Wednesday, November 13, 2013

ராஜாவான ரோஜா

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்ததே - அது
நூறு பூவில் அதுவும் ஒன்றாய்
கணக்கில் இருந்ததே

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-உடனே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டதே

பஞ்சம் பசியும் பிணியும் நாட்டில்
விரைந்து பெருகவே-எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்

பஞ்ச சீலக் கொள்கை கண்டு
உலகுக் களித்தாரே-அதனால்
ஐந்து கண்டமும்  புகழும் ஆசிய
ஜோதி ஆனாரே

முதலாய் இருப்பது மட்டும் என்றும்
பெருமை கிடையாது-அதிலே
முதன்மை பெற்று இருத்தல் ஒன்றே
பெருமை என்றுணர்ந்து

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்தாரே-நமது
இந்திய நாடு வளர்ந்து சிறக்க
வழியை வகுத்தாரே

குழந்தை மனதைக் கொண்டே அவரும்
வாழ்ந்து வந்ததனால்-என்றும்
குழந்தை நலமே நாட்டின் வளமென
உறுதி கொண்டதனால்

குழந்தை தினமாய் பிறந்த நாளை
சொல்லி மகிழ்ந்தாரே-என்றும்
உலகே விய ந்து   போற்றும்  உன்னதத்
தலைவர் ஆனாரே   

22 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நேருவைப் பற்றிய அருமையான கவிதை ஐயா! நன்றி!

Anonymous said...

வணக்கம்
ஐயா
நேருமாமா பற்றியும் நாளை நவம்பர்-14 இந்தியாவில் சிறுவர் நாள் அதையும் நினைவு படுத்தி எழுதிய கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

குழந்தைகள் தின சிறப்புக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

இளமதி said...

எதுகையும் சந்தமும் கொஞ்சும் கவிதை ஐயா!

மெட்டிசைத்து மனதிற்குள் பாடிப் பார்க்க அற்புதமாய் இருக்கின்றது.
சிறந்த நற்கருத்துடன் அருமையான கவிதை!

வாழ்த்துக்கள் ஐயா!

இளமதி said...

த ம.2

மாதேவி said...

நேருவை நினைவுகொள்ளும் ரோஜா அழகிய கவிதையாக. .

ஸ்ரீராம். said...

ரோஜாவுக்கோர் அடையாளத்தைத் தந்தவர்!

கரந்தை ஜெயக்குமார் said...

ரோஜாவிற்கு ஓர் அடையாளம் தந்தை நேருவின் நிலைவலைகளைப் போற்றுவோம்

அ.பாண்டியன் said...

வணக்கம் அய்யா,
நேருவை பற்றிய நேர்த்தியான கவிதைக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் தங்களுக்கு உரித்தாகட்டும். கவிதை அருமை.

RajalakshmiParamasivam said...

குழந்தைகள் தினத்தன்று நேருவைப் பற்றிய கவிதை அருமை..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரோஜா போலவே அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

அருணா செல்வம் said...

முதலாய் இருப்பது மட்டும் என்றும்
பெருமை கிடையாது-அதிலே
முதன்மை பெற்று இருத்தல் ஒன்றே
பெருமை....“

சிறப்புக் கவிதை சிந்திக்கத் துாண்டுகிறது இரமணி ஐயா.

Avargal Unmaigal said...

"கவிதை உலகின் ராஜா" எழுதிய ரோஜா கவிதை ரோஜாவைப் போல மலர்ந்து மணம் வீசுகிறது tha.ma 5

கவியாழி said...

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

உஷா அன்பரசு said...

very nice!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கவிதை ஐயா... வாழ்த்துக்கள்...

From Friend's L.Top...!

Yarlpavanan said...

"முதலாய் இருப்பது மட்டும் என்றும்
பெருமை கிடையாது-அதிலே
முதன்மை பெற்று இருத்தல் ஒன்றே
பெருமை என்றுணர்ந்து" என்ற அடி
நல்ல கோட்பாடு(தத்துவம்) என்பேன்.

vimalanperali said...

குழந்தைகள் தினங்களை கொண்டாடுகிறார்கள்.தினங்களில் குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்களா என்பதுவே இங்கு கேள்விக்குறியாக/

Iniya said...

நேருவை நினைவு கூர்ந்து தந்த கவிதை சிறப்பு.

"முதலாய் இருப்பது மட்டும் என்றும்
பெருமை கிடையாது-அதிலே
முதன்மை பெற்று இருத்தல் ஒன்றே
பெருமை ....அருமையான வரிகள்.

G.M Balasubramaniam said...

நேருவைப் பற்றி பலரும் விமரிசிக்கிறார்கள். நீங்கள பாராட்டிச்சொல்லிச் செல்லும் விதம் ரசிக்க வைக்கிறது. நேரு ஒரு சிந்தனையாளர். தொழிற்சாலைகளை இந்தியாவின் நவீனக் கோவில்கள் என்று சொன்னவர். அவரது எழுத்துக்களும் மேடைப் பேச்சும் அழகு மொழியில் ஆழமான கருத்துக்களுடன் இருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

குழந்தைகள் தினக் கவிதை மிக நன்று.....

கோமதி அரசு said...

குழந்தை தினமாய் பிறந்த நாளை
சொல்லி மகிழ்ந்தாரே-என்றும்
உலகே விய ந்து போற்றும் உன்னதத்
தலைவர் ஆனாரே //
ரோஜா, குழந்தை இரண்டையும் எப்போதும் நினைப்பதுபோல் நேருமாமாவும் நிலைத்து இருப்பார்.

Post a Comment