Thursday, December 12, 2013

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

25 comments:

ஸ்ரீராம். said...

சின்னச் சின்னக் கல்லு... பெத்த இல்லு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே//

நம்பிக்கையளிக்கும் வெற்றிப்படைப்பு. பாராட்டுக்கள்.

Iniya said...

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே

நம்பிக்கை ஊட்டும் வரிகள் அபாரம்
இடை விடாத முயற்சி இனிக்கும் வெற்றி அளிக்கும்
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

கவியாழி said...

தொடர்ந்து முயன்றால் இந்த உலகில் எல்லாம் முடியுமே//ஆம் உண்மையே

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான சத்தியமான வரிகள் ஐயா..

நன்றி...

வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை! அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி!

Avargal Unmaigal said...

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
என்பது உண்மைதான் tha.ma 5

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முயன்றால் மட்டும்தான் இந்த உலகில் எதுவும் சாத்தியம்...

நல்லதொரு வரிகள்...

vimalanperali said...

வெற்றி தோல்வி என்பது கூட இரண்டாம் பட்சமாகிக்கூடப்போகட்டும்,ஆனால் முயற்ச்சிக்காமல் வீண்பேச்சுப்பேசித்திரிகிற சுகம் இருக்கிறதே/அடேயப்பா அது,,,,,,,,,,நிறையப்பேர் அந்த லிஸ்டில் இருக்கிறார்கள்தான்.

G.M Balasubramaniam said...

ஆமை முயல் கதை இப்போது மாற்றி சொல்லப் படுகிறது. you win: I win எனும்நிலைமை மாறி we win என்று அறிவுறுத்தப் படுகிறது. அதைச் சொல்வதல்லாமல் முயற்சியின் முக்கியத்துவம் குறைக்க அல்ல இப்பின்னூட்டம்.வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...


//வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்//
வெற்றி ரகசியத்தை அழகாக சொல்லி விட்டீர்கள். பள்ளியில் கற்றுக் கொடுக்கலாம். அருமை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.7

RajalakshmiParamasivam said...

முயற்சி உடையார் தோல்வி அடையார் என்று அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்.

அம்பாளடியாள் said...

முயன்றால் முயற்சி திருவினையாக்கும் .சிறந்த கருத்திற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா .

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

தமிழ்மணம் 9

வெற்றி பெற்ற வேந்தன் போன்று
விரையும் பாட்டிது! - கண்ணில்
ஒற்றிக் கொண்டே உள்ளம் பதித்தால்
உயா்வை ஊட்டுது! - நன்றே
பற்றிக் கொண்டே பாதை படைத்தால்
பயன்கள் கூட்டுது - உள்ள
நெற்றிக் கண்ணின் நிலையைக் காண
நெருப்பை மூட்டுது!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கரந்தை ஜெயக்குமார் said...

முயன்றால் முடியாதது இல்லைதான்
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா
நன்றி
த.ம.10

அருணா செல்வம் said...

தன்னம்பிக்கை வரிகள்...
அருமை இரமணி ஐயா.

கீதமஞ்சரி said...

முயற்சி திருவினையாக்கும். அதற்கு வாய்ப்புத் தராமலேயே மூலையில் முடங்கிக் கிடக்கும் பல சோம்பிய உள்ளங்களைத் தட்டியெழுப்பும் அற்புத வரிகள். நன்றி ரமணி சார்.

aavee said...

அருமை.. ஊக்கம் கொடுக்கும் கவிதை.. த.ம.12

ADHI VENKAT said...

அருமையான வரிகள்..

ஸாதிகா said...

நம்பிக்கையூட்டும் கவிதைபடைப்பு.

Unknown said...

#வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே#
இதற்கு உதாரணமாய் இன்று பல பேரை சொல்லலாம் ..சட்டத்திற்கு புறம்பாய் நடந்து கொண்டு வழக்கை சந்தித்து கொண்டிருக்கிறார்கள் ..அவர்களைப் பார்த்தும் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கே !
த,ம +1

வெங்கட் நாகராஜ் said...

தன்னம்பிக்கை தரும் வரிகள்.....

த.ம. 14

தி.தமிழ் இளங்கோ said...

கவிதை வானில் உங்கள் வெற்றி தொடரட்டும்!

காரஞ்சன் சிந்தனைகள் said...

தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே//
அருமை! அருமை!

Post a Comment