வலையதை அறிந்திடும் முன்னால்-அதன்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம்
விண்வெளி ஒருநொடிக் கடக்கும்-புதிய
மின்மொழி அறிந்திடும் முன்னால்
மண்ணடிக் கிடந்திடும் பொன்போல்-நாமும்
மண்னெனக் கிடந்தோம் பலநாள்
சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்
சவமெனக் கழித்தோம் வெகுநாள்
விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
பிழையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்
கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் வாரீர்
இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் வாரீர்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம்
விண்வெளி ஒருநொடிக் கடக்கும்-புதிய
மின்மொழி அறிந்திடும் முன்னால்
மண்ணடிக் கிடந்திடும் பொன்போல்-நாமும்
மண்னெனக் கிடந்தோம் பலநாள்
சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்
சவமெனக் கழித்தோம் வெகுநாள்
விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
பிழையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்
கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் வாரீர்
இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் வாரீர்
34 comments:
''..இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் வாரீர்!..'''
ஆம்! முயலுவோம் ...
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
Aamaangayyaa !
Aamaam..
வலைத்தளத்தின் பலத்தை மிகவும் பலமாக சொல்லும் கவிதை, உண்மைதான் குரு...!
அருமை.
வலைத்தளத்தின் பலத்தை மிகவும் பலமாக சொல்லும் கவிதை,
நன்றி ஐயா
த.ம.3
துள்ளும் கவிதை நடை.
மின்மொழி - அழகான சொல். பயன் படுத்திக்கொள்கிறேனே?
சிற்பியின் உளிபடா கல் - அடடா!
வலைத்தளக் களத்தில் இறங்கிய பின்னர்தான் சிறப்பை உணர முடிந்தது. நன்றி.
சிறப்பை சிறப்பாய்ச் சொன்னீர்கள்
கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் வாரீர்
அதன் மகத்துவம் தெரிந்தே செயல்படும் வீரர் நீவீர் வாழ்க வாழ்க...!
தங்களுக்கும் இல்லத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
///சிற்பியின் உளிபடாக் கல்லாய் -
விதைத்ததும் விளைந்திடும் பயிராய்
வியக்க வைக்கும் அற்புதமான வைர வரிகள். படைப்புக்கு பகிர்வுக்கு பாராட்டுகள் tha.ma 5
சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -//
அருமை.
வாழ்த்துக்கள்.
அற்புதமான பெருமைப்பட வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் வாரீர்
அருமை! உள்ளங்கை நெல்லி போன்ற கருத்து!
' வலை ' நாம் இன்று நட்டதும் இன்றே பூக்கும் ரோசாவாம்.
[ நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்........ ] நித்தமும்
விருந்து சமைப்போம். விரும்பியே உண்போம். அருமை.
செய்வோம் .
சிறப்பான சிந்தனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
நமக்கே தெரியாமல் இருந்த பலத்தை நமக்கே புரியவைத்தது வலை ... இது உண்மை !
+1
//கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் வாரீர்//
அருமையான ஆக்கம்.
ஏற்படுத்தியதோர் தாக்கம்.
ஏற்பட்டதே ஊக்கம்
இனியேது எனக்குத் தூக்கம். ;)
[யாதோவாக எழுதியுள்ளேன்]
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. வலை என்று ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டதும் , எழுதும் எல்லோருக்கும் ஒரு மிகப் பெரிய திருப்தி. அதை மிக அருமையான கவிதையாய் வடித்து விட்டீர்கள்.
அருமை அய்யா.. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்
உவமைகள் அழகு! வலையின் வலிமை உணர்த்தும் வரிகள் சிறப்பு! அருமையான படைப்பு! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா!
tamilmanam 12
// வலையதை அறிந்திடும் முன்னால்-அதன்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம் //
அருமை! அருமை! எளிமையாக, உள்ளதை உணத்திய வரிகள். கவிஞருக்கு எனது மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!
வணக்கம்
ஐயா.
கருத்துமிக்க கவி வரிகள்.. என் மனதை நெருடியது... சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
த.ம14வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உணர்ந்த உணரவைக்கும் அற்புதமான கவிதை ஐயா!
ஒவ்வொருவர் உள்ளத்து உணர்வினையும் அத்தனை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காண்பித்து விட்டீர்கள்..
மிகச் சிறப்பு ஐயா! வாழ்த்துக்கள்!
'மின்மொழி' -அழகான சொல்லாடல்,
'விதைத்ததும் விளைந்திடும் பயிராய்' - அருமை
சிற்பியின் உளிபடாக் கல்
'இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் வாரீர்" - அரிய வரி.
மொத்தத்தில் கவிதை சிறப்பாக வந்துள்ளது.
மரபுத் தமிழில் புதிய கருத்துகள்! அருமை.
மிக அருமை ரமணி ஐயா!
த.ம.16
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்...
பாராட்டுகள்..
இன்று எனது பக்கத்தில்
http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html
இணையத்தின் வீச்சு இன்றி இன்றியமையாததாய்.
மிகவும் சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!!
விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
பிழையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்//உண்மை.அழகாய் சொல்லி விட்டீர்கள்.
அருமை.....
த.ம. +1
சாதகக் கருத்துக்களைப் பட்டியலிட்டு கடைசியில் நம் எழுத்தினைத் தொடர்வோம் வாரீர் என அழைக்கிறீர். நன்றி.ஆனால் ஏனோ உடலும் உள்ளமும் வசப்படாததால் எழுதுவதே பாதிக்கப் படுமோ எனும் அச்சம் எழுகிறது/.
Post a Comment