Sunday, December 29, 2013

சிரிப்பின் சுகமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்  )

32 comments:

Anonymous said...

வணக்கம்
ஐயா.

சிரிப்பு பற்றிய கவிதை மிக அருமையாக உள்ளது ஒவ்வொருவரிகளும் மிக நன்று வாழ்த்துக்கள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

த.ம. - 3

Anonymous said...

குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே...சிரிக்கும் இனிய ஆண்டு மலரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

MANO நாஞ்சில் மனோ said...

சிரிப்பு என்பது ஆண்டவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு அருங்கொடை....!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

ஸ்ரீராம். said...

அருமை.

உங்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே உணர்ந்து கொள்ளுவோம்//

அழகான வரிகள் !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



RajalakshmiParamasivam said...

சிரிப்பின் மகத்துவம் அருமையான கவிதையானது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

//இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம் //

புன்னகையே பொன் நகை! தானே! சிரிப்பே அருமருந்து, வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! நல்ல கவிதைப் பதிவு!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Unknown said...

காண்பதற்கு யோசிப்பதில்லை ,கேட்பதற்கு யோசிப்பதில்லை ,சிரிப்பதற்கு மட்டும் ஏன் யோசிக்கவேண்டுமேன்று உணர்த்திய உங்கள் கவிதை அருமை !
+1

Anonymous said...


மனம் நிறை சிரிப்புடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Yarlpavanan said...

"குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே" என்ற அடிகளை
நான் விரும்புகிறேன்!

தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

இளமதி said...

இதழ்கள் வழியும் புன்னகையோடு புது வருடத்தை நாமும் வரவேற்போம்!

இதயம் நிறைத்த இனிய கவிதை ஐயா!

வரும் வருடம் இனிதாய் அனைவருக்கும் அமைந்திட சிந்தும் புன்னகையுடன் உளமார வாழ்த்துகிறேன்!

Unknown said...

உலகில் மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதருக்கும் உள்ள வேறுபாடு சிரிப்பதும் சிந்திப்பதும் தான்..
அந்த சிரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை.. சிறப்பாக அமைந்திருந்தது.. வாழ்த்துக்கள்!!!

Tamizhmuhil Prakasam said...

சிரிப்பின் சிறப்பையும் அவசியத்தையும் உணர்த்தும் அற்புதமான கவிதை ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Seeni said...

Pakirvukku Nantri ayyaa..

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
த.ம.9

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சிரித்து வாழ்க! செழித்து வாழ்க!
சீா்கள் சேர்ந்தாட! - இலை
விரித்து வளரும் வாழை போன்று
விளைந்து குவிந்தாட! - சொல்
கரித்துப் பேசும் கயமை போக்கி
கமழ்ந்து மொழியாட! - பொய்
உரித்து வாழ்க! உயா்ந்து வாழ்க!
உலகே மகிழ்ந்தாட!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

ADHI VENKAT said...

//விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம் //

சிறப்பான வரிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

த.ம.10

vimalanperali said...

சிரிப்பு ஒரு நல்ல மருந்தென சொல்வார்கள்.புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Iniya said...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். எனவே இப் புத்தாண்டில் அனைவரும் சிரித்துவாழ முயற்சி செய்வோம்.

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.....!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

கோமதி அரசு said...

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம் //
மிக அருமை .
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும்.
மற்றும் அனைவருக்கும்.
வாழ்த்துக்கள்.

அருணா செல்வம் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

துளசிதரன், கீதா

தி.தமிழ் இளங்கோ said...

உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

சிரிப்பு ஒரு வரப் பிரசாதம். சிலரது முகமே எப்போதும் சிரிப்பதுபோல் இருக்கும். அவர்கள் வருத்தத்துடன் இருப்பதையும் அவர்களது இதழ்களின் விரிப்புகளிலேயே தெரிந்து கொள்ள வேண்டும். சிரிப்பு என்பது மகிழ்ச்சியான உணர்வின் வெளிப்பாடு. எந்நேரமும் மகிழ்வாய் இருக்க இந்த புத்தாண்டில் வாழ்த்துகிறேன்.

மாதேவி said...

அருமையான கவிதை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

சிரித்து வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

காரஞ்சன் சிந்தனைகள் said...

இரசித்தேன்!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014

Post a Comment