Sunday, December 1, 2013

பித்தலாட்டப் போதனைகள்

ஏழையின் எளிமையது
இகழ்ந்துதினம்  தூற்றப்பட
செல்வரவர்  எளிமையதோ
சிறப்பாகப் பேசப்படும்

பலவீனன் பொறுமையது
ஏளனமாய் பார்க்கப்பட
பலசாலி பொறுமையோ
கவனித்துப் போற்றப்படும்

முட்டாளின் அடக்கமது
எரிச்சலூட்டும் உணர்வாக
அறிவாளியின் அடக்கமதோ
சிகரத்தில் வைக்கப்படும்

தொண்டனின் பலவீனம்
தண்டனைக்கு உரியதாக
தலைவனின் பலவீனம்
பல்லக்கில் ஏற்றப்படும்

உழைப்போரின் தெய்வங்கள்
வெட்டவெளியில் காய்ந்திருக்க
கொழுத்தோரின் தெய்வமதோ
தங்கத்திலே தகதகக்கும்

மனிதஜாதி இரண்டென்பது
பாலினத்தில் மட்டுமல்ல
மனிதநீதி  அதுகூட
இரண்டெனவேத் தெளிந்திடுவோம்

அனைத்திலுமே சமத்துவத்தை
அடைகின்ற வரையினிலே
பித்தலாட்ட போதனைகளை
புறந்தள்ளப் பயின்றிடுவோம்

30 comments:

Anonymous said...

''..அனைத்திலுமே சமத்துவத்தை
அடைகின்ற வரையினிலே
பித்தலாட்ட போதனைகளை
புறந்தள்ளப் பயின்றிடுவோம்....''
யதார்த்தங்கள் விழித்துப் பார்க்கிறது.
சம்மதிக்க வேண்டும் தான்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

வறியவன் உண்ணாது இருந்தால் அது பட்டினி.
செல்வந்தன் உண்ணாது இருந்தால் அது விரதம்.

அம்பாளடியாள் said...

போற்றப் பட வேண்டியவை தூற்றப் படுதலும்
தூற்றப் பட வேண்டியவை போற்றப் படுதலும்
கலியுகத்தின் நியதி என்றான பின்னால் இவைகள்
யாவும் நடைமுறையில் இயல்பானதொன்றாகி விடுகிறது .வீரியம் கொண்ட வரிகளுக்குள் மனத்தின் ஒட்டு மொத்த உணர்வும் வெளிப்பட்டுள்ள விதம் அருமை ! உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா .

வெங்கட் நாகராஜ் said...

கருத்தான கவிதை....

த.ம. 3

இளமதி said...

உணர்வுக் குமுறலை மிகச் சிறப்பாகக் கவிதையாய்த் தந்தீர்கள் ஐயா!

உள்ளவன் இல்லாதவன் சாதி ஒழிப்புச் செய்யவேண்டும். சமத்துவம் எங்கும் நிலவும்!

மிக மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

த ம.4

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உள்ளவன் இல்லாதவன் சாதி ஒழிப்புச் செய்யவேண்டும். சமத்துவம் எங்கும் நிலவும்!//

அதே ! அதே !!

Avargal Unmaigal said...

பித்தலாட்ட போதனைகள் மிக அருமை.....

ஏழைச் சிறுவன் தனக்கு பசிக்கும் போது தானே உணவை எடுத்துண்டால் அது சுயநலமாக கருதப்படும் அதே நேரத்தில் பணக்கார சிறுவன் தானே உணவை எடுத்துண்டால் அது மிக சிறந்த பண்பாக கருதப்படும் இந்த உலகத்தில் பித்தலாட்ட போதனைகள் வறியவர்களுக்கு மட்டுமே போதிக்கப்பட்டு கொண்டிருக்கும் tha.ma 5

துரைடேனியல் said...

அருமை.....தத்துவ முத்துக்கள் கோர்த்த முத்துமாலையாய் மிளிர்கிறது கவிதை.....!

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய நிலை தங்களின் வரிகளில்
அப்பட்டமாய் தெரிகிறது
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.7

இராய செல்லப்பா said...

(தம8..) "தலைவனின் பலவீனம், பல்லக்கில் ஏற்றப்படும்" என்பது சரியே! தலைவருக்கு மூன்று பெண்டாட்டிகள் இருந்தால் மூன்று பேருக்கும் பதவி கொடுத்துப் பார்க்கிறதே சமுதாயம்! தலைவர் குடிகாரர் என்றால் அதையும் போற்றிப் பின்பற்றுகிறார்களே தொண்டர்கள்!

ஸாதிகா said...

சரியாகச்சொன்னீர்கள்!த.ம 9

Iniya said...

பித்தலாட்ட போதனைகள் வேதனைக்குரியவை தான் எல்லாம் எவ்வளவு தெளிவாகவும் அனாயாசமாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். அவ்வளவும் சத்தியமே நல்ல நல்ல விடயங்களை எடுத்து வர உங்களால் தான் முடியும்.
பகிர்வுக்கு நன்றி ...! வாழ்த்துக்கள்....!

Ash said...

Thiru Ramani avaragalukku muthalil yen nandriyai therivikka virumbugiraen. Tamil mozhiyai parappa ninakkum palarul naanum oru siriya tamil piriyan. www.visualtamil.com yenkira thalam vaayulaaga tamilai ulagathaar anaivar matthiyilum parapa muyandru kondu irukkiraen. Aanal unmayil yennaku tamil ilakkanathil athiga arivu illai. Thangalai pondra tamil aarvalargal yennakku uthavinaal yennaal yenathu muyarchiyil vetri kaana iyalum. Thayavu koorndhu thangalaium ,thangal vaasagarkalaiyum yenakku uthavu maaru kaetukolgiraen

Anonymous said...

வணக்கம்
ஐயா..

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.... மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா.
த.ம.வாக்கு-10

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

இப்படி கவிதையில் புட்டு புட்டு வைக்க உங்களால்தான் முடியும் !
த.ம 11

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிலை... உண்மை... அருமை ஐயா...

தங்களின் தகவலுக்கு :

கட்டுரைப் போட்டி : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையான சிந்தனை ஐயா! உண்மையும் கூட!
த.ம.13

ADHI VENKAT said...

சிறப்பான வரிகள்.

த.ம - 13

Unknown said...

1சமூகத்தின் இன்றைய வெளிப்பாடு!

உஷா அன்பரசு said...

சிறப்பு. த.ம-16

தேன் நிலா said...

ஏற்றத்தையும், இறக்கத்தையும் எளிதாக புரிந்துணரும்படி கவிதையாக மாற்றியிருக்கிறீர்கள்... ஒன்று மற்றொன்றாக மாறுவதிலும், அடிப்படை மிக முக்கியம் என்பதை தெளிவாக உணர முடிந்த்து..

+++++++++++++

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பித்தலாட்ட போதனைகளை
புறந்தள்ளப் பயின்றிடுவோம்


இந்த போதனைகளை கூட உலகம் இருப்பவன் போதனையா.. இல்லாதவன் போதனையா என்று பார்த்து முடிவெடுக்கும்...

உலக உண்மை உணர்த்தும் கவிதை

பால கணேஷ் said...

வரிக்கு வரி மிகமிகச் சரி!

”தளிர் சுரேஷ்” said...

பித்தலாட்ட போதனைகள் தலைப்பே அருமை! அது சொன்ன கருத்து இனிமை! வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஏழைக்கொரு வார்த்தை பணம் படைத்தோருக்கு ஒரு வார்த்தை. அழகாய் சொல்லி விட்டீர்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தா.ம.18

தி.தமிழ் இளங்கோ said...

//அனைத்திலுமே சமத்துவத்தை
அடைகின்ற வரையினிலே
பித்தலாட்ட போதனைகளை
புறந்தள்ளப் பயின்றிடுவோம் //

கவிஞரின் கனவு நனவாக வேண்டும்!

கீதமஞ்சரி said...

சமுதாயத்தின் சீரற்ற அலசலை நேரியமுறையில் கவிப்பரிமாணமாய் முன்வைத்திருக்கும் சிந்தனைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

Yarlpavanan said...

சிறந்த ஒப்பீடு
பாராட்டுகள்

Post a Comment