Saturday, January 11, 2014

அதீதம்

மாணவிகளை விடத் தன்னை
இளமையாகக் காட்டிக் கொள்ள
அதிக ஒப்பனை செய்து கொள்ளும்
கல்லூரிப் பேராசிரியை
கொஞ்சம் கூடுதல் வயதானவராகத் தெரிய

குழந்தைகளுடன் குழந்தையாய்
வயது ஸ்மரணையின்றி
எளிமையாய் ஆடையணிந்த அந்த
பள்ளி ஆசிரியையோ
இன்னமும் இளமையாய்த்தான் தெரிகிறார்

வாசகனிடம்  தன்
பாண்டித்தியத்தைப் பறைசாற்ற
பல்லுடைக்கும் வார்த்தைகளைக் கொண்டு
புரியாக் கவிபடைக்கும் அந்தக் கவிஞர்
அனைவருக்கும்அன்னியரைப் போலப்பட

புரிந்ததை அனைவரும்
புரிந்து கொள்ளும்படிச் சொல்லுதலே
தன் பாணியாகக் கொண்டப் படைப்பாளியோ
ஏற்கத்தக்கவராய் மட்டுமின்றி
இணைந்து செல்லத் தக்கவாராயும் தெரிகிறார்

அதீதம் என்பதற்கான பொருள்
அகராதியில் "கடந்தது- மேற்பட்டது " என இருக்க
யோசித்துப்பார்க்கையில் அதன் சரியான பொருள்
" அர்த்தமின்மை - முதிர்சியின்மை"
என இருத்தலே சரியெனப்படுகிறது எனக்கு

24 comments:

ஸ்ரீராம். said...

அதீதம் இணைய இதழில் வந்த உங்கள் படைப்பு என்று நினைத்தேன்! :)

விமலன் said...

ஒரு விஷயத்தை அதீதமாய் சொல்லும் பாங்கு நமது பள்ளிப்பருவத்திலிருந்தே ஆரம்பிக்கிறதே,புளி போட்டு வெளக்குறான் என்பார்கள்.புளிபோடுவது சமயத்தில் சில,பலவற்றில் தேவைப்படுகிறதுதான், சினிமாவில் ஓவர் ஆக்ட் போல,,,,/இருந்துவிட்டுத்தான் போகட்டுமே அதீதம்.நன்றி வணக்கம்/

Mythily kasthuri rengan said...

எதுக்கும் ஒரு அளவு வேணும் அப்டின்னு சும்மாவா சொன்னங்க பெரியவங்க .பேராசிரியை உவமை அருமை !

Rupan com said...

வணக்கம்
ஐயா.
அதீதம் என்பதற்கு மிகச் சிறந்த விளக்கமாக கவிதையில் கொடுத்துள்ளிர்கள் .. சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா.
த.ம 3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
அதீதம் என்பதற்கு
எளிமையான வரிகளில்
அற்புத விளக்கம்
நன்றி ஐயா
த.ம.4

Bagawanjee KA said...

ஒப்பனைகள் உண்மை சொரூபத்தை காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன என்று ஓப்பனாக சொன்ன விதம் நன்று !
+1

rajalakshmi paramasivam said...

எப்பவும் போல் கவிதை அருமை.
பள்ளி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் உவமை ரசித்தேன்.

இராஜராஜேஸ்வரி said...

அதீதம் என்பதற்கான பொருள்
அகராதியில் "கடந்தது- மேற்பட்டது " என இருக்க
யோசித்துப்பார்க்கையில் அதன் சரியான பொருள்
" அர்த்தமின்மை - முதிர்சியின்மை"
என இருத்தலே சரியெனப்படுகிறது எனக்கு

சரிதானே..! இயற்கையாய் இருப்பதே அழகு ..!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விளக்கம் ஐயா...

வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

அதீதம் என்பதற்கான பொருள்
அகராதியில் "கடந்தது- மேற்பட்டது " என இருக்க
யோசித்துப்பார்க்கையில் அதன் சரியான பொருள்
" அர்த்தமின்மை - முதிர்சியின்மை"
என இருத்தலே சரியெனப்படுகிறது எனக்கு//

நன்றாக சொன்னீர்கள்.
கவிதைக்கு வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

இன்றைய காலகட்டத்தில் ஒப்பனைக்குத்தானே மதிப்பு!! உண்மைப் பொருளை யார் அறிகின்றார்கள்!! ஆனால் உண்மைப் பொருள் நிலைத்து நிற்கும், சாயம் வெளுத்துவிடும்! நல்ல பொருள் பொதிங்க கவிதை!

//அதீதம் என்பதற்கான பொருள்
அகராதியில் "கடந்தது- மேற்பட்டது " என இருக்க
யோசித்துப்பார்க்கையில் அதன் சரியான பொருள்
" அர்த்தமின்மை - முதிர்சியின்மை"
என இருத்தலே சரியெனப்படுகிறது எனக்கு//

அருமை!!!

த.ம. +

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

/குழந்தைகளுடன் குழந்தையாய்
வயது ஸ்மரணையின்றி
எளிமையாய் ஆடையணிந்த அந்த
பள்ளி ஆசிரியையோ
இன்னமும் இளமையாய்த்தான் தெரிகிறார்//

அதுதான் பதமான பக்குவமான இதமான அனுபவம் வாய்ந்த இயற்கையான அழகோ அழகு !

செயற்கையான [அதீதமான]
மேக்-அப் அழகு தீவட்டி போல.

இது முத்துப்போல் எரியும் அழகான
அகல் விளக்கு போல !!

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் கடந்த சில பதிவுகளாகவே,
குறைகுடம் கூத்தாடுவது போன்ற,
இன்றைய அரை வேக்காட்டுப் பதிவர்கள் எல்லோரையும், மறைமுகமாக நன்றாகவே குட்டிக்கொண்டு வருகிறீர்கள்.

இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

தங்களைப்போன்ற ஒருவரால் மட்டுமே இதனைச் செவ்வனே செய்ய முடியும்.

தொடரட்டும் தங்களின் இந்த அரும்பணி.

இது இன்றைய வலையுலகுக்கு நிச்சயமாகத் தேவைப்படும் ஆரோக்யமானதோர் செயல் மட்டுமே ! ;)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Iniya said...

புரிந்ததை அனைவரும்
புரிந்து கொள்ளும்படிச் சொல்லுதலே
தன் பாணியாகக் கொண்டப் படைப்பாளியோ
ஏற்கத்தக்கவராய் மட்டுமின்றி
இணைந்து செல்லத் தக்கவாராயும் தெரிகிறார்

உண்மை தான் அதீதத்தின் உங்கள் கருத்தும் அர்த்தம் உள்ளதே.
எப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது.

நன்றி....! தொடர வாழ்த்துக்கள்....!

Chellappa Yagyaswamy said...

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். பள்ளி ஆசிரியைகள் வயதானாலும் இளமையாகத்தான் காட்சியளிக்கிறார்கள் என்பது உண்மையே. (அதாவது பணியில் இருக்கும்போது!)

Jeevalingam Kasirajalingam said...


"அதீதம்" என்பதற்கு இத்தனை பொருளா?
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகளுடன் குழந்தையாய்
வயது ஸ்மரணையின்றி
எளிமையாய் ஆடையணிந்த அந்த
பள்ளி ஆசிரியையோ
இன்னமும் இளமையாய்த்தான் தெரிகிறார்//

சத்தியமான உண்மை குரு....அதான் வகுப்பு டீச்சருங்க எல்லாம் இம்புட்டு அழகா இருக்காங்களா !

Anonymous said...

'அதீதம் ' என்றால் 'அதிகமான ' என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ரமணி சார் !

புலவர் இராமாநுசம் said...

புரிந்ததை அனைவரும்
புரிந்து கொள்ளும்படிச் சொல்லுதலே
தன் பாணியாகக் கொண்டப் படைப்பாளியோ
ஏற்கத்தக்கவராய் மட்டுமின்றி
இணைந்து செல்லத் தக்கவாராயும் தெரிகிறார்

உண்மை! தெளிவான கருத்து!

கி. பாரதிதாசன் கவிஞா் said...


tamilmanam 11

அ. பாண்டியன் said...

வணக்கம் ஐயா
மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள். அனைத்தும் உண்மையே.
-----------
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான விளக்கம்.

த.ம. +1

Chocka Lingam said...

purithal inmai

Post a Comment