Saturday, January 25, 2014

எனது விமர்சனம் :

பதிவுலகப் பிதாமகர் மரியாதைக்குரிய
திரு.வை. கோ அவர்கள்  நடத்திவரும்  சிறுகதை
விமர்சனப் போட்டியில்  முதல் பரிசு
எனக்குக் கிடைத்துள்ளது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

நான்  விமர்சனம் எழுதிய ஜிலேபி  கதைக்கான
இணைப்பையும்  எனது விமர்சனத்தையும்  தங்கள்
பார்வைக்காக  இங்கே பதிவு செய்கிறேன்

ஜிலேபி  கதைக்கான இணைப்பு :
 http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01.html

எனது விமர்சனம் : 

இனிப்பான தலைப்பில் வாழ்வின் விளிம்பு நிலை
மனிதர்களின்  கசப்பான வாழ்வை கோடிட்டுக்
காட்டிப் போகும் "ஜாங்கிரி  " சிறுகதை மிக மிக அருமை

சிறு பின்சுவர் கட்டமுடியாமல் தினம் கட்டிட
வேலைக்குப் போகும் கொத்தனாரும்
வண்ண வண்ண ஆடைகளைத் தைத்துக் கொடுத்தும்
ஒரு எளிய கதர் ஆடையில் திரியும் தையல்காரரும்
வருடம்முழுவதும் பட்டாசு ஆலையில்
கந்தகத்தில் வெந்தும் தீபாவளிக்கு முதல் நாள் தரும்
ஒரு சிறு பட்டாசு பண்டலுக்காகக் காத்திருக்கும்
தொழிலாளியும் நமக்கு அதிகம் பழக்கப்பட்ட அளவு
இந்தச் சமையல் நாகராஜன்கள் நமக்குப்
பழக்கப்படச் சாத்தியமில்லை

அதனால்தான் பொதுவாகவே தண்ணீரில்
 கிடக்கும் தவளைதண்ணீர் குடித்ததா இல்லையா
என யார் கண்டதுஎனப் பழமொழி சொல்லுகிறமாதிரி
இந்த அடுப்படிப் பணியாளர்கள் எல்லாம்
 சாப்பிட்டிருப்பார்களாசாப்பிட்டிருக்கமாட்டார்களா
என்கிறசிறு சந்தேகம் கூட நமக்கு வருவதில்லை
நாமாகவே அவர்கள் திட்டவட்டமாகச்
சாப்பிட்டிருப்பார்கள் என்கிற முடிவுக்கே
பல சமயங்களில் வந்து விடுகிறோம்

வேலை அலுப்பில் தொடர் வேலையில் அல்லது
சமையல் வாடை தொடர்ந்து முகத்திலடிக்கிற
 எரிச்சலில்அவர்கள் பெரும்பாலான சமயங்களில்
விஷேஷ வீடுகளில்முறையாகச் சாப்பிடுவதே இல்லை.
பல சமயங்களில் கொஞ்சம் சோற்றை மட்டும் போட்டு
அனைத்து காய்கறிகளையும் சாம்பார் ரசம்
அனைத்தையும்போட்டுக் கலந்து கலவையாக
இரண்டு மூன்றுகவளங்கள் மட்டும் சாப்பிடுவதை
 பலசமயம் நானே பார்த்திருக்கிறேன்

சமையல் நாகராஜன்களே இப்படி எனில்
சுவீட் போடும் நாகராஜன்க ளைச்
சொல்லவேண்டியதே இல்லை
அதுவும் வறுமையில் செம்மை என்பதே சிறப்பு என
தன்மானமும் கொஞ்சம் கூடிவிட்டால்
 நாகராஜன்களின் பாடு ஜிலேபி  கதை நாயகன்
 நாகராஜன் மாதிரிஅதோ கதிதான்

அதை மிகச் சரியாக உணர்ந்து வடித்த இந்தக் கதை
என்னை அதிகம் கவர்ந்ததில் ஆச்சரியமே இல்லை

ஒரு கருத்தைச் சொல்ல நிகழ்வைத் தேடுவது
அல்லது தன்னைப் பாதித்த நிகழ்வை ஒரு கருத்தோடு
இணைத்துத் தர ஒரு கதை செய்வது என இல்லாமல்
இப்படி நிகழ்வும் கருத்தும் மிகச் சரியாக
 இணையும்படியாககதை எழுதுதல் என்பது
அதுவும் சிறுகதை எழுதுவது
என்பது சாதாரண விஷயமேயில்லை.

அதுவும் காதாபாத்திரத்தை உயர்த்திச்
சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில்
கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிற
ஆரம்பத்திலேயே கோவில் குளம் சாமிபடம் முன்பு
 எனச்சொல்லாமல் திண்ணையில்
வெட்டி ஆபீஸர்கள் எல்லாம்
சீட்டாடிக் கொண்டிருப்பதைச் சொன்னவிதமும்
சீட்டில் அவர் கெட்டிக்காரத்தனத்தைச்
சொன்னவிதமும்இயற்கையாக இருந்ததோடு
இல்லாமல் மிகச் சரியாகஅந்தக் கதாபாத்திரத்தின்
 சாமர்த்தியத்தையும் (?) மிகச் சரியாக
நாம் புரிந்து கொள்ள உதவுகிறது

தன் கதாபாத்திரத்திற்கு அதன் உணர்வுக்கு
வலு சேர்க்க வேண்டும் என்பதற்காக
எதிர் கதாபாத்திரங்களின் தன்மையைக் குறைக்கும்
 வேலைப்பாட்டைச் செய்யாதது
என்னை இந்தப் படைப்பில் மிகக் கவர்ந்தது

இயல்பாக சமையல்காரரின் நோக்கத்தில்
இல்லாமல்நம்முடைய சுய நல எண்ணத்திலேயே
இரண்டுபாராட்டு வார்த்தைகளை சம்பிராதயத்துக்குப்
போட்டுவிட்டுஅடுத்த விசேஷத்திற்கு நீங்கள்தான் என
பொய்யான உறுதி மொழியைக் கொடுத்திவிட்டு
வேலையாளின் கூலியைக் குறைக்க முயலும்
அல்பத்தனம்நம் அனைவரிடத்தும் உண்டு

நல்ல வேளை அந்த அளவு மோசக்காரராக
அந்த விஷேஷ வீட்டுக்காரர் இல்லையென்றாலும் கூட
தன் சுயநல நிலையில் இருந்தே  நாகராஜனை டீல்
செய்கிற விஷயம் என்னை மிகவும் பாதித்தது

வியர்வை காயும் முன் கூலி கொடுப்பது
சிறந்ததுதான்சரியான கூலி கொடுப்பதும்
மிகச் சிறந்துதான்

ஆயினும் அவன் உழைப்பைக்
கௌரவப்படுத்தும்படியாகக் கொடுக்கவேண்டும்
 என்கிற எண்ணத்தை இந்தக் கதை
என்னுள் விதைத்துப் போனது

நிச்சயம் படிப்பவர்கள் அனைவரின் மனங்களிலும்
விதைத்துப் போயிருக்கும்

ஒரு படைப்பின் வெற்றி என்பது வாசகனை
தன் இருப்பு நிலையில் இருந்து கொஞ்சம்
 இதுபோல்மேல் நோக்கி உயர்த்துவது
என்பதல்லாது வேறு ஏதாயிருக்க முடியும் ?

ஒரு படைப்பாளி வாசகனிடம் ஏற்படுத்த
முயல்கிற பாதிப்பினை

அந்தப் பாதிப்பினை மிகச் சரியாகச்
சுட்டிக் காட்டி தன்னுள் அது நேர்ந்தது என
ஒரு வாசகன் சொல்வதை விட

ஒரு படைப்பாளிக்கு
அதிக மகிழ்வும் உற்சாகமும் தருவது
வேறு  ஏதாயிருக்க முடியும் ?

வாழ்த்துகள் வை.கோ. சார்

மேலும் படிக்க : http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-01-03.html

33 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.


எனதினிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

கிரேஸ் said...

அருமையான விமர்சனம் ரமணி ஐயா..முதலில் விமர்சனம்தான் படித்தேன்..கதையைப் படிக்க ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.
நன்றி!

கிரேஸ் said...

த.ம.2

PARITHI MUTHURASAN said...

வாழ்த்துக்கள்

ஜோதிஜி திருப்பூர் said...

வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

இனிய குடியர்சு தின வாழ்த்துகள்..

பரிசுப்போட்டிகளின் முதல் போட்டியில் முதல் பரிசி பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

G.M Balasubramaniam said...

சிறந்த விமரிசனம். கதாசிரியர் நினைத்துப் பார்க்காததை எல்லாம் விமரிசகன் எண்ணிப் பார்க்கிறான். அந்த விதத்தில் கோபு சார் இந்த விமரிசனப் போட்டி வைத்தது படைப்புக்கு மேலும் வலு சேர்க்க என்பதும் மறுக்க முடியாது. ஜாங்கிரிக்கும் ஜிலேபிக்கும் வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன். கதையைப் பொறுத்தவரை ஜிலேபியானாலும் ஜாங்கிரி ஆனாலும் ஒரே மாதிரிதான். வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விமரசனத்தின் மூலம் கதையின் சிறப்பை அறிய முடிகிறது.பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம 4

கோமதி அரசு said...

கதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார் .
அருமையான விமர்சனம்.
குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

வணக்கம்
ஐயா.

சிறுகதை விமர்சனப் போட்டியில் வெற்றி பெற்ற தகவலை பார்த்த போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... தங்களின் விமர்சனப் பார்வை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.இன்னும் பல தொடர் வெற்றிகள் கிடைக்கட்டும்...த.ம6வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Seshadri e.s. said...

வெற்றி பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்... வாழ்த்துக்கள்...

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

ramesh venkatapathy said...

வாழ்த்துக்கள் சார்! மேலும் பல பெருமைகள் வந்து சேரட்டும்!

Dr B Jambulingam said...

வெற்றி பெற்றமையறிந்து மகிழ்ச்சி. தங்களது சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

Bagawanjee KA said...

முதல் பரிசு கிடைத்த போதும் எனக்கு தலைக்கனம் ஏறவில்லை என்று தலைப்பு வைக்காமலே பதிவு செய்த விதம் கண்டு அசந்து விட்டேன் !வாழ்த்துக்கள் !
த .ம 9

s suresh said...

ஒரு விமர்சனம் எப்படி அமைய வேண்டும்? என்பதனை கற்றுக்கொண்டேன்! கதையை நானும் படித்திருந்தாலும் உங்கள் விமர்சனம் அக்கதையை மேலும் சிறப்புடன் புரிந்துகொள்ள உதவியது! அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.10

Thulasidharan V Thillaiakathu said...

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! மிக அருமையான விமர்சனம்! பரிசு கிடைக்காமல் போகுமா?!!!!! இத்தனை பாங்கான ஒரு விமர்சனத்திற்கு! கதையைப் படிக்கத் தூண்டிவிட்டது தங்களது விமர்சனம்! அப்படிப் பார்க்கும் போது விமர்சனம் என்பது ஒரு படைப்பிற்கு எத்தனை முக்கியம் என்பது புரிகின்றது!

த.ம.

Avargal Unmaigal said...

பொண்ணு அழகாக இருந்தாலும் அந்த பொண்ணு பொட்டு வைத்தால் மிக அழகாக இருக்கும் அது பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் அது போலதான் உங்கள் விமர்சனம் அந்த பொட்டு போல எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. அருமையான விமர்சனம் பாராட்டுக்கள்

Avargal Unmaigal said...

உங்களை மாதிரி பெரும் தலைகள் விமர்சனம் செய்வதால் எங்களைப் போல உள்ள வால்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை காரணம் வெற்றி பெற முடியாது என்பதால்தான்

Avargal Unmaigal said...

ஆமாம் எப்போது எங்களுக்கு ட்ரீட்? tha.ma 12

புலவர் இராமாநுசம் said...

வாழ்க இருவரும்! கதையை வந்த அன்று(றே) படித்தேன்! விமர்சனத்தை இன்று படித்தேன்!

அருணா செல்வம் said...

பாராட்டுக்கள் ஐயா

விமலன் said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமையான விமர்சனம்
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
வேதா. இலங்காதிலகம்.

rajalakshmi paramasivam said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.

கவியாழி கண்ணதாசன் said...

எதிலும் வல்லவரான தங்களுக்கு முதல் பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் , முதல் பரிசினை வென்ற கவிஞர் ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Iniya said...

தங்கள் அருமையான விமர்சனம் கதையை படிக்க தூண்டித் தான் விட்டது. விரைவில் படிக்கிறேன். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....!

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துகள்!

Chocka Lingam said...

i learned something

Post a Comment