Monday, March 3, 2014

கதர்க் குல்லாத் " திவாரி "கள்

அவன் எத்தனைப் பெண்களை
மயக்கி ஏமாற்றித் தொலைத்தான் ?
அந்தக் கவலை நமக்கெதற்கு ?
அவன் எத்தனை லட்சம் மக்களை
ஏமாற்றி தன் தொண்டானாய்க் கொண்டுள்ளான் ?
அதுதானே நமக்கு வேண்டும்

அவன் எப்போதும் போதையில்
மயங்கிக் கிடந்தால் நமக்கென்ன ?
அந்த வீண்விவாதம் நமக்கெதற்கு ?
அவன் நம்மவனா நம் மொழி பேசுபவனா ?
அதுதானே அரசியல் கணக்கு

அவன் வாய் திறந்தால்
வருவது பொய் மட்டும்தானா ?
இருந்து விட்டுப்போகட்டுமே
சுவாரஸ்யமாகச் சொல்கிறானா ?
அதுதானே அரசியலுக்கு அடிப்படை

நல்லவெனெல்லாம் தொண்டு செய்யவும்
வல்லவனெல்லாம் தலைவனாகி
ஆட்டம் போடவும் எனச் சமூகச் சூழலானபின்
கதர்க் குல்லாத் " திவாரி "களைக்
குறைபட்டுத்தான் என்ன பயன்  ?

18 comments:

கவிதை வானம் said...

சமுக சிந்தனையுள்ள நல்ல படைப்பு

ராஜி said...

அந்தக் கவலை நமக்கெதற்கு ?
>>
எங்களுக்கு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், குடம், அரிசி மூட்டை, மூக்குத்தி, புடவை தந்தால் போதும்.

தி.தமிழ் இளங்கோ said...

சூடான அரசியல் சாடல்! மறைந்து இருக்கும் திவாரிகள் எத்தனை பேரோ? திவாரியின் திவாரிக்கும் சீட் கொடுப்பார்கள்!

Avargal Unmaigal said...

மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க

Avargal Unmaigal said...

இந்தியா போன்ற நாடுகளில்தான் திவாரி போன்றவர்கள் தலைவராக இருக்க முடியும்

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

உண்மையான வரிகள்......நல்ல கருத்தாடல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

Yarlpavanan said...

உண்மை பளிச்சிட அழகாக அரசியலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

ADHI VENKAT said...

யாரு இதெல்லாம் யோசிக்கறாங்க....:)) த.ம +1

bandhu said...

திவாரி பிரதம மந்திரி ஆகியிருக்க வேண்டியது. நாம் செய்த புண்ணியம், ராஜீவ் இறந்த போது வந்த எலக்ஷனில் மூத்த அரசியல் வாதியாக இருந்த திவாரி தன் தொகுதியால் தோற்றதால் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த நரசிம்ம ராவ் பிரதமர் ஆனார்.

அதே போல, மற்ற திவாரிகளிடம் இருந்தும் கடவுள் காப்பாற்றுவார்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

யாருக்கு கவலை ஐயா? தனக்குப் பணம் வர வேண்டும்..அதையன்றி வேறு யோசனையில்லை..
த.ம. +1

”தளிர் சுரேஷ்” said...

யாருக்கும் கவலை இல்லாமல் செய்துவிட்டது இந்திய அரசியல்! நல்ல படைப்பு! நன்றி!

மகிழ்நிறை said...

இது மற்றும் சில கதர் ஆளுங்களையும் நினைவு படுத்துது! சுவாரஸ்யமான பொய்கள் இனிக்கும் விஷம் என்பதை உணரத்தான் வேண்டும் . அருமை அய்யா

அருணா செல்வம் said...

பசு தோல் மட்டும் தானே தெரிகிறது.

நல்ல படைப்பு இரமணி ஐயா.

MANO நாஞ்சில் மனோ said...

கதர்க் குல்லாத் " திவாரி "//

உங்கள் ஆதங்கம் நன்றாக புரிகிறது குரு, என்ன செய்ய நம்ம தலைஎழுத்து அப்படி இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

இப்போது உண்மையை ஒத்துக்கொண்டதிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறாரோ.....

த.ம. +1

G.M Balasubramaniam said...

88 வயதில் இதுவரை மறுக்கப்பட்டு வந்தவரைத் தன் மகன் என்று சொல்லச் செய்த அவரது மகனுக்குப் பாராட்டுக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகச் சரியான பதிவு! அதுவும் இப்போதைய சூழலுக்கு, தேர்தல் நெருங்கி வரும் சமயம் மிகவும் ஏற்ற பதிவு1

யார் இதையெல்லாம் மண்டுகொள்கிறார்கள்? எங்களுக்கு வேண்டியது, அரிசி, கிரைண்டர், டி.வி. ஏன் வீடே கூட எல்லாமும் இலவசமாய்!

எத்தனைத் திவாரிகள் இருக்கின்றனரோ! நல்ல சாடல்!

த.ம.

Post a Comment