Saturday, March 1, 2014

சாதாரணத்தின் சுகமும் அசாதாரணத்தின் ரணமும்

ஓவியக் கோடுகளின்
நளின வளைவுகளின் நேர்த்தியையும்
வண்ணங்களின் அர்த்தங்களையும்
அதிக்மாகத் தெரிந்து கொள்ளாதவரை
அனைத்து ஓவியங்களும்
மிக அழகாகத்தான் தெரிகின்றன

படிமம் குறியீடு
இருண்மை முதலான அறிவும்
இலக்கணம் குறித்த தெளிவும் 
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது

ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை
என்பது மட்டுமல்ல
உறவுகள் எல்லாம் 
மிக இறுக்கமாகத்தான் இருக்கின்றன

வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது

திண்ணையையும் தலைப்பாகையையும்
சிம்மாசனமாகவும் கிரீடமாகவும்
ஏற்றுக் கொண்டு
சாதாரணமான்வனாக இருத்தல்
சுகமாக மட்டும் அல்ல
அது பலருக்கு ஞானத்தின்
 எளிதான குறீயீடாகக் கூடப் படுகிறது

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக  இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு  இருத்தலுக்கான
 உன்னத அடையாளமாய  இருக்கிறது

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றும் உண்மை தான்...

இராய செல்லப்பா said...

கவிஞன் "சாதாரணமானவனா- இல்லை, சதா ரணமானவன்" என்று இளந்தேவன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

மிக நல்ல கருத்தகளாக
சிந்தனை இதழ்களாக விரிகிறது. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

கவிதையின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது ஐயா மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

Thulasidharan V Thillaiakathu said...

அத்தனையும் உண்மை! நல்ல சிந்தனைகள் அடங்கிய வரிகள்!

வாழ்த்துக்கள்!

த.ம.

vimalanperali said...

அசாதரனங்கள் எப்பொழுதுமே பேசப்படுபவையாக/

கரந்தை ஜெயக்குமார் said...

அசாதாரணங்கன் எப்பொழுதுமே
பேசப்படுபவைதான்
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.4

RajalakshmiParamasivam said...

எது சாதாரணம், எது அசாதாரணம் என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்.
பாராட்டுக்கள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஒவ்வொரு வரியும் அருமை..அருமையான கவிதை ஐயா!
த.ம.5

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான உதாரணங்கள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

aavee said...

கருத்து பொதிந்த கவிதை.. அருமை ஐயா..

பால கணேஷ் said...

வரிக்கு வரி ஆமோதிக்கக் கூடிய கருத்துக்கள்! இரண்டு முறை படித்து, ரசிக்க வைத்தன. (செல்லப்பா ஸாரின் கருத்தையும் ரசித்தேன்).

பால கணேஷ் said...

ஹையா,.. நான் ஏழாவது ஆள்!

G.M Balasubramaniam said...

இருப்பதைவிட இல்லாதவைகளே நல்லது என்று தோன்றுகிறது.

Yarlpavanan said...

தங்கள் கவிதை கூறும் உண்மைகளை
வரவேற்கிறேன் ஐயா!

ராமலக்ஷ்மி said...

அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

த.ம. +1

சசிகலா said...

வணக்கம் ஐயா. நலம் நலமறிய ஆவல். இணையம் பக்கம் வராததால் பல பகிர்வுகளை பார்க்க முடிவதில்லை நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.
சாதாரண வார்த்தைகளில் அசாதாரணத்தை உணர்த்திய விதம் வெகுவாக கவர்ந்ததுங்க ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : வியாழனின் விழுதுகள்

Post a Comment