தீதும் நன்றும்
பிறர் தர வருவதில்லை
நாம் பெற்று வைத்துக் கொள்வதே
நமக்கான தாகிவிடுகிறது
இனியேனும் தீமைகளை மறுத்து
நன்மைகளை மட்டுமே பெற முயலுவோம்
நட்பும் பகையும் கூட
வெளியில் நிச்சயம் இல்லை
நம் பலமே நண்பன்
பலவீனமே பகைவன்
இனியேனும் பலவீனத்தை ஒதுக்கிவைத்து
பலத்தை மட்டுமே பெருக்கப பயிலுவோம்
வெற்றியும் தோல்வியும்
பிறருடனான ஒப்பீட்டில் இல்லை
நம்முடனான ஒப்பீடுமட்டுமே
சரியானதும் முறையானதும்
இனியேனும் பிறர் உயரம் விடுத்து
நம்மை அளக்கப் பழகி உயர்வோம்
வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இல்லை
அது பயணம் மட்டுமே
இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம்
பிறர் தர வருவதில்லை
நாம் பெற்று வைத்துக் கொள்வதே
நமக்கான தாகிவிடுகிறது
இனியேனும் தீமைகளை மறுத்து
நன்மைகளை மட்டுமே பெற முயலுவோம்
நட்பும் பகையும் கூட
வெளியில் நிச்சயம் இல்லை
நம் பலமே நண்பன்
பலவீனமே பகைவன்
இனியேனும் பலவீனத்தை ஒதுக்கிவைத்து
பலத்தை மட்டுமே பெருக்கப பயிலுவோம்
வெற்றியும் தோல்வியும்
பிறருடனான ஒப்பீட்டில் இல்லை
நம்முடனான ஒப்பீடுமட்டுமே
சரியானதும் முறையானதும்
இனியேனும் பிறர் உயரம் விடுத்து
நம்மை அளக்கப் பழகி உயர்வோம்
வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இல்லை
அது பயணம் மட்டுமே
இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம்
24 comments:
''..இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம்..''
mmm...
Vetha.Elangathilakam
/பயணம் மட்டுமே/ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஒரு மாறுதலுக்கு நீங்கள் சொன்னது எல்லோரும் மாறுதல் இன்றி கடைப் பிடிக்க வேண்டிய ஒன்றே !
த ம 2
மீண்டும் தொடரும் தொடர் சிந்தனை. கவிஞரைத் தொடர்கின்றேன்.
// நம்முடனான ஒப்பீடுமட்டுமே
சரியானதும் முறையானதும் //
சிறப்பான வரிகள் ஐயா...
//இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம்//
இதைக்கேட்க நல்லாத்தான் இருக்கு.
சில சமயங்களில் பயணங்களால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, இனி பயணங்களால் நமக்கு வாழ்வினில் எந்த அர்த்தமோ, பயனோ புதிதாகக் கிடைக்கப்போவது இல்லை என்ற அனுபவ அறிவினைப் பெற்று விட்டதால், எனக்கு பயணங்களில் சுத்தமாக ஆர்வமே போய் விட்டது.
இனி ஒரே ஒரு பயணம் மட்டுமே பாக்கியுள்ளது. அது வாழ்க்கையில் நடக்கும்போது அதை நான் உணர வாய்ப்பே சுத்தமாக இருக்காது.
அருமையான ஆக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
இனியேனும் பலவீனத்தை ஒதுக்கிவைத்து
பலத்தை மட்டுமே பெருக்கப பயிலுவோம்
அர்த்தமுள்ள வரிகள்.
அனைத்துக்கும் பாராட்டுக்கள்.!
"வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும் இல்லை
அது பயணம் மட்டுமே!" என்பது
உண்மையே! - அந்த
உண்மையைக் கருத்தில் கொள்வோம்!
சிவனே என்று வரும் எல்லாவற்றிற்கும் இலகுவாக இருந்து விட்டால்
போதும் என்றே உணர வைத்த சிந்தனை மனதிற்குப் பிடித்துள்ளது .
வாழ்த்துக்கள் ஐயா .முடிந்தால் இந்தப் பாடல் வரிகளுக்குத் தங்களின்
கருத்தினையும் வழங்குங்கள் ஐயா .
http://rupika-rupika.blogspot.com/2014/05/blog-post_8959.html
தீதும் நன்றும் பிறர் தர வாரா....
அருமை இரமணி ஐயா.
வணக்கம்
தீதெதுவோ? நன்றெதுவோ? ஓதும் கவியுணா்ந்தால்
ஏதினி துன்பம் இயம்பு
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தமிழ்மணம் 7
நல்ல கவிதை.
//இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம் //
நல்ல அறிவுரை....
வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இல்லை
அது பயணம் மட்டுமே
வாழ்வியல் உண்மையை அழகாகச் சொன்னீர்கள்.
இரசித்தேன் அன்பரே.
//வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இல்லை
அது பயணம் மட்டுமே//
பொருள் பொதிந்த வரிகள்...
அழகான அர்த்தம் மிக்க நல்ல கவிதை...
---
http://www.malartharu.org/2014/05/inyath-thamil-payirchip-pattarai-2014.html
இனியேனும் பிறர் உயரம் விடுத்து
நம்மை அளக்கப் பழகி உயர்வோம் //
அருமையாக சொன்னீர்கள்.
சில விஷயங்கள் நம் பலம் என்று எண்ணுகிறோம் பெரும்பாலான இடங்களில் நம் பலமே பலவீனமாகிவிடுகிறது
உண்மையே சார்!. சக மனிதருடன் ஒப்பீடு, அளவீடு , பலமறிதல் இவற்றைவிடுத்து... எதையும் சுமந்து செல்லாது... பேசி தீர்த்து, அழுது கரைந்து, சிரித்து மகிழ்ந்து ஒவ்வொரு கட்டத்தையும் சுமையின்றி கடந்து பயணப்படுவோம். அதுவே வாழ்க்கையை இயல்பானதாக்குகிறது. நன்றி.
வணக்கம்
ஐயா.
எல்லோரும் உணருவார்கள் என்றால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.. மிக அருமையாக அழகிய மொழிநடையில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எதுவுமே நாம் பழகும் நிலையிலும் பாங்கிலும்தான் உள்ளது என்ற யதார்த்தத்தை உணர்த்தும் இக்கவிதை சிறப்பாக உள்ளது.
வெற்றியும் தோல்வியும்
பிறருடனான ஒப்பீட்டில் இல்லை
நம்முடனான ஒப்பீடுமட்டுமே
சரியானதும் முறையானதும்//
எல்லாமே நம் மனதில்தான் உள்ளது என்பதை அழகாக உணரித்திய விதம் அருமை!
த,ம.
நட்பும் பகையும் கூட
வெளியில் நிச்சயம் இல்லை
நம் பலமே நண்பன்
பலவீனமே பகைவன்.மிக்க நன்று ஐயா.
வாழ்க்கையென்பது, பயணம் மட்டுமே/ என்பதை உணர்ந்து உணர்த்தியிருக்கிறீர்கள்! வெகு சிறப்பான வரிகளுடன் ௬டிய கவிதை!
ரசித்து படித்தேன்.
வாழ்த்துக்களுடன் கமலா ஹரிஹரன்.
Post a Comment