Wednesday, June 18, 2014

கவிதைப் புதிர்

ஓரிடத்தில் எடுத்து
ஊரெல்லாம் தெளித்து
ஓடுதொரு வண்டீன்னு சொன்னா-அது
கார்ப்பரேசன் குப்பைவண்டி நைனா

நிரப்பிவச்ச நீரை
வீதிபூராம் சிந்தி
பற்க்குதொரு வண்டின்ணு சொன்னா-அது
கார்ப்பரேசன் தண்ணிவண்டி நைனா

நிறுத்தத்தை விட்டு
நூறுஅடி தாண்டி
வெறுப்பேத்தும் வண்டின்ணு சொன்னா-அது
அரசாங்க டிரான்ஸ்போர்ட்டு நைனா

கரும்புகையைக் கக்கி
இடிச்சத்தம் போட்டு
ஒருஜீப்பு உன்முன்னே போனா-அது
ஊழியருக் கானவண்டி நைனா

சுழல்விளக்குச் சுற்ற
பார்ப்பவர்கள் சொக்க
அழகுவண்டி சாலையிலே போனா-அது
அதிகாரி வண்டியது நைனா

நூறுவண்டித் தொடர
சைரனொலி தெறிக்க
சீறிக்கிட்டு வண்டியொன்னு போனா-அது
அமைச்சரோட வண்டித்தான் நைனா

காவலர்கள் தடுக்க
காத்துவூரே நிக்க
போவதொரு  வண்டின்னு  சொன்னா -அது
யாரோட வண்டியது நைனா ?

31 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அட, எல்லாம் சரிதான்.
கடைசி சொன்ன வண்டி.. ஹெலிகாப்டரா?
த.ம.2

kingraj said...

இன்னா நைனா? அது எந்த வண்டி ?
தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது தானோ? ஹாஹா...

kingraj said...

தம.3

வை.கோபாலகிருஷ்ணன் said...

நிச்சயமாக, மிக முக்கியமானவரின் வண்டியாகத்தான் இருக்கும். ;)

Pandiaraj Jebarathinam said...

அந்த அதி அவசரக்காரர், எதுவும் செய்யாத முக்கியமானவராத்தான் இருக்கும்.. # சதம் போட்டு பேசுனா விசத்த வச்சிருவாங்க..ம்ம் ம்ம்

அம்பாளடியாள் said...

அட அது நம்ம கவிதை வண்டி சரிதானே ரமணி ஐயா ?..(கவிஞர்களால்
அனுப்பப்படும் கவிதை எனும் சரக்கு வண்டி :) )
கவிஞர்களின் சிந்தனைக்குத் தடை விதிக்க இங்கு யாருக்குத் தான் வல்லமை உண்டு நைனா ?..:)))))))))) அருமை அருமை ! வாழ்த்துக்கள்
ஐயா .

vanathy said...

super! Last one I guess...(C.M )

தி.தமிழ் இளங்கோ said...

வண்டி எத்தனை வண்டி என்றதில்தான் உங்கள் நையாண்டி கவிதை!
Tha.ma.5

Anonymous said...

நன்றாக உள்ளது. நைனா..
வேதா. இலங்காதிலகம்.

ஸ்ரீராம். said...

ஜனநாயகம்! :))))

இராஜராஜேஸ்வரி said...

கவிதைப்புதிர் வாக்னங்களை விட வேகம்..!

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்களே சொல்லிடுங்க ஐயா...

Unknown said...

சொன்னா வரும் கேடு -அதை
சொன்ன வரின் வீடு
என்னா ஆகும் நைனா -நீங்க
எண்ணிப் பாரும் மெயினா

அருணா செல்வம் said...

கவிதைக்குள்ளேயே புதிர்.
அருமை இரமணி ஐயா.

அப்படி போற வண்டி என்ன வண்டியாக இருக்கும்....?
புலவர் ஐயாவிற்குத் தெரிந்திருக்கிறது. அதையும் புதிரான இயைபுடன் சொல்லி இருக்கிறார்.

புலவர் ஐயா... நைனாவிற்கு மெயினா... என்ன அழகான இயைபு !! சூப்பர்.

G.M Balasubramaniam said...

எல்லாவற்றையும் சொன்ன உங்களுக்கு தெரியாதா என்ன. ?

சசிகலா said...

ஐயா வணக்கம் நலம் நலமறிய ஆவல்... நெடுநாட்களுக்கு பிறகு வருகை தந்த எனக்கு புதிர் காத்திருக்கிறது. கவிதை வண்டியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.

Anonymous said...

வணக்கம்
ஐயா.

.ரசிக்கவைக்கும் வரிகள் ஐயா. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
சில நேரங்களில் என்னுடைய வண்டியா இருக்கலாம் ஐயா.
(நகைச்சுவையாக)

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 11வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீராளன்.வீ said...

பொய்யாத வார்த்தை புதிராக சொன்னீர்கள்
ஐயா இதுவல்லோ நாடு !

செம சுப்பர்

12

Tamizhmuhil Prakasam said...

புதிர்க் கேள்விக்கு விடை ஆம்புலன்ஸ் ( Ambulance ) என்று எண்ணுகிறேன். விடை சரியா ஐயா ?

கவிதை வரிகள் அருமை. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

வம்புல மாட்டி விடறீங்களே ஐயா! புதிர்க்கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

ஓரிடத்தில் எடுத்து
ஊரெல்லாம் தெளித்து
ஓடுதொரு வண்டீன்னு சொன்னா-அது
கார்ப்பரேசன் குப்பைவண்டி நைனா


நான் கூட மேகத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன் நண்பரே.

ஒவ்வொரு சிந்தனைகளும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்றன.

முனைவர் இரா.குணசீலன் said...

காவலர்கள் தடுக்க
காத்துவூரே நிக்க
போவதொரு வண்டின்னு சொன்னா -அது
யாரோட வண்டியது நைனா ?


அன்றாடம் நடக்கும் நிகழ்வுதானே நண்பரே..

தேர்தலில் நிற்கும் ஒருவருக்காக
ஊரே காத்து நிற்கும் - சாலை சந்திப்புகளில்..

முதலில் தேர்தலில் அவர் நிற்பார்
பிறகு ஆட்சிகாலம் முழுக்க
அவருக்காக நாம் நிற்போம்!

kowsy said...

நீங்களே சொல்லி விடுங்களேன்

கீதமஞ்சரி said...

புதிரின் விடை தெரிந்தவர்கள் அனைவரும் பூடகமாய்ச் சொல்வதிலிருந்தே புரிகிறதே அது யாருடைய வண்டியென்று! ரசிக்கவைக்கும் கவிதைக்குள்ளிருக்கும் உண்மை, முகம் சுழிக்கவைப்பதும் உண்மை.

kingraj said...

நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆனா சொல்லமாட்டேன் ஐ!

மகிழ்நிறை said...

வித்யாசமான மொழியில் அரசியல் பேசும் இந்த கவிதை உங்கள் மேதமைக்கு மற்றும் ஒரு சான்று:)

காரஞ்சன் சிந்தனைகள் said...

புதிர் போட்ட கவிதை அருமை! இரசித்தேன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

வெங்கட் நாகராஜ் said...

புதிர் கவிதை....
விடை சொன்னால்
விழும் உதை!

புலவர் ஐயா சரியா சொல்லி இருக்காரே!

Yarlpavanan said...

புலவர் ஐயா சொன்னது போல
எந்த வண்டினு நான் சொல்லல
நடைமுறை வாழ்வில்
நேரில் கண்ட காட்சிகளாக
தங்கள் கவிதையிலே
எல்லா வண்டியும் ஓடுது
ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

காவலர்கள் தடுக்க
காத்துவூரே நிக்க
போவதொரு வண்டின்னு சொன்னா -அது
யாரோட வண்டியது நைனா ?//

பாவப்பட்ட மக்கள்
பாழாய் போகிறதென்று
ஓட்டுப் போட்டு
ஆட்சியில் ஏறுபவரின்
ஆணவமிக்க வண்டி நைனா!

தினம் தினம் காணும் காட்சி, அனுபவமும் கூட...

ஐயோ வம்பில் மாட்டிக் கொண்டோமோ?!!!!!!

தினமும் எங்கள் மீது குப்பை லாரி துப்பிச் செல்லும்....ஐயொ என்று நினைக்கும் போது....

அதன் பின்னால் வரும் தண்ணீர் லாரியிலிருந்து கோடை கால அருவியாய் விழும் தண்ணீரில் குளித்துச் செல்வோம்!

அருமையாக நடைமுறை வாழ்வை அழகாகச் சொல்லும் கவிதை! தங்கள் திறமை மிகவும் வியக்க வைக்கின்றது சார்!!!!

Post a Comment