Thursday, January 9, 2014

பதிவர்களாகிய நமக்கு

காலச் சுற்றினுள்
அடங்காது தனித்து நிற்கும்
ஒரு தினத்தில் வாழ்ந்து பார்க்கவும்
அதன் காரணமாய் காலம் கடக்கவும்

உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொடியேனும் விழியால் காணவும்
அதன் மூலம் அழிவினை அழிக்கவும்

அண்ட சராசரங்களை
இம்மி பிசகாது இயக்கும் அந்த மாயக் காரனை
கை குலுக்கிப் பாராட்டி மகிழவும்
அவன் மூலமாகவே அவனை அறியவும்

பல காலம்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்
நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?

வர்ணங்களையே
நீர்த்துப் போகச் செய்யும்
அழகிய ஓவியம் படைக்கத் தெரிந்த
ஓவியர்களாகிய நமக்கு

வார்த்தைகளையே
அர்த்தமற்றதாக்கிப் போகும்
வண்ணக் கவிதைகள் படைக்கத் தெரிந்த
கவிஞர்களாகிய நமக்கு

கற்பனைகளையே
அதிஅற்புத  படைப்புகளாக
உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
பதிவர்களாகிய நமக்கு

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு   பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே... முயன்றால் முடியாதது எதுவுமில்லை... தன்னம்பிக்கையூட்டும் வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam said...

அதுதான் காலங்காலமாய் கற்பனைகளிலேயே எல்லாவற்றையும்கண்டுகொண்டிருக்கிறோமே. வாழ்த்துக்கள்.

கவியாழி said...

கடினமே அல்ல .முயன்றால் முடியும் என்பதும் உண்மைதான்

Unknown said...

சமையல் அறை பக்கம் இருந்து ஒரு குரல் சபிக்கா விட்டால் ,நீங்கள் சொலவதைப் பார்ப்பதும் சாத்தியமே !
+1

Anonymous said...

வணக்கம்
ஐயா.

கற்பனைகளையே
அதிஅற்புத படைப்புகளாக
உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
பதிவர்களாகிய நமக்கு

தங்களின் கவிதை வரிகள் மனதை நெருடியது எனக்கு
மட்டும் மல்ல வலையுலக உறவுகள் அனைவருக்கும் ஒரு உரமாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஐயா.
த.ம5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

RajalakshmiParamasivam said...

இம்மியும் பிசகாது நம்மை ஆட்டுவிக்கும் மந்திரக்காரன் அதைக் கண்களில் காட்டமாட்டேன் என்கிறானே!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

கடினமே இல்லை ஐயா! அருமையான கவிதை!

ராஜி said...

முடியாதது எதுவுமே இல்ல இவ்வுலகில்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//புரியாத புதிர்கள் எல்லாம் என்றுமேயொரு பொருட்டா என்ன ?

இன்னும் கொஞ்சம் முயன்றால்//

முயன்றால் முடியாததும் உண்டோ!

நல்ல படைப்புக்கு நன்றிகள்.

”தளிர் சுரேஷ்” said...

முயன்றால் முடியாதது இல்லை! அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் நிறைந்த கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

இராய செல்லப்பா said...

ஆகா, என்னமாய் ஒரு பிடி பிடித்தீர்கள் பதிவர்களை! வாழ்க உங்கள் வஞ்சப்புகழ்ச்சி!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


tamilmanam 8

இராஜராஜேஸ்வரி said...

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?

முயற்சி திருவினையாக்கும்..!

தி.தமிழ் இளங்கோ said...

சோர்வில்லாதவர்களைப் பற்றிச் சொல்லும்போது, வள்ளுவர்
“ ஊழையும் உப்பக்கம் காண்பர் “ (குறள் 620) என்று குறிப்பிட்டார். நீங்கள் கவிஞர்களையும் அந்த வரிசையில் சேர்த்து சொல்லி இருப்பது பாராட்டிற்குரியது.

Nagendra Bharathi said...

தன்னம்பிக்கை ஊட்டும் நன்னம்பிக்கை வரிகள் . நன்றி

தனிமரம் said...

முயன்றால் ஏதும் தோல்வியில்லை! அருமையான கவிதை.

Thulasidharan V Thillaiakathu said...

கற்பனைகளையே
அதிஅற்புத படைப்புகளாக
உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
பதிவர்களாகிய நமக்கு

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?

முடிந்தால் முடியாதது இல்லையே!! நல்ல கவிதை!! தன்னம்பிக்கை வரிகள்!!!

கரந்தை ஜெயக்குமார் said...

முயயன்றால் முடியாததென்று ஒன்று உண்டோ
அருமையான கவிதை ஐயா
நன்றி
த.ம.11

Iniya said...

உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொடியேனும் விழியால் காணவும்
அதன் மூலம் அழிவினை அழிக்கவும்

பல காலம்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்
நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?
இல்லையே ....... முயற்சி திருவினை ஆக்கும் எனவே முயற்சிப்போம்.
நன்றி ......! தொடர வாழ்த்துக்கள்......!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கற்பனை இல்லா வாழ்வு முழுமையான வாழ்வல்ல. வரலாற்றுப் புதினங்கள் தொடங்கி நவீனக் கவிதை வரை அனைத்திற்கும் அது பொருந்தும். நன்றி.

கோமதி அரசு said...

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?//

முயன்றால் முடியும். அருமையான் தன்நம்பிக்கை கவிதை.
வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

முயன்றால் முடியும் என்ற தன்னம்பிக்கை தரும் கவிதை நன்றி

Anonymous said...

தன்னம்பிக்கை வரிகள் தான் சில வேளை சோர்ந்து போவதும் உண்டு தான்.
ஆனால் அருமையான சிந்தனை.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

aavee said...

முயன்றால் முடியாதது நிச்சயம் ஒன்றும் இல்லை..

Yarlpavanan said...


"கற்பனைகளையே
அதிஅற்புத படைப்புகளாக
உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
பதிவர்களாகிய நமக்கு" என்றதும்
என்னுள்
"முடியாதது ஏதுமுண்டோ?" என
கேள்வி ஒன்று எழுகிறதே!

வெங்கட் நாகராஜ் said...

தன்னம்பிக்கை தரும் கவிதை. பகிர்வுக்கு நன்றி ரமணி ஜி!

Post a Comment