Tuesday, December 17, 2013

அனுமார் வால்

"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு  ".....

மனதின் மூலையில் புகையாய்
 கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத்  திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 எப்படியெல்லாம மாறிவிட்டன ?

வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை  மாறுதல்கள் ?

வசதி வாய்ப்புகளே    தேவைகளை முடிவு செய்ய

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...

சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...

செல்வமும் செல்வாக்கும்  நீதியை முடிவு செய்ய ..

உறவுகளைக் கூடப்  பயன் முடிவு செய்ய...

உணவினைக்  கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக்  கிழமை முடிவு செய்ய..

காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..

புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...

சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு   எரியத் துவங்க

 புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
  பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
 அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல்  பரந்து விரியத் துவங்குகிறது

26 comments:

Seeni said...

அய்யா!
மிக சிறப்பான சிந்தனை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிறப்பான கருத்தழம் மிக்க கவிதை... சொல்வது உண்மைதான்.காலத்துக்கு ஏற்ப காலம் நகர்கிறது அதன் தேவையும் அதிகரிக்கிறது கவிதை அருமை வாழ்த்துக்கள்.
கவிச்சக்கர வர்த்தி.ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
ஐயா
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

''...உடலுறவைக் கூடக் கிழமை முடிவு செய்ய....''
அருமையாகச் சொன்னீர்கள் .
சரியாகச் சொன்னீர்கள்.
இந்த அந்நியோன்னியம் இல்லாமல் தானே
பல திருமணங்கள் காற்றில் பறக்கிறது.
நல்ல சிந்தனை உரைகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனுமார் வாலாய் நீளும் தங்களின் பட்டியல், வாலில் நுனியில் தீப்பற்றியதுபோல, யோசிக்கத்தான் வைக்கிறது.

//" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"//

;)))))

அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

அம்பாளடியாள் said...

நான் பதிவு போடத் துவங்கிய காலம் முதல் இன்றுவரை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினைப் பார்ப்பது வழக்கம் அப்படிப் பார்த்து விட்டுக் கவிதை எழுதத் தொடங்கும்
போது இப்படித் தான் அனுமார் வால் நீண்டு கொண்டே போக
ஆரம்பித்து விட்டது .எழுதும் வரைக்கும் எழுதியாகி விட்டது .திடீர் என்று ஒரு நாள் எழுதியவைகளைத் திரும்பிப் பார்த்த
போது தான் விழித்துக் கொண்டேன் ஒரே கருத்தைப் பலமுறை
உள்வாங்கி கவிதைகள் எழுதியுள்ளேன் என்று :)))))))) .இன்றைய சமூகம் முன்போல் இல்லாது முரண்பட்டு இருப்பதும் எண்ணத்தளவு
திகப்பினைத்தான் தருகின்றது ஐயா .இன்றைய சமூகத்தின்
நடைமுறைகளை வைத்துக் கவிதை எழுத ஆரம்பித்தால்
நீங்கள் சொல்வது போன்று இந்த வால் நீண்டு கொண்டே தான் போகும் .அருமையான சிந்தனை நிறைந்த கவிதை ! வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் முயற்சி தரமான கவிதைகளை மேலும் மேலும் கொடுப்பதற்கு வழி வகுக்கடும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

Avargal Unmaigal said...

///காவிரி நீராய் பரந்து விரியத் துவங்குகிறது////


எல்லாம் நல்லா சொன்ன நீங்க கடைசி வரியில்தான் மாட்டிக் கொண்டீர்கள் கடைசி வரியை பழைய காலத்து ஆட்கள் புரிந்து கொள்வார்கள் ஆனால் அது இந்த காலத்து இளைஞர்களுக்கு புரியாது. காரணம் அவர்கள் பார்க்கும் காவிரியில் , காவிரி நீராய் பரந்து விரியத் துவங்காது காவிரி நீராய் வறண்டு போகும்...


அதனால் இனிமேல் காவிரிக்கு பதில் நாம் கங்கையை உதாரணமாக சொல்ல வேண்டும் tha.ma 4

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said...//

அதனால் இனிமேல் காவிரிக்கு பதில் நாம் கங்கையை உதாரணமாக சொல்ல வேண்டும்

நீங்கள் சொன்னது மிகச் சரி
மாறுதல் செய்து விட்டேன்
வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

காவிரி கங்கையான பின்தான் நான் படிக்கிறேன்! நன்றாய்ச் சொன்னார் அவர்கள் உண்மைகள். உங்கள் கருத்து அருமை. ஓய்வது போலத் தோன்றினாலும் கிடைக்கும் கருக்களுக்குக் குறைவில்லை.

இளமதி said...

இன்றைய சமூகமும் வாழ்வியலும் மாற்றங்களை
வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றது.
அப்படியும் வாழ வழியின்றி இப்போதைக்கேற்றபடி
இப்படியும் வாழ மனமின்றி நடுவில் படும் அவதியை மிக அழகாக உரைத்தீர்கள்.

நல்ல கவிதை! மிகவே ரசித்தேன்.
வாழ்த்துக்கள் ஐயா!

aavee said...

ஆழமான கருத்துகள்.. அருமை ஐயா..த.ம +1

ஸாதிகா said...

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல் பரந்து விரியத் துவங்குகிறது
//அனுமார் வாலை அருமையாக முடித்துள்லீர்கள்.

Unknown said...

நல்ல சிந்தனை! தெளிவான கருத்துகள்!
நன்றி! இரமணி!

உஷா அன்பரசு said...

எத்தனை எத்தனை மாறுதல்கள்... அத்தனையும் மறுப்பில்லாத உண்மைகள்..!
த.ம-9

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்தனை அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

சிறப்பான சிந்தனை...த.ம...11

ராஜி said...

உங்கள் பேத்தியினால் உங்க சிந்தனை சிறக்சிச்சு பறக்குதுப் போல!!

கோமதி அரசு said...

புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது//

உண்மைதான்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

tamilmanam 13

அருணா செல்வம் said...

நல்ல சிந்தனை

மனோ சாமிநாதன் said...

சலிப்பிற்கு வரும் உற்சாகம் இன்னும் பல அருமையான கவிதைகளைக் கொடுக்கும்!

இனிய கவிதை! வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
த.ம.15

Thulasidharan V Thillaiakathu said...

"உறவுகளைக் கூடப் பயன் முடிவு செய்ய...

உணவினைக் கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக் கிழமை முடிவு செய்ய.".

மிகச் சரியான அருமையான சிந்தனை வரிகள்!! உண்மையான, நிதர்சமான வெட்டவெளிச்சமான கால நகர்தால்தான்! உணர்வு பூர்வமான வெளிப்பாடு!!

"என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல் பரந்து விரியத் துவங்குகிறது"

அருமை! கங்கைப் பிரவாகம்தான்! ஆனால் அதுவும் எல்லை கடந்து நாட்டிற்குள் (காசி முக்கியமாக) பாயும் போது பிணங்கள் அல்லவா மிகக்கின்றன!!

உங்கள் வலைப்பூவை நாங்கள் தொடர நினைத்து தேடும் போது முதலில் எனக்குச் சரியாகக் கிடைக்கவில்லை! இன்றுதான் கிடைத்தது! தொடர்கிறோம்!!

துளசிதரன், கீதா

Unknown said...

//செல்வமும் செல்வாக்கும் நீதியை முடிவு செய்ய ..//
உண்மை... தற்போதைய நாட்டு நடப்பு...
மிக அருமை ஐயா...!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை.

Post a Comment