Wednesday, January 1, 2014

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

இடம் என்பதற்கானப பொருள்
வீடு வாசல் கோவில் மைதானம் எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?  
அது சுயம்  குடும்பம்  உறவுகள்  சமூகம்
எனக் கூட   இருக்கலாம் தானே ! 

27 comments:

Iniya said...

இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

முற்றிலும் உண்மையே நீங்கள் சொல்வது சரியே
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.
மிக்க நன்றி ....!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!

ராமலக்ஷ்மி said...

இருக்கலாம்தான். சிந்திக்க வைக்கும் வரிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Avargal Unmaigal said...

இதை படிக்கும் போது பழைய கால பாடல் ஒன்று நினைவிற்கு வந்ததது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. tha.ma 2

Unknown said...

முற்றிலும் உண்மை!

Thulasidharan V Thillaiakathu said...

//பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

இடம் என்பதற்கானப பொருள்
வீடு வாசல் கோவில் மைதானம் எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது சுயம் குடும்பம் உறவுகள் சமூகம்
எனக் கூட இருக்கலாம் தானே !//

அருமையான 'பொருள்' பொதிந்த "பொருள்" அதான் உங்கள் இந்தப் பதிவு!! சிந்தைக்க வைத்தது!

டிபிஆர்.ஜோசப் said...

சரியாக சொன்னீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பார்கள். இடம், பொருள் விளக்கிவிட்டீர்கள். அதே போல் ஏவல் என்றால் என்னவென்றும் சொல்லுங்களேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராஜி said...

புத்தாண்டில் நல்ல அறிவுரைக் கூறும் கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் சொன்ன விசயங்கள் சிந்திக்க வேண்டியவை... வாழ்த்துக்கள் ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கீதமஞ்சரி said...

எதை எங்கே வைக்கவேண்டும்? எதற்கு எவ்வளவு இடங்கொடுக்கவேண்டும் என்ற சிந்தனைத் தெளிவை அழகுற எடுத்தியம்பும் வரிகள். பாராட்டுகள் ரமணி சார்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

சிறப்பான சிந்தனை... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..
த.ம.7

http://bharathidasanfrance.blogspot.com/ said...

tamilmanam 8

இளமதி said...

பொருளில் பொதிந்திட்ட உண்மை உணர
இருளது நீங்கும் இலகு!

பொருள் தரும் பொருள் விளக்கம் மிக அருமை ஐயா!

மனத்திலும் வேண்டாதவற்றையும் ஏற்றி அல்லல்படாமல்
தேவையானவற்றை மட்டும் கொள்ளலும்
நலத்திற்கு வழியமைக்குமல்லவா...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் யாவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Seeni said...

Unmaithaanga ayyaa..

மாதேவி said...

நல்ல அறிவுரைக் கூறும் கவிதை. வாழ்த்துக்கள்!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

புத்தாண்டில் மிக கருத்துள்ள கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா.சொல்வது உண்மைதான்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
த.ம10வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

இருக்கலாம்தான். அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

'பொருள்' பொதிந்த கவிதை
த.ம.12

கோமதி அரசு said...

இருக்கலாம் தான், அருமையான கருத்துக் கொண்ட கவிதை.
வாழ்த்துக்கள்.

Unknown said...

யாரை எங்கே வைப்பது என்பதை மட்டுமல்ல ,எதை எங்கே வைப்பது என்றும் அருமையாய் புரிய வைத்தீர்கள்!
+13

வை.கோபாலகிருஷ்ணன் said...

பொருளைப்பற்றி உண்மையான பொருள்கூறும் பொறுப்பான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

சிந்திக்க வைத்த வரிகள்.....

த.ம. +1

தி.தமிழ் இளங்கோ said...

ஏற்கனவே படித்ததாக நினைவு. மீள்பதிவு என்று நினைக்கிறேன்! எக்காலத்திற்கும் பொருத்தமான கவிதை! வாழ்த்துக்கள்!

கவியாழி said...

நல்ல சிந்தனை

G.M Balasubramaniam said...

பொருள் என்பதை ஒரு கட்டுக்குள் வைக்க வேண்டுமா என்ன.? பொருளைப் பொருள் என்று நினைத்தால் அது அது அந்தந்த இடத்தில் இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் தேடுத்லிலேயே நேரம் விரயமாகிவிடும். வாழ்த்துக்கள்..

பி.பிரசாத் said...

ஆழ்ந்த பொருளுள்ள கவிதை - எளிய சொற்களில் வடிவமைத்தது அருமை !

Yarlpavanan said...

"பொருள் என்பதற்கான பொருள்
கார்ச் சாவி, செருப்பு, பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன?
அது ஜாதி, மதம், அரசியல் எனக் கூட
இருக்கலாம்தானே!" என
அழகாகப் பகுப்பாய்வு செய்துள்ளீர்கள்!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment