Friday, November 15, 2013

ஜாலியும் ஜோலியும்

"ஜோலி ஜோலி "என்றே இருந்தால்
வாழ்க்கைப் "போராய்ப்  " போகும் என்று
"ஜோலிக் "குள்ளே ஜாலியைக் கொஞ்சம்-சோற்றில்
உப்பைப் போலச் சேர்த்தார் அன்று

"ஜாலி " ஒன்றே வாழ்க்கை என்று
வாழ்தல் ஒன்றேச் சரியெனக் கொண்டு
வாலிபர் எல்லாம் மாறினார் இன்று-சோற்றை
ஊறு காய்க்குத் தொட்டுக் கொண்டு

பொழுதைப் போக்கத் தேவை இல்லை
போதல் ஒன்றே பொழுதின் தன்மை
உழைத்தக் களைப்பைப் போக்க மட்டும்-பொழுதுப்
போக்குப் போதும் என்றார் அன்று

போகும் வழியது தெரியா தென்று
பொழுது நின்று தவிப்பது போன்று
நாளும் பொழுதும் பொழுதை வீணே-இங்கே
போக்கித் திரிகிறார் பலரும் இன்று

அதனால் தானே தமிழில் இங்கு
"டயம்பாஸ் " என்கிறப் பெயரையேக் கொண்டு
உதவாக் கரையாய்ப்  புத்தகம் ஒன்று-அழகாய்
உலவியும் வருகுது பொழுதையும் விழுங்குது

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்

31 comments:

Anonymous said...

வணக்கம்
ஐயா

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்த காலம் இறந்த காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்

புவியில் வாழும் மனிதனுக்கு மிகவும் ஒரு விழிப்புணர்வுக்கவிதை
நீங்கள் சொல்வது போல..இழந்த காலத்தையும் இறந்த காலத்தையும் யாராலும் மீண்டு எடுக்க முடியாது.. கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
ஐயா

தமிழ்மணத்தில் வாக்கு போட்டாச்சி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்த காலம் இறந்த காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்

காலம் பொன் போன்றது..
கடமை கண் போன்றது..!

Athisaya said...

"ஜாலி " ஒன்றே வாழ்க்கை என்று
வாழ்தல் ஒன்றேச் சரியெனக் கொண்டு
வாலிபர் எல்லாம் மாறினார் இன்று-சோற்றை
ஊறு காய்க்குத் தொட்டுக் கொண்டு////////////////////////////
உண்மைதான் ஐயா!!!
உணரத்தான் மறக்கிறார்கள்.


வாழ்த்துக்களும் நன்றியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// இழந்த எதையும் பெற்றிட முடியும்...
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்... //

தன்னம்பிக்கை வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

உஷா அன்பரசு said...

காலத்தை ஜாலியா போக்கிட்டா அவ்வளவுதான்...

//இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்//- அருமை!

Unknown said...

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்//

காலம் பொன்போன்றது என்பது கூட பொருத்தமில்லை! போனால் பொன்னை திரும்ப
பெறலாமே!

RajalakshmiParamasivam said...

காலத்தின் அருமையை உணராதவர்களுக்கு கவிதையால் சவுக்கடி கொடுத்து விட்டீர்கள். நன்றி ஒரு அருமையான கவிதையை பகிர்ந்ததற்கு.

அ.பாண்டியன் said...

வணக்கம் அய்யா..
எல்லாமே மாறி போய் விட்டது இன்று. விகடனில் இருந்து இப்படியொரு பத்திரிக்கை ஆபாசக் குப்பை இதை அனைவரும் வெறுக்க வேண்டும் இல்லையெனில் விகடனே மனம் மாறி நிறுத்த வேண்டும். இழந்தவைகள் மீண்டும் வாரா அது இளமைக்கு மிகப் பொருந்தும். சம்பாதிக்க வேண்டிய வயதில் ஊர் சுற்றினால் வாழ்ந்து என்ன பயன்! அழகான சிந்தனை. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

”தளிர் சுரேஷ்” said...

பொழுதுபோக்கு இன்று முதலிடமாகிவிட்டது! உணர வேண்டிய கருத்து! அருமை! வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

காலத்தின் அருமை!

கே. பி. ஜனா... said...

//இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்//
அருமையான வரிகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//பொழுதைப் போக்கத் தேவை இல்லை
போதல் ஒன்றே பொழுதின் தன்மை//
சத்தியமான உண்மை . அருமையாக சொன்னீர்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 8

அருணா செல்வம் said...

காலம் “கண்“ போன்றது.

(பொன் போன்றது என்று சொல்வது பொறுத்தமாக இல்லை என்று புலவர் ஐயா சொல்லி இருக்கிறார்)

இன்றையச் சூழல், கண்களை விற்று குளிர்கண்ணாடி வாங்கி அணிந்து கொள்வது போன்று தான் உள்ளது.

கவிதை மிகவும் அருமை இரமணி ஐயா.

கவியாழி said...

இழந்த எதையும் பெற்றிட முடியும்//நிச்சயம் முடியும் நிம்மதியும் கிடைக்கும்

Tamizhmuhil Prakasam said...

"இழந்தக் காலம் இறந்தக் காலமே"

உண்மையான வரிகள். உணர்ந்தால் வாழ்வில் உயரலாம்.

கருத்தாழம் மிக்க கவிதை.பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

Avargal Unmaigal said...

முன்பு வந்த புத்தகங்கள் எல்லாம் நல்ல விஷயங்களையோ கதைகளையோ சுமந்து வந்ததால் பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தோம் ஆனால் இப்போ வரும் "டைம் பாஸ்" புத்தகம் மட்டுமல்ல விகடன் குழுமத்தில் வரும் அனைத்து இதழ்களும் உதவாக்கரை புத்தகமாகவே வருகிறது

இளமதி said...

கடந்த காலம் கடந்ததேதான்.
இருக்கின்ற, வருகின்ற காலத்தைக்
கருத்தோடு கண்டிட வாழ்வு சிறக்குமே.

அருமையான தன்னம்பிக்கை தரும் கவிதை ஐயா!
வாழ்த்துக்கள்!

எனது டாஷ்போர்ட்டில் உங்கள் பதிவினைக் காண்பிக்கவில்லை.

தற்சமயம் இங்குவந்தபோது கண்டேன் உங்கள் பதிவிதனை!

Yarlpavanan said...

"இழந்தக் காலம் இறந்தக் காலமே!" என்பது உண்மையே...
காலம் கரைந்தால் மீளக் கைக்கு வராது

கரந்தை ஜெயக்குமார் said...

காலத்தின்
அருமையை
பெருமையினை
உரைக்கும்
நல் பதிவு ஐயா
நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அறிவுரையைத் தந்து இருக்கிறீர்கள்.
(ஒரு விஷயம். ரொம்ப நாட்களாகவே உங்களிடம் கேட்க நினைத்தது. நீங்கள் சென்று வந்த வட இந்தியப் பயணம் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஏன் எழுதவில்லை.)

Iniya said...

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்//
அனைத்தும் அருமை.

ஜோலி ஏதுமின்றி நாளும் ஜாலியாய் இருந்தால் விரைவில் காலி தான்.
தொடர வாழ்த்துக்கள்....!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஒவ்வொரு வரியும் உண்மையிலும் உண்மை ஐயா!
//பொழுதைப் போக்கத் தேவை இல்லை
போதல் ஒன்றே பொழுதின் தன்மை// மிக அருமை!
பொழுதை ஏன் போக்க வேண்டும்? சரியாக உழைத்து முன்னேறுதல் ஒன்றே நல்லது. அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ரமணி ஐயா! நன்றி!
த.ம.14

சசிகலா said...

உழைத்து வாழ எண்ணம் கொண்டவர்களுக்கு பொழுது போக்குவது கடினமான ஒன்றல்ல என்பதை அழகாக சொன்னீர்கள் ஐயா.

Kasthuri Rengan said...

நல்ல கவிதை...
டைம் பாஸ்... ஹ ஹ ஹா...
பொளைப்பு நடக்கனும்ல

ஸாதிகா said...

"ஜாலி " ஒன்றே வாழ்க்கை என்று
வாழ்தல் ஒன்றேச் சரியெனக் கொண்டு
வாலிபர் எல்லாம் மாறினார் இன்று-சோற்றை
ஊறு காய்க்குத் தொட்டுக் கொண்டு//வார்த்தை ஜாலம் என்பார்களே..இது கவிதை ஜாலமா?அசரடிக்கின்றீர்கள் உங்கள் கவிதை வரிகளில்.வாழ்த்துக்கள் சார்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சோலியும் சாலியும் சொன்ன கவிபடிக்கக்
கூலியும் வேண்டுமோ கூறு?

இறந்த காலம் தனையெண்ணி
ஏங்கி இருந்தால் பயனேது?
சிறந்த காலம் வருமென்று
சிந்திந்த் திருந்தால் உயா்வேது?
பிறந்த ஒவ்வோர் நொடிகளையும்
பெருமை அடையச் செயலாற்று!
பறந்த இனிமை தேடிவரும்!
பாதை எங்கும் தோரணமே!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


மோ.சி. பாலன் said...

சிந்திக்க வேண்டிய கேள்வி...

வெங்கட் நாகராஜ் said...

சிந்தனை செய்ய வைத்த பகிர்வு..... டைம்பாஸ்! :(

கோமதி அரசு said...

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்//
அருமை.
காலத்தை பயனுள்ளதாக கழிப்போம்.

Post a Comment