Tuesday, April 1, 2014

ஆண்டவனின் பவர் ஏஜெண்டுகள் நிச்சயம் பூசாரியோ ஃபாதரோ ஹாஜியாரோ இல்லை

எங்களுடைய அரிமா சங்கத்தின் பொருளாளராக
இருக்கக்கூடிய பெருந்தன்மை மற்றும்
வள்ளல்குணத்திற்கும் மொத்தக் குத்தகைக்காரரான
இருக்கக் கூடிய நண்பர் லயன் ராஜா அவர்கள்
எனக்கு தொலைபேசியில் "ஒரு சிறிய நிகழ்ச்சி
எனது வீட்டில் இருக்கிறது வந்து கலந்து
 கொள்ளமுடியுமா ? "எனக் கேட்டார்

எனக்கும் திருமங்கலத்தில் (அந்தத் தேர்தல் பிரபல்யத்
திருமங்கலம்தான் )ஒரு அவசர வேலை இருந்ததால்
ஒப்புக்கொண்டு எங்கள் சங்கச் செயலாளர் லயன்
முத்துமுனியாண்டி அவர்களையும்
அழைத்துக் கொண்டு பதினொரு மணியளவில்
அங்குப் போய்ச் சேர்ந்தேன்

ஏதாவது ஒரு சிறு குடும்ப நிகழ்வு இருக்கும் என
எண்ணிப் போன எனக்கு 13 வயது உடைய
ஏறக்குறைய 20  ஆண் மற்றும்  பெண் குழந்தைகளாக
இருந்தது வித்தியாசமாகப் பட்டது. எல்லோரும்
சந்தோஷமாக அவர்கள் வீட்டில் சிரித்து மகிழ்ந்து
பேசிக் கொண்டும் வாசலில் கிரிக்கெட்
ஆடிக் கொண்டும் இருந்தார்கள்

"இன்று என்ன விஷேடம்,இந்தக் குழந்தைகள் எல்லாம்
யார் எனக் கேட்டேன்."

அவர் சொன்ன விஷயம் மிகுந்த மகிழ்வளிப்பதாகவும்
மிகவும் வித்தியாசமானதாகவும் பட்டது

அவர் சொன்ன விஷயம் இதுதான்

அவருடைய மனைவி திருமதி ஹேமா அவர்கள்
ஏறக்குறைய  அவர்கள் வீட்டிலிருந்துஇ 20 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள சின்ன உலகாணி என்னும்
கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய
நடு நிலைப் பள்ளியில்ஆசிரியராகப்
பணி செய்து வருவதாகவும்

ஒவ்வொரு வருடமும் எட்டாவது படித்து முடித்து
அந்தப் பள்ளி விடுத்து மேற்கொண்டு படிக்க
வெளியே செல்லுகிற அனைவரையும் பள்ளி
இறுதி நாளில் வீட்டிற்கு அழைத்து தன் கையால்
விருந்து சமைத்து குடும்பத்துடன்  அமர்ந்து உண்டு
அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்கள்
எதிர்காலம் குறித்து மிகத் தெளிவாக ஒரு
முடிவுடன் படிக்கும் படியாக
அறிவுரை கூறிவருவதாகவும்

இதைக் கடந்த மூன்று வருடங்க்களாகச் செய்து
வருவதாகவும் சொல்லச் சொல்லக் கேட்க
எனக்குமிகுந்த மகிழ்சியாகவும்,
பெருமையாகவும் இருந்தது

நானும் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு
அவர்களுடன் உணவருந்திவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்

மிகச் சிறிய விஷயம் போல ராஜா மற்றும் அவரது
துணைவியார் ஹேமா அவர்கள் சொன்னாலும் கூட
இது அந்தக் குழந்தைகள் மனதில் எவ்வளவு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது அந்தக்
குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்த
இலட்சியங்களைப் பகிர்ந்து கொண்ட விதம்
என்னை வெகு நேரம்சிந்திக்கவைத்தது

கலெக்டர் ஆவேன் வக்கீல் ஆவேன்
எஞ்சினியர் ஆவேன் என அவர்கள்
 துடிப்போடுச் சொன்னவிஷயம் நிச்சயம்
அவர்கள்  அப்படி ஆகி நிச்சயம் இந்த டீச்சர் வீட்டிற்கே
வந்து ஆசிபெற்றுப் போவார்கள் எனவும்
எனக்கு நிச்சயமாகப்பட்டது

உண்மையில் ஆண்டவனிடன் பவர் ஏஜெண்டுகள்
பூசாரியோ,ஹாஜியாரோ,ஃபாதரோ
இருக்க வாய்ப்பே இல்லை
இது நாமாக நியமித்துக் கொண்டு நம்மை
ஏமாற்றிக் கொள்வது

நிச்சயம்  ஆண்டவனின்பவர் ஏஜெண்டுகள்
இதுபோன்றுஎங்கோ ஒரு மூலையில்
எந்தக் கைமாறும் எதிர்பாராது
வித்தியாசமான செயற்கரிய செயல்களை செய்து
தானும் மகிழ்ந்து மற்றவர்களையும்
மகிழ்விப்பவர்களாகத்தானே இருக்கமுடியும் ?


41 comments:

ஸ்ரீராம். said...

பாராட்டப்படவேண்டியவர்கள். நல்ல காரியம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

goood

jaman

கரந்தை ஜெயக்குமார் said...

இதுபோன்ற ஆசிரியைகள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.
பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கின்றேன்

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.4

Unknown said...

#இது நாமாக நியமித்துக் கொண்டு நம்மை
ஏமாற்றிக் கொள்வது#
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை !
த ம 5

சிகரம் பாரதி said...

Arumai.

Anonymous said...

நல்ல விடயம் கேட்க மகிழ்வாக உள்ளது.
பகிர்விற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

மற்றவர்களுக்காக நம்மை ஏமாற்றிக் கொள்வது 100% உண்மை...

இது போல் ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்...

அவர்களின் பரந்த எண்ணத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் பல...

கோமதி அரசு said...

ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆசிரியர் மாணவர்கள் நல் உறவு மேம்படும். மாணவர்கள் வாழ்நாளில் இந்த ஆசிரியரை மறக்க மாட்டார்கள்.

kkk said...

Nenjarntha vaalthukkal teacherukkum avarathu kanavarukkum.

விமல் ராஜ் said...

ஆசிரியை திருமதி ஹேமா அவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது தான்... வாழ்த்துக்கள் !!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் முதல் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டதிற்கும் மனமார்ந்த நன்றி
பாஸிடிவ்வான செய்திகளாகக் கொடுத்து
இப்படி பாஸிடிவ்வான செயல்செய்பவர்களை
பாராட்டும் குணம் எத்தனை முக்கியமானது என்பதை
தங்கள் பதிவுகளின் மூலம்தான் பெற்றேன் என்பதை
இங்கு குறிப்பிடுவதில் அதிகப் பெருமை கொள்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

Dr B Jambulingam said...
நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க. பகிர்வுக்கு நன்றி.//

தங்கள் உடன் வரவுக்கும்
மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

hameedu jaman //

தங்கள் உடன் வரவுக்கும்
மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
இதுபோன்ற ஆசிரியைகள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.
பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கின்றேன்

தங்கள் வாழ்த்து அவர்களுக்கு
கூடுதல் வலு நிச்சயம் சேர்க்கும்

தங்கள் உடன் வரவுக்கும்
மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

சிகரம் பாரதி//

தங்கள் உடன் வரவுக்கும்
மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi said..//
நல்ல விடயம் கேட்க மகிழ்வாக உள்ளது.
பகிர்விற்கு நன்றி.//

தங்கள் உடன் வரவுக்கும்
மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...//
மற்றவர்களுக்காக நம்மை ஏமாற்றிக் கொள்வது 100% உண்மை...
இது போல் ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்...
அவர்களின் பரந்த எண்ணத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் பல...//

தங்கள் உடன் வரவுக்கும்
மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...//
ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆசிரியர் மாணவர்கள் நல் உறவு மேம்படும். மாணவர்கள் வாழ்நாளில் இந்த ஆசிரியரை மறக்க மாட்டார்கள்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kkk said...//
Nenjarntha vaalthukkal teacherukkum avarathu kanavarukkum.//

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி





Yaathoramani.blogspot.com said...

விமல் ராஜ் said...//
ஆசிரியை திருமதி ஹேமா அவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது தான்... வாழ்த்துக்கள் !!//

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

ராஜி said...

இதுப்போன்ற ஆண்டவனின் பவர் ஏஜண்டுகள் இருப்பதால்தான் எப்பவாச்சும் மழைப் பெய்யுது. அவர்களுக்கு என் வாழ்த்துகளோடு கூடிய வணக்கங்கள்.

Packirisamy N said...

வணக்கத்துக்குரிய ஆசிரியர்.

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் நண்பர் லயன் ராஜா – அவரது துணைவியார் திருமதி ஹேமா ஆகியோரது புதிய சிந்தனை பாராட்டத்தக்க ஒன்று. ஆசிரியர் – மாணவர் நல்லுறவுக்கு வழிவகுக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ramkaran said...

தங்களின் இந்த சந்திப்பு / பதிவு அனைவரும் சிந்திக்க ஒரு தூண்டு கோலாக அமைந்துள்ளது. திரு ராஜா திருமதி ஹேமா தம்பதி நலம் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !

கே. பி. ஜனா... said...

இத்தகைய ஆசிரியர்கள் தாம் மாணவர்களுக்கான எதிர்காலத்தை பிரகாசிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் வந்தனங்கள்!

கே. பி. ஜனா... said...

த. ம. 9

Yarlpavanan said...

உளவியல் நோக்கிலே
"ஒவ்வொரு வருடமும் எட்டாவது படித்து முடித்து
அந்தப் பள்ளி விடுத்து மேற்கொண்டு படிக்க
வெளியே செல்லுகிற அனைவரையும் பள்ளி
இறுதி நாளில் வீட்டிற்கு அழைத்து தன் கையால்
விருந்து சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உண்டு
அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்கள்
எதிர்காலம் குறித்து மிகத் தெளிவாக ஒரு
முடிவுடன் படிக்கும் படியாக
அறிவுரை கூறிவருவதாகவும்" என்ற செயல்
மாணவர்கள்
தங்கள் எதிர்காலம் நோக்கி
நடைபோட வழிகாட்டும் பின்னூட்டமாகவே
நான் கருதுகிறேன்.
இதனை
ஒவ்வோர் ஆசிரியரும் பின்பற்றினால்
நன்று என்பேன்!

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான செயலை செய்யும் அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! இவர்கள் போன்றவர்களால்தான் உலகம் செழிக்கிறது! பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

நெகிழ்ந்து விட்டேன்.வாழ்த்துக்கள் ஹேமா மேடம் கண்டிப்பாக மனதார பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அருணா செல்வம் said...

எல்லா ஆசிரியர்களும் இப்படி இருந்துவிட்டால்....

இந்தத் தம்பதியினருக்குப் பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

மனதில் நெகிழ்ச்சி......

பாராட்டுகள்.

Maria Regan Jonse said...

மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள இதுபோன்ற ஆசிரியர்களைப் பார்ப்பதே கடினம். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

கதம்ப உணர்வுகள் said...

தன் நலத்துடன் செயல்படும் மனிதர்கள் இடையே பிள்ளைகளின் எதிர்க்காலத்தை மாற்றி அமைக்கும் அற்புதங்களை செய்ய வல்ல ஆசிரியப்பணி செய்வது மட்டுமல்லாது.. இப்படி 8 ஆம் வகுப்பு படித்து வெளியே சென்று படிக்கும் பிள்ளைகளுக்கு தன் கையால் சமைத்து நல்வழி சொல்லி அனுப்பி வைப்பது அந்த பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிவது மட்டுமல்லாமல் ரமணி சார் நீங்கள் சொன்னது போல பிற்காலத்தில் அவர்கள் உறுதி எடுத்துக்கொண்டது போல டாக்டராகவோ எஞ்ஜினியராகவோ அதிகாரியாகவோ வந்து இவர்களிடம் ஆசி பெற்று போவார்கள் என்பது இப்போதே எனக்கும் மனதில் நிலைத்து நின்றுவிட்டது ரமணி சார்... இப்படிப்படடவர்கள் மிக குறைவு.. ஆனால் இப்படிப்பட்டவர்களைப்பார்த்து நாமும் கற்கவேண்டும்.... என் அன்பு வணக்கங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் ரமணி சார்.. அன்பு நன்றிகள் ரமணி சார் பகிர்வுக்கு... த.ம.12

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு விஷயம்! பாராட்டுக்குரியவர்கள்! அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

த.ம.

காரஞ்சன் சிந்தனைகள் said...

நல்வழிகாட்டும் ஆசிரியர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்! அந்த மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்! நன்றி ஐயா!

Ravichandran M said...

மாதா, பிதா, குரு அதன் பிறகே தெய்வம். உண்மையைச் சொல்வதென்றால், குரு வழி காட்டினால் தான் தெய்வத்திடமும் அருள் பெற முடியும். அதே குருவின் வழி காட்டுதலின் படி, நடக்கும் போது வாழ்விலும் வெற்றி பெற முடியும் இத்தகைய பணியினை செம்மையாய் செய்பவரே கடவுளின் ஏஜென்ட்டுகள். தங்களின் பகிர்விற்கு நன்றி!

Post a Comment