Friday, January 31, 2014

பண்டித விளையாட்டா படைப்பு ?

.. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
போகிற போக்கில்
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
அவனுக்கு எப்படிப் புரியச் சொல்வது ?

கொத்துகிற தூரத்தில் சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்
என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
அவைகளைச் சொற்களுக்குள் அடைக்க முயல
அவைகள் அடங்காது சீறிக் கொத்த
ஒவ்வொரு கணமும்
நான் நொந்து வீழ்வதும்
ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
உணர்வுகள் பொங்கிப் பெருக
நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினை
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
வார்த்தைகள் கிழிிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?

இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
எது நிர்ணயம் செய்யக்கூடும்?

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனைக் கலைத்துவிட்டுப் போவதும்
எங்கோ தலைதெறிக்கப் போகும்
ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்
விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும்
எப்படி எனப் புரிந்து போனால்
அவனுக்கு எல்லாம் புரிந்து போகுமோ ?

35 comments:

k.murugaboopathy sivagiri erode said...

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?
.
நெஞ்சைத் தொட்ட வரிகள்

Ramani S said...

k.murugaboopathy sivagiri erode//

.தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

உணர்வுகளின் வெளிப்பாடு.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாவற்றிக்கும் அதற்கான நேரம் உள்ளது... தங்கிச் சிரிப்பதை புரிந்து கொள்வது சிரமம் போல...

வாழ்த்துக்கள் ஐயா ...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கைதேர்ந்த கவிதை ஆட்டக்காரர் நீங்கள் என்பதை உணர்த்தி விட்டீர்கள். நீங்கள் கையாளும் சொற் பிரயோகங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தா.ம. 3

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஐயா! மன்னிக்கவும் த.ம 3 அல்ல 4

கரந்தை ஜெயக்குமார் said...

//எப்படி எனப் புரிந்து போனால்
அவனுக்கு எல்லாம் புரிந்து போகுமோ ?//அருமை ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

tha.ma.5

Bagawanjee KA said...

உள்ளே செல்வது பல அணு என்றாலும் கரு உரு பெறுவது ஓர் அணுவால்தானே?ஒவ்வொரு படைப்பும் பிரசவம் என்பதும் மெய்தானே ?
த .ம 6

உஷா அன்பரசு said...

அருமை..
த.ம-7

Thulasidharan V Thillaiakathu said...

தலையணைக்குள் மெத்தையினை
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிற கணங்களை - நல்ல உவமை!

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ? அருமை!

அருமையான கவிதை வரிகள்! கடைசி வரிகள் சிந்திக்க வைத்த வரிகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

த.ம.

Anonymous said...

..வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிக்கும் பண்டித விளையாட்டே படைப்பு!.
அருமை!
பல சமயங்களில் வியப்பு!
தங்கள் சிந்திக்கும் வார்த்தை விளையாட்டு!.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ADHI VENKAT said...

அருமையான சொற்கள்...த.ம.+1

G.M Balasubramaniam said...

வார்த்தைகளில் உணர்வுகள் கலந்து விழுந்த கவிதை...!.பல நேரங்களில் சொல்ல நினைப்பதை சொல்லாமல் விடும்நிலையில் நானிருந்திருக்கிறேன். அவலங்களும் அவஸ்தைகளும் படைப்பாளியின் உள்ளம் விட்டு நேர்த்தியாக வரும்போதுதான் படைப்பு திருப்தி அளிக்கிறது. பாராட்டுக்கள்.உங்கள் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

கோமதி அரசு said...

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?//

அருமையாக சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள் .

சுந்தரா முத்து said...

ஒரு படைப்பாளியின் மனநிலையை அப்பட்டமாகச் சொல்லுகிறது கவிதை. அதிலும் கடைசிப் பத்தி மிக அருமை! பாராட்டுக்கள் ரமணி சார்!

கவிஞா் கி. பாரதிதாசன் said...
This comment has been removed by the author.
கவிஞா் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

தமிழ்மணம் 11

இக்காலச் சூழலை எண்ணிப் படைத்தகவி
முக்கனியை நல்கும் மொழிந்து

தோ்ந்த விளையாட்டு வீரனைப் போன்று
புலமையில் தோ்ந்தோன் ஆடும் விளையாட்டும்
படைப்பில் உண்டு.

எழுத்திலும், சொல்லிலும், அடியிலும், இயைபிலும் புலவன் ஆடுகின்ற விளையாட்டுக்கள் எண்ணில் அடங்கா!

சிந்து, வண்ணம், சித்திரகவி படைப்புகளைப்
புலமையின் விளையாட்டெனச் சொல்லலாம்!

திருஞானசம்பந்தா், திருமங்கை மன்னன், அருணகிரிநாதா், மாறன் அணி ஆசிரியா் படைத்த திருவெழுகூற்றிருக்கையைப் புலமை விளையாட்டின் உச்சமெனப் போற்றி மகிழலாம்

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

s suresh said...

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனைக் கலைத்துவிட்டுப் போவதும்
எங்கோ தலைதெறிக்கப் போகும்
ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்
விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும்
எப்படி எனப் புரிந்து போனால்
அவனுக்கு எல்லாம் புரிந்து போகுமோ ?// மிகவும் ரசித்த வரிகள்! படைப்பு உருவாவதை பக்குவமாய் சொன்ன வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

Rupan com said...
This comment has been removed by the author.
Rupan com said...

வணக்கம்
ஐயா.

ஒவ்வொரு வரிகளிலும் எவ்வளவு கருத்துக்கள் புதைந்து கிடக்கிறது..
படிக்கும் போது சிந்திக்க தூண்டும் கவிமாலை.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
ஐயா.
த.ம 13வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நா.முத்துநிலவன் said...

”கொத்துகிற தூரத்தில் சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும் -
அது எப்படி அய்யா?
என்னைப் பக்கத்திலிருந்து பார்த்தது போல
இவ்வளவு தத்ரூபமாய் எழுதிவிட்டீர்கள்?
ஓ! உயர்ந்த படைப்பின் ஆழமே,
இந்தப் பொதுமைத்தன்மையில்தான்
இருக்கிறதல்லவா? அருமை! வாழ்த்துகள். நன்றி

Dr B Jambulingam said...

கற்பனை வற்றிபோவதற்கு வாய்ப்பே இல்லை. தொடர்ந்து தங்களைப் போன்றோர் அது பற்றி நினைக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லும் கருத்துக்களில் நேர் மற்றும் எதிர்மறைக் கருத்துக்கள் வரலாம். ஆனால் எழுத்து என்பதானது எழுத எழுத மெருகேறிவரும் என்பதே உண்மை. வித்தியாசமான சிந்தனை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அற்புதமான படைப்பு ஐயா..மிக அருமை!
த.ம.14

Mythily kasthuri rengan said...

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?முடியல சார். எப்படி இப்படி எழுதுறிங்க ?!
நீங்கள் கைதேர்ந்த சீட்டுக்காரர் தான்.

Iniya said...

தெள்ளு தமிழ் துள்ளி விளையாட நாவில்
நெஞ்சில் வாழாது துயர் வாடி வீழும் !

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?

அருமை பகிர்வுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள்...!

MANO நாஞ்சில் மனோ said...

கடுமையான கருத்துகளை எளிமையாக சொல்லிவிடுகிறீர்களே குரு...!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை..

Mathu S said...

/தலையணைக்குள் மெத்தையினை
திணிக்கமுயலும் முட்டாள்போல்/

வலிக்கும் உண்மை..

அப்பாதுரை said...

படைப்பாளியின் அவஸ்தை படைப்பில் வெளிப்படுவது அரிது. அழகாகச் சொன்னீர்கள்.

V Mawley said...

்.தங்களின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. என்பதே என் கருத்தும்; வணங்குகிறேன்..மாலி

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.

த.ம. +1

Chocka Lingam said...

its true

Post a Comment