Friday, January 24, 2014

இதுவும் ஒருவகை ,,,,,,,,,

தற்சமயம் மாநிலங்களவை தேர்தலுக்கான
வேட்பாளர்களை அ,தி,மு, க அதிகாரப் பூர்வமாக
அறிவித்துள்ளது.அதில் இருவர் தற்போது
மாநகராட்சி மேயராக இருப்பவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது

தென்மாவட்டங்களைக் குறிவைக்கும்
அண்ணா தி.மு.க.

வேட்பாளர் தேர்வில் புதிய வியூகம்
,
அனைத்து சமுகத்தினருக்கும்
வாய்ப்பளிக்கும் விதமாக
அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

என்றெல்லாம்
வித்தியாசம் வித்தியாசமாக விதம் விதமாக
அலசி ஆராயும் பத்திரிக்கைகள்----

வேண்டுமென்றே நாம் யோசித்து விடக்கூடாது
என்பதற்காகவே இவர்கள் மேயர் பதவியை
ராஜினாமா செய்வதால் மீண்டும் தேர்தல்
நடக்க வேண்டி இருப்பது குறித்தோ
அதற்காக ஏற்படுகிற தேவையற்ற
 செலவு குறித்தோ
லேசாகக் கூட முனகவில்லை

தாம் விரும்புகிற இனத்தவருக்கு மதத்தவருக்கு
அவர்கள் மாநிலங்களவை பதவியைத் தரட்டும்
அவர்களுக்கு போதுமான வாக்குகள் இருப்பதால்
அது அவர்கள் இஷ்டம்.
அதை நாம் விமர்சிக்க முடியாது

ஆனால்  அதை ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களை
ராஜினாமா செய்யச் சொல்லி
அவர்களுக்குத்தான் தர வேண்டும்
என்பது என்ன கட்டாயம். ?

அவர்கள் பதவி கொடுக்க விரும்புகிற
 இனத்தில்,  மதத்தில்
இவர்களை விட்டால் மாநிலங்களவைக்குத்
தகுதியானவர்கள்இல்லையென்பது போல்
செயல்படுவது கூட
குறிப்பிட்ட இனத்தாரையும் மதத்தாரையும்
இழுவுபடுத்துதல் போலத்தான் இல்லையா ?

இந்த ராஜினாவால் நடக்கும் தேர்தலுக்கான செலவுக்கு
யார் பொறுப்பேற்றுக் கொள்வது ?

இதை ஏன் எந்தப் பத்திரிக்கையும்
மக்கள் முன் ஒரு கருத்தாக
 எடுத்து வைக்க முயலவில்லை ?

பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இறந்தால்
மீண்டும் தேர்தல் வைக்காது வென்ற கட்சியிலேயே
ஒரு வேட்பாளரை அறிவிக்கச் செய்வதன் மூலம்
தேவையற்ற தேர்தலைத் தவிர்க்கலாமா  எனக் கூட
யோசிக்கிற கால கட்டத்தில் இது போன்று மீண்டும்
மீண்டும் தேவையற்ற செலவுகளை செய்ய முயல்வது
எந்த விதத்தில் நியாயம் ?

இது குறித்து  பதிவர்களின் விரிவான அலசலை
எதிர்பார்த்து இப்பதிவின் தலைப்பின் வாசகத்தை
முடிக்காது விட்டுள்ளேன்.

தங்கள் கருத்தை எதிர்பார்த்து..

வாழ்த்துக்களுடன் ...

21 comments:

Unknown said...

தலைப்பின் தொடர்ச்சி ...ஜா'தீ 'ய அரசியல்தான் .உங்கள் ஆதங்கம் நியாயமானது !
த ம 3

Anonymous said...

oh! politics....!!!!
I am going......
Vetha.Elangathilakam.

ராஜி said...

வியாபாரம்

”தளிர் சுரேஷ்” said...

இதுவும் ஒருவகை ஏமாற்றுதான்! கண்கட்டிவித்தைதான்! எத்தனையோ சொல்லலாம்! ஆனால் கட்சிகள் திருந்தாது! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

நியாயமே இல்லை தான்... இதுவும் ஒருவகை ஏமா(ற்)றும் நாடகம்...

ஸ்ரீராம். said...

செலவுதான். இதெல்லாம் தவறு என்று சொல்லும் தைரியம் எந்தப் பத்திரிகைக்கும் இல்லை. என்ன அரசியலோ!

Amudhavan said...

பத்திரிகைகளும் சரி, பதிவர்களும் சரி இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இங்கே ஒரு சிலருக்கு வெவ்வேறான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதையே கலைஞர் செய்திருந்தால் இந்நேரம் இரு ஊடகங்களும் பற்றி எரிந்திருக்கும்.

வெற்றிவேல் said...

இறந்தவரின் அல்லது பதவியை ராஜினாமா செய்தவரின் தொகுதியில் நடந்த தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வாய்ப்பு அளிக்கலாம். ஜாதீய அரசியல் வேண்டாம்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

காலம் சொல்லும் .

RajalakshmiParamasivam said...

உங்கள் கருத்து சுவாரஸ்யமானது. நிறைய பதிலில்லாத கேள்விகள் இருக்கின்றன.

இராய செல்லப்பா said...

இத்தகைய ராஜினாமாக்கள் மூலம் மறு தேர்தல் நடத்த அரசுக்கு ஏற்படும் மொத்த செலவையும் அப்படி ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு தேர்தலில் போட்டியிடுபவரின் கட்சியே ஏற்றுக்கொள்ளவேண்டும் - என்று அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்பது ஒரு யோசனை.

Avargal Unmaigal said...

ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு தேர்தலில் போட்டியிடுபவரின் கட்சியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சட்டம் கொண்டு வருவதைவிட இப்படி ஒரு பதவியில் இருப்பவர் பதவி முடியும் வரை வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது அல்லது கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டால் பிரச்சனைகள் ஏதும் இருக்காது

Avargal Unmaigal said...

///இதை ஏன் எந்தப் பத்திரிக்கையும் மக்கள் முன் ஒரு கருத்தாக எடுத்து வைக்க முயலவில்லை ?///

அநேக பத்திரிக்கைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே எழுதும் ஆனால் இதை பற்றி எதிர்கட்சிகள் கூட வாய் திறக்கவில்லை தங்கள் டிவிகளில் பத்திரிக்கைகளில் இதை பற்றி ஏதும் எழுதாமல் ஊமையாகவே இருக்கின்றன இப்படி இருக்கும் போது நாம் பத்திரிக்கைகளை மட்டும் குறை சொல்லவது எந்த வகையில் நியாம்

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு பதவியில் இருப்பவர் பதவி முடியும் வரை வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது அல்லது கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டால் பிரச்சனைகள் ஏதும் இருக்காது

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.8

வெங்கட் நாகராஜ் said...

அரசியல்......

இத்தனை கோடி மக்கள் இருக்கும் இந்நாட்டில், வேறொரு ஆளா இல்லை. செலவுகள் கோடி கோடியாக செய்வது இவர்களுக்கு வழக்கமாக போய்விட்டது. புதியதாய் வரும் ஆட்களும் அரசியலில் நாடகம் போடுகிறார்கள்......

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

இதுவும் ஒருவகையில் கொள்ளையிடும் போக்கே!
எதுவும் அறியா இனம்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


தமிழ்மணம் 10

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிந்தனைக்குரிய விவாதத்தைத் துவங்கிவைத்துள்ளீர்கள். இம்மாதிரியான சிக்கல்களுக்கு விடை காண்பதன் மூலமாக பல குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

பத்திரிகைகள் எதுவுமே நடு நிலை காப்பதில்லை! பத்திரிகைத் தர்மம் காப்பதில்லை! அரசியல் மட்டும் என்ன வாழ்ந்தது! அதிலும் தர்மம் இல்லை! அரசியல் என்றாலே பணம்...கொள்ளை என்பதுதானே!
இதுவும் ஒரு வகை நரித்தந்திரம்தான்!

நாம்தான் முட்டாள்கள்! ஏமாற்றப்படுபவர்கள்!!

த.ம.

Yaathoramani.blogspot.com said...

இதுவும் ஒருவகை அராஜகம்தான்
எனத்தான் தலைப்பிட நினைத்தேன்

Post a Comment