Wednesday, April 23, 2014

நல்லத் தாத்தா அன்புப் பேரனுக்கு

வசதி இன்றி தவிச்ச போது
வயிறு பசித்த தப்போ-இப்போ
வசதி வந்து சேர்ந்த போது
பசியும் போச்சு தப்போ

கடுஞ்சு ரொம்ப பேசி னாலும்
நட்பு இருந்த தப்போ -இப்போ
விரும்பி நெருங்கிப் பேசி னாலும்
பகையா மாறு தப்போ

சக்தி ரொம்ப இருந்த போது
ஆசை இல்லை அப்போ-இப்போ
சக்தி குறஞ்சு போன போது
எல்லை மீறு தப்போ

சொல்லத் தெரியா போது நிறைய
சொல்ல இருந்த தப்போ-இப்போ
சொல்லத் தெரிந்த போதுச் சொல்ல
ஏது மில்லை யப்போ

காலத் தோடும் சக்தி யோடும்
இணஞ்சு போடா யப்போ-இல்லை
வாழும் காலம் எல்லாம் உனக்கு
அவஸ்தை தாண்டா யப்போ

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தாத்தா நல்ல ஆலோசனை தான் சொல்லியிருக்கிறார்...

ரசித்தேன்...

Anonymous said...

வணக்கம்
ஐயா.
தாத்தாவின் சொல் புத்தி அருமையாக உள்ளது..... ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

காலத் தோடும் சக்தி யோடும்
இணஞ்சு போடா யப்போ-இல்லை
வாழும் காலம் எல்லாம் உனக்கு
அவஸ்தை தாண்டா யப்போ

..சக்தி மிக்க வரிகள்..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

த.ம...3வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

''...சக்தி ரொம்ப இருந்த போது
ஆசை இல்லை அப்போ-இப்போ
சக்தி குறஞ்சு போன போது
எல்லை மீறு தப்போ...''
Vetha.Elangathilakm
..

ராஜி said...

நல்ல ஆலோசனை

ஸ்ரீராம். said...

'சக்தி இருந்தப்போ புத்தி இல்லே, புத்தி இருந்தப்போ சக்தி இல்லே' மாதிரி!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

அரும்நல்ல தாத்தா பெரும்அன்புப் பேரன்
தரும்நல்ல செய்திகளைத் தாங்கு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

G.M Balasubramaniam said...

வரிகளில் எண்ணங்களில் மூப்பு தெரியுதிப்போ

அம்பாளடியாள் said...

தாத்தா சொன்ன பாட்டைக் கேட்டுத் தங்கமே நீ ஓங்கு !வாழ்த்துக்கள் ரமணித் தாத்தா :)))) சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் .த .ம.7

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தாத்தா சொன்னது தத்தனையும் முத்தான வார்த்தைகள்.

கவியாழி said...

சக்தி குறஞ்சு போன போது
எல்லை மீறு தப்போ//உண்மை அய்யா

இராய செல்லப்பா said...

பட்டறிவு சேரும்போது பாழும் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது - என்ற ஆதங்கம் காலம்காலமாக இருப்பதுதான் . ....

வெங்கட் நாகராஜ் said...

தாத்தா பேரனிடம் சொல்லும் அத்தனையும் அருமை....

”தளிர் சுரேஷ்” said...

நிஜம் சொல்லும் வரிகள்! நல்ல அறிவுரை! வாழ்த்துக்கள்!

Kamala Hariharan said...

\\ சொல்லத் தெரியா போது நிறைய
சொல்ல இருந்த தப்போ-இப்போ
சொல்லத் தெரிந்த போதுச் சொல்ல
ஏது மில்லை யப்போ \\

உண்மையான வரிகள்!

தாத்தாவின் அறிவுரைகளை பேரனும் ஏற்றுக்கொண்டால் நன்றாயிருக்கும்.

அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள்...

RajalakshmiParamasivam said...

தாத்தா பேரனுக்கு சொல்லும் அறிவுரை நமக்கும் சேர்த்து தான் என்று எடுத்துக் கொண்டேன்.

அருணா செல்வம் said...

அருமை இரமணி ஐயா.

Maria Regan Jonse said...

உண்மையான வரிகள்.

Post a Comment