தர்பார் மண்டபங்களில்
மன்னனைக் குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை
அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை
கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை
குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை
அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக் கிடந்த என்னை
கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப் புதையுண்டுப் போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே
தன்னிகரில்லாக் கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா
மன்னனைக் குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை
அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை
கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை
குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை
அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக் கிடந்த என்னை
கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப் புதையுண்டுப் போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே
தன்னிகரில்லாக் கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா
18 comments:
நாளைய பதிவு இன்றேவா?! :)))
முண்டாசுக் கவிஞனின் பிறந்தநாளுக்கு ஏற்ற அருமையான கவிதை.
ஓ...இப்படியும் பாரதியாருக்கு நினைவுப் பரிசா ?
த.ம +1
ஐயாவிற்கு வணக்கம்
மிக அற்புதமாக மகாகவிக்கு த்ங்கள் கவியால் மகுடம் சூட்டியுள்ளீர்கள். கவிவரிகளும் பாரதியின் வீரத்தைப் போல் பொங்கி வந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பானதொரு பகிர்வுக்கு நன்றீங்க ஐயா...
மஹாகவி பாரதிக்கேற்ற அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
தமிழன்னை தன் மகனுக்காய் உங்களின் வாயால் பாடிய பாட்டு அருமை இரமணி ஐயா.
ஒரு மகா கவியை நினைவு கூர்ந்து மற்றொரு மகா கவி எழுதிய அருமையான கவிதை. பாராட்டுகள் வலையுலக மகா கவியே tha.ma 6
வணக்கம்
ஐயா
பாரதிக்கு எழுதிய கவிதையில் வீரம்.கம்பீரம். எல்லாம் நிறைந்த கவிதை.. அருமை வாழ்த்துக்கள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
-
பாரதிக்கு
கவிதையாலே ஒரு
நல்வாழ்த்து
தங்களால் ம்ட்டுமே
இதுபோல்
எழுத் இயலும்.
நன்றி ஐயா
த.ம.7
வாழ்க பாரதிதியின் புகழ்
பாரதியை போற்றி அளித்த பாமாலை அருமை ...!
நன்றி வாழ்த்துக்கள்
அருமை ஐயா!!
த.ம. 9
வித்தியாசமான சிறப்பான ஆக்கம்... வாழ்த்துக்கள் ஐயா...
முண்டாசுக் கவிஞனின் பிறந்தநாளுக்கு ஏற்ற , புகழ் வெடிக்கும் பட்டாசுக் கவிதை!நன்று!
பாரதிக்கு ஒரு அருமையான சமர்ப்பணம் உங்களின் அருமையான கவிதை!
பாரதிக்கு ஒரு புகழ் மாலை! படிக்கப் படிக்க அவரை நினைவுகூறும் வரிகள்!
பொருள் நிறை கவிதை அருமை..
Post a Comment