Thursday, April 24, 2014

மனதின் ஓரம் இனிய நாதம்

சந்தம் ஒன்று நெஞ்சில் வந்து
கொஞ்சி நிற்கும் போது
சிந்தை தன்னில் வண்ணம் தந்து
தஞ்சம் கொள்ளும் போது
விந்தை போல வார்த்தை நூறு
வந்து வாசல் நிற்கும்
கங்கை போலக் கவிதை பெருக
தன்னைத் தந்து ரசிக்கும்

ராகம் ஒன்று மெல்ல வந்து
மனதை வருடும் போது
தாளம் உடனே தனயன் போல
தொடந்து இணையும் போது
மாயம் போல எதுகை மோனை
தானே வந்து நிறையும்
ஞாலம் போற்றும் கவிதை தந்து
தானும் அதனுள் மறையும்

மனது மெல்ல நினைவு கடந்து
கனவில் மிதக்கும் போது
கனத்த பெருமை என்னும் சுமையை
துறந்து கடக்கும் போது
மனதின் ஓரம் இனிய நாதம்
ஒன்று கேட்கக் கூடும்
கவனம் கொண்டால் அதுதான் சந்தம்
என்று தெளியக் கூடும் 

22 comments:

அருணா செல்வம் said...

என் மனதின் ஓரம் இனிய நாதமாய் உங்களின் கவிதை ஒலிக்கிறது இரமணி ஐயா.

ஸ்ரீராம். said...

கொடுத்து வைத்தவர்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

இராய செல்லப்பா said...

அழகிய சந்தக் கவிதை! இப்படியே தொடர்ந்து எழுதுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கங்கை போலக் கவிதை வரிகள்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

மனதின் ஓரம் இனிய நாதமாய்
சந்த வசந்தம்.........

Anonymous said...

''..சிந்தை தன்னில் வண்ணம் தந்து
தஞ்சம் கொள்ளும் போது
விந்தை போல வார்த்தை நூறு
வந்து வாசல் நிற்கும்..''
ஆம் வரம் கொண்டு பிறக்க வேண்டும்.
நல்ல கவிதை...
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

மனதின் ஓரம் சந்த நயத்தை உணர்த்தியது உங்கள் கவிதை !
த ம 6

கரந்தை ஜெயக்குமார் said...

அருவி போல் கொட்டும் வரிகள்
இனிமை ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 7

அம்பாளடியாள் said...

மிகவும் ரசித்துப் படித்தேன் அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஐயா .

கே. பி. ஜனா... said...

சந்தம் நிறைவாய் அமைந்த சத்தம் கவிதைக்கு பாராட்டுக்கள்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

மனத்தில் அறையில் மகிழ்வைப் படைக்கும்
இனத்தின் கவிதை இது!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Anonymous said...

வணக்கம்
கவிஞர்(ஐயா)

சொல்லும் பொருளும் கவியில் இசை பாடுகிறது... சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

த.ம 11வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

கலக்குறீங்க ஐயா! வாழ்த்துக்கள்!

மகிழ்நிறை said...

ஓசை நயமிக்க கவிதை. அருமை அய்யா!

RajalakshmiParamasivam said...

உங்கள் கவிதையின் சந்தம் என் மனதை விட்டு அகல மறுக்கிறது. நன்றி பகிர்விற்கு.

Maria Regan Jonse said...

கவிதை மிகச் சிறப்பு.

Iniya said...

அருமையான கவிதை ரசித்தேன்.
நன்றி வாழ்த்துக்கள்...!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை. சிறப்பான பகிர்வு.

கவியாழி said...

எப்போதும்போல இப்போதும் அசத்தி இருக்கிறீர்கள்.சிறந்த தகவலுக்கு நன்றி

Post a Comment