போலவே மீண்டும் இன்று வந்து விட்டேன். இந்தவார குமுதம் (22.10.2013) வாங்கிப் பார்த்தேன். தீபாவளியை முன்னிட்டு அவர்கள் கொடுத்த இண்டர்நெட் ஸ்பெஷலைப் படித்தேன்.கவிஞர் ரமணியின் நியாயமான கோபம் எனக்கும் உறைத்தது. பத்திரிகையில் எழுதுபவர்கள்தான் எழுத்தாளர்கள் என்ற ம்னோபாவம் அங்கே தெரிகிறது. அவர்களது கத்திரியில் பதிவர்கள் எழுத்துக்கள் சிக்கவில்லையே என்ற கோபம். பெரிய பெரிய நடிகர் நடிகைகள் சின்னத்திரைக்கு வந்தது போல் அங்குள்ள பிரபல எழுத்தாளர்கள் எல்லோரும் ஒருநாள் இங்கு வந்துவிடுவார்கள்.

கிரேஸ் said...

குமுதம் படிப்பதில்லை ஐயா! ஆனால் உங்கள் பதிவிலிருந்து அவர்களின் செய்கையை அறிந்துகொண்டேன்..கண்டிக்கவேண்டியதுதான். வலைப்பதிவர்கள் அனைவரின் சார்பாகவும் கண்டித்து பதிவிட்டதற்கு நன்றி! தளம் ஏதாய் இருந்தால் என்ன? நல்ல எழுத்துக்கு என்றும் மதிப்பு உண்டு, அதை உணர வேண்டும் அனைவரும்..
த.ம.17

G.M Balasubramaniam said...

பத்திரிகை படிக்கவில்லை. வலைப் பதிவர் ஒருவர் எழுதியதுபோல் இருக்கிறது என்கிறீர்கள். வலையில் எழுதுவோர் பட்த்திரிகையில் தம் எழுத்து வந்தால்தான் பெருமை என்று நினைப்பதையும் மறுக்க முடியவில்லையே.

T.N.MURALIDHARAN said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
ஒரு திரைப்படத்துக்கான விமர்சனங்களை நூற்றுக் கணக்கானவர்கள் எழுதுகிறார்கள். ஆயிரக் கணக்கானவர்களால் படிக்கப் படிகிறது . இதனால் நிச்சயம் ஒரு விளைவு ஏற்படத்தான் செய்யும்

T.N.MURALIDHARAN said...

த.ம 18

Jeevalingam Kasirajalingam said...


சிறந்த கருத்துப் பகிர்வு
பத்திரிகை, சஞ்சிகை யாவும்
அறிஞர்களின் வலைப்பூக்களுக்குக் கிட்ட
நெருங்க முடியாது தான்...
இது
சின்னப்பொடியன்
என் கருத்து...
வலைப்பூக்களின் வளர்ச்சி
பத்திரிகை, சஞ்சிகை யாவற்றின்
வருவாயை ஆட்டம் காணச் செய்யுமே!

Manickam sattanathan said...

வலைத்தளங்கள் என்ற இன்றய சாதனம் சாதரணமாக எவராலும் எள்ளி நகையாடி ஒதுக்கித்தள்ளிவிட்டு செல்லும் அற்ப விஷயமாக இல்லை. என்பது முதல் காரணம். அதன் ஆழமும் ,வீச்சும், அகலமும் கண்டு செய்வது அறியாது இன்றய பத்திரிகை உலகம் வேறு வழி இன்றி அதே நீரோட்டத்தில் கலந்து ஓடி வருவது மட்டுமே இன்று கட்டாயமாகி விட்டது. வலைதளத்தின் பன்முகங்கள் ,அவைகளின் இன்றய வாழ்வியலில் சகல துறைகளிலும் உண்டாகிய தாக்கம் இவர்களை அச்சமடைய வைத்துள்ளது. இது குறித்து நாம் ஏன் கவலை பட வேண்டும்?

VENKAT said...

தமிழர்களின் இதயத்துடிப்பான பல பத்திரிக்கைகள் கார்பொரேட் நிறுவனங்களின் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருப்பவை. விளம்பரமே இல்லாமல் பத்திரிக்கைகள் நடத்தப்படுமானால் நம்மவர்கள் அவற்றைக் காசு கொடுத்து வாங்க எத்தனை பேர் முன் வருவார்கள்? வெட்டியான விஷயங்களே இன்றைய பொழுதுபோக்கு. இதற்குத் தொலைக்காட்சியும் ஓர் எடுத்துக்காட்டு. சிலபத்திரிகைகள் போனால் போகட்டும் என்ற பாணியில் ஏதோ சில நல்ல விஷயங்களை வெளியிட்டுவிடுகின்றன. பொதுவாக இன்டெர்னெட் ஸ்பெஷல் இதழில் சிலப் பல கம்ப்யூட்டர் கம்பெனிகள் நல்ல கலர் விளம்பரங்களை அள்ளி வழங்கியிருப்பார்கள். மற்றபடி வளைதலத்தைப் பற்றியெல்லாம் இவர்கள் அதிகமாக மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதில்லை. அது இவர்களின் நோக்கமுமில்லை.

விமலன் said...

பத்திரிக்கைகளின் பெருக்கத்தால் இணையம் அழிந்து விடப்போவதில்லை.24 மணி நேர செய்திச் சேனல்கள் இத்தனை வந்து விட்ட போதும் கூட தினசரிகள் இன்னுமும் கூடுதலாக முளைத்துக்கொண்டிருப்பது போலவே இதுவும்/

Muruganandan M.K. said...

மிக நல்ல பதிவு.
சுடச் சுடவும் பக்க சார்பின்றியும்
தெளிவாகவும் தகவல்களையும் விமர்சனங்களையும் படைப்புகளையும் தருவதில் வலைத்தளங்களை
அவர்கள் முந்தவே முடியாது

Anonymous said...

வணக்கம்
ஐயா
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment